செவ்வாய், 9 நவம்பர், 2010

கமலஹாசனின் பகுத்தறிவு பேச்சு அலறும் இந்துத்துவாக்கள் !

விஜய் டிவி தீபாவளி நிகழ்ச்சியாக காபி வித் அனுவில் கமல் நிகழ்ச்சியில் கமல் பேசிய பகுத்தறிவு கருத்துகளை தினமலர் யாரோ ஒரு பாண்டே என்பவர் மூலம் சர்சை ஆக்க முயன்றுள்ளது. கமல் நிகழ்ச்சியில் என்ன சொன்னார் ?

1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது,ஆபாசமானது; அர்த்தமற்றது.

2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர்.

3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக்

குடித்துக்கொள்கிறார். என்ன தப்பு?

4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர்.
இதற்கு பாண்டே பதில் கூறுவதாக உளறி இருக்கிறார்

1. படுக்கையறை உணர்வுகளை எப்போதுமே மறைத்து வைக்கத் தெரியாதவர் கமல்ஹாசன். அவருடைய உணர்வுகளும், உறவுகளும் உலகறிந்த விஷயம். அப்படிப்பட்டவர், படுக்கையறை ரகசியங்களை பிறரோடு பகிர்ந்துகொள்ளக் கூடாதுஎன பேசியதே வியப்பு. இருந்தாலும், ஆத்திகவாதிகள் அதை அடக்கி வாசிக்கவேண்டும் என்றால், நாத்திகவாதி ஏன் அதைப் பற்றி, "டிவி'யில் பிரஸ்தாபிக்கிறார்?தனது நாத்திக உணர்வுகளை, தனக்குள்ளேயே வைத்திருக்க வேண்டியது தானே.இவரைப் போன்ற சிலர் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி இத்தகையபிரசாரங்களில் ஈடுபடுவதால் தான், ஆத்திகமும் பீறிட்டு எழ வேண்டியிருக்கிறது.

கமல் போன்ற பெரிய நடிகர்கள் முதல் குத்தாட்ட நடிகைகள் வரை அனைவரின் படுக்கை அறைகளை எட்டிப் பார்த்து திரைச் செய்திகள், துணுக்கு மூட்டை, கிசு கிசு என்பதாக எழுதுவது தினமலர் போன்ற செய்தி / வார இதழ்கள் தன்னிச்சையாக செய்வதே அன்றி, எந்த ஒரு நடிகரும் / நடிகையும் தான் இன்னாருடன் குடித்தனம் நடந்துகிறேன், (கள்ள) உறவு வைத்திருக்கிறேன் என்பதாகச் சொல்லுவதில்லை, இப்பவும் கூட பிரபுதேவா - நயந்தாரா ஆகியோர் பின்னால் மோப்ப நாய்களைப் போல் அலைகிறார்கள். கடவுள் வியாபாரத்தில் பிராச்சாரம் செய்வது தனிமனிதர் ஒருவரின் உரிமை என்றால் அதை மறுப்பதும் அதன் கேடுகள் உணர்ந்து, பிடிக்காத தனிமனிதனின் உரிமை ஆகும். கமல் பொதுத்தளத்தில் நாத்திக பகுத்தறிவு பேசுவது ஆன்மிக வா(ந்)திகளுக்கு பொது இடத்தில் பேசும் உரிமை போன்றது தான்.
2. உலக நாயகனாக இன்று பரிணமித்திருக்கும் நடிகர் கமல், தனது சொந்த ஊர் எதுஎன்று கேட்டால், பரமக்குடியைத் தானே குறிப்பிடுவார்? "யாதும் ஊரே; யாவரும்கேளிர்' என தத்துவம் உதிர்ப்பாரோ. பிரபஞ்சம் முழுக்க இறைவன் வியாபித்திருந்தாலும், தெய்வ சாந்நித்தியம் குவிந்திருக்கும் இடங்கள் என்று சிலஉண்டு. திருப்பதி அவற்றில் ஒன்று. கமலின், "மன்மதன் அன்பு' படம்வெளியாகிவிட்டால், அவரவர் இருந்த இடத்தில் இருந்தே பார்த்துவிட முடியுமா? தியேட்டருக்குச் சென்று தானே பார்க்க வேண்டும்!

எந்த ஒரு தேசியவியாதியும் தான் தமிழன் என்றே சொல்லிக் கொள்ளாத போது, தான் பரமகுடிக்காரன் தமிழகத்தைச் சேர்ந்தவன் என்று சொல்வதில் என்ன தப்பு ? பிரபஞ்ச,ம் முழுவதும் கடவுள் இருக்கிறா இல்லையா என்பதே பிரச்சனை இல்லை, ஒரு மசூதியில் கடவுள் இருப்பதையோ, காஃபாவில் கடவுள் இருப்பதையோ, எருசலேமில் ஏசு அவதரித்தார் என்பதையோ இந்த இந்துத்துவாக்கள் முதலில் நம்புவார்களா ? அது எப்படிங்க பிரபஞ்சம் முழுவதும் இருக்கும் கடவுள் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் இருக்க மாட்டார்?. திரைபடம் திரை அரங்கு போய் தான் பார்க்க வேண்டுமா ? டிவி பெட்டியில் பார்க்க முடியாதா ? வெளிநாடுகளில் படம் வெளியாகும் அன்றே ஒரிஜினல் டிவிடியும் வெளி ஆகிவிடுகிறதே. பாண்டேக்கள் ஒப்பிடு என்றால் திரைப்படத்தையும் கடவுளையும் ஒப்பிடுவாங்க, அதையே மற்றவர்கள் அரசியல் தலைவர்களையும் கடவுளையும் ஒப்பிட்டால் இந்து மதத்தை அவமதித்துவிட்டார்கள் அலறுவார்கள்

3. பெருந்தெய்வங்கள் பற்றியும், குறுந்தெய்வங்கள் பற்றியும், தெய்வ நம்பிக்கையே இல்லாத கமலுக்கு என்ன கவலை? யார், யாரைக் கும்பிட்டால் என்ன? இவர் ஏன்குறுந்தெய்வங்களுக்காக வக்காலத்து வாங்குகிறார்? அப்படி என்றால்,குறுந்தெய்வங்கள் இருப்பதை ஒப்புக்கொள்கிறாரா? இவர் குறிப்பிடுவது போல,எங்கேயாவது குறுந்தெய்வங்களுக்கு, அவமரியாதை நடந்திருக்கிறதா? அல்லது,சுடலை மாடசாமி சாராயம் குடிப்பதைப் பற்றி, பெருந்தெய்வங்களைப் போற்றும்ஆன்மிகத் தலைவர்கள் யாராவது இவரிடம் ஆதங்கப்பட்டார்களா?

இதே போன்று தான் ஆலய நுழைவு போராட்டம் நடத்திய திகவினரிடமும் கடிந்து கொண்டார்கள், நீ சூத்திரன் இல்லை என்றால் மூடிக் கொண்டு போக வேண்டியது தானே, உங்களுக்கு தான் நால்வருண கோட்பாட்டின் மீது நம்பிக்கை இல்லையே, எங்களைப் பொறுத்த அளவில் சூத்திரன் உண்டு அவன் தீண்டத் தகாதவன் கோவிலுக்குள் விடமாட்டோம் என்றார்கள். ஒரு அநியாயத்தை தட்டிக்கேட்க பாதிக்கப்பட்டவனாகத்தான் இருக்கனுமாம். பாதிக்கப்பட்டவனுக்காக எவரும் பேசக் கூடாதாம். அடங்கொக்கா மக்கா ஜெயலலிதா ஆடுகோழி பலி இட தடை போட்டத்தை இவனுங்க வசதியாக மறந்துட்டு நாமும் மறந்திருப்போம் என்றே பேசுறானுங்க. ஆடுகோழி வெட்ட சுடுகாட்டிற்கெல்லாம் சென்று மறைந்து நின்று பலி இட்ட நிகழ்வும் அதை தமிழக போலிசார் ஒட ஓட விரட்டி பிடித்து வழக்கு பதிவு செய்த நிகழ்வும் தமிழகத்தில் தானே நடந்தது. விராலி மலை முருகனுக்கு சுருட்டு படைக்கக் கூடாது என்று இன்னும் தடை வரவில்லை :). ஆன்மிகத் தலைவர்கள் ஆதங்கப்பட்டு ஜெ வை அத்தகைய சட்டம் போடுவது வழிபாட்டு உரிமையை பறிப்பதாகும் என்று சொல்லி தடுத்திருக்கலாமே. இல்லாத ஒன்றை இந்து மதம் என்பது போலவே பார்பனர் வழிபாட்டு முறைகளை அனைவருக்கும் பொதுவானது என்று கூறுவது முட்டாள் தனமன்றோ.
4. ஆகம விதிகள் என்பது, அறிவியலை மையமாகக் கொண்டது. ஃபைவ் ஸ்டார்ஓட்டலில் ரூம் போட்டு, பலான பலான சரக்குகளோடு எழுதப்படும் திரைக்கதைபோன்றது அல்ல. அது தவிர, தங்கள் கோவில் எப்படி கட்டப்பட வேண்டும் என்பது,கோவில் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயமே தவிர,பகுத்தறிவுப் புலிகளுக்கு இதில் வேலை இல்லை. தன்னுடைய வீட்டை, என்விருப்பப்படி கட்டுவாரா? தன் விருப்பப்படி கட்டுவாரா கமல்? "ஏழைகுடிசைவாசிகளின் ஏக்கத்தைப் புறக்கணித்து, பங்களா கட்டிக்கொண்டுள்ளார் கமல்'என புகார் சொன்னால், அதை நியாயம் என்பாரா ?

ஆகமவிதி கோவி(லி)ல் கருவரையில் தான் தேவநாதன் ஆணுறைகளை கழட்டிப் போட்டான். ஆகமவிதிகள் எதையும் கடைபிடிக்காத கண்ணப்பனுக்குத்தான் அருளினான் என்று பெரிய புராணத்திலேயே வருகிறதே. சிவ ஆகமங்கள் அனைத்தும் சிதம்பரத்தில் கறையான் அரிக்க பூட்டப்பட்டு நம்பியாண்டார் நம்பி தலைமையில் அதை மீட்டெடுத்தான் இராஜராஜன் என்று தான் வரலாறு சொல்லுகிறதே. ஆகம விதி என்றால் என்ன ? தற்போதைக்கு பார்பனர் வடமொழியில் அருச்சனை செய்வது அதுவும் அவர்கள் மட்டுமே செய்வது இதைத்தானே ஆகமம் என்று கூறுகின்றார்கள். முக்தி என்ற பெயரில் நந்தனார் எரிக்கப்பட்டதாக...இவர்களின் ஆகமவிதிப்படி சூத்திரன் கோவிலுக்குள் நுழையக்கூடாது. இது போன்ற ஆகமவிதிகளை அடுப்பில் பொசுக்கி ஆண்டுகள் கடந்துவிட்டதே.

நன்றி : காலம்