சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 ஜனவரி, 2011

கமல்…நீங்கள் வலது கால் செருப்பா? இடது கால் செருப்பா?

மன்மதன் அம்பு என்ற படத்தில் நன்றாக சிரிக்க வைத்துக் கொண்டே செருப்பால் அடிக்கின்றீர்களே. இது என்ன புது வித்தை. இந்த வித்தையை எங்கே கற்றுக் கொண்டீர்கள் நண்பர்.கமல் அவர்களே.

ம‌ன்ம‌த‌ன் அம்பு அருமையான‌ ந‌கைச்சுவைப் ப‌ட‌மாக‌ இருந்திருக்க‌ வேண்டிய‌து. ஆனால் நீங்க‌ள் வைத்த‌ சில‌ க‌ருத்துக‌ள் தேசிய‌ இன‌ங்க‌ளின் விடுத‌லைப் போராட்ட‌த்தின் மீது எச்சில் உமிழ்வ‌து போல‌ உள்ள‌து. இப்ப‌டிப்ப‌ட்ட‌ ஒரு ப‌ட‌த்தின் க‌தை, திரைக்க‌தை, வ‌ச‌ன‌த்தை எழுதிய‌து நீங்க‌ள் தான் என்ப‌தை நான் முத‌லில் உங்க‌ளைத் தொட‌ரும் இர‌சிக‌க‌ண்ம‌ணிக‌ளுக்கு தெரிய‌ப்ப‌டுத்தி விடுகின்றேன். ஒருவேளை நீங்க‌ள் இதில் ந‌டித்த‌வ‌ர் ம‌ட்டுமே, இந்த‌ப்ப‌ட‌த்தின் க‌தை, வ‌ச‌ன‌த்தில் எல்லாம் உங்க‌ளுக்கு எந்த‌ ஒரு தொட‌ர்பும் இல்லாம‌ல் இருந்திருக்கலாம் என‌ அவ‌ர்க‌ள் எண்ண‌க்கூடும்.

காசுமீரிகளின் தேசிய‌ விடுத‌லைப் போராட்ட‌த்தில் நீங்க‌ள் முத‌லில் எச்சில் உமிழ ஆர‌ம்பிக்கின்றீர்கள். ஆம், காசுமீரி தீவிர‌வாதிக‌ள் ஒருவ‌ன் தான் ப‌ட‌த்தில் உங்க‌ளின் க‌தாநாய‌கியையும், அவ‌ர‌து த‌ந்தையையும் க‌ட‌த்தி வைத்திருப்ப‌தாக‌ கூறுகின்றீர்க‌ள். ப‌ட‌த்தின் க‌தைப்ப‌டி இது ஒரு மூன்று வ‌ருட‌ம் முன்ன‌ர் ந‌ட‌க்கின்ற‌து. அதாவ‌து 2009ல் நீங்க‌ள் இந்த‌க் க‌தையை எழுதியிருந்தால் 2006ல் அப்ப‌டி ஒரு நிக‌ழ்வு காசுமீரில் ந‌ட‌ந்திருக்க‌ வேண்டும். குறிப்பாக 2006ல் அப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை என்கிறது என் ஆய்வு. காசுமீர் என்ற உடனே தீவிரவாதிகள் என்ற எண்ணத்தை உங்களது படத்தில் வரும் இந்தக் காட்சியும் மக்களின் மனதில் உருவாக்கும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அப்புறம் எதற்கு இப்படி ஒரு காட்சியை நீங்கள் படத்தில் வைத்தீர்கள் என நான் உங்களை கேட்கலாம் என நினைக்கின்றேன். ஏன் காசுமீரில் தீவிரவாதம் உருவானது என நீங்கள் இதுவரை யோசித்ததே கிடையாதா? 1987 தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை மூன்றாண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைத்து கொடுமை படுத்தி(1), மக்களின் கடைசி நம்பிக்கையான தேர்தல் வழியையும் அடைத்து அவர்களின் கைகளில் ஆயுதங்களை திணித்ததே ஆக்கிரமிப்பு செய்யும் இந்தியா தானே. இது உங்களுக்கு தெரிந்திருக்குமே. இதன் பின்னால் தானே அங்கே ஆயுதப் போராட்டம், தீவிரவாதம் எல்லாமே. சரி அதை எல்லாம் விடுங்கள். கடந்த 2010ல் மக்களனைவரும் வீதிக்கு வந்து கற்களின் மூலம் தங்களின் சோகக்கதைகளை உலகத்தாரிடம் கூறியதற்கு பரிசாக 113 சிறுவர், சிறுமியர்கள் இந்திய ஆயுதப் படையினரால் கொல்லப்பட்டார்களே. கடந்த வருடத்தில் போராளிக்குழுக்கள் தாக்குதலால் இறந்தவர்களை விட பன்மடங்கு மக்கள் இந்திய ஆயுதப்படை தாக்கியதால் இறந்தார்கள் என எல்லா ஊடகங்களும் தமுக்கு அடிக்காத குறையாக கூறினார்களே, அதெல்லாம் உங்கள் காதுகளில் விழவில்லையா, இல்லை விழாதது போல் நடிக்கின்றீர்களா? அங்குள்ள களநிலைமை இவ்வாறு இருக்கையில் நீங்கள் இந்தப் படத்தில் வைத்திருக்கும் அந்தக் காட்சி அங்கு போராடுகின்ற மக்களின் முகத்தில் எச்சில் உமிழும் செயல் என்றால் அது மிகையாகது என நான் நினைக்கின்றேன். அதே போல இங்கே நான் கொடுக்கின்ற தகவல்களை எல்லாம் பாருங்கள் காசுமீரில் 1987ல் இருந்து 2010 சூலை வரையிலான தகவல்கள் இவை. 2010 சூலையிலிருந்து இறந்த பொதுமக்களின் எண்ணிக்கையை மேலே நான் கொடுத்துள்ளேன்.

கொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை 93,214

விசார‌ணையில் இருக்கும் போது கொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை 6,969 கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ பொதும‌க்க‌ளின் எண்ணிக்கை 1,17,117

வித‌வைக‌ளாக்க‌ப்ப‌ட்ட‌ பெண்க‌ளின் எண்ணிக்கை 22,726

அநாதையாக்க‌ப்ப‌ட்ட‌ சிறுவ‌ர்க‌ளின் எண்ணிக்கை 1,07,347

பாலிய‌ல் வ‌ல்லுறவுக்கு ஆக்க‌ப்ப‌ட்ட‌ பெண்க‌ளின் எண்ணிக்கை 9,912
 

அதே போல படத்தில் வரும் ஒரு வசனம் விருமாண்டியின் தொடர்ச்சி என நினைக்கின்றேன். இனிமேல் இந்தியா பாகிசுதானுக்கு இடையே சண்டை கிடையாது, இருவருமே நட்பு நாடுகள் ஆகிட்டோம் அப்படின்னு சொன்னதுக்கு அப்புறம், நான் என் நண்பனை (சண்டையில்)கொன்ன பாகிசுதான் இராணுவ வீரனை தேடி போயி கொல்ல முடியாதில்லை என நீங்கள் சொல்வீர்கள். இதே கேள்வியை அங்க இருக்கிற பாகிசுதானைச் சேர்ந்த இராணுவ வீரனும் கேட்கலாமே. இந்தக் கேள்வி உங்கள் தரப்பில் சரி என்றால், அவர்களது தரப்பிலும் சரி தானே. நான் தெரியாம தான் கேட்கிறேன் இதுக்கும் அந்தக் காட்சிக்கும் என்ன தொடர்பு. இந்தப் படத்தில் வரும் மேற்கூறிய இரு காட்சிகளின் கருத்தியலில் தான் இந்துத்துவ மதவெறியர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அப்படின்னா நீங்க யாரு நண்பர்.கமல் அவர்களே? உங்களை எல்லாம் நாத்திகவாதி எனக் கூறுகின்றார்களே. அதெல்லாம் பொய், நீங்கள் ஒரு இந்துத்துவ வெறியர் அப்படின்னு இந்த இரண்டு காட்சிகள் சொல்லுதே, இதற்கு உங்கள் பதில் என்ன நண்பர். கமல் அவர்களே.


அப்புறம் தமிழ் தெருப்பொறுக்கும், மெல்லச்சாவும் என்ற வசனங்கள் தேவையா, இல்லை தேவையான்னு கேட்கிறேன், கேட்டா என்ன சொல்லுவீங்க தமிழ் மெல்லச் சாவும் என பாரதி தாசனே கூறிவிட்டார், அவர் கூறிய இடமும் நீங்கள் கூறிய இடமும் ஒன்றா நண்பர்.கமல். அதென்ன தமிழ் தெருப்பொறுக்கும்? புரியலை உங்களை கதை, வசனம் எழுதவிட்டால் இனி தமிழ் தெருப்பொறுக்கும் என மறைமுகமாக ஏதும் சொல்ல வருகின்றார்களா?. இதில் ஈழத்தமிழ் இனத்தை கேவலப்படுத்தி இருக்கீங்க. இதுக்கு கொஞ்சம் பின்னாடி யோசிச்சு பார்த்தோம்னா, பாரதி ராசா தனது பத்ம சிறீ விருதை இந்திய அரசிடம் திருப்பிக் கொடுத்த போது(ஈழத்தில் போர் உச்ச நிலையில் இருந்த காலகட்டம், காரணம் இந்தியா தான் அந்த போரை நடத்துகின்றது எனக்கூறி, அதை பின்னாட்களில் மன்மோகன் சிங் சென்னையிலேயே ஒப்புக்கொண்டார்) உங்களையும் சூடு, சொரணையோடு பத்ம சிறீ விருதை திருப்பி தரச் சொல்லியும், அய்ஃபா (iifa) விருதுகள் வ‌ழ‌ங்கும் விழாவை இனப்படுகொலை இலங்கையில் நட த்தும் FICCIயின் தென்னிந்திய இயக்குநராக இருக்கும் உங்களை அந்த பதவியில் இருந்து விலகக்கோரியும் சென்னையில் மே 17 இயக்கமும், மற்ற பிற இயக்கங்களும் போராடின‌, அவர்களை கூட நீங்கள் சிறு அலை எனக் கூறியதாக ஞாபகம். ஒருவேளை இதை மனதில் வைத்துக்கொண்டு தான் நீங்கள் படத்தில் வேண்டுமென்றே அப்படி ஒரு காட்சியை வைத்து, ஈழத்தமிழர்களை கேவலப்படுத்துகின்றீர்களோ என என் உள்ளம் எண்ணுவதை என்னால் தடுக்க இயலவில்லை. மே 15, 16,17 என்ற மூன்று நாட்களில் மட்டும் ஒவ்வொரு நாளும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்கள் என ஐ.நா கூறுகின்றது. அவர்களுக்கு எதிராக இனப்படுகொலை இலங்கை மேற்கொண்ட போர்க்குற்றங்கள் ஒவ்வொன்றாக வெளிவரும் இன்றைய நிலையில் இப்படி ஒரு காட்சியை நீங்கள் வைத்ததால் நீங்களும் ஒரு ஐந்தாம் படையோ என்ற கேள்வி எழுகின்றது.

                                                                                                                                                                   
எனது நண்பர்கள் சொல்லுகின்றார்கள் நீங்கள் பகுத்தறிவுவாதியாம். இப்படிப்பட்ட பகுத்தறிவுவாதியா “குப்பனுக்கும், சுப்பனுக்கும் அறிவு இல்லை” என கூறுவார்(உன்னைப் போல் ஒருவன்)? மேற்கூறிய பெயர்களை எந்த ஒரு சமூகம் வைக்கும் என்பதை நான் உங்களுக்கு விலக்கத்தேவை இல்லை என நினைக்கின்றேன். ம‌ற்றுமொரு உதார‌ண‌ம் எங்க‌ள் ச‌மூக‌த்திலும் இப்பொழுது ப‌டித்த‌ ஆட்க‌ளெல்லாம் இருக்கின்றார்க‌ள் என‌ த‌சாவ‌தார‌ம் ப‌ட‌த்தில் நீங்க‌ள் கூறுவீர்க‌ள். உங்க‌ள‌து இந்த‌க் கூற்றின் ப‌டி முன்னாட்க‌ளில் அந்த‌ ச‌மூக‌ம் ப‌டிப்ப‌றிவில்லாத‌ ச‌மூக‌ம், அத‌ற்கு அவ‌ர்க‌ள் தான் கார‌ண‌ம் என‌ சொல்ல‌ வ‌ருகின்றீர்க‌ள். மெத்த‌ ப‌டித்த‌ உங்க‌ளைப் போன்ற‌ ‘ப‌குத்த‌றிவுவாதி’ இப்ப‌டி சொல்வ‌து முறையா? 1937வ‌ரை ம‌ருத்துவ‌ நுழைவுத் தேர்வு சம‌சுகிருத‌த்தில் இருந்த‌து உங்க‌ளுக்கு தெரிந்திருக்குமே ந‌ண்பர்.க‌ம‌ல். அந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் ச‌ம‌சுகிருத‌ம் தெரிந்த‌வ‌ர்க‌ள் த‌மிழ்நாட்டில் மூன்று விழுக்காடு தானே. அப்பொழுது யார் ம‌ருத்துவ‌ம் ப‌டித்திருப்பார்க‌ள் ? ஒரு ச‌மூக‌த்தை நீங்க‌ள் குறிவைத்து தாக்குகின்றீர்க‌ளோ என‌ என்னுள் அச்ச‌ம் எழுவ‌தை என்னாள் த‌விர்க்க‌ முடிய‌வில்லை ந‌ண்ப‌ர்.க‌ம‌ல் அவ‌ர்க‌ளே. உட‌னே உங்க‌ள் ந‌ற்ப‌ணி ம‌ன்ற‌ ந‌ண்ப‌ர்க‌ள்( அதாவ‌து இர‌சிக‌ர்க‌ள்), இத‌ற்கும் க‌ம‌லுக்கும் என்ன‌த் தொட‌ர்பு, அவ‌ர் வெறும் ந‌டிக‌ர் தானே என‌ விரைந்தோடி வ‌ந்து என்னைக் கேட்க‌லாம். த‌சாவ‌தார‌ ப‌ட‌த்தின் க‌தை, வ‌ச‌ன‌ம் எழுதிய‌து அவ‌ர் தான், உன்னைப் போல் ஒருவ‌ன் பட‌த்தின் க‌தை, வ‌ச‌ன‌ம் எழுதிய‌ குழுவில் க‌ம‌லும் ஒருவ‌ர். இது போன்ற‌ க‌ருத்துக‌ளினால் நீங்க‌ள் ஒரு ப‌குத்த‌றிவுவாதியா ? என‌ உங்க‌ளை நான் கேட்ப‌து ச‌ரி என்று உங்க‌ளுக்கு தெரியும். அப்ப‌டியே உங்க‌ள் க‌ண்ம‌னிக‌ளுக்கும் சொல்லிவிடுங்க‌ள்.
பின்குறிப்பு: இந்த‌ த‌லைப்பு உங்க‌ள் ம‌ன‌தை புண்ப‌டுத்த‌வோ, அல்ல‌து உங்க‌ள் இர‌சிக‌ க‌ண்ம‌ணிக‌ளின் உள்ள‌த்தை புண்ப‌டுத்த‌வோ நான் வைக்க‌வில்லை. நீங்க‌ள் என்ன‌ கார‌ண‌த்திற்காக உங்க‌ள் ப‌ட‌த்தில் ஒரு ஈழ‌த்த‌மிழ‌ர் கூறுவ‌தாக‌ இப்ப‌டி ஒரு வ‌ரியை வைத்தீர்க‌ளோ, அதே நோக்க‌த்தில் தான் நானும் இதை வைத்துள்ளேன். பொதுவாக‌ நான் திரைப்ப‌ட‌ங்க‌ளை ப‌ற்றி எழுதுவ‌து கிடையாது, ஆனால் இந்த‌ப் ப‌திவு நீங்க‌ள் தேசிய‌ இன‌ங்க‌ளின் போராட்ட‌ங்க‌ளைக் கொச்சைப்ப‌டுத்திய‌ கார‌ண‌த்தினாலும், குறிப்பிட்ட‌ ச‌மூக‌த்தை நீங்க‌ள் தொட‌ர்ந்து தாக்கி வ‌ருவ‌தாலும் இதைப்ப‌ற்றி நான் எழுத‌வேண்டிய‌ நிலைக்கு த‌ள்ள‌ப்ப‌ட்டேன். 
 
நன்றி : ந‌ற்ற‌மிழ‌ன்

சனி, 27 பிப்ரவரி, 2010

முதுகெலும்புள்ள அஜீத் - என்னய்யா தப்பு செய்தார்?

மண்புழு மண்ணில் கிடப்பதற்க்கு காரணம் அதற்க்கு மூளையில்லாததால் அல்ல, முதுகெலும்பில்லாததால்... சில நாட்களுக்கு முன் யாரோ ஒருவர் இப்படி பேசிகேட்டேன், முதுகெலும்பில் 12 அறுவை சிகிச்சைகள் செய்திருந்தும் முதுகை வளைத்து குழைந்து பயந்து நடுங்கிபோகாமல் தன் மனதில் பட்டதை பேசியிருக்கிறார் அஜீத்.

ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட ராஜகம்பீர மன்னர் கருணாநிதி அவர்களுக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாரா வாரம் நடைபெறும் பல மணிநேர புகழுரைகள், நடிகைகளின் அரைகுறை ஆடை நடனங்கள் அதை படம் பிடித்து தங்கள் தொலைக்காட்சியில் போட்டு காசு பார்ப்பது என மன்னர் ரசிக்கும் ஒரு பாராட்டுவிழாவில் தான் இப்படி பேசியிருக்கார், எல்லாத்துக்கும் நாங்க வரணுமென்று மிரட்டுகிறார்கள் என்று... இதில் என்ன தவறு??

சினிமாவிலும் பேட்டிகளிலும் அரசியல் பொறிபறக்க ரசிகர்களை தூண்டிவிட்டு அதனால் சொந்த லாபம் சம்பாதித்து அதே நேரத்தில் தமிழகத்திற்க்கும் தமிழனத்துக்குமான கூட்டமென்றால் காணாமல் போய்விடும் திருட்டு நடிகன் அல்ல அஜீத். எதற்க்கும் வரமாட்டார், பொதுவாகவே எந்த விழாக்களிலும் எந்த கூட்டங்களிலும் கலந்து கொள்ளாதவர் அனல் பறக்க அரசியல் பேசிவிட்டு இனம் மொழி என்று பேட்டிகளில் பரபரப்பு காட்டுபவர் அல்ல, அவர் தன் வேலைகளுண்டு என்று போய்க்கொண்டே இருப்பவர், எல்லோருக்கும் அரசியல் ஆர்வமும் சமூக ஆர்வமும் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை அவர்களை வற்புறுத்துவது எதற்காகவும் தவறு. ஆனால் எந்த அரசியல் சமூக காரணமுமின்றி இவர்களின் முகங்களை படம்பிடித்து தம் தொலைக்காட்சியில் அரைகுறை நடனங்களுக்கு நடுவே காட்டி இதன் மூலம் காசு சம்பாதிக்கும் பொறுக்கிதனத்திற்க்கு எதிராக ஆவேசமாக கூட இல்லை லேசாக முனகி எதிர்ப்பு தெரிவித்ததற்க்கே அஜீத்தை இந்த பாடு படுத்துகிறார்கள்...

முதலில் ஜாக்குவார் தங்கம் என்ற ஸ்டண்ட் மாஸ்டர் அஜீத் மீது வழக்கு போட கூறுதல் அதன் தொடர்ச்சியாக உடனடியாக அஜீத் ரசிகர்கள் ஜாக்குவார் வீட்டை உடைத்ததாக வழக்கு என அஜீத் மீது தொடர்ச்சியான அழுத்தங்கள், இந்த இடத்தில் நான் கடவுள் படம் தொடர்பான பண விவகாரம் தொடர்பாக பாலாவும் அவருக்கு ஆதரவாக சீமான் மற்றும் சில அரசியல் தொடர்புள்ளவர்கள் அஜீத்தை மிரட்டியதாக செய்தி வந்திருந்த நேரம் அது அப்போதும் கூட அஜீத் தன் ரசிகர்களை தூண்டிவிடாமல் என் பிரச்சினையை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று அமைதியாக்கியவரை தான் ஜாக்குவார் தங்கம் வீட்டை அடிக்க தூண்டியதாக கேஸ் போடுகிறார்கள், ஜாக்குவார் தங்கம் நாடாராம் அதனால் நாடார் சங்கம் கொதிக்குதாம்...

அஜீத் போன்ற முதுகெலும்புள்ள சுயமரியாதை உடையவர்களை நிச்சயம் நாம் ஆதரிக்க வேண்டும்... ஆம் அஜீத் மீதான அதிகாரத்துவத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக என் கண்டனத்தை பதிப்பிக்கின்றேன்(இந்த ஒரு எழவைத்தவிர வேறென்ன செய்ய முடியும் என்னால்)

சனி, 13 பிப்ரவரி, 2010

3டி-யில் எந்திரன்?

ஜக்குபாய் உலக இணையத்தில் முதல் முதலாக வெளிவந்ததில் ஆடிப்போயிருக்கிறார்கள் திரையுலகினர். இதுபோன்ற இணைய கடத்தலுக்கு தனது படங்கள் ஆளாகிவிடக் கூடாது என்பதில் எல்லோரையும் விட உஷாராக இருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

இவரது எஸ் பிக்சர்ஸ் தயா‌ரித்திருக்கும் ரெட்டச்சுழி படம் ஏற்கனவே முடிந்துவிட்டது. படத்தின் பாதுகாப்பு கருதி பர்ஸ்ட் காப்பியை அவர் லாக்க‌ரில் பாதுகாப்பதாக கிசுகிசுக்கிறார்கள்.

அதேபோல் எந்திரனின் பாதுகாப்புக்கு இன்னொரு ஐடியா வைத்திருக்கிறார் ஷங்கர். அவதாரைப் போல் 3டி-யில் எடுத்தால் தியேட்ட‌ரில் வந்துதான் படத்தைப் பார்த்தாகணும். இந்த ஐடியாவுக்கு ஏற்படும் செலவைப் பொறுத்து எந்திரன் 3டி-க்கு மாற்றப்படும் என்கிறார்கள்.

இனி கதையை மட்டும் யோசித்தால் போதாது, பாதுகாப்பை பற்றியும் பாடம் படிக்கணும் போலிருக்கிறதே. 

திங்கள், 21 டிசம்பர், 2009

வேட்டைக்காரன் - திரைவிமர்சனம்

 
வேட்டைக்காரன்! விஜய் படம் என்பதற்காகவே அதை எதிர்க்கும் நண்பர்களுக்கிடையே நான் இந்த படத்தை சென்று பார்த்தேன்.(கூடவே உலக சினிமாவை மட்டுமே பார்க்கும் அறிவு ஜீவிகளுடன்??!!!).சும்மா சொல்லக்கூடாது தியேட்டர் சென்றவுடன் தமிழ்நாடா,கர்நாடகாவா என்றே குழம்பும் அளவுக்கு பேனர்கள் ,கட்அவுட்டுகள் ,தோரணங்கள் என்று களைகட்டியிருந்தது .என்னுடன் வந்த ஒருவன் டேய்! கர்நாடகாவுல விஜய்க்கு இவ்ளோ ரசிகர்களா என்று வியக்கும் அளவுக்கு இருந்தது தியேட்டரில் கூட்டமும் .

நாங்கள் முன்கூட்டியே சென்றதால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் டிக்கெட் எடுத்து கியூவில் நின்றோம் .தியேட்டருக்கு போகும் போதுதான் சிலபல வேலைகள்  செய்யவேண்டும் என்று எங்கள் கூட்டத்தில் ஒருவர் இருக்கிறார்.அவரால் நங்கள் கொஞ்சம் படபடப்பாக வேண்டியதாயிற்று. அப்பாடா ஒருவழியாக உள்ளே போய் நல்ல சீட்டாக பார்த்து உட்கார்ந்தாச்சு.

வேட்டைக்காரன் கதை :

தூத்துக்குடியில் +2  நான்காவது முறையாக எழுதி ரிசல்ட் க்காக  வெயிட் பண்ணிக்கொண்டிருக்கும் ரவி (இல்லை இல்லை போலீஸ் ரவி ,இதுதான் படத்தில் ஹீரோவோட பேரு ) ஊரில் நடக்கும் தவறுகளை தட்டி கேட்டுக்கொண்டு  ஒரு போலிசாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறான் .இவனுடைய லட்சியமெல்லாம் Encounter specialist  தேவராஜ் (தெலுங்கு நடிகர் ஸ்ரீ ஹரி ) மாதிரியே பெரிய போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பதுதான் . அவருக்காக ஊர் நடுவில் பெரிய கட்அவுட்டு வைக்கிற அளவுக்கு பெரிய விசிறி . 

இப்படியே போய்கொண்டிருக்கிற போலீஸ் ரவி வாழ்கையில் திடீரென்று ஒரு அசம்பாவிதம் நிகழ்கிறது .அது அவரு +2  பாஸ் பண்றதுதான் .அப்புறம் ஒரு வழியாக தேவராஜ் படிச்ச அதே காலேஜ்ல சீட் வாங்கி  சேர்கிறார்  விஜய்.முதல் நாளே தன் சக மாணவிக்கு நேரும் அவமானத்திற்கு பதில் தீர்த்து மாணவர்கள் மத்தியில் நல்ல பேரை வாங்கும் விஜய் ,அப்படியே அந்த மாணவியை தன்னுடைய தோழி ஆக்கிகொள்கிறார்.  அவள் மூலமாகவே தேவராஜ்போல் தானும் ஆட்டோ ஒட்டி சம்பாதித்துதான்  படிக்க வேண்டும் என்ற ஆசையையும் நிறைவேற்றிக்கொள்கிறார்.

ஹீரோ சிட்டிக்கு வந்தாச்சே !! இப்போ வில்லன் என்ட்ரி அகனுமே ? வருகிறார் சாய்குமார் வித்தியாசமான கெட் டப்பில் .அவருக்கு அழகான பெண்களை பார்த்தவுடனே படுக்கைக்கு  அழைக்கும் ( கடத்தி செல்லும் )  குணம். அதை நிறைவேற்றுவதற்காகவே கூட 5 அல்லக்கைகள் .தன் தோழி மீது  அதே வில்லனின் கடைக்கண் பார்வை விழ !!! ஹீரோ வில்லனுடன் மோதுகிறார் ,அவரை அடித்து வீழ்த்தி ஆஸ்பத்திரியில் படுக்க வைக்கிறார் ,கூடவே அவருக்கு இருந்த Image ஐ யும் உடைக்கிறார். இப்போ போலீஸ் வந்து வில்லனை பிடிப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால்  தவறு,அவர்கள் விஜய்ஐ சிறையில் அடைத்து துன்புறுத்துகிறார்கள்.ஒரு கட்டத்தில் பொங்கி எழும் ஹீரோ சிறையை உடைத்து வெளியில் வர பெரிய Polica force வந்து அவரை மடக்கி பிடித்து மறுபடியும் சிறையில் அடிக்கிறார்கள் .மேலும் பழைய வெடிகுண்டு கேஸில் விஜய் பெயரையும் சேர்த்து Encounter  la போட்டு தள்ள காட்டுக்கு அழைத்து செல்கிறார்கள் ,அங்கிருந்து  தப்பிக்கும் விஜய் ஆற்றின்  முடிவான அருவியில் இருந்து குதித்து சின்ன முழங்கால் காயத்தோடு தப்பிக்கிறார்!!!! ????? .

தப்பித்த விஜய் நேராக பெரிய வில்லன் சலீம் கௌஸ் முன்னாள் போய் நிற்க அவர் விஜயை கூட்டிக்கொண்டு தன்னுடை ஒரு நாள் வேலையை விளக்குகிறார் ( பயம் காட்றாராமாம்). இதன் மூலம் எதிரியின் கோட்டையை புரிந்து கொள்ளும் விஜய் அவனை அழிக்க தானும் ரவுடி ஆகிறார் ( புலி உறுமுது  பாடல் ஒலிக்க). எப்படி அவர் வில்லனை அழிக்கிறார் ,தன்னுடைய நிஜ ஹீரோ தேவராஜை பார்த்தாரா இல்லை அவர் என்ன ஆனார் என்பதுடன் படம் முடிவடைகிறது இடை இடையே காதல்,காமெடி காட்சிகளுடன் .

விமர்சனம் :   

இதற்க்கு முன் வந்த படங்களை விட இந்த படத்தில் விஜயின் அறிமுக காட்சியில் அடக்கி வாசித்திருக்கிறார்கள் .Opening song ல் விஜயுடைய பையன் வந்து ஆடுவது  கலகலப்பு ,விஜய்க்கு இவ்வளவு  பெரிய மகனா என்று தியேட்டரில் பெரும்பாலனோர்  சலசலத்தது கேட்கமுடிந்தது. ஊரில் செய்யும் கலாட்டா அதை தொடர்ந்து சென்னைக்கு கிளம்புவது வரை ஏற்கனவே பல படங்களில் பார்த்தது போலவே இருந்தது பலவீனம் .ரயில்வே ஸ்டேஷன் ல அனுஷ்காவை பார்த்ததும் விஜய்யும் சத்யனும் செய்யும்  காமெடி கலாட்டா தூள் .


சென்னை வந்ததும் ஸ்ரீஹரியை போய் பார்க்கும் விஜய் அவர் ஊரில் இல்லை என்றதும் எங்கு தங்குகிறார் என்பதெற்கெல்லாம் விடை இல்லை .விஜய்யும் ,அனுஷ்காவின் பாட்டி சுகுமாரியும் சேர்ந்து செய்யும்  காமெடி கலாட்டவில் தியேட்டரே கல கல . ஸ்ரீநாத் காமெடி செய்கிறேன் பேர்வழி என்று வந்து உண்மைலேயே காமெடி பீஸாகி போகிறார். வடிவேல் ,விவேக்,சந்தானம் போன்ற காமெடியன்களின் உதவி இல்லாமல் கதையோடு விஜய் செய்யும் காமெடிகள் ரசிக்க தக்கவை . ஒரு மசாலா படத்திலேயே இவ்வளவு செய்ய முடிகிற விஜய், கமல் போல ஒரு முழுநீள நகைச்சுவை படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் விருப்பம் . 

சண்டைக்காட்சிகள் அனைத்தும் அனல்பறக்க உள்ளது ,அனால் வில்லனின் அடியாட்களுடன் விஜய் பின்னால் பறப்பது எல்லாம் டூமச் .அதை பார்த்து சிரிப்பதை தவிர வேறு வழியில்லை. வில்லன் கதாபாத்திர  வடிவமைப்பில் ஏதும் புதுமை இல்லை,அதே காட்டு கத்தல் தான் . சலீம் கௌஸ் -ன் நடிப்பு அருமை ,அதுவும் கிளைமாக்ஸ்ல் அவர் பேசும் வசனமும் ,அந்த தொனியும் சூப்பர்.

அனுஷ்கா - ரசிகர்கள் அவரிடம் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதை தெரிந்து நடித்திருக்கிறார் .மற்றபடி வழக்கம் போல விஜய் பட நாயகியாக வந்து அவரை காதல் செய்வதைத்தவிர யான் வேறொன்றும் அறியேன் பராபரமே என்று சொல்லி செல்கிறார். சத்யன் இந்த படத்தில் ஹீரோ friend என்கிற அந்தஸ்துக்கு  உயர்ந்திருக்கிறார், இதே போல் வாய்ப்புகளை செலக்ட் செய்து நடித்தால் அவருக்கு பெரிய எதிர்காலமுண்டு .
  
தில்,தூள்,திருப்பாச்சி,பகவதி படங்களின் பாதிப்பு அங்கங்கே தென்படுவதை தவிர்க்கமுடியவில்லை .ஒருவேளை டைரக்டர் இந்த படத்தை எப்படியாவது ஹிட்டாக்கியே தீரவேண்டுமென்று இப்படிசெய்துவிட்டாரோ என்னவோ.ஆனால் படத்தில் Director Touch என்ற வார்த்தைக்கு ஒரே காட்சி கூட இல்லை ,இயக்குனர் முழுக்க முழுக்க விஜய் என்ற தனிமனிதனை நம்பி களத்தில் இறங்கியிருப்பது படம் பார்க்கும் கடைசி ரசிகனுக்கு கூட கண்கூடாக  தெரிகிறது .சத்யன் கொலைக்கு பழிவாங்க விஜய் செய்யும் செயல்கள் கண்மூடி திறப்பதற்குள் முடிந்துவிடுவதால் ,என்ன நடக்கிறது என்பதை எல்லோராலும் புரிந்துகொள்ளமுடியவில்லை .சாய்குமாரை கொலை செய்ய காரை தண்ணியில் தள்ளி remote மூலம் Door lock செய்வதெல்லாம் ரசிக்கும்படி இருந்தது .
பஞ்ச் டயலாக் இல்லாத விஜய் படம் ( ஒரே ஒரு டயலாக் " சாமிகிட்ட மட்டும்தான்" தவிர) .உபயம்: சன் பிக்சர்ஸ்.

பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட்டாகிவிட்டன  .புலி உறுமுது பாடல் எதிர்பார்த்த அளவுக்கு படமாக்கப்படவில்லை. மற்ற பாடல்கள் அனைத்தும் அருமை .பின்னணி இசையில் ஒன்றும் புதிதாக சொல்வதற்கில்லை ,விஜய் அந்தோனி இன்னும் கொஞ்சம் நன்றாக முயற்சித்திருக்கலாம்  .ஒளிப்பதிவு -கோபிநாத் பாடல் காட்சிகளை தவிர மற்ற எதிலும் அவர் சாதிக்கவில்லை. படத்தொகுப்பு -V.T.விஜயன் ,பாடல்கள் அனைத்தும் திடீரென்று முடிந்து காட்சிகள் தொடர்வது சற்று கடினமாக உள்ளது ,இன்னும் Soft Editing செய்திருக்கலாம் .விஜயிடம் எல்லோரும் எதிர்பார்க்கும் டான்ஸ் இந்த படத்தில் குறைவு.சொல்லிக் கொள்கிற  அளவுக்கு விஜய்க்கு இந்த படத்தில் Dance movements இல்லை (உச்சி மண்டை பாடலில் வரும் தலைகீழ் நடனம் தவிர )என்பது  ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் .கோடிக்கணக்கான விஜய் ரசிகர்களின் சார்பாக ஒரே வேண்டுகோள் ..இந்த படம் ஓடுகிறது என்பதற்காக மீண்டும் இதே போல் நடிக்காமல் atleast கதையாவது புதுசா தேர்ந்தெடுத்து நடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .

3 மணிநேரத்திரைப்படம் ,போரடிக்காமல் செல்கிறது...காமெடி,காதல் என்று முதல் பாதி அருமை . வழக்கம் போல அடிதடி ,பழிவாங்கல் என்று இரண்டாம் பாதி.

விஜய் ரசிகர்களுக்கு நல்ல தீனி ,மற்றவர்களுக்கு ஓகே ரகம்.

வேட்டைக்காரன் - ரசிகர்களை வேட்டையாடாதவன்.

-சூரியன்

வெள்ளி, 18 டிசம்பர், 2009

வேட்டைக்காரன்... அடேங்கப்பா !



படம் இன்னிக்கு தான் வெளியாகுது, முன்பதிவு தொடங்குகிறது என்ற கேள்விப்பட்டதும், சிங்கப்பூர், கோல்டன் வில்லேஜ் யூசுன் திரையரங்கில் நேற்று மாலை நுழைவுச் சீட்டு பெற காந்திருந்தவர்களின் நீண்ட வரிசை தான் மேலே பார்க்கும் படம்.


மிக்க நன்றி : காலம்

செவ்வாய், 8 டிசம்பர், 2009

மன்னிப்பு கேட்க நான் தயார்…’ ‘ஏத்துக்கவும் நாங்க தயார்…’ ‘ஆனா?’

போராட்ட நாடகத்தின் கிளைமாக்சுக்கு முந்தைய காட்சி!’

தனது ஆபாச பேச்சுக்காக இப்போது தினம் தினம் புலம்பித் திரியும் விவேக், பத்திரிகையாளர் சங்கங்களிடம் மன்னிப்புக் கேட்கத் தயார் என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் அவர் நடித்துள்ள மகனே மருமகனே படத்தின் பிரஸ் மீட்டுக்கு அவராலேயே வர முடியாத நிலை. காரணம், அவர் வந்தால், நாங்கள் பிரஸ் மீட்டிலிருந்து வெளியேறுவோம் என பத்திரிகையாளர்கள் எச்சரித்ததுதான். இதனால் பிரஸ் மீட் நடந்த ராஜ் டிவி ஸ்டுடியோ வரை வந்தவர், உள்ளே நுழையாமல் காரிலேயே காத்திருக்க வேண்டியதாயிற்று.

பின்னர், ‘நான் பத்திரிகையாளர்களிடம் இங்கேயே மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். வரட்டுமா?’ என தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களிடம் மன்றாடியுள்ளார். இதை இயக்குநர் டிபி கஜேந்திரனே வந்து சொன்னாராம். ஆனால் பத்திரிகையாளர்களால் அதற்கு உடனே ஒப்புதல் சொல்லிவிட முடியவில்லை.

காரணம்… இருக்கிறது!

இதை முடிவு செய்ய வேண்டியவர்கள் இவர்கள் அல்ல… இந்த போராட்டத்தை ஆரம்பித்தது சினிமா பத்திரிகையாளர்கள் அல்ல என்பதுதான் உண்மை. இதனை ‘உழைக்கும் பத்திரிகையாளர்கள்’, ‘பிரஸ் கிளப்’ ‘தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம்’ போன்ற பொதுவான பத்திரிக்கை அமைப்புகளே முன்னெடுத்துப் போராடின. அவர்களுக்கும் சினிமா கலைஞர்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. சினிமாக்காரர்களின் மதுவிருந்திலோ கேளிக்கைகளிலோ அவர்கள் பங்காளிகள் அல்ல.

ஆனாலும்- ‘பொதுவாக அனைத்துப் பத்திரிகையாளர்களையும் இழிவாக இந்த நடிகர்கள் பேசிவிட்டார்களே’ என்று கோபப்பட்டவர்கள் அவர்கள்தான்.

கொளுத்திய வெயிலில் நடு ரோட்டில் படுத்து கோஷம் போட்டதும் கொடி பிடித்ததும் அவர்களே. ஆனால் அந்த நேரத்தில் (சரியாகச் சொன்னால் மெரீனா சாலையில் போராட்டம் நடந்த நேரத்தில்) கிரீன் பார்க் ஓட்டலில் சூர்யா பிரஸ் மீட்டில் பிரியாணி சாப்பிட்டவர்கள்தான் சினிமா பத்திரிகை நிருபர்கள் (அரிதான விதிவிலக்குகள் சிலர் உண்டு). அட அவ்வளவு ஏன்… பிரஸ் கிளப் நடத்திய போராட்ட ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கூட பங்கெடுக்காத அளவுக்குதான் இவர்கள் மானம் ரோஷத்தின் லட்சணம் இருந்தது. நாம் இங்கே எழுதியதெல்லாம் கூட இவர்களுக்கு வக்காலத்து வாங்கியல்ல.

எனவே பிரச்சினை விவேக்குக்கும் சினிமா துணை நடிகர்களில் ஒரு பிரிவினராகவே மாறிவிட்ட சினிமா நிருபர்களுக்கும் கிடையாது. போராடும் பத்திரிகையாளர்கள் வேறு. அவர்கள் இந்த சினிமா நிருபர்களை ஒரு பொருட்டாகவும் பார்ப்பதில்லை. எனவே ஒட்டு மொத்த பத்திரிகையாளர்கள் சார்பாகவும் விவேக்கின் மன்னிப்பை ஏற்கும் இடத்தில் அல்லது தகுதியில் சினிமா நிருபர்கள் இல்லை.

அந்த போராடும் பத்திரிகையாளர்களுக்கு விஷயம் தெரிந்தால் சண்டைக்கு வருவார்கள் என்ற உண்மை உறைத்ததாலோ என்னமோ, அமைதியாக கலைந்து சென்றனர் சினிமா நிருபர்கள். இல்லாவிட்டால், ஒரு சமாதான நாடகம், அதைத் தொடர்ந்த தண்ணி பார்ட்டி குறித்த ரிப்போர்ட்டை இங்க தரவேண்டி வந்திருக்கலாம்!


நன்றி : என்வழி

செவ்வாய், 1 டிசம்பர், 2009

விஜய் படத்துக்கு பிரபாகரன் சொன்ன டைட்டில்!


தம்பி படத்தை அடுத்து ’கோபம்’ காட்டவிருந்தார் சீமான். ஆனால், சூழ்நிலை அவரை ‘வாழ்த்துகள்’சொல்ல வைத்தது.

இந்த காலகட்டத்தில் சீமான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்தபோது, ‘’கோபம்’ என்று படம் எடுக்கப்போகிறேன்’ என்று சீமான் சொல்ல,பிரபாகரனுடன் பக்கத்தில் இருந்தவர் ‘சினம்’ என்று தலைப்பு வையுங்கள் என்றாராம்.
அதற்கு பிரபாகரன், ‘கோபம் என்று சொன்னால்தான் அதில் அழுத்தம் இருக்கிறது. ஒரு வேகம் இருக்கிறது. அந்த தலைப்பிலேயே படம் எடுங்கள். அதற்கு என் வாழ்த்துக்கள். ஆனால் வாழ்த்துக்கள் மாதிரி மென்மையான படம் எடுக்க வேண்டாம்’என்று சொன்னாராம்.
அதன்படி சீமான் ‘கோபம்’காட்ட முடிவெடுத்துவிட்டார். நடிகர் விஜய்யும் சீமானுடம் இணைய முடிவெடுத்துவிட்டார்.
படப்பிடிப்புதான் எப்போது துவங்கப்போகிறது என்று தெரியவில்லை.

வெள்ளி, 13 நவம்பர், 2009

புதிய பாதையில் விஜய்-அஜீத்:பழைய ரூட்டில் ரஜினி-கமல்

ஆண்டொன்று போனால் வயதொன்று கூடுது என்பதால் அதிரடி முடிவுக்கு வந்திருக்கிறார்கள் ரஜினியும் கமலும்.

முன்பெல்லாம் இவர்கள் இருவரும் வருடத்திற்கு மூன்று, நான்கு படங்கள் நடித்தார்கள்.இப்போது அந்த பழைய ரூட்டை பிடிக்க முடிவெடித்திருக்கிறார்கள்.

நிறையை படங்கள் பண்ணினால் கமர்சியல் என்ற ஒரே குதிரையில் ஓடவேண்டிய அவசியத்தை தவிர்க்கலாம். கமர்ஷியல்,கலைப்படங்கள் என்று கலந்துகட்டி அடிக்கலாம் என்று நண்பன் ரஜினிக்கு ஐடியா கொடுத்திருக்கிறார் கமல்.

’சரியாச்சொன்னீங்க கமல்’என்று பதில் சொன்ன ரஜினியும் சரி’யா முடிவெடித்திருக்கிறாராம்.

நீண்ட நாள் புராஜக்ட் போய்க்கிட்டிருந்தாலும் நடுநடுவே சில படங்கள் கொடுத்துவிடவேண்டும் என்று முடிவெடுத்ததோடு மட்டுமல்லாமல் அதற்கான வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார்கள்.

இவர்கள் இப்படி பழைய ரூட்டை பிடிக்க திட்டமிட, விஜய்,அஜீத் இருவரும் புதிய பாதையில் போக திட்டமிட்டிருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் தங்களது படங்கள் மூலமும், பேட்டிகள் மூலம் மாறி மாறி பஞ்ச் டயலாக் அடித்து தங்களது ரசிகர்களை உசுப்பேத்திக்கொண்டார்கள்.

இப்படிப்பட்ட சமயத்தில் அஜீத்தின் திருப்பதி பட பூஜைக்கு விஜய் விஜயம். அதன்பிறகு இவர்களது சந்திப்பு வீடுவரை சென்றது. இருவரது வீட்டுக்கும் இருவரும் சென்று விருந்து உபசரித்துக்கொண்டார்கள்.

தற்போது ஏவி.எம். ஸ்டூடியோவில் பக்கத்து பக்கத்து ப்ளோர்களில் அஜீத்தின் அசல், விஜய்யின் சுறா படத்தின் சூட்டிங். இடைவேளையில் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றார் அஜீத்.

இருவரும் மனம் விட்டு பேசிக்கொண்டிருக்கையில்,’’சமீபத்தில் கமல் சார் ஒரு பங்சன்ல இதுக்கு முன்னாடி ரஜினி மாதிரியும் என்னை மாதிரியும் நண்பர்கள் கிடையாது என்று சவால் விட்டார். எனக்கு புல்லரிச்சுச்சு’’என்று அஜீத் சொல்ல,

‘’அவுங்க ரெண்டு பேருக்கு பின்னால நாமதான் பெஸ்ட் ப்ரண்ட்ஸ் என்பதை நிரூபிக்கனும்’’என்று விஜய் சொல்ல,

‘’ரெடி,ஸ்டார்ட் ’’என்று சிரித்தாராம் அஜீத்.

நன்றி : நக்கீரன்

செவ்வாய், 10 நவம்பர், 2009

வருங்கால சி.எம் விஜய்க்கு....


நேத்து பாத்ரூம்ல குளிக்கும்போது சொல்லி பார்த்தேன்.... சும்மா ஜிவ்வுன்னு சோக்காகீதுண்ணா... என்னைக்குன்னாச்சும் நீ எப்டியாச்சும் முதலமைச்சர் ஆய்டு.. என்ன தகுதி இல்லன்னா உனக்கு...? நல்லா டான்ஸ் ஆடுற, நல்லா பைட் போடற, நல்லா நக்கல்பண்ற, இரும்பு சட்டறகூட அசால்ட்டா உடைச்சுகிட்டு வெளில வர்ற... இதுக்கு மேல என்ன வேணும் முதலமைச்சர் ஆகறதுக்கு..?. ரெண்டே ரெண்டுதான் உன்கிட்ட இல்ல... ஒரு படத்துக்கு கதை வசனம் எழுதிட்டு... கொடநாட்ல ஒரு எஸ்டேட் வாங்கி போட்டீன்னா அதுவும் ஓவர்.. புல் எலிஜிபிலிட்டி உள்ள காண்டிடேட் நீ.. தேர்தல்ல நீ நிக்கற... நாம ஜெயக்கறோம்...

எது கூட்டணியா...? என்ன பேசற நீ...? இல்ல கேக்கேன்... நீ ஒரு ஆளே ஒரு தேசிய கட்சிக்கு சமம்... உனக்கெதுக்கு கூட்டணி... உன் கெத்துக்கெல்லாம் நீ ஏண்ணா ராகுல போய் பார்க்கற...? அவரு வருவாரு பாரு... நம்பளை தேடி...

நானும் 3 நாளா யோசிச்சிட்டேன் உன்ன எந்த தொகுதில நிப்பாட்டலாம்னு... நீ எந்த தொகுதில நின்£லும் அன்னபோஸ்ட்டா ஜெயப்பங்கறது வரலாறு சொல்லும்... ஆனா, நம்ம ச.மு.க. கெத்த தமிழ்நாட்டுக்கு காட்டணுமா இல்லையா... (நம்ம கட்சி பேரு ச.மு.க.ன்னேன்... சந்து முன்னேற்ற கழகம்...)

நீ மத்திய சென்னைல நில்லு... ஏன்னு கேளு, சேப்டி மத்திய சென்னைதான். ஏதும் பிரச்சனைனா வீட்டுக்கு ஓடி வந்துடலாம்.. புலி உறுமுது பாட்ட தெருவுக்கு தெரு லவுட் ஸ்பீக்கர் வெச்சு போட்டம்னு வெச்சுக்க, பாட்ட கேட்டு மெரண்டு போய் ஓட்ட போட்ருவாங்கே... கண்ண மூடிகிட்டு ஜெய்ச்சிட்லாம். உங்கப்பா பிரசாரத்துக்கு வரணும்னுகூட அவசியம் கெடயாது... ஒரு பிரச்சனை முடிஞ்சிது... இப்போ தமிழ்நாட்டோட மத்த தொகுதிகள பத்தி பேசுவோம்... நாமக்கல்ல பேரரச நிப்பாட்றோம்... ரமணாவ பாபனாசத்துல, விக்ரமன உடுமலைபேட்டைல, என்னது கௌதம் மேனன்க்கா... என்ன பேசற நீ... அவர்லாம் ஒரு டைரக்டர்... ஆதி மாதிரி ஒரு நல்ல படம் எடுதுருக்காரா...? வேணா வெயிட் பண்ண சொல்லு அடுத்த எலெக்சன்ல பார்க்கலாம்... இப்போதைக்கு இந்த லிஸ்ட அன்னௌன்ஸ் பண்ணு... மிச்சத்த அப்புறம் ஷோபா அம்மாகிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு முடிவெடுப்போம்...

இப்ப என்னோட பெரிய பயம் என்னன்ன லட்சிய திமுகவ என்ன பண்றதுனுதான். நமக்கு மிக பெரிய போட்டிய நான் அவங்ககிடேர்ந்து எதிர்பார்க்கறேன்.. ஒரு வோட்டுதான் வெச்சுருகாங்கன்னு நம்ம அலட்சியமா விட்ற கூடாது.. அந்தாளு மேடைக்கு மேடை அடுக்கு மொழில பேசி உன் இமே ஜ டேமேஜ் பண்ணிடுவாரு.. ஆக கடைசி பிரச்சனை திமுக?. நம்மல்லாம் பொறந்துட்டதுனால அரசியலுக்கு வந்துருக்கோம்.. ஆனா, அவங்கே அரசியல் பன்றதுகுன்னே பொறந்தவங்கே... அவங்ககிட்ட சின்னபுள்ள தனமா மோதுனோம்ன தடம் தெரியாம போட்ருவாங்கே... அதனால அத மட்டும் அறிவு பேராசான் திரு.அப்பா அவர்கள்ட்ட அறிவுரை கேட்டுக்குவோம்...

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்... நம்ம ஆட்சிக்கு வந்தோம்ன்னா அந்த சொம்பு வந்து நம்மளோட சேர பார்ப்பாரு... ஆனா அவர சேத்துக்காத.. உன்ட்ட சொல்ல மறந்துட்டேன். அவரு போன படத்துல உன்ன கலாசிட்டாருங்ண்ணா... நான் குருவி இல்ல.. பில்லான்னு சொல்லிட்டாரு... அது சத்துக்கு அது எப்டின்னா உன்ன கலாய்க்கலாம். விடலாமா? அத... நசுக்கறோம்... அவரு மட்டும்தான்னா நமக்கு காண்டு... மத்த எல்லாரும் நல்ல பசங்க... இவர மட்டும் பாண்டி பஜார்ல கஞ்சா வித்தாருன்னு சொல்லி உள்ள தூக்கி போட்டு முட்டிய உடைச்சு விட்டறலாம்..

அண்ணோவ் நீ பார்லிமென்ட் கதவ வெல்டிங் மெஷின் வெச்சு தெறந்து காலால எட்டி உதைச்சு கதவ தொறந்து உள்ள போய் லாலுவ நக்கல் பண்ணிகிட்டே பாக்கு மெல்ரத பார்த்து இந்தியாவே மெரள போற நாள்க்காக காத்திருக்கேன்னா...


நன்றி-ஒரு பேப்பர்
லண்டன்