செவ்வாய், 23 மார்ச், 2010

இன்று உலக தண்ணீர் தினம்

கோடை கால‌ம் ஆர‌ம்‌பி‌க்கு‌ம் போதே த‌ண்‌ணீ‌ர் வற‌ட்‌சி‌யு‌ம் ஆர‌ம்‌பி‌த்து ‌வி‌ட்டு‌ள்ள ‌நிலை‌யி‌ல் இ‌ன்று உலக த‌ண்‌ணீ‌ர் ‌தின‌ம் கடை‌பிடி‌க்க‌ப்படு‌கிறது.

‌நீ‌ர் இ‌ன்‌றி அமையாது உலகு எ‌ன்பத‌ற்கு ஏ‌ற்ப, ‌நீ‌ரி‌ன்‌றி நா‌ம் வாழ இயலாது எ‌ன்பது‌ம் ந‌ன்கு அ‌றி‌ந்ததே. பூ‌மி‌யி‌ல் 30 ‌விழு‌க்காடு ம‌ட்டுமே ‌நில‌ப்பர‌ப்பாகு‌ம். ‌மீத‌‌மிரு‌க்கு‌ம் 70 ‌விழு‌க்காடு‌ம் ‌நீ‌ர்பர‌ப்புதா‌ன். ஆனா‌ல், இ‌ன்று அ‌‌‌ந்த 30 ‌விழு‌க்கா‌ட்டி‌ல் வ‌சி‌க்கு‌ம் ம‌க்களு‌க்கு‌த் தேவையான ‌நீரை அ‌ளி‌க்கு‌ம் போ‌திய வச‌தியை பூ‌மி இழ‌ந்து வரு‌‌கிறது. அத‌ற்கு‌ம் ம‌னித இன‌ம்தா‌ன் காரண‌ம் எ‌ன்பது மறு‌க்க முடியாத உ‌ண்மை.

1993ஆ‌ம் ஆ‌ண்டு முத‌ல் மா‌ர்‌ச் மாத‌ம் 22ஆ‌ம் தே‌தியை உலக த‌ண்‌‌ணீ‌ர் ‌தினமாக அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு இ‌ன்று வரை கொ‌ண்டாடி‌த்தா‌ன் வ‌ரு‌கிறோ‌ம். ஆனா‌ல் ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் உல‌கி‌ன் பல கோடி ம‌க்க‌ள் த‌ண்‌ணீ‌ரி‌ன்‌றி ‌தி‌ண்டாடி வரு‌ம் ‌நிலையு‌ம் எ‌ந்த வகை‌யிலு‌ம் அகல‌வி‌ல்லை.

ம‌க்க‌ள் தொகை அ‌திக‌ரி‌த்து‌க் கொ‌ண்டே இரு‌க்க, அவ‌ர்களு‌க்கு‌த் தேவையான குடி‌நீ‌ர் தேவையு‌ம் அ‌திக‌ரி‌க்‌கிறது. தேவையை பூ‌ர்‌த்‌தி செ‌ய்ய முடியாத ‌நிலை‌யி‌ல் ‌கிடை‌க்கு‌ம் ‌நீரை‌க் குடி‌க்கு‌ம் ‌நிலை‌க்கு பல பகு‌திக‌ளி‌ல் உ‌ள்ள ம‌க்க‌ள் த‌ள்ள‌ப்ப‌‌ட்டு‌ள்ளன‌ர். அத‌ன் ‌விளைவு கடுமையான நோ‌ய்க‌ள்.

மு‌‌ந்தைய கால‌த்‌தி‌ல் கோடை‌க் கால‌ம் துவ‌ங்‌கி‌வி‌ட்டா‌ல் ‌வீ‌ட்டு‌க்கு வெ‌ளியே பானையோ அ‌ல்லது ஒரு பா‌த்‌திரமோ வை‌த்து அ‌தி‌ல் ‌நீ‌ர் ‌நிர‌ப்‌பி வை‌ப்பா‌ர்க‌ள். வ‌ழி‌யி‌ல் செ‌ல்வோ‌ர் அ‌ந்த ‌நீரை‌க் கு‌டி‌த்து தாக‌ம் ‌தீ‌‌ர்‌த்து‌க் கொ‌ள்வா‌ர்க‌ள் எ‌ன்ற ந‌ல்ல நோ‌க்க‌த்தோடு. ஆனா‌ல் அதுபோன‌ற்தொரு கா‌ட்‌சியை த‌ற்போது நா‌ம் எ‌ங்காவது பா‌ர்‌க்க இயலுமா?

காண முடியு‌ம், வாச‌லி‌ல் குட‌ங்க‌ள் இரு‌க்‌கி‌ன்றன. ஆனா‌ல் அவை ‌நீ‌ர் ‌நிர‌ம்‌பி அ‌ல்ல, ‌நீ‌ர் ‌நிர‌ப்ப, எ‌ப்போதாவது வரு‌ம் குழா‌ய் ‌நீரு‌க்கு‌ம், குடி‌நீ‌ர் லா‌ரி‌க்காகவு‌ம் கா‌த்‌திரு‌க்கு‌ம் குட‌ங்க‌ள் அவை.

முத‌லி‌ல் எடு‌க்க வே‌ண்டிய நடவடி‌க்கைக‌ள் எ‌ன்ன தெ‌ரியுமா? ‌நீ‌ர் ஆதார‌ங்களை கா‌க்க வே‌ண்டு‌ம், த‌ற்போது எ‌த்தனை குள‌ங்க‌ள் இரு‌ந்த இட‌த்‌தி‌ல் அடு‌க்கு மாடி‌க் குடி‌யிரு‌ப்புக‌ள் க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளன, ஏ‌ரிக‌ள் இரு‌ந்த இட‌ங்க‌ள் எ‌த்தனை கால‌னிக‌ள் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. அ‌ங்கே தே‌ங்‌கி ‌நி‌ற்க வே‌ண்டிய ‌நீ‌ர் எ‌ங்கே செ‌ன்று ‌நி‌ற்கு‌ம்? ‌நினை‌த்து‌ப் பா‌ர்‌த்ததா ம‌னித சமூக‌ம்? ‌நீ‌ர் இரு‌ந்த இட‌த்தை கா‌லி செ‌ய்து ‌வி‌ட்டு அ‌ங்கே நா‌ம் குடிபோனோ‌ம். த‌ற்போது குடி‌நீ‌ர் இ‌ல்லை எ‌ன்று அலை‌ந்து கொ‌ண்டிரு‌ப்பது‌ம் நா‌ம்தா‌ன்.

70 ‌விழு‌க்காடு பர‌ப்பளவு ‌‌நீ‌ர் இரு‌ந்தாலு‌ம் அ‌தி‌ல் 97.5 ‌விழு‌க்காடு க‌ட‌லி‌ல் இரு‌க்கு‌ம் உ‌ப்பு ‌நீ‌ர்தா‌ன். ‌மீது‌ம் 2.5 ‌விழு‌க்காடு அள‌வி‌ற்கு‌த்தா‌ன் ‌நில‌த்தடி ‌நீ‌ர் உ‌ள்ளது. இ‌தி‌லு‌ம் துருவ‌ப் பகு‌திக‌ளி‌ல் ப‌னி‌ப்பாறைகளாகவு‌ம், ப‌னி‌த்தரையாகவு‌ம் மா‌றி‌ப் போ‌யிரு‌க்‌கிறது எ‌ஞ்‌சியு‌ள்ள 0.26 ‌விழு‌க்காடு ‌நீரை‌த்தா‌ன் உலக ம‌க்க‌ள் அனைவரு‌ம் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல்தா‌ன், ஐ.நா. சபை கடந்த 1992-ம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த கூட்டத்தை கூட்டியது. கூட்டத்தில், நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், அதை மக்களிடம் உணர்த்த `உலக தண்ணீர் தினம்' கொண்டாடப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஆண்டுதோறும் மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
நில‌த்தடி ‌நீரை‌ப் பாதுகா‌க்க வே‌ண்டியது‌ம், ‌நீ‌ர் ஆதார‌ங்களை கா‌க்க வே‌ண்டியது‌ம், ‌நீ‌ர் மாசுபடாம‌ல் இரு‌க்க வே‌ண்டிய நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டியது‌ம் ம‌னித சமுதாய‌த்‌தி‌ன் கடமையா‌கிறது.

இப்போது, உலகில் உள்ள 80 நாடுகளில் 40 சதவீத மக்கள் சரிவர தண்ணீர் கிடைக்காமல் அவதிபடுகின்றனர். 110 கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். இப்படியே போனால், இன்னும் சில நூற்றாண்டுகளில் உலகமே பாலைவனமாக மாறிவிடும். மக்க‌ள், குடி‌நீரு‌க்காக ஒருவரை ஒருவ‌ர் கொ‌ன்று‌ப் போடு‌ம் நிலைதான் ஏற்படும்.

எனவே, உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில், தண்ணீரை மாசு படுத்தாமல், உயிர் போல் காப்போம் என்ற உறுதி மொழியை மனதில் ஏந்தி, அதனை நிறைவேற்ற பாடுபடுவோம். 



-சூரியன்

ஞாயிறு, 14 மார்ச், 2010

மகளிர் தினமும் மகளிர் மசோதாவும்!

மார்ச் 8 அன்று பெண்கள் தினம். உலகமே பெண்களைக் கொண்டாடிக்கொண்டிருந்த நேரத்தில் இந்தியாவின் பெருமைமிகு டில்லி மேல் சபையும் பெண்கள் தினத்தைக் ‘கொண்டாடியது'. மாநில சட்டமன்றங்களிலும் மக்களவையிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவின் நகல்களை மாநிலங்களவை உறுப்பினர்கள் சிலர் கிழித்து எறிந்தார்கள். தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின் மீது விவாதம் நடத்த விடாமல் அவையை ஸ்தம்பிக்கச் செய்தார்கள். 15 ஆண்டுகளாகத் தள்ளிப்போடப்பட்டுவரும் இந்த மசோதா மீண்டும் ஒருமுறை தள்ளிப்போடப்படுமோ என்ற சூழ்நிலை எழுந்தது.

என்றாலும் அடுத்த நாள் அதே சபை அந்தச் செயலுக்குப் பரிகாரம் தேடிக்கொண்டது. தாக்கல் செய்ய விடாமல் தடுத்த எம்.பி.க்களை பலவந்தமாக வெளியேற்றிவிட்டு விவாதம் நடந்தது. மசோதா நிறைவேறியது. எதிரெதிர் துருவங்களைச் சேர்ந்த சுஷ்மா ஸ்வராஜும் (பா.ஜ.க.) பிருந்தா காரத்தும் (சி.பி.எம்.) கட்டி அணைத்தபடி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்த காட்சியே பெண்களின் உணர்வுகளைப் பளிச்சென்று வெளிப்படுத்தியது. 

ஆனால் மசோதா பாதிக்கிணறுதான் தாண்டியிருக்கிறது. இன்னும் மக்களவையில் அது நிறைவேற்றப்பட வேண்டும். அது ஏப்ரல் 14க்கு முன் நடக்க வாய்ப்பில்லை என்பதால் இப்போதைக்குக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50 கோடியைத் தொட்டுவிட்ட பெண்களின் முகங்களை லோக்சபா என்று சொல்லப்படும் மக்களவையிலும் மாநில சட்டமன்றத்திலும் பூதக்கண்ணாடி வைத்துத்தான் பார்க்க வேண்டியதாகிறது. இந்த நிலையை மாற்றி அரசியலில் பெண்கள் அதிகாரபூர்வமாக நுழைந்து செங்கோலைக் கையிலெடுக்க வேண்டும் என்பதற்காக லோக்சபா மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற குரல் பல ஆண்டுகளாக ஒலித்துவந்தது. 1996ல் தேவ கவுடா பிரதமராக இருந்தபோது, இந்த மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது வெறும் முயற்சியாகவே முற்றுப்பெற்றுவிட்டது. மூன்று முறை முயற்சிகள் நடந்தன. எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன.

ஆளும் கூட்டணியான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகளிர் மசோதாவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதில் முனைப்புடன் இருப்பதாகவே தெரிகிறது. ஜனாதிபதி, லோக்சபா சபாநாயகர், ஆளும் கட்சி கூட்டணித் தலைவர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் என நாட்டின் அதிகார முக்கியத்துவம் வாய்ந்த பதவிகள் தற்போது பெண்களின் கரங்களில்! இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு மசோதாவை நிறைவேற்றலாம் என காங்கிரஸ் நினைத்திருக்கலாம். ராஜ்ய சபாவில் பிரதான எதிர்க்கட்சிகளான பா.ஜ.க.வும் இடதுசாரிக் கட்சிகளும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்தாலும் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாதி, லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், மாயாவதியின் பகுஜன் சமாஜ் போன்ற முக்கியக் கட்சிகள் மசோதாவை எதிர்க்கின்றன.

பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்பதற்காக இந்த மசோதாவை இவர்கள் எதிர்க்கவில்லை. இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வேண்டும் என்பது இவர்கள் வாதம். முலாயம் சிங் யாதவ், ‘இந்த மசோதா மிகவும் அபாயகரமானது. தலித், முஸ்லிம் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், பார்லிமென்ட்டுக்குத் தேர்வு செய்யப்படுவதைத் தவிர்க்கும் நடவடிக்கை இது’ என்கிறார். முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு செய்வதை பா.ஜ.க. விரும்பவில்லை. பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித்துகளுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதைப் பல கட்சிகள் முழு மனதோடு ஆதரிக்கவில்லை. இதனால் பல சிக்கல்கள் வரும் என்று அவை கழன்றுகொள்கின்றன. உள் ஒதுக்கீடு தருவது என்றால் மசோதாவின் வரைவையே மாற்றி எழுத வேண்டும். விரிவான விவாதமும் கருத்தொற்றுமையும் இல்லாமல் அதைச் செய்ய முடியாது. அப்படியே செய்வதானாலும் அதற்கு மிகவும் தாமதமாகும். எனவே தற்போதுள்ள நிலையிலேயே மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் முனைகிறது. ஆனால் உள் ஒதுக்கீடு இல்லாவிட்டால் ஏற்கனவே பல விதங்களிலும் செல்வாக்குப் பெற்ற மேட்டுக்குடியினர்தான் அதனால் அதிகம் பயன்பெறுவார்கள் என்பது முலாயம், லாலு ஆகியோரின் வாதம்.

மகளிர் மசோதாவை எதிர்ப்பதை விட முதலில் அதை அமல்படுத்திவிட்டு, அதன்பிறகு உள் ஒதுக்கீடு குறித்து விவாதிக்கலாம் என்றார் தமிழக முதல்வர் கருணாநிதி. உள் ஒதுக்கீடு கேட்டு மசோதாவைக் கிடப்பில் போடுவதற்கு பதிலாக அதை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்களில் இறங்குவதே நல்லது என்பது முதல்வரின் கருத்து.

ஒரு வழியாக மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின் மீது ஏறத்தாழ 3 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. பிறகு மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. எதிர்ப்புத் தெரிவித்த உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதால் கிட்டத்தட்ட எதிர்ப்பே இல்லாமல் மசோதா நிறைவேறியது (தீர்மானத்திற்கு ஆதரவாக 186 உறுப்பினர்களும், எதிராக ஒரே ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர்).

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அரசியல் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அரசியல் வானில் பெண்களுக்கான நம்பிக்கை நட்சத்திரங்கள் மின்னத் தொடங்கியுள்ளன. ராஜ்யசபாவில் நிறைவேறியுள்ள இந்த மசோதா, இனி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். மக்களவையிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மசோதா நிறைவேறினால் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமலுக்கு வரும்.

இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் 543 எம்.பி.,க்களில், 181 பேர் பெண்களாக இருப்பார்கள். அதேபோல், 28 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளில் மொத்தமுள்ள 4,109 எம்.எல்.ஏ.,க்களில் 1,370 பேர் பெண்களாக இருப்பார்கள். அப்படி நடந்தால் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான திருப்பமாக அது இருக்கும்.

இது ஒரு புறம் இருக்க, இந்த மசோதாவுக்கு எதிரான ஆட்சேபங்களை அவ்வளவு சுலபமாக அலட்சியப்படுத்திவிட முடியாது. உள் ஒதுக்கீடு இல்லாவிட்டால் செல்வாக்குப் படைத்த மேட்டுக்குடிப் பெண்களே பிரதிநிதிகளாவார்கள் என்னும் சமூக நீதிக் குரலில் நியாயம் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் சமாஜ்வாதி போன்ற கட்சிகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினரை நிற்க வைப்பதன் மூலம் இந்தப் பிரச்னையை ஓரளவு தீர்க்கலாம்.

அரசியலுக்கு வர எத்தனை பெண்கள் தயாராக இருப்பார்கள் என்பது இன்னொரு கேள்வி. இந்நிலையில் ஏற்கனவே அரசியலில் இருக்கும் ஆண்களின் நெருங்கிய உறவினர்கள்தான் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொள்வார்கள், இதனால் குடும்ப ஆதிக்கம் தலை தூக்கும் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. இதுவும் முக்கியமான விஷயம்தான். ஆனால் இந்திய அரசியலில் ஏற்கனவே பல அரசியல்வாதிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அரசியலுக்குக் கொண்டுவருவதைப் பார்த்த பிறகு இதை ஒரு புதிய பிரச்சினையாக எழுப்பிப் பேசுவது அர்த்தமறது என்பது வெளிப்படை. தவிர, இதுபோன்ற சிக்கல்கள் எல்லாம் முதல் ஓரிரு தேர்தல்கள்வரைதான் எழும். அதற்குள் எல்லாத் தரப்புகளையும் சேர்ந்த பெண்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் தயாராகிவிடுவார்கள் என்று நம்பலாம்.

தொடர்ந்து ஒரே தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்து மக்கள் செல்வாக்குப் பெற்று, மக்களுக்காக நல்லது செய்கிற ஒருவரது தொகுதியை பெண்களுக்காக ஒதுக்கினால், அவர் வேறு எந்தத் தொகுதியில் போட்டியிட முடியும் என்ர கேள்வியும் எழுப்பப்படுகிறது. பெண்களுக்கான தொகுதிகளைச் சுழற்சி முறையில் தீர்மானிப்பதன் மூலம் இந்தப் பிரச்னையை ஓரளவு தீர்க்கலாம்.

பல நூற்றாண்டுகளாகச் சம உரிமை மறுக்கப்பட்டுவந்த பெண்களுக்கு அதிகாரப் பீடத்தில் முக்கிய இடம் அளிக்கும் முயற்சி நடக்கும்போது அதில் சில பிழைகள் ஏற்படத்தான் செய்யும். வரலாற்று நோக்கிலும் சம தர்ம நோக்கிலும் இந்தப் பிரச்னையை அணுகி இந்தச் சட்டத்தை இப்போதைக்கு ஆதரித்து, இதிலுள்ள குறைகளைக் களைவதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்வதே நல்லது. 



நன்றி - தெனாலி 


-சூரியன்

வெள்ளி, 12 மார்ச், 2010

விண்ணைத்தாண்டி வருவாயா!!! - விமர்சனம்

விண்ணைத்தாண்டி வருவாயா ? இயக்குனர் இந்தப்படம் பார்க்க வரும் ரசிகர்களை நோக்கி கேட்பது போல் இருந்தது எனக்கு .ஏனென்றால் தமிழ் சினிமாவின் காதல் நாயகன் எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதை இந்த படத்தின் நாயகன் சிம்பு செய்கிறார் .ஒரு காதல் நாயகன் செய்யக்கூடிய எந்த சாகசங்களையும் செய்யாமல் நம்மமுடைய நண்பர்கள் கூட்டத்திலிருப்பவனின் காதல் பயணத்தை நாம் அனுபவித்தது போல் இருக்கிறது இந்த படம்.

கொஞ்சம் மெதுவாகத்தான் செல்கிறது ,ஒருவேளை ரசிகர்கள் அந்த காதல் உணர்வில் நன்றாக ஊறி திளைக்க வேண்டும் என்று மெதுவாக கொண்டு சென்றாரோ என்று நினைக்கத்தோன்றுகிறது .படம் முழுக்க கிளைமாக்ஸ் காட்சி தவிர அனைத்தையும் ரசிகர்கள் ஒருவிதமான புன் சிரிப்புடன் ,நமட்டு சிரிப்புடனும் ,ஒருவிதமான ஆச்சர்ய பார்வையுடனும் ரசித்ததை என்னால் காண முடிந்தது .
 

ஒரு வேளை அதற்க்கெல்லாம் காரணம் நஅம்முடைய காதல் போலவே இருக்கிறதே என்று அர்த்தமோ என்னவோ,அதை அவர்களே வந்து சொன்னால் தான் தெரியும் :) .
ரொம்ப நாளைக்கு அப்புறம் எந்தவிதமான மசாலா அயிட்டங்களும் இல்லாமல் ,யாதொரு சமரசமும் செய்துகொள்ளாமல் ஒரு முழுமையான இயக்குனரின் படமாக வெளிக்கொண்டு வந்ததற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் இயக்குனர் கௌதமிற்கும் ,இப்படத்தின் நாயகன் சிலம்பரசனுக்கும் நன்றி சொல்லியே ஆக வேண்டும் . சிம்பு நினைத்திருந்தால் இந்த படத்தை எப்படி வேண்டும் என்றாலும் சிதைத்திருக்கலாம் அல்லது தவிர்த்திருக்கலாம் ,ஆனால் அவர் எடுத்த முயற்சியினால் நமக்கு வெளியில் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு அழகான காதல் கதை கொண்ட தரமான திரைப்படம் கிடைத்துள்ளது .

இந்த படத்தைப் பற்றி நான் இவ்வளவு Positive Comments சொன்னதுக்கு நான் ஏதோ காதலில் விழுந்து விட்டதால் தான் உணர்வு பூரவமாக சொல்கிறேன் என்று சிலபேர் நினைப்பார்கள். இப்படியொரு தரமான படத்தை பார்த்து அதை சந்தோஷமாக பலபேருடன் பகிர்ந்து கொள்ள காதலிக்க வேண்டும் என்று அவசியமில்லை .
சிலம்பரசன் ,த்ரிஷா நடிப்பு ,கௌதம் மேனன் இயக்கம் இதெல்லாம் ஒரு ஆச்சர்யத்தை தந்தால்,இதென்ன இதற்க்கு மேல் நான் தருகிறேன் என்று படம் முழுக்க ஆக்கிரமித்திருக்கிறார் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் .

ஹோசான பாடலுக்கும் ,இந்த படத்தின் கிளைமாக்ஸ் சீனுக்குமே கொடுத்த 50 ரூபாய் காலி .இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த தருணம் எதுவென்று கேட்டால் கடைசி 30 நிமிடங்கள் என்று சொல்லுவேன் .

கடைசியில் சினிமா பேனரில் இயக்கம் - கார்த்திக் என்றிருப்பது மாறி கௌதம் மேனன் என்று மாறும் வரை ..எங்கும் எதிலும் இயக்குனரின் கைவண்ணம் மின்னுகிறது .

இதற்க்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை ...சுருக்கமாக சொல்வதென்றால் இதைப்படிக்கும் எல்லோரும் கண்டிப்பாக போய் படத்தை பாருங்க ..இதுபோல் இன்னும் நல்ல முயற்சிகள் தொடர வாழ்த்துங்கள் .

படம் முடிந்து எழுத்து போடும் போது ஒலிக்கும் ஜெஸ்ஸி ..... ஆங்கில பாடல் மிகவும் அருமை - அதை யாரும் மிஸ் பண்ணிடாதீங்க !!!!!

-சூரியன்


புதன், 3 மார்ச், 2010

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாறுவோம் ?

அசிங்கம் ..அசிங்கம் ..அம்மா அசிங்கம் என்று குணா படத்தில் நடிகர் கமல் சொல்வது போல ஒரு வசனம் வரும் .ஆனால் இன்று எல்லா தினசரி பத்திரிக்கையை பார்த்ததும் எனக்கு தோன்றுவது ..அசிங்கம் அசிங்கம் இந்த சாமியார்களே அசிங்கம் ..அதுவும் இவனுங்களை நம்பி போற இந்த பரதேசி பக்தர்கள் அதைவிட அசிங்கமானவர்கள் ,மானம் கெட்டவர்கள், மதி கெட்டவர்கள் .

எனக்கு விவரம் தெரிந்து பிரேமானந்தா என்ற ஒரு போலி சாமியார் ,செக்ஸ் குற்றச்சாட்டுக்காக கைதாகி இரட்டை ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார்.அவர் ஆண்டுக்கு ஒருமுறை பெயிலில் வந்து தன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி விட்டு செல்கிறார்.ஒரு குற்றவாளியிடம் ஆசி வாங்க அன்றும் வரிசையில் முண்டியடித்து கொண்டு நிற்பான் இந்த மானங்கெட்ட சாமியார் பக்தன் .பிரேமானந்தா கைது முதல் இன்று வரை இந்த சாமியார்கள் லீலைகளும் அதைத் தொடர்ந்து அவர்களின் கைதுகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன .ஆனால் இந்த போலி ஆசாமிகளை சாமி என்று நம்பி அலையும் கூட்டம் மற்றும் குறையவே இல்லை .

ஒவ்வொரு முறையும் எவனாவது கைதாகும் போது இந்த ஒரு சாமியார் செய்த தப்புக்காக எல்லாரையும் குறை சொல்வதா என்று எங்களைப்போல் பகுத்தறிவாளிகளை பார்த்து இந்த மானங்கெட்ட பக்தனும் ,சில பொதுவான 'மதில் மேல் பூனைகளும் ' கேட்பதுண்டு . அவர்களுக்கெல்லாம் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன் ..இன்னும் எத்தனை காலத்துக்கு இதையே சொல்ல போகிறீர்கள் .எனக்கு தெரிந்து கிட்டத்தட்ட இந்த ஊரில் உள்ள முக்கால் வாசி சாமியார்கள் பிடிபட்டு விட்டார்கள் .இன்னும் எஞ்சி இருப்பது 25 சதவிகிதத்தினர் .ஆனால் நீங்கள் இனிமேலும் விழித்துக்கொள்ளாமல் சாமியார் பக்தி எனும் போதையில் மூழ்கிருந்தால் இந்த 25 கூடிய விரைவில் 75 ஆக மாறி அவனும் கைதுக்கு தயாராக நிற்பான் .

நமக்கெல்லாம் மானம் ,ரோஷம் என்று உள்ளதா என்றே தெரியவில்லை .அப்படி ஒன்று இருந்திருந்தால் இந்த மாதிரியான சாமியார் நாய்களை விட்டு வைப்போமா? (எனக்கு போலி சாமியார் என்ற வார்த்தையில் நம்பிக்கை இல்லை ,என்னை பொருத்தவரைக்கும் சாமியார் வேஷம் போடும் அனைவருமே போலியானவர்கள் தான்,இதில் எங்கிருந்து வந்தது போலி சாமியார் என்ற வார்த்தை? )

அன்றே சொன்னார் பெரியார் ,கடவுளை மற! மனிதனை நினை ! என்று ...அனால் நம்ம ஆட்கள் மனிதனை மறந்து விட்டு கடவுளை தான் சதா காலமும் நினைத்துக்கொண்டிருக்கிறான் .இன்று ஏதோ நித்யானந்தன் அகப்பட்டு கொண்டதால் மற்ற சாமியார்களெல்லாம் யோக்கின் என்று நாம் நினைத்துவிடக்கூடாது .இன்று இவன்! நாளை அவர்கள்!.நாம் முழித்துக்கொள்ளாவிட்டால் இது அப்படியே தொடரும்!.....

தமிழ்நாட்டில் நித்யானந்தன் ,ஆந்திராவில் கல்கி பகவான்(?) என்று எல்லோராலும் அழைக்கப்படும் ஒரு சாமியார் கிழவன் தன்னுடைய ஆசிரமத்தில் ஆண்,பெண் அரைகுறை ஆடையுடன் உல்லாசமாக இருக்க வழிவகை செய்து கொடுத்து நாட்டை கெடுத்துவிட்டான்! என்று கைது செய்யப்பட்டிருக்கிறான் அவனுடைய ஆசிரமம் ஆந்திராவில் மக்களால் சூறையாடப்பட்டது .இங்கே தமிழ்நாட்டில் பரமஹம்ச நித்யானந்த சாமிகள் திரைப்பட நடிகை ரஞ்சிதாவுடன் காம லீலை என்று கேள்விப்பட்டவுடன் அவனுடைய ஆசிரமங்களை சூறையாடுகிறார்கள்,அவனுடைய சிலைகளை உடைக்கிறார்கள் (இவனுக்கு ஒரு ஊரில் சிலை வைத்திருக்கிறார்கள்,எங்கே போய் அடித்துக்கொள்வது  இந்த கொடுமைகளையெல்லாம்).இப்போது சிலை உடைத்தவன் ,ஆசிரமத்தினை சூரையாடினவர்களெல்லாம் யாரென்று நினைக்கிறீர்கள் ? ,ஏதோ பொதுநலம் கருதி வந்து தகராறு செய்தவர்களா இவர்கள் ? .நிச்சயமாக இல்லை ,அவர்களெல்லாம் இவனை கடவுள் என்று நம்பி ஏமாந்த கூட்டத்தை சேர்ந்தவர்கள்!! .இப்போது வரும் கோபம் யாருக்கு உதவும் ? ,எதற்கு உதவும்?. சிற்சில சேதாரங்களை ஏற்படுத்த மட்டுமே உதவும்.இது வெறும் தற்காலிக எதிர்ப்புதான் .ஆனால் நாளை வேறு யாரவது ஒருத்தன் இவனை விட திறமையாக ஏமாற்ற வந்தால் ஏமாற நாங்கள் தயார் என்பது போலதான் இருக்கிறது நம் மக்களின் நிலைமை .

யாராவது இனிமேல் இப்படிப்பட்ட சாமியார்களே! தமிழ்நாட்டில் உருவாகக்கூடாது ,அப்படி யாராவது வந்தால் அவர்களை கைது செய்து மனநல காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று போராட தயாரா? இப்போது அகப்பட்டவனை கைது செய்ய கோரி போராட்டம் நடத்துகிறீர்கள்!!.சந்தோசம் அவனை கைது செய்த பிறகு என்ன ?...நாம் நம்முடைய வேலைபார்த்துக்கொண்டு கிளம்பிட வேண்டியதுதான்.எல்லாம் அடங்கிய  பிறகு மீண்டும் ஒருவன் முளைப்பான் ,சில அறிவு கெட்ட மக்கள் அவனிடம் போய் அருள் வாக்கு வாங்குகிறேன் என்று வயிற்றில் புள்ளியை  வாங்கி  விட்டு வந்து ..ஐயோ அம்மா என்னை  ஏமாத்திட்டான் ..இவன் பெரிய  போலி சாமி என்று கூப்பாடு போட்டு ஒப்பாரி வைப்பார்கள்.நான் ஏதோ அதிகப்பிரசங்கித்தனமாக பேசுவதாக நினைக்காதீர்கள்! ..கடந்தகால தமிழக சாமியார்களின் வரலாற்றினை (?) எடுத்து பார்த்தால் உங்களுக்கே தெளிவாக தெரியும்.

எனக்கு இந்த தவறில் உடன்பட்டுள்ள நடிகையைப் பற்றி பேசுவதில் பெரிதும் உடன்பாடில்லை.ஏனென்றால் தினமலர் ஒரு உண்மையை வெளியே சொன்னதற்கே !!!!!! ,கூடிநின்று அந்த பெரிய பூசணியை சோற்றில் மறைத்தவர்கள் இன்றைய தமிழ் கதாநாயகர்கள்(?) .அதுவும் அன்றி பொதுவாகவே மக்களிடம் நடிகைகளைப் பற்றி ஒன்றும் பெரிதாக நல்ல மதிப்பீடு கிடையாது .எனவே நான் இதை உங்கள் விமர்சனத்துக்கே விட்டுவிடுகிறேன் .

அரசாங்கம் இந்த மாதிரியான குற்றங்களை தடுக்க இதுவரை எந்த மாதிரியான நடவடிக்கையும் எடுக்கவில்லை .காஞ்சி "காம"கோடிகள் ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ ஜெயேந்திரர் அவர்கள் நடிகை சொர்ணமால்யாவுடன் கூத்தடித்த போதே இந்த அரசாங்கம் இந்த மாதிரியான அசிங்கங்களை தடுக்க ஏதாவது செய்யும் என்று நினைத்தேன் .ஆனால் நமக்கு ஏமாற்றமே மிச்சம் .

இதோ இப்போது தன்னை பெரியாரின் வாரிசு ,அவரின் வழி நடக்கும் தொண்டன் ,தற்போது நடப்பது பெரியார் கண்ட ஆட்சி என்றெல்லாம் சொல்லும் மஞ்சள் துண்டு செம்மல் (இன்றும் அந்த மஞ்சள் ரகசியம் புரியாத புதிராகவே உள்ளது ) திரு.கருணாநிதி அவர்கள் ஏதாவது சட்டம் இயற்றி தடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் வேளையில் பத்திரிகையாளர் சந்திப்பில் கலைஞர் சொன்ன பதில் ,

"’கோயில்கள் எல்லாம் கொள்ளையர்களின் கூடாரமாக மாறிக்கொண்டிருக்கிறதே? ஆசிரமங்களில் எல்லாம் அக்கிரமங்கள் நடக்கிறதே? ஏதேனும் நடவடிக்கை எடுக்கக்கூடாதா?’’என்று கேட்டதற்கு,

‘’இந்து அறநிலையத்துறையின் உயர்மட்டக்குழு கூடி ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கும்’’என்று தெரிவித்தார்."


இது வெறும் பத்திரிகை பேட்டியாக இல்லாமல் இந்த அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,மக்களும் இனிமேலும் ஆன்மிகம்,சாமியார்கள் என்று மூடநம்பிக்கையில் திளைக்காமல் மனித இனத்திற்கே உரிய பகுத்தறிவைக்கொண்டு சிந்திக்குமாறு கேட்டு கொண்டு விடைபெறுகிறேன்

இனிமேல் இப்படி ஒரு சம்பவமும்,அதைத் தொடர்ந்த இந்த மாதிரி கருத்து பகிர்வும் ஏற்படக்கூடாது என்பதே என்னுடைய ஆசை.


ஆசை நிறைவேறுமா? இல்லை பேராசையாகிவிடுமா? பார்க்கலாம் ?


இதையும் பாருங்க .....

http://www.maalaimalar.com/2010/03/03152851/sex.html

http://www.maalaimalar.com/2010/03/03150919/sex.html

http://www.dinakaran.com/bannerdetail.aspx?id=6659&id1=12



-சூரியன்

செவ்வாய், 2 மார்ச், 2010

நுழைவுத்தேர்வு எதற்கு?


இந்தத் துறைதான் என்று குறிப்பிட்டு சொல்லமுடியாதபடி அங்கிங்கெனாதபடி எங்கும் நுழைந்துவிடுகிறது அரசியல். தற்போது கல்வித்துறையையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கி வருகிறது மத்திய அரசு. ஆனால் இதில் பலிகடாவாக்கப்படுவதென்னவோ அப்பாவி மாணவர்கள்தான். தமிழகத்தில் பொது நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் நாடு முழுவதும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் வகையில் புதிய கல்வி சட்ட மசோதாவை முன்வைத்திருக்கிறது மத்திய அரசு. மத்திய அமைச்சர் கபில்சிபல் அறிவித்திருக்கும் இந்த கல்வி சட்ட மசோதாவுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த மசோதா குறித்து விவாதிக்கும் முன் தமிழக அரசு பொதுநுழைவுத்தேர்வை ரத்து செய்ததன் பின்னணி என்ன என்று பார்க்க வேண்டும்.

ப்ளஸ் டூ பொதுத்தேர்வு எழுதி முடித்த கையோடு, தொழிற்கல்விகளில் சேருவதற்கான பொதுநுழைவுத்தேர்வுக்காக முட்டிமோதி படிப்பதிலேயே மாணவர்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளானார்கள். அதுவும் ஏட்டுச்சுரைக்காய்க்குக் கூட வழியில்லாத பள்ளிகளில் தமிழ்வழியில் படித்த மாணவர்களின் நிலை பரிதாபத்துக்குரியது. கல்விக் கட்டணம் செலுத்த வசதியில்லாமல் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஆயிரக் கணக்கில் செலவழித்து பொதுநுழைவுத்தேர்வுக்கென தனியாக பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதும் குதிரைக் கொம்புதான். இந்த சமூக ஏற்றத் தாழ்வுகளால் நகரங்களில் உள்ள ஓரளவுக்கு வசதியுள்ள மாணவர்கள் மட்டுமே நுழைவுத்தேர்வின் மூலமாக தொழிற்கல்விகளில் சேர்ந்தனர். கிராமப்புற மாணவர்களிடம் திறமை இருந்தும் தொழிற்கல்வி அவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. இந்த நிலையை மாற்றுவதற்காகத்தான் கடந்த 2007ம் ஆண்டு பொதுநுழைவுத்தேர்வை ரத்து செய்து அவசர சட்டம் கொண்டுவந்து, கிராமப்புற மாணவர்களின் வயிற்றில் பாலை வார்த்தது தமிழக அரசு. தமிழக அரசின் இந்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கினார்.

அரசின் இந்த சட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி அப்போதே சிலர் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அரசு தனது நிலையில் உறுதியாக இருந்ததோடு, நுழைவுத்தேர்வை ரத்து செய்ததற்கான ஆதாரங்களையும் முன்வைத்தது. 'கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் தமிழக அரசு மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற தொழிற் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேவை ரத்து செய்து சட்டம் கொண்டுவரப்பட்டது. மேலும் இந்த விஷயத்தில் நிபுணர் குழு ஆய்வு நடத்திய பிறகுதான் பொது நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. நகர்ப்புற மாணவர்களைவிட கிராமப்புற மாணவர்கள் பின்தங்கும் நிலை ஏற்படுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது' என்ற அரசு தரப்பின் நியாயமான காரணங்களால் தமிழக அரசின் சட்டத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது உயர் நீதிமன்றம். கூடவே, அதை எதிர்த்து போடப்பட்ட மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் அவையும் எடுபடவில்லை. உண்மையிலேயே மக்களுக்கு பயன்படுகிற விஷயத்தில் அரசு கொள்கை உறுதியுடன் இருந்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்குமோ அப்படித்தான் நுழைவுத்தேர்வு விஷயத்திலும் நடந்து வருகிறது.

தமிழகத்தில் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு மாணவர்கள் அவர்களது ப்ளஸ் டூ பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தொழிற்கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டனர். 2007ம் ஆண்டுக்குப் பிறகு பொறியியல் கல்லூரிகளில் சேரும் தமிழ்வழியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாகச் சொல்கிறது ஒரு புள்ளி விவரக் கணக்கு. 2006ம் ஆண்டுவரை தமிழ்வழியில் படித்த மாணவர்களில் சராசரியாக 26% மாணவர்கள்தான் பொறியியல் படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை 40 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

மாணவர்களின் இந்த முன்னேற்றத்துக்கு மீண்டும் முட்டுக்கட்டை போடும்விதமாக மருத்துவப் படிப்பில் சேர நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது நுழைவுத்தேர்வு நடத்துவது குறித்து பேசி வருகிறது மத்திய அரசு. இதை வைத்துப் பார்க்கும்போது மத்திய அரசு கல்வித்துறை முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகத்தான் தெரிகிறது. இதன் ஒருகட்டமாக தேசிய உயர்கல்வி ஆணைய மசோதாவை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த சட்டம் நிறைவேறினால் சமூக நீதி, இடஒதுக்கீடு ஆகியவற்றை கல்வித்துறையில் செயல்படுத்த முடியாது. ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு விதமான கல்வி முறை இருக்கிறது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு என்றால், கேட்கப்படும் கேள்விகளின் தரம், மொழி எல்லாம் எப்படி இருக்கும் என்பது குறித்து மாணவர்கள் மத்தியில் இப்போதே பயமும் பதட்டமும் நிலவ ஆரம்பித்திருக்கிறது. அதனால்தான் மத்திய அரசின் புதிய கல்வி சட்ட மசோதாவுக்கு ஆரம்ப நிலையிலேயே தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.

ஆனால் இந்த எதிர்ப்பை மத்திய அரசு எந்தவகையில் எதிர்கொள்ளும் என்பது கேள்விக்குறி. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு, நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு என்ற மத்திய அமைச்சர் கபில்சிபலின் கருத்து ஏற்கப்பட்டால், நம் தமிழகத்து மாணவர்களின் நிலை?! கிராமப் பள்ளிகளிலும் மத்திய அரசுப்பள்ளிகளிக்கு இணையாக தரமான கல்வியைக் கொடுத்துவிட்டு பொது நுழைவுத்தேர்வு வைத்தால் யார் எதிர்க்கப் போகிறார்கள்? அதை விட்டுவிட்டு எளியோரையும் வலியோரையும் ஒரே தராசில் நிற்க வைப்பதில் நியாயம் இல்லை. மத்திய மாநில அரசுகளின் உரிமை போராட்டத்தில் மாணவர்களின் நலனையும் கருத்தில் கொள்வார்களா?