நாட்டு நடப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாட்டு நடப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 பிப்ரவரி, 2011

ஒரு லட்சம் கையெழுத்து தேவை..தமிழ​க மீனவர்கள் மீதான தாக்குதலுக்​கான கவன ஈர்ப்புக்கு​..

கார்கில் போர் நடக்கின்றதா? வடக்கு தெற்கு என்று பேதம் பார்க்காமல் உணர்ச்சிவசப்பட்டு பணத்தை கலக்ஷன் செய்து கொடுப்பது நம் தமிழ் இனம்தான்..

போபால் விஷவாயுதாக்குதலில் நீதி வழங்கியதில் பாரபட்சமா? உடனே டுவிட்டர், வலைபதிவு என்று கூக்குரல் கொடுப்பவர்கள் நம்மவர்கள்தான்.. ஆனால் நமக்கு ஒரு பிரச்சனை என்று வரும் போது அந்த வட இந்திய ஆதரவு என்பது ஏட்டாக்கனியாகவே இருக்கின்றது... 

நம்மை மட்டும் தீண்டதகாதவர்களாக நடத்தப்படும் மனோபவம் மட்டும் குறையவில்லை அதுக்கான காரணம் தெரியவும் இல்லை....

வந்தாரை வாழவைக்கும் தமிழகமாக நாம் சிறந்து விளங்குகின்றோம்...சௌக்கார்பேட் தாரைவார்த்து கொடுத்தோம்.. இன்றும் வட இந்தியனை சகோதரன் போலத்தான் பாவித்து வருகின்றோம்..

ஆனால் வட இந்தியாவில் இன்னும் மதராசி என்ற ஏளனபார்வையோடுதான் பார்க்கபடுகின்றோம்...

தமிழக மீனவர்களை காக்க ஒரு பெட்டிஷன்... அதில் உங்கள் கையெழுத்து போட்டு உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள்...ஒரு லட்சம் கையெழுத்தாவது இந்தநேரம் வந்து இருக்க வேண்டும்... ஆனால் முக்கி முக்கி இப்போதுதான் 1000கையெழுத்து போட்டு இருக்கின்றார்கள்....


இந்த வலையை வாசிக்கும் வாசகர்கள் பெட்டிஷனில் கையெழுத்து போட வேண்டுகின்றேன்... இந்த ஒற்றுமை நம் இனத்தை காக்க வேண்டிய ஒற்றுமை.. ஆட்டை கடித்து மாட்டை கடித்து அந்த பொறம் போக்கு சிங்களநாய்கள் நம்மை சீண்டி பார்க்க ஆரம்பித்து விட்டடனர்.... அவர்களை எதிர்க்க இப்போது இருக்கும் ஒற்றுமை அவசியம்... அந்த ஒற்றுமை இந்த நேரத்தில் வந்தது குறித்து மகிழ்ச்சி...

தமிழன் இன்னும் மாற்றாந்தாய்மனோபவாத்துடன்தான் நடத்தபடுகின்றான். இன்னும் விரிவாய் அறிய.. திரு. ஜாக்கி சேகர் தமிழக மீனவனுக்காக எழுதிய இந்த கடித பதிவை படியுங்கள்.... இந்த கடிதத்தை படித்தால் நிச்சயம் பெட்டிஷனில் ஓட்டு போடுவீர்கள்...

திரும்பவும் இந்திய மீனவன் சுடப்பட்டான்...இந்தியா கடும் கண்டனம்.

மேலும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்கும் பெட்டிஷனில் கையெழுத்து போட இங்கே கிளிக்கவும்......


நன்றி!!!
சூரியன்

புதன், 3 மார்ச், 2010

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாறுவோம் ?

அசிங்கம் ..அசிங்கம் ..அம்மா அசிங்கம் என்று குணா படத்தில் நடிகர் கமல் சொல்வது போல ஒரு வசனம் வரும் .ஆனால் இன்று எல்லா தினசரி பத்திரிக்கையை பார்த்ததும் எனக்கு தோன்றுவது ..அசிங்கம் அசிங்கம் இந்த சாமியார்களே அசிங்கம் ..அதுவும் இவனுங்களை நம்பி போற இந்த பரதேசி பக்தர்கள் அதைவிட அசிங்கமானவர்கள் ,மானம் கெட்டவர்கள், மதி கெட்டவர்கள் .

எனக்கு விவரம் தெரிந்து பிரேமானந்தா என்ற ஒரு போலி சாமியார் ,செக்ஸ் குற்றச்சாட்டுக்காக கைதாகி இரட்டை ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார்.அவர் ஆண்டுக்கு ஒருமுறை பெயிலில் வந்து தன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி விட்டு செல்கிறார்.ஒரு குற்றவாளியிடம் ஆசி வாங்க அன்றும் வரிசையில் முண்டியடித்து கொண்டு நிற்பான் இந்த மானங்கெட்ட சாமியார் பக்தன் .பிரேமானந்தா கைது முதல் இன்று வரை இந்த சாமியார்கள் லீலைகளும் அதைத் தொடர்ந்து அவர்களின் கைதுகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன .ஆனால் இந்த போலி ஆசாமிகளை சாமி என்று நம்பி அலையும் கூட்டம் மற்றும் குறையவே இல்லை .

ஒவ்வொரு முறையும் எவனாவது கைதாகும் போது இந்த ஒரு சாமியார் செய்த தப்புக்காக எல்லாரையும் குறை சொல்வதா என்று எங்களைப்போல் பகுத்தறிவாளிகளை பார்த்து இந்த மானங்கெட்ட பக்தனும் ,சில பொதுவான 'மதில் மேல் பூனைகளும் ' கேட்பதுண்டு . அவர்களுக்கெல்லாம் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன் ..இன்னும் எத்தனை காலத்துக்கு இதையே சொல்ல போகிறீர்கள் .எனக்கு தெரிந்து கிட்டத்தட்ட இந்த ஊரில் உள்ள முக்கால் வாசி சாமியார்கள் பிடிபட்டு விட்டார்கள் .இன்னும் எஞ்சி இருப்பது 25 சதவிகிதத்தினர் .ஆனால் நீங்கள் இனிமேலும் விழித்துக்கொள்ளாமல் சாமியார் பக்தி எனும் போதையில் மூழ்கிருந்தால் இந்த 25 கூடிய விரைவில் 75 ஆக மாறி அவனும் கைதுக்கு தயாராக நிற்பான் .

நமக்கெல்லாம் மானம் ,ரோஷம் என்று உள்ளதா என்றே தெரியவில்லை .அப்படி ஒன்று இருந்திருந்தால் இந்த மாதிரியான சாமியார் நாய்களை விட்டு வைப்போமா? (எனக்கு போலி சாமியார் என்ற வார்த்தையில் நம்பிக்கை இல்லை ,என்னை பொருத்தவரைக்கும் சாமியார் வேஷம் போடும் அனைவருமே போலியானவர்கள் தான்,இதில் எங்கிருந்து வந்தது போலி சாமியார் என்ற வார்த்தை? )

அன்றே சொன்னார் பெரியார் ,கடவுளை மற! மனிதனை நினை ! என்று ...அனால் நம்ம ஆட்கள் மனிதனை மறந்து விட்டு கடவுளை தான் சதா காலமும் நினைத்துக்கொண்டிருக்கிறான் .இன்று ஏதோ நித்யானந்தன் அகப்பட்டு கொண்டதால் மற்ற சாமியார்களெல்லாம் யோக்கின் என்று நாம் நினைத்துவிடக்கூடாது .இன்று இவன்! நாளை அவர்கள்!.நாம் முழித்துக்கொள்ளாவிட்டால் இது அப்படியே தொடரும்!.....

தமிழ்நாட்டில் நித்யானந்தன் ,ஆந்திராவில் கல்கி பகவான்(?) என்று எல்லோராலும் அழைக்கப்படும் ஒரு சாமியார் கிழவன் தன்னுடைய ஆசிரமத்தில் ஆண்,பெண் அரைகுறை ஆடையுடன் உல்லாசமாக இருக்க வழிவகை செய்து கொடுத்து நாட்டை கெடுத்துவிட்டான்! என்று கைது செய்யப்பட்டிருக்கிறான் அவனுடைய ஆசிரமம் ஆந்திராவில் மக்களால் சூறையாடப்பட்டது .இங்கே தமிழ்நாட்டில் பரமஹம்ச நித்யானந்த சாமிகள் திரைப்பட நடிகை ரஞ்சிதாவுடன் காம லீலை என்று கேள்விப்பட்டவுடன் அவனுடைய ஆசிரமங்களை சூறையாடுகிறார்கள்,அவனுடைய சிலைகளை உடைக்கிறார்கள் (இவனுக்கு ஒரு ஊரில் சிலை வைத்திருக்கிறார்கள்,எங்கே போய் அடித்துக்கொள்வது  இந்த கொடுமைகளையெல்லாம்).இப்போது சிலை உடைத்தவன் ,ஆசிரமத்தினை சூரையாடினவர்களெல்லாம் யாரென்று நினைக்கிறீர்கள் ? ,ஏதோ பொதுநலம் கருதி வந்து தகராறு செய்தவர்களா இவர்கள் ? .நிச்சயமாக இல்லை ,அவர்களெல்லாம் இவனை கடவுள் என்று நம்பி ஏமாந்த கூட்டத்தை சேர்ந்தவர்கள்!! .இப்போது வரும் கோபம் யாருக்கு உதவும் ? ,எதற்கு உதவும்?. சிற்சில சேதாரங்களை ஏற்படுத்த மட்டுமே உதவும்.இது வெறும் தற்காலிக எதிர்ப்புதான் .ஆனால் நாளை வேறு யாரவது ஒருத்தன் இவனை விட திறமையாக ஏமாற்ற வந்தால் ஏமாற நாங்கள் தயார் என்பது போலதான் இருக்கிறது நம் மக்களின் நிலைமை .

யாராவது இனிமேல் இப்படிப்பட்ட சாமியார்களே! தமிழ்நாட்டில் உருவாகக்கூடாது ,அப்படி யாராவது வந்தால் அவர்களை கைது செய்து மனநல காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று போராட தயாரா? இப்போது அகப்பட்டவனை கைது செய்ய கோரி போராட்டம் நடத்துகிறீர்கள்!!.சந்தோசம் அவனை கைது செய்த பிறகு என்ன ?...நாம் நம்முடைய வேலைபார்த்துக்கொண்டு கிளம்பிட வேண்டியதுதான்.எல்லாம் அடங்கிய  பிறகு மீண்டும் ஒருவன் முளைப்பான் ,சில அறிவு கெட்ட மக்கள் அவனிடம் போய் அருள் வாக்கு வாங்குகிறேன் என்று வயிற்றில் புள்ளியை  வாங்கி  விட்டு வந்து ..ஐயோ அம்மா என்னை  ஏமாத்திட்டான் ..இவன் பெரிய  போலி சாமி என்று கூப்பாடு போட்டு ஒப்பாரி வைப்பார்கள்.நான் ஏதோ அதிகப்பிரசங்கித்தனமாக பேசுவதாக நினைக்காதீர்கள்! ..கடந்தகால தமிழக சாமியார்களின் வரலாற்றினை (?) எடுத்து பார்த்தால் உங்களுக்கே தெளிவாக தெரியும்.

எனக்கு இந்த தவறில் உடன்பட்டுள்ள நடிகையைப் பற்றி பேசுவதில் பெரிதும் உடன்பாடில்லை.ஏனென்றால் தினமலர் ஒரு உண்மையை வெளியே சொன்னதற்கே !!!!!! ,கூடிநின்று அந்த பெரிய பூசணியை சோற்றில் மறைத்தவர்கள் இன்றைய தமிழ் கதாநாயகர்கள்(?) .அதுவும் அன்றி பொதுவாகவே மக்களிடம் நடிகைகளைப் பற்றி ஒன்றும் பெரிதாக நல்ல மதிப்பீடு கிடையாது .எனவே நான் இதை உங்கள் விமர்சனத்துக்கே விட்டுவிடுகிறேன் .

அரசாங்கம் இந்த மாதிரியான குற்றங்களை தடுக்க இதுவரை எந்த மாதிரியான நடவடிக்கையும் எடுக்கவில்லை .காஞ்சி "காம"கோடிகள் ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ ஜெயேந்திரர் அவர்கள் நடிகை சொர்ணமால்யாவுடன் கூத்தடித்த போதே இந்த அரசாங்கம் இந்த மாதிரியான அசிங்கங்களை தடுக்க ஏதாவது செய்யும் என்று நினைத்தேன் .ஆனால் நமக்கு ஏமாற்றமே மிச்சம் .

இதோ இப்போது தன்னை பெரியாரின் வாரிசு ,அவரின் வழி நடக்கும் தொண்டன் ,தற்போது நடப்பது பெரியார் கண்ட ஆட்சி என்றெல்லாம் சொல்லும் மஞ்சள் துண்டு செம்மல் (இன்றும் அந்த மஞ்சள் ரகசியம் புரியாத புதிராகவே உள்ளது ) திரு.கருணாநிதி அவர்கள் ஏதாவது சட்டம் இயற்றி தடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் வேளையில் பத்திரிகையாளர் சந்திப்பில் கலைஞர் சொன்ன பதில் ,

"’கோயில்கள் எல்லாம் கொள்ளையர்களின் கூடாரமாக மாறிக்கொண்டிருக்கிறதே? ஆசிரமங்களில் எல்லாம் அக்கிரமங்கள் நடக்கிறதே? ஏதேனும் நடவடிக்கை எடுக்கக்கூடாதா?’’என்று கேட்டதற்கு,

‘’இந்து அறநிலையத்துறையின் உயர்மட்டக்குழு கூடி ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கும்’’என்று தெரிவித்தார்."


இது வெறும் பத்திரிகை பேட்டியாக இல்லாமல் இந்த அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,மக்களும் இனிமேலும் ஆன்மிகம்,சாமியார்கள் என்று மூடநம்பிக்கையில் திளைக்காமல் மனித இனத்திற்கே உரிய பகுத்தறிவைக்கொண்டு சிந்திக்குமாறு கேட்டு கொண்டு விடைபெறுகிறேன்

இனிமேல் இப்படி ஒரு சம்பவமும்,அதைத் தொடர்ந்த இந்த மாதிரி கருத்து பகிர்வும் ஏற்படக்கூடாது என்பதே என்னுடைய ஆசை.


ஆசை நிறைவேறுமா? இல்லை பேராசையாகிவிடுமா? பார்க்கலாம் ?


இதையும் பாருங்க .....

http://www.maalaimalar.com/2010/03/03152851/sex.html

http://www.maalaimalar.com/2010/03/03150919/sex.html

http://www.dinakaran.com/bannerdetail.aspx?id=6659&id1=12



-சூரியன்

சனி, 13 பிப்ரவரி, 2010

இந்தியாவுக்கு அவுட்சோர்சிங் செய்தால் வரி ஏய்ப்பவர்களாக கருதப்படுவர் - ஒபாமா எச்சரிக்கை

இந்தியாவுக்கு அவுட்சோர்சிங் பணிகளைக் கொடுக்கும் அமெரிக்க நிறுவனங்கள் மீது மீண்டும் பாய்ந்துள்ளார் அதிபர் பாரக் ஒபாமா.

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அவுட்சோர்சிங் பணிகளைக் கொடுக்கும் அமெரிக்க நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்பவையாக கருதப்படுவர் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து புளூம்பெர்க் வார இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இங்கேயே வர்த்தகம் நடத்தினால், இங்குள்ள தொழிலாளர்களைப் பயன்படுத்தினால், இங்கேயே அனைத்து வர்த்தகத்தையும் மேற்கொண்டால் உங்களுக்கு 35 சதவீத வரி விலக்கு கிடைக்கும்.

அதேசமயம், நீங்கள் உங்கள் பணிகளை இந்தியாவுக்கு கொண்டு சென்றால், அங்கு முதலீடு செய்தால், உங்களது வேலைகளை இந்தியாவில் வைத்துக் கொண்டால், உங்களது தலைமையிடத்தை மட்டும் இங்கு வைத்துக் கொண்டு தொழில் பிரிவுகளை இந்தியாவில் அமைத்தால், நிச்சயம் உங்களுக்கு வரி விலக்கு கிடைக்காது. மேலும் வரி ஏய்ப்பு செய்பவர்களாகவும் நீங்கள் கருதப்படுவீர்கள் என்று எச்சரித்துள்ளார் ஒபாமா.

நன்றி : தட்ஸ்தமிழ்

புதன், 23 டிசம்பர், 2009

தெலுங்கானா தேவையா ?




தெலுங்கானா ?

தெலுங்கானா...இந்த வார்த்தை இன்று இந்தியாவில் யாரும் சொல்லக்கூடாத, பிரச்சினைக்குரிய வார்த்தையாகிவிட்டது .ஏன்இப்படி?எதனால் ? என்றெல்லாம் சிந்தித்தோமானால் நன்கு புலப்படும் . இன்று இந்தியாவில் இருப்பவர்களுக்கு தெலுங்கு தெரிகிறதோ இல்லையோ தெலுங்கானா நன்றாக  தெரியும்.அந்த வகையில் தெலுங்கானா கோரி போராடுபவர்களுக்கு ஒரு வெற்றி கிடைத்தது உண்மை .

தெலுங்கானா -தனிமாநிலம்

தெலுங்கானா - என்ன இது? அப்படியென்றால் என்ன ? ஏன் திடீரென்று தனிமாநிலம் கேட்டு ஆந்திராவில் போராட்டம் செய்கிறார்கள் ? என்று நினைப்பவர்களுக்கு ஒன்று சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் .இந்த தெலுங்கானா போராட்டம் இன்று நேற்று வந்ததல்ல ,இந்திய சுதந்திரம் வாங்குவதற்கு முன்பிருந்தே இந்த போராட்டம் நடந்து வருகிறது .என்ன முன்பு பாகிஸ்தானுடன்  இணைவோம் என்று சொல்லிவந்தவர்கள் இன்று தனிமாநிலம் கேட்கிறார்கள் அவ்வளவுதான் .  
இந்திய சுதந்திரம் அடைந்த பிறகும் இன்றைய தெலுங்கானா ( அன்று நிஜாம்அரசு ) நிஜாம் மன்னரிடமே இருந்தது ,அது

இந்தியநாட்டின் வரையறைக்குள் வரவில்லை என்று சொல்வதைவிட நிசாம் இந்தியாவுடன் சேர விரும்பவில்லை என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் .அவருடைய எண்ணமெல்லாம் பாகிஸ்தானுடன் இணையவேண்டும் என்பதாக இருந்தது .

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அனைவராலும் போற்றப்படும் ,இந்தியாவின் முதல் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தியும் ,தூதுக்குழுவினரை அனுப்பியும் நிஜாம் பாகிஸ்தானுடன் நட்புறவு என்ற கொள்கையிலிருந்து மாறவில்லை .எனவே வேறுவழியின்றி இந்திய ராணுவம் நிஜாமுடன் போரிட்டு நிஜாமாபாத்தை  மீட்டது .
பின்னர் மொழிவாரி மாநிலம் என்ற கோரிக்கைக்கு செவி சாய்க்க விரும்பிய இந்திய அரசு தெலுங்கனா,ஆந்திரம் இரண்டு இடத்திலும் மக்கள் பேசும் மொழி தெலுங்கு என்ற அடிப்படையில் தெலுங்கானாவை ஆந்திரத்தில் சேர்த்துவிட்டது .அன்று முதல் இன்று வரை ஆந்திரம் தெலுங்கானா பகை ஓயவில்லை . அனால்

தெலுங்கானா மக்கள் பேசும் மொழி தெலுங்கு ,மராட்டி,பிஹாரி சேர்ந்த கலவையாக இருக்கும் ,இன்று வரை தெலுங்கு திரைப்படங்களில் கேலி செய்வதற்கு மட்டுமே இந்த மொழியை பயன்படுத்துகின்றனர் ஆந்திரத்தை சேர்ந்தவர்கள் .

உண்மையில் இன்று ஆந்திராவில் போராடுபவர்கள்  அனைவருக்கும் இந்திய நாட்டு பற்று உள்ளதா ? அதன் காரணமாகத்தான் இவ்வளவு போராட்டமா என்றெல்லாம் நீங்கள் கேட்டால் நான் சத்தியமாக இல்லை என்று தான் சொல்லுவேன் .இந்த போராட்டங்கள் அனைத்தும் பொதுமக்களாலோ,இல்லை மாணவர் சங்கங்களாலோ முன்னெடுத்து செல்லப்படவில்லை. ஹைதராபாத்தில் கோடிக்கணக்கான சொத்துக்களை வாங்கி போட்டிருக்கும் தொழிலதிபர்கள் ,அரசியல்வாதிகள் போன்றோர் எங்கே தெலுங்கானா பிறந்துவிட்டால் நம்முடைய சொத்துக்களுக்கு பங்கம் வந்துவிடுமோ என்ற தனிமனித சுயநலத்திற்காகத்தான் இவ்வளவு கலவரங்களை தூண்டிவிட்டு  வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கிறார்களே தவிர ,உண்மையில் மாநில உணர்வோ ,தாய்நாட்டு உணர்வோ அல்ல .இன்று தூண்டிவிட்ட அனைவரும் சுவிஸ் பாங்க்கில் கோடிக்கணக்கான பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களே!!!.

தெலுங்கானா வளர்ச்சி 

 சுதந்திரம் அடைந்து இத்தனை வருடத்தில் அந்திரப்ரதேசம் அடைந்துள்ள வளர்ச்சி பிரம்மிக்கவைக்கக்கூடையது ,பாராட்டத்தக்கது. ஆனால் அந்த வளரச்சிஎல்லாம் எங்கே என்று பார்த்தீர்களேயானால் ( ஹைதராபாத் தவிர்த்து ) அனைத்தும் ராயலசீமா மற்றும் கடலோர பகுதிகள் என்பது கண்கூடாக தெரியும். தெலுங்கானா ஆரம்பத்திலிருந்தே இவ்விரண்டு பகுதியினரால் புறக்கணிக்கப்பட்டே வருகிறது .இப்போது கூட ஹைதராபாத்தை தவிர்த்த தெலுங்கானா மாநிலம் என்றால் இவர்கள் பிரச்சினை செய்யமாட்டார்கள் .நீங்கள் கேட்கலாம் ஹைதராபாத்  தெலுங்கானாவில் தானே உள்ளது,தெலுங்கானாவை புறக்கணிக்க நினைத்தால் இவர்கள்  ஹைதராபாத்தை வளரவிட்டிருக்கக்கூடாது அல்லவா என்று .இந்த இடத்தில் நீங்கள் ஒன்று யோசித்து பார்க்கவேண்டும் சில ஆண்டுகளுக்கு  முன்பு வரை ஹைதராபாத் ஆந்திராவின் தலைநகர் இல்லை.கர்நூல்தான் அதன் தலைநகராக இயங்கி வந்தது .தெலுங்கானா இணைப்பிற்கு பிறகு ஹைதராபாத் நகரின் வளர்ச்சி ,நிஜாம் ஏற்படுத்தியிருந்த வளங்கள் ஹைதராபாத்தை ஆந்திராவின் தலைநகராக ஆக்க வைத்தது .

இன்றுவரை ஹைதராபாத்தை வளர்த்த ஆந்திர அரசும் சரி ,ஊடகங்களும்
சரி ,தெலுங்கானாவின் மற்ற முக்கிய நகரங்கலான கரீம் நகர் ,நிசாமாபாத் ,மகபூப் நகர்களைப் பற்றி செய்திகூட வெளியிடுவதில்லை,முற்றிலும் மறைக்கப்படுகிறது . இன்று இந்த போராட்டம் தெலுங்கானா மாநிலம் உருவாகக்கூடாது என்பதற்காக அல்ல .ஹைதராபாத் தெலுங்கானவுடன் சேர்க்கக்கூடாது என்பதற்க்காத்தான் என்பது தினமும் வரும் தெலுங்கானா பிரச்சினைகளை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு தெரியும். இன்றுவரை (நேற்று முளைத்த சத்தீஸ்கர் ,ஜார்கண்ட் மாநில பிரச்சினைவரை )தனிமாநிலம் வேண்டும் என்றுதான் போராட்டம் நடந்திருக்கிறதே தவிர ,கூடாது என்பதற்காக போராட்டம் நடப்பது இந்திய வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை .

கூர்க்காலாந்து கோரிக்கை

 இன்று தெலுங்கர்கள் இவ்வளவு வன்முறையை கையிலெடுத்த பின்   முக்கியத்துவம் கொடுக்கும் மத்திய அரசு ,கடந்த 26 வருடங்களாக தங்களுக்கு என்று தனிமாநிலம் வேண்டும் என்று கோரும் கூர்க்கா மக்களின் கூர்க்காலாந்து போராட்டத்தை கண்டுகொள்ளவே இல்லை இன்றுவரையிலும் கூட. பாவம் கூர்க்காமக்கள் தமிழர்களின் கோரிக்கைகள் போலவே அவர்களின் கோரிக்கைகளும் மத்திய அரசால் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கப்படுகின்றன .

நான் இவ்வளவு சொல்வதனால் நான் தெலுங்கானா கோரிக்கைக்கு ஆதரவாளனோ என நீங்கள் நினைக்க கூடும்.தெலுங்கானா என்ற மாநிலம் உதிப்பதற்கு முன் இந்த இந்திய அரசு சிலபல சட்டதிருத்தங்களையும் ,சட்டங்களையும் கொண்டுவரவேண்டும் .ஏனென்றால் நிசாம் என்கிற மன்னன் ஆரம்பத்திலேயே தெலுங்கானாவை இந்தியாவுடன் இணைத்திருந்தால் அது இன்றைக்கு ஜம்மு-காஷ்மீர் போல ஒரு தனிசட்டதிட்டம் கொண்ட மாநிலமாக இருந்திருக்கும்.இன்று இரண்டாம்தர மக்களாக ஆந்திரா மக்களால் பார்க்கப்படும் தெலுங்கானா மக்களுக்கு ஒரு விடிவு பிறக்காமல் இந்த தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்படுமேயனால் அது சந்திரசேகர ராவ் என்ற தனிமனிதன் முதலமைச்சர் ஆவதற்கு மட்டுமே பயன்படும் .

மேலும் ஜார்கண்ட்  மாநிலத்தில் ஒரு மதுகோடா போல இங்கு  யாரும் உருவாகாமல் தடுக்கப்பட வேண்டும் .கண்டிப்பாக தெலுங்கானா என்ற மாநிலம் பிறந்தால் அது தமிழகத்தை(கலைஞர் ) போல சந்திரசேகர ராவ் அன்ற மனிதனின் குடும்ப சொத்தாக 99 % வாய்ப்புள்ளது .இதெயெல்லாம் மத்திய அரசும் ,மக்களும் சிந்தித்து பார்க்கவேண்டும் .

எதோ நான் அறிவுஜீவிபோல ,எல்லாவற்றையும் பற்றி பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்க கூடும் ,உண்மையில் என்னை இந்த கட்டுரை எழுதவைத்தது நான் என்னுடைய வலைதலத்தில் போட்டிருந்த வாக்களியுங்கள் பகுதிதான் .அதில் பலபேர் அளித்தபதிலில் தெலுங்கானாவே ஒரு தப்பான கோரிக்கை என்று நினைக்கிறார்களோ என்று எனக்கு ஐயம் ஏற்பட்டதனால் ,அதைப்பற்றி என்னால் முடிந்த அளவுக்கு உங்கள் அனைவருக்கும் விலக்கிவிடவேண்டும் என்றே இந்த கட்டுரையை எழுதினேன் .


ஏனென்றால் என்வலைதளத்தைப் படிப்பவர்கள் தெலுங்கானாவைப் பற்றி எதுவும் தெரியாது என்று யாரிடமும் சொல்லக்கூடாது !!!!.நாம் இங்கு தற்கால அரசியல் ,சினிமா ,உலகநிலவரம் முதற்கொண்டு அனைத்தையும் விவாத்து தெளிவுபெற வேண்டும்  என்பதே என்னுடைய ஆசை .

தோழர்களே!! ஒன்று கூடுங்கள் !! விவாதிக்க .நான் மேல்குறிப்பிட்டவற்றில் உங்களுக்கு ஏதேனும் மாற்று கருத்து இருப்பின் தவறாமல் விமர்சிக்கவும். ஒத்தகருத்து இருப்பின் அதையும் தெரிவிபடுத்தவும் .....இப்படிக்கு...

-சூரியன் .

சனி, 19 டிசம்பர், 2009

தினமலர் – மலிவு விலையில் மனு தர்மம் !!!


தினமலருக்கு ஆகாதவர்களின் பட்டியல் மிக நீளமானது. பெரியார் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டபிறகும் அவரை மட்டம்தட்டி இன்றளவும் செய்திகளை வெளியிடுகிறார்கள். இசுலாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து அந்த சமூகத்தையே தமிழ் நாட்டில் அச்சுறுத்தியதில் ஆ.எஸ்.எஸுக்கு அடுத்த இடம் நிச்சயம் தினமலருக்குத்தான். ஈழ ஆதரவாளர்களை புலி ஆதரவாளரென அரசுக்கு ஆள்காட்டி வேலை பார்த்ததில் தொடங்கி விவசாயிகள் உரிமைக்கு போராடுவோரை நக்சலைட்டுக்கள் என பரப்புரை செய்வது வரை தினமலரது திருப்பணிகளின் கணக்கிலடங்காதவை. தங்களின் வாசகர்களின் பெரும் சதவீதமானவர்களாக உள்ள அரசு ஊழியர்களின் போராட்டத்தை அவதூறு செய்து நன்றியுணர்ச்சிக்கு புது இலக்கணம் வகுத்தவர்கள் இவர்கள், முன்னாள் இலங்கை துணைத்தூதர் அம்சாவை பெருந்தன்மையானவர் என சொன்ன ஒரே தமிழ் ஊடகம் தினமலர்தான்.

மேற்கூறிய பிரிவினருக்கு எல்லாம் தினமலர் தங்களுக்கு எதிரானது என்பது தெரியும். ஆனால் பெரும்பாலான தாழ்த்தப்பாட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு தினமலர் தங்களுக்கும் எதிரி என்பது தெரிவதில்லை. அதன் இந்துத்துவா முகம் எல்லா இந்துக்களுக்கும் ஆதரவான பத்திரிக்கையைப்போல ஒரு மாயத்தோற்றத்தை தோற்றுவிக்கிறது. மதமாற்றம் பற்றி ஓலமிடும் செய்திகள், இந்து அமைப்புக்களின் செயல்பாடுகளுக்கு தரப்படும் அதீத முக்கியத்துவம், நிறைந்து வழியும் கோயில் குளம் பற்றிய செய்திகள் என்பன போன்ற செயல்களால் இது இந்துக்களுக்கான பத்திரிக்கையாக பலருக்கும் தோண்றுகிறது.

உண்மையில் அதன் பார்ப்பன சிந்தனை வாரமலர் கதைகளில்கூட பிரதிபலிக்கிறது. டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டி ஒன்று வாரமலரில் நடத்தப்படுகிறது. அதில் சாதிக்கொடுமை, இடஒதுக்கீடு பற்றி வந்த மூன்று கதைகளின் சுருக்கத்தை மட்டும் பாருங்கள்.

1. இடஒதுக்கீட்டில் பலனடைந்த ஒரு குடும்பத்தின் வாரிசுகள் இடஒதுக்கீடு பற்றி தங்கள் குடும்ப நண்பர் ஒருவருடன் விவாதிக்கிறார்கள் (மதிப்பெண் எதிர்பார்த்த அளவு வராவிட்டாலும் தனக்கு இட ஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என ஒரு வாரிசு சொல்வதில் இருந்து விவாதம் துவங்குகிறது ) .குடும்ப நண்பரோ தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்றுவதற்காக அரசு இடஒதுக்கீட்டை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழங்கி வருவதாகவும், இடஒதுக்கீட்டில் பலனடைந்த ஒரு தலைமுறை தங்கள் வாரிசுகளையும் அந்த ஒதுக்கீட்டில் பலனடைய வைப்பதால் பலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போவதாகவும் கவலைப்படுகிறார். உடனே மனம் திருந்துகிறார்கள் அந்த இளைஞர்கள். அந்த குடும்பத்தில் பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர் தான் இடஒதுக்கீட்டை நாடாமல் பொதுப்பிரிவில் என்ன படிப்பு கிடைக்குமோ அதை படிக்கப்போவதாக சொல்வதுடன் கதை சுபமாக முடிகிறது. ( சென்ற ஆண்டில் முதல் பரிசு பெற்ற கதை )

2. ஒரு கிராமப்பள்ளியில் ஒரு தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களை தொடர்ந்து கழிவறையை சுத்தம் செய்ய சொல்கிறார்கள் ஆசிரியர்கள். மாணவர்கள் தங்கள் வீட்டில் இது பற்றி முறையிடுகிறார்கள். பெற்றோர்கள் திரண்டு சென்று ஆசிரியர்களுடன் வாக்குவாதம் செய்கிறார்கள். மாணவர்கள் படிப்பு பாழாகிவிடுமோ என அஞ்சி பதில் நடவடிக்கையை ஊருக்கு போய் முடிவு செய்யலாமென பெற்றோர்கள் திரும்புகிறார்கள். மறுநாள் தலைமை ஆசிரியர் தங்கள் அலுவலகத்தை திறக்கும்போது சகிக்க முடியாத துர்நாற்றம் வீசுகிறது. எல்லா வகுப்பறைகளும் இதே மாதிரி அசிங்கம் செய்யப்பட்டிருப்பதாக மற்ற ஆசிரியர்களும் குற்றம் சாட்டுகிறார்கள். இதை யார் செய்து இருப்பார்கள் என யூகித்த தலைமை ஆசிரியர் காவல்துறைக்கு தகவல் சொல்ல கிளம்புகிறார். முந்தைய நாட்களில் கழிவறையை சுத்தம் செய்யும்படி நிர்பந்திக்கப்பட்ட மாணவர்கள் தானாகவே முன்வந்து தாங்களே பள்ளியை சுத்தம் செய்வதாக சொல்கிறார்கள். பிறகு ( இளகிய மனம் படைத்தவர்கள் கண்களை துடத்துக்கொள்ளத்தயாராய் இருக்கவும் ) இந்த செயலால் மனம் திருந்திய தலைமையாசிரியர் அவர்களை இனி இந்த வேலையை செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டு, பள்ளியை சுத்தம் செய்ய ஆட்களை அழைத்துவருமாறு தமது ஊழியரை பணிக்கிறார். ( இந்த ஆண்டு இரண்டாம் பரிசு )

3. ஒரு கிராமத்தின் சலவைத்தொழிலாளியின் குடும்பம் ஒன்றில் தன் மகளை சலவைத்துணி வாங்கி வருமாறு பணிக்கிறாள் தாய். சலித்தபடியே துணி வாங்கச்செல்லும் மகள் ( பள்ளியிறுதி மாணவி ) வழியில் தங்கள் மீதான ஒடுக்குமுறையை பற்றி சிந்தித்தபடி செல்கிறார். துணி வாங்கும் வீட்டிலும் அவள் சுயமரியாதையை பாதிக்கும் செயல்கள் நடக்கின்றன. ( சலவைகாரப்பெண்னை வெறும் கையோடு அனுப்பாமல் ஏதாவது பட்சணம் கொடுத்தனுப்பு என்று ஒரு பெண் சொல்வதையும் மீதமான உணவை தங்கள் தலையில் கட்டும் தந்திரம் என சரியாக கணிக்கிறாள் அப்பெண் ). வீட்டிற்கு திரும்பியவளிடம் அவள் அம்மா, இன்று உன் அத்தை உன்னை பெண் பார்க்க வருவதாக சொல்கிறார். மனவளர்ச்சியில்லாத அத்தை மகனை மணக்க விரும்பாமல் தான் விரும்பிய இளைஞனை ( அவ்வூரில் பிணம் எரிக்கிறார் அவர் ) மணந்து அந்த ஊரிலேயே வசிக்கிறார் அப்பெண். கதையின் துவக்கத்தில் குறிப்பிட்ட அவளது வாழ்வியல் சிரமங்களைப்பற்றி மேலதிக தகவல்கள் இல்லாமல் முடிகிறது கதை. ( இவ்வாண்டு பிரசுரத்திற்கு தேர்வான ஆறுதல் பரிசுக்கதை

பரிசுக்கதைகளை கவனியுங்கள். ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட கதை நாயகர்கள் யாரும் தங்களுக்கான நியாயத்தை உரத்துக்கூட கேட்கவில்லை. ஒரு முறைக்கு மேல் இட ஒதுக்கீடு எதற்கு ? என்று தினமலரின் கருத்தை சொல்வதால்தான் இந்த கதை பரிசுக்குரியதாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. மற்ற கதைகளும் விதித்ததை ஏற்றுக்கொள் என நமக்கு பாடம் நடத்துகிறது. கதையை கதையாக மட்டும் பார் என அறிவுரை சொல்லும் ஆட்களை செருப்பால் அடிப்பதுபோல ஒரு கருத்தை சொல்லி தான் யார் என்பதை காட்டியது தினமலர். நவம்பர் எட்டாம் தேதி வாரமலரின் ஞானாந்தம் பகுதியில் ” எந்த ஒரு மனிதனும் தான் பிறந்த குலத்திற்கு தகுந்த குணங்களையே கொண்டிருப்பான். அவரை போட்டால் துவரை முளைக்குமா ? ” என நேரடியாக மனுதர்ம விஷத்தை கக்குகிறது தினமலர். அதை விளக்க வைரம் ராஜகோபால் சொன்ன ஒரு கதையின் சுருக்கம் கீழே,

ஒரு ஞானியை கைது செய்கிறான் ஒரு அரசன் ( அவர் பிச்சையெடுத்த குற்றத்திற்காக ) . அவர் ஒரு பெரிய ஞானி என அறிந்து அவரிடம் பல விசயங்களைக்கேட்டு தெளிவு பெறுகிறான். அவர் தன் அறிவை நிரூபிக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கு பிறகும் கூடுதலாக ஒரு பட்டை சாதம் தினமும் தர உத்தரவிடுகிறான் அரசன். ஒருநாள் அரசன் தான் எப்படிப்பட்டவன் என சொல்லும்படி ஞானியிடம் கேட்கிறான். ஞானியோ தயங்கியபடி நீங்கள் ஒரு சமயல்காரனுக்கு பிறந்தவர்.. ராஜாவுக்கு பிறந்தவரல்ல என்கிறார். இதை தன் தாயிடம் கேட்கிறான் அரசன், தாயும் நீ சமையல்காரனுக்குப் பிறந்தவன்தான் என ஒப்புக்கொள்கிறார். அந்த ஞானியிடம் இதை எப்படி கண்டுபிடித்தீர்கள் என கேட்கிறான் அரசன். நீ ராஜகுலத்தில் பிறந்தவனெனில் எனக்கு பொன்னையும் பொருளையும் தரச்சொல்லியிருப்பாய், சமையல்காரனுக்கு பிறந்தவன் என்பதால் பட்டை சாதம் தர சொன்னாய் என்கிறார் ஞானி. ( சில விதிவிலக்குகள் இருக்கலாம் எனவும் சொல்கிறார் வைரம்- ஜெயேந்திரனை பார்த்துவிட்டு எல்லா பிராமணனும் ஸ்த்ரீ லோலனோ என நாம் நினைத்துவிடக்கூடாதில்லையா?? )

இந்து ஆதரவு எனும் போர்வையில் தனது பார்பன சிந்தனையை வாசகர்களுக்குள் திணிக்கிறது தினமலர். இதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறது. தினமலரின் நீண்டகால வாசகர்கள் பலர் ‘ இனியும் இடஒதுக்கீடு எதற்கு, திறமைக்கு முன்னுரிமை தரவேண்டும் சாதிக்கு அல்ல, சாதீய வேறுபாடுகள் மறைந்துவிட்டதால் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருப்பவருக்கு இடஒதுக்கீடு கொடு’ எனபன போன்ற சிந்தனையோட்டத்தில் இருப்பதைக்காண முடிகிறது.

தான் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பு பெண் என புதியவர்களுடன் அறிமுகமாகும்போதே சொல்லிவிடுவேன் என்கிறார் என் தோழி ஒருவர் ( பிற்பாடு தெரிந்துகொண்டால் பழகுவதில் வேறுபாடு காட்டுவார்களோ என அஞ்சி ). தாழ்த்தப்பட்டவர் என சுலபமாக அடையாளம் காட்டும் தன் பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறார் நான் அறிந்த ஒரு பொறியியல் பட்டதாரி. இவை எல்லாம் எங்கோ ஒரு மூலையில் நடப்பவை அல்ல, தொழில் நகரமான கோவையில் நடந்தவை. தனிக்குவளை போய் டிஸ்போசபிள் கப் வந்ததுதான் சாதிவேறுபாட்டை களைவதில் நாம் கண்ட முன்னேற்றம். கிராமப்பகுதிகளில் முரட்டுத்தனமாக வெளிப்படும் ஜாதீயம் நகர் பகுதிகளில் நாசூக்கான வழிகளில் வெளிப்படுகிறது அவ்வளவுதான்.

இந்த வெளிப்பூச்சு சமத்துவத்தை இடஒதுக்கீட்டிற்கு எதிரான ஆயுதமாக்கும் தினமலர்தான் பக்தியின் பின்னால் நின்று வர்ண வேறுபாட்டை நியாயப்படுத்துகிறது. பாம்பையும் பார்பானையும் கண்டால் பார்பானை முதலில் அடி என்றார் பெரியார், அப்போது எத்தனை பிராமணர்கள் தாக்கப்பட்டார்கள் ?? ஆனால் பசு ஒரு தெய்வம் என செய்யப்பட்ட பிரச்சாரத்தால் செத்த மாட்டை அறுத்த தலித்துகள் எரித்துக்கொல்லப்பட்டார்கள் வடக்கே. வார்த்தைகளின் பின்னால் இருப்பவனின் நோக்கம்தான் பின்பற்றுபவனின் செயல்பாட்டைத் தீர்மானிக்கிறது. ராஜராஜனுக்கு பிறகு வந்த சோழ அரசர்கள் பிராமணரல்லாத மக்களை படிப்படியாக தஞ்சை நகரை விட்டு வெளியேற்றினார்கள், இது வரலாறு. இதற்காக யாரும் சமகால பிராமணரிடம் வாக்குவாதம் செய்தால் அது நியாயமில்லை என்று சொல்லலாம். ஆனால் இன்றைக்கும் எம் மக்களையும் எங்கள் மொழியையும் வழிபாட்டில் தொடங்கி இசை வரை ஒதுக்கிவைக்கும் வழக்கத்தை என்ன செய்வது ? போராடு என்றனர் பெரியாரும் அம்பேத்கரும், அடுத்த ஜென்மம் வரை காத்திரு என்கிறது தினமலர்.

I.I.T. இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ” இரண்டாயிரம் ஆண்டு காத்திருந்தவர்களால் ஒரு வருடம் காத்திருக்கமுடியாதா” என ஒரு நீதிபதியை கேட்க வைத்தது எது ?. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆலய நுழைவுப்போராட்டம் நடந்தபோது மீனாட்சி செத்துவிட்டாள் எனக்கூறி அர்ச்சகர்களை வெளிநடப்பு செய்யவைத்தது எது?. சிறீரங்கம் உஷாவைத்தவிர மற்ற எல்லா சௌபாக்கியங்களும் சிறையில் ஜெயேந்திரனுக்கு தரப்பட்டது. தன்னை எதிர்த்தவனை கொல்ல சூத்திரனை நியமித்த ஜெயேந்திரன் சிறையில் தனக்கு சமைக்க மட்டும் பிராமணனை நியமிக்க சொன்னது ஏன் ? எல்லோரும் சமமென்றாகிவிட்டபிறகு ( தினமலர் கணிப்பின்படி) அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதை தடுப்பது எது ? கே.ஆர். நாராயணன் குடியரசுத் தலைவரானபொழுது திருப்பதி தேவஸ்தானம் இனி தாங்கள் விரும்புபவர்களுக்கு மட்டும்தான் முதல் மரியாதை தருவோம் என முடிவெடுத்த திமிரின் அடித்தளம் எங்கிருக்கிறது ?

தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தினமலர் வாசகர்கள் அல்லது தினமலரது கருத்துடன் உடன்படுபவர்கள் மேலே உள்ள கேள்விகளுக்கு விடைகாண முற்படுங்கள். அதுதான் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான முதல் படி. அதைவிட்டுவிட்டு வாரமரலரின் கதை நாயகர்களைப்போல கையைக்கட்டிக்கொண்டு நானே கக்கூசை கழுவுறேன் சாமி என்றால் நம் பிள்ளைகளுக்கும் துடைப்பம்தான் மிஞ்சும்.

-நன்றி வில்லவன்

வியாழன், 10 டிசம்பர், 2009

மருத்துவக் காப்பீடு திட்டம்: மு.க.வின் கருணையா? நரித்தனமா?


 ஐந்தாம் முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏறியுள்ள கருணாநிதியின் ‘பொற்கால’ ஆட்சியின் சாதனையாக “உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்” எனும் புதியதொரு திட்டத்தை தற்போது தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. “நுரையீரல் புற்றுநோயாளிக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை” என்றும் “சென்னை தனியார் மருத்துவமனையில் 15 வயது சிறுமிக்கு மூளைக்கட்டி இலவசமாக அகற்றப்பட்டது” என்றும் தினசரிகளில் செய்திகள் வந்து குவிகின்றன.

தமிழக அரசின் 26 நல வாரியங்களின் உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்தினரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என்றும், இதன் மூலம் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குக் குறைவாக உள்ள மக்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள் என்றும் இத்திட்டம் கூறுகிறது. ஒவ்வொரு பயனாளிக்கும் ஸ்மார்ட் கார்டு (கிரெடிட் கார்டைப் போன்ற) ஒன்று வழங்கப்படுமாம். மாநிலமெங்கும் அரசு ஊழியர்கள் முகாம்களை நடத்தியும், வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தியும், நல வாரியங்கள் எவற்றிலும் உறுப்பினராக இல்லாத பயனாளிகளை அடையாளம் கண்டு இத்திட்டத்தில் சேர்ப்பார்களாம்.

“ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைடு இன்சூரன்சு” என்ற பன்னாட்டு காப்பீடு நிறுவனத்திடம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்நிறுவனம் பட்டியலிட்டிருக்கும் தனியார் மருத்துவமனைகளில் அரசு ஊழியர்களுக்கு 4 ஆண்டு காலத்திற்கு இரண்டு லட்சம் ரூபா வரைக்கும் சிகிச்சை தரப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு அரசு ஊழியரிடமும் மாதாமாதம் ரூ.50-ஐ வசூலித்து காப்பீட்டு நிறுவனத்துக்கு இத்தொகையை அரசு வழங்கும். இதன் மூலம் காப்பீட்டு நிறுவனத்துக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் நிரந்தர வருவாயை அரசு உறுதிப்படுத்தியுள்ளது. சிகிச்சை பெற வரும் மக்களிடம் ஒட்டக் கறந்துவிடும் தனியார் மருத்துவமனைகள் திடீரெனக் கருணை பொங்க ‘இலவசமாக’ சிகிச்சை சேவதன் பின்னணி இதுதான்.

இத்திட்டத்தின்படி ஏழைக் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் அரசே ஆண்டொன்றுக்கு ரூ.500 வீதம் காப்பீடு தொகையாக ஸ்டார் காப்பீட்டு நிறுவனத்துக்குச் செலுத்தி வரும். சென்ற ஜூலை மாதம் சென்னையில் நடந்த இதற்கான தொடக்கவிழாவில் இவ்வாண்டின் முதல் காலாண்டு பிரீமியமாக ரூ.130 கோடியை ஸ்டார் ஹெல்த் நிறுவன அதிகாரிகளிடம் கருணாநிதி வழங்கினார்.

உலகின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள், தமிழ்நாட்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உருவாக்கப்படுகிறார்கள். தலைசிறந்த மருத்துவர்களாக இருக்கும் அரசு மருத்துவர்களைக் கொண்டு மக்களுக்குத் தரமான சிகிச்சை அளிக்காமல் தனியார் மருத்துவமனைகளிடம் அதனை ஒப்படைத்தது ஏன் என்ற கேள்விக்கு, “முதலமைச்சரின் மருத்துவ நிதி உதவி பெற விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏழைகளுக்கும் தரமான சிகிச்சை கிடைக்கவேண்டும். எனவேதான் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது” என்று அரசு காரணம் ல்கிறது.

ஆண்டுதோறும் இத்திட்டத்திற்கு அரசு வழங்கப்போகும் தவணைத் தொகை மட்டும் ரூ.517 கோடிகளாகும். அதே நேரத்தில், மதுரை அரசு மருத்துவமனையை அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞான கழகம் (எம்ஸ்) தரத்திற்கு உயர்த்தப் போவதாக அறிவித்து அரசு ஒதுக்கியுள்ள தொகையோ ரூ. 150 கோடிகள்தான். இதன்படி பார்த்தால், காப்பீடுக்குத் தனியாரிடம் ஒவ்வோராண்டும் போய்ச்சேரும் பணத்தைக் கொண்டு மூன்றுக்கும் மேற்பட்ட நவீன உயர்தர மருத்துவமனைகளைக் கட்டி விடமுடியும்.

அரசு மருத்துவர்களோ, “சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் இருக்கும் 30 அறுவைசிகிச்சை மையங்களில் 25 மையங்கள் தினமும் காலை 8 முதல் மதியம் 2 வரை மட்டுமே இயங்குகின்றன. 24 மணி நேரமும் இயங்குபவையோ அவற்றில் வெறும் ஐந்துதான். இவற்றை முறைப்படுத்தி 24 மணிநேரமும் இயங்குபவையாக மாற்ற எந்த நடவடிக்கையும் இல்லை” என்று புலம்புகின்றனர். ஏற்கெனவே இருக்கும் அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பையும் நிர்வாகத்தையும் சீரமைத்தாலே தரமான சிகிச்சையினை அரசே தரமுடியும் என்றும் மருத்துவர்கள் ல்கின்றனர்.

ஆனால் இதனைச் சேயாத அரசோ, கருணாநிதியின் திட்டத்தில் இடம்பெற்றுள்ள இதயநோக்கான பலூன் வால்வு சீரமைப்பிலும் இதய வால்வு சீரமைப்பிலும் நிபுணத்துவம் மிக்க சென்னை ரயில்வே மருத்துவமனையை தனியாருக்குத் தாரைவார்த்துத் தரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதில் முதல்கட்டமாக, ரயில்வே மருத்துவமனையையும் தனியாரையும் சேர்த்து மருத்துவக்கல்லூரி தொடங்க முடிவு செய்துள்ளது.

மருத்துவ சேவையை தனியார்மயப்படுத்தினால் ஏற்படும் பேரவலத்துக்கு அமெரிக்கா சரியான முன்னுதாரணமாகும். அங்கு மருத்துவம் முழுக்க தனியார் காப்பீடு நிறுவனங்களின் பிடிக்குள் இருப்பதால், காப்பீடுத் தவணை செலுத்த முடியாத ஏழைகளுக்கு மருத்துவ சேவையே முற்றிலும் மறுக்கப்படுகின்றது. காப்பீடு நிறுவனங்களின் கொள்ளையால் அங்கு 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவ சிகிச்சை பெறமுடியாமல் அவதிப்படுகின்றனர்.

இந்தியாவும் அதே பாதையில் உலகவங்கியின் வழிகாட்டுதலின் கீழ் “அனைவருக்கும் ஆரோக்கியம்” எனும் சுகாதாரக் கொள்கையை 2002-ஆம் ஆண்டு அறிவித்து, அதன்படி மருத்துவ நலத்திட்டங்களில் அரசின் பங்களிப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறது. தனியாரின் காப்பீடுத் திட்டத்திற்குள் பொது மருத்துவத்தைத் தள்ளிவிட உத்தரவு போட்டிருப்பது, உலகவங்கி. அதற்கு தனது பெயரைச் சூட்டியிருப்பதுதான், கருணாநிதியின் மூளை.

தொடக்கவிழாவில் பேசிய கருணாநிதி, கோபாலபுரத்தில் இருக்கும் அவரின் வீடு, அவரின் மரணத்திற்குப் பின்னர் இலவச மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அறிவித்துள்ளார். மருத்துவத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டங்கள் எதிர்ப்பே இன்றி நடைமுறைப்படுத்தப்படுமானால், அவருக்குப் பின், சென்னையில் கருணாநிதி வீடு ஒன்றில் மட்டும்தான் இலவச மருத்துவம் கிடைக்கும்.

இப்போதைக்கு கருணாநிதியின் காப்பீடுத் திட்டம், ஏழைகளிடமிருந்து கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை. ஆனால் அரசின் நேரடி மருத்துவ சேவைகள் படிப்படியாக ஒழிக்கப்பட்ட பின்னர், அனைத்துத் தரப்பினரையும் தனது வியாபார வலைக்குள் காப்பீடு நிறுவனம் வீழ்த்தத் தொடங்கும். அதன் பிறகு மருத்துவக் காப்பீடு வைத்துள்ளவர்கள் மட்டுமே நோக்குச் சிகிச்சை பெற முடியும் ஆபத்தான நிலை உருவாகும்.

சேமநல அரசினை இலாபகரமாக இயங்கும் அரசாக மாற்றுதல் எனும் போக்கைத் தாராளமயமும் தனியார்மயமும் துரிதமாகச் செயல்படுத்தி வருகின்றன. இந்த அயோக்கியத்தனம் மக்களிடம் அப்பட்டமாகத் தெரிந்துவிடாதிருக்க அதற்குச் சில பூச்சுவேலைகளும் கவர்ச்சியான பெயர்களும் தேவைப்படுகின்றன. ஓட்டுப்பொறுக்கும் அரசியலுக்கு இந்தக் கவர்ச்சியும் தேவையாக இருக்கின்றது. இப்போதைய எதிர்க்கட்சி அடுத்தமுறை ஆளும்கட்சியாகும்போது, இதே திட்டத்தை மாற்றமின்றி செயல்படுத்தும் என்பதால் எந்த எதிர்க்கட்சியுமே இத்திட்டத்தை தீவிரமாக எதிர்ப்பதில்லை.

இத்திட்டத்திற்கு தமிழக அரசு தேர்ந்தெடுத்துள்ள “ஸ்டார் ஹெல்த்” நிறுவனம்தான் “ஆரோக்கியஸ்ரீ ” எனும் பெயரில் ஆந்திர அரசோடு கைகோர்த்துக் கொண்டு, வாரங்கல் மாவட்டத்தில் சில பினாமி மருத்துவமனைகளை உருவாக்கி, அறுவை சிகிச்சையே தேவைப்படாத பெண்களுக்கும்கூடக் கருப்பைகளை அகற்றிப் பல கோடிகளைச் சுருட்டியிருக்கின்றது.

கருணாநிதியின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயனாளிகளுக்கு 4 ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் வரை மட்டுமே செலவிடப்படும். ஆனால், இன்றைக்கு இதய அறுவை சிகிச்சை மட்டும் ஒன்றரை இலட்சத்தில் இருந்து இரண்டு இலட்சம் வரை செலவு பிடிக்கக் கூடியதாக உள்ளது. இத்திட்டம் பட்டியலிட்டிருக்கும் 150 தனியார் மருத்துவமனைகளில் சென்னையில் மட்டும் 63 உள்ளன. காச்சல், இருமல் என்று போனாலே எக்ஸ்-ரே, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வைத்து குறைந்தது ரூ 5 ஆயிரத்தைக் கறந்து விடக்கூடிய லைஃப் லைன் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும், அப்பல்லோவை விட அதிகமாகப் பணம் பறிக்கும் பில்ரோத் மருத்துவமனையும் கொலைகார – கொள்ளைக்கார மருத்துவமனைகளாகப் புகழ் பெற்றுள்ள ஓசூரின் அகர்வால், அசோகா, விஜய் முதலானவையும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஓவுபெற்ற அரசு ஊழியர் ஒருவரின் புற்றுநோ சிகிச்சைக்கென அடையாறு புற்றுநோ மருத்துவமனை அண்மையில் ரூ.2 லட்சத்து இருபதாயிரத்தைக் கோரியிருந்தது. ஆனால் காப்பீடுத் திட்டம் அவருக்கு அனுமதித்ததோ ஒரு லட்சத்து இருபதாயிரம்தான். அவர் முழுப் பணத்தையும் மருத்துவமனையில் முதலிலேயே கட்டிவிடுமாறும், இத்தொகையை அவருக்கு ஆறு தவணைகளில் பிரித்துத் தருவதாகவும் காப்பீடு நிறுவனம் கூறியது. இதற்கு எதிராக வழக்குத் தொடுக்கப் போவதாக அவர் எச்சரித்த பிறகுதான், அந்நிறுவனம் இறங்கி வந்து காப்பீடு தொகையை ஒரே தவணையில் தரச் சம்மதித்திருக்கிறது. விவரம் தெரிந்தவர்களையே மொட்டையடிக்கப் பார்க்கும் காப்பீடு திட்டம், சாமானியர்களை என்ன பாடுபடுத்துமோ! ஆரம்பமே இப்படி அமர்க்களமாக இருப்பதிலிருந்தே, இத்திட்டம் மக்களைக் காக்குமா, அல்லது காப்பீடு நிறுவனங்களைக் காக்குமா என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

-புதிய ஜனநாயகம், செப்டம்பர்’2009

செவ்வாய், 8 டிசம்பர், 2009

இலங்கையில் களமிறங்கப்போகும் 25000 சீனர்கள்!

இலங்கை… இறுகும் சீனப் பிடி!


போருக்குப் பின் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெருமளவிலான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பில் 25000க்கும் மேற்பட்ட சீனர்கள் களமிறங்கவிருக்கிறார்கள். இவர்களின் நடவடிக்கைகள் குறிப்பிட்ட மாவட்டத்தில் என்றில்லாமல் இலங்கை முழுக்கப் பரவியிருக்கும் என்று கூறப்படுகிறது.

இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்காக சீனா 6.1 பில்லியன் டாலர் அளவுக்கு பெரும் கடன் தொகையை தனிப்பட்ட முறையில் வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணத்தின் பலாலியிலிருந்து காங்கேசன் துறை வரையிலான 56 கிலோ மீட்டர் நீள ரயில் பாதை, வட இலங்கை முழுவதும் உள்ள நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகள், கொழும்பில் வளர்கலைக் கூடம் அமைத்தல் என பல பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது சீனா.

இந்தப் பணிகள் அனைத்துக்கும் உள்நாட்டுப் பணியாளர்கள் ஒருவர் கூட பயன்படுத்தப்படக் கூடாது என்பது இலங்கை – சீன ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும். எனவே முழுக்க முழுக்க சீனர்களே இந்தப் பணிகளை மேற்கொள்வார்கள் என்றும், இதற்காக 25000 சீனப் பணியாளர்கள் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் களமிறங்கப் போகிறார்கள் என்றும் சன்டே டைம்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.

இந்தப் பணிகள் தவிர, ஏற்கெனவே இலங்கையின் தென்பகுதியில், புத்தளம் மின் நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம், அம்பாந்தோட்டை விமான நிலையம், மாத்தறை – கதிர்காமம் இடையிலான ரயில் பாதை, பின்னடுவ – மாத்தறை இடையிலான தெற்கு எக்ஸ்பிரஸ் பாதை போன்ற திட்டங்களை சீனா செயற்படுத்தி வருகிறது.

இது தவிர வடக்கில், பலாலி – காங்கேசன்துறை ரயில் பாதை, மதவாச்சி – தலைமன்னார் ரயில் பாதை, யாழ்ப்பாணம் மாவட்டத்தினுள் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் யாழ். நகர இணைப்புச் சாலைகள் புனரமைப்பு, வடக்கில் மன்னார் மற்றும் புத்தளத்துக்கு இடையிலான அனைத்து நெடுஞ்சாலைகள் புனரமைப்பு ஆகிய திட்டங்களையும் சீனா செயற்படுத்த உள்ளதாம். இவற்றிலும் கணிசமான சீனர்கள் இடம்பெறக்கூடும்.

இந்தியாவுக்கு நெருடலாய்…

இந்தியாவைப் பொறுத்தவரை, இலங்கையில் சீனாவின் இந்த அழுத்தமான காலூன்றல், ஒருவிதமான ஊடுருவலாகவே பார்க்கப்படுகிறது.

தெற்கில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தளத்தை இந்தியா வலுவில் இழந்ததாகவே இதனை சர்வதேச ராணுவ நிபுணர்கள் பார்க்கிறார்கள்.

இலங்கையை நிர்ப்பந்தப்படுத்தும் வாய்ப்பும்கூட இனி இந்தியாவுக்கு இருக்கும் என்று நம்புவதற்கில்லை. இந்துமகா சமுத்திரத்தில் பாதுகாப்பு ரோந்துப் பணியில் சீனர்கள் பங்கெடுத்திருப்பதும், இலங்கையின் ராணுவத் தளங்களில் சீன வீரர்கள் நடமாட்டம் இருப்பதையும் கிட்டத்தட்ட இலங்கை ஒப்புக் கொண்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இப்போது இந்திய தரப்பு உதவிகளைக் கூட இலங்கை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்ற கருத்தும் வலுவடைந்து வருகிறது. அதற்கு ஒரு உதாரணம்:

இலங்கையின் வட பகுயில் வவுனியாவிருந்து யாழ்ப்பாணத்தின் பளை வரை ரயில் பாதை அமைக்க இந்திய குறைந்த வட்டியில் கடன் தந்துள்ளது. இந்தப் பணிகளையும் இந்தியாவே மேற்கொள்கிறது. ஒருகிலோ மீட்டர் நீள சாலைக்கு 2 மில்லியன் ரூபாய் செலவில் இந்தப் பாதையை அமைக்கிறது இந்தியா.

ஆனால் பலாலியிலிருந்து காங்கேசன் துறைவரை சீனா அமைக்கும் ரயில் பாதையோ, கிலே மீட்டர் ரூ 4 மில்லியன் செலவில் அமைக்கப்படுகிறது. அதாவது இந்தியாவை விட இருமடங்கு அதிக செலவு வைக்கிறது சீனா.

அப்படி இருந்தும் அதிக செலவு, கடன் சுமையைத் தரும் சீனாவுக்கு ரத்தினக் கம்பளம் விரிக்கிறது இலங்கை. இந்தியாவின் பங்களிப்பை முடிந்தவரை மறுத்து வருகிறது இலங்கை அரசு.
இன்றைய நிலவரப்படி, இலங்கை தீவு முழுவதுமே சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் சூழல் உருவாகியுள்ளது. இதனை இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது… இந்த வல்லாதிக்கப் போட்டியில் தமிழர்கள் எப்படியெல்லாம் இன்னும் சிதைக்கப்படப் போகிறார்களோ என்பதுதான் இப்போதைய கேள்வி!

நன்றி : என்வழி

வெள்ளி, 4 டிசம்பர், 2009

கனடாவில் நடந்தது என்ன?-சீமான்



ராஜீவ் குடும்ப அன்பைப் பெறவும், அரசியலில் தான் இன்னமும் இருப்பதாகக் காட்டிக் கொள்ளவுமே பிரபாகரனின் போஸ்டரை இளங்கோவன் கிழித்திருக்கிறார். போஸ்டர் கிழிப்பதும் புளுகு பேசுவதுமே இளங்கோவனுக்குப் பிழைப்பாகி விட்டது என்று நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குநருமான சீமான் கூறியுள்ளார்.

கனடாவில் கைது செய்யப்பட்டது, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிரபாகரன் போஸ்டர்களைக் கிழித்தது, அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது உள்ளிட்டவை தொடர்பாக ஜூனியர் விகடன் இதழுக்கு சீமான் பேட்டி அளித்துள்ளார்.

அதன் விவரம்...



வருடந்தோறும் கனடாவில் உள்ள ஈழமுரசு பத்திரிகை, மாவீரர் தினத்தை எழுச்சி நாளாகக் கொண்டாடும். கடந்த 2007-ம் ஆண்டே அந்த விழாவில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அதேபோல் இந்த வருடமும் ஈழமுரசு என்னை அழைத்திருந்தது.

இதற்கிடையில் 25ம் தேதி கனடா மாணவர் சமூகம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாவீரர் தின நிகழ்வில் நான் கலந்துகொண்டு பேசினேன். அங்கே பிரிவினையை உண்டாக்கும் விதத்தில் ஒரு வார்த்தையைக்கூட நான் உச்சரிக்கவில்லை.

தந்தையர் நாடாக நாம் நினைத்த இந்தியாவும், உலக நாடுகளும் ஈழ தேசத்தை அவமான சாட்சியாக்கிவிட்டன. நாம் எதையும் சாதிக்க முடியாமல் போய்விட்டது. இனி யாரையும் நம்பி பலனில்லை. நமக்கான சுதந்திரம், நம் கையில்தான் இருக்கிறது. அதற்காக யாரும் உயிரைக் கொடுக்க வேண்டாம்; உணர்வையும் ஒற்றுமையையும் கொடுத்தால் போதும்! என்பதுதான் அங்கே நான் வைத்த பிரதான வாதம்.

இதில் எங்கே இருக்கிறது பிரிவினைக்கான சதி? இத்தனைக்கும் கனடா மிகப் பெரிய ஜனநாயக நாடு. அங்கேயும் ஜனநாயகத்தை நசுக்கும் வேலையை இந்திய தேசம் கற்றுக் கொடுத்து விட்டதோ என்னவோ… அதனால்தான் காரணமே இல்லாமல் என்னை கைது செய்து, மாவீரர் நாளில் நான் பேச முடியாதபடி தடுத்து விட்டார்கள்.

இந்திராவைக் கொன்றது நியாயமா?

மாணவர் சமூக அமைப்பு விழாவில் நான் பேசிவிட்டு வந்த அடுத்தநாள் அதிகாலை என்னை எழுப்பியது கனடா நாட்டு போலீஸ். இந்தியாவை பழித்துப் பேசியது ஏன்? எனக் கேட்டார்கள். அதை நான் மறுத்ததும், ஏதோ ஏழெட்டு கொலைகளை நிகழ்த்திய குற்றவாளியைப் போல் கையில் விலங்கிட்டு, பின்புறமாக கட்டி ரொம்ப தூரத்துக்கு என்னை நடத்திக் கூட்டிக்கொண்டு போனார்கள். அங்கு இந்திய அதிகாரியான சிங் ஒருவர் என்னை விசாரித்தார்.

பல கேள்விகளைக் கேட்ட அந்த அதிகாரி, ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதை நியாயப்படுத்துகிறீர்களா? என்றார். உங்கள் சீக்கிய சமூகத்தினர் இந்திரா காந்தியைக் கொன்றார்களே… அதை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்களா? எனக் கேட்டேன். இதனால் அந்த சிங்குக்கு கோபம் வந்து விட்டது.

உடனே நானும் தலைவர் பிரபாகரனும் இருக்கும் படத்தைக் காட்டி, இவர் உன்னோட பிரதரா? எனக் கேட்டார். ஆமாம்… தமிழ் ரத்தம் ஓடும் அனைவருக்குமே அவர் சகோதரர்தான்! எனச் சொன்னேன். அடுத்தடுத்தும் ரெண்டரை மணி நேரத்துக்கும் அதிகமாக என்னைக் குடைந்து கொண்டே இருந்தார்.

எதையாவது என் வாயிலிருந்து பிடுங்கி, என்னை நிரந்தரமாக கனடா சிறையிலேயே சிக்கவைத்துவிடவேண்டும் என்பதுதான் அவருடைய திட்டமாகத் தெரிந்தது.

பிரபாகரன் இருப்பதால்தான் எழுச்சி நிலவுகிறது...

வெளிநாடுவாழ் தமிழர்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாக நம்புகிறார்கள். அதனால்தான் அவர்களிடையேயான எழுச்சி எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது பன்மடங்காகப் பெருகியிருக்கிறது.

வெளிநாடுகளில் பரவியிருக்கும் டக்ளஸ், கருணா போன்றவர்களின் ஆதரவாளர்கள்தான் தேவையற்ற குழப்பங்களை தமிழ் மக்கள் மத்தியில் விதைத்து வருகிறார்கள்.

பிரபாகரனும், அவர் தலைமையிலான தேசிய ராணுவமும் அழிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்லும்- அதையே நம்பும் உலக நாடுகள், புலிகள் அமைப்பு மீதான தடையை இப்போதாவது நீக்க வேண்டியதுதானே? இல்லாத இயக்கத்துக்கு ஏன் தடை நீட்டிக்கிறீர்கள்?

தரிசு என்று சொல்லிக்கொண்டே, அந்த நிலத்துக்கு வேலி போடும் முரண்பாட்டை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஏன் கடைப்பிடிக்கின்றன? தலைவர் பிரபாகரன் நிஜமாகவே கொல்லப்பட்டிருந்தால், அவருக்குரிய வீர வணக்கத்தை தமிழர்கள் தைரியமாக நிகழ்த்தி இருப்பார்கள்.

என் வீட்டை தாக்கி, காருக்கு தீ வைத்து, இளங்கோவனின் போஸ்டரையும் ஒட்டிவிட்டுப் போனவர்களின் மீது இன்று வரை நடவடிக்கை இல்லை? பாரதிராஜாவின் அலுவலகத்தைத் தாக்கியவர்களின் கார் எண்ணைக் கொடுத்தும் இன்று வரை யாரையும் கைது செய்யவில்லை.

இளங்கோவனுக்காக மட்டும் கிளம்பிய போலீஸ்...

தா.பாண்டியனின் கார் எரிக்கப்பட்டு இத்தனை மாதங்கள் ஆகியும் யார் மீதும் போலீஸ் வழக்குப் பதியவில்லை. ஆனால், இளங்கோவனின் வீடு தாக்கப்பட்ட விவகாரத்தில் மட்டும் தமிழக போலீஸ் சீறிக் கிளம்பியிருக்கிறது. அவசர கதியில் எங்களின் நாம் தமிழர் அமைப்பைச் சேர்ந்த தம்பிகள் நால்வரை கொஞ்சமும் உண்மை இல்லாமல் குற்றவாளியாக ஜோடித்திருக்கிறது போலீஸ்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இளங்கோவனை நாங்கள் தோற்கடித்ததற்காக, வேண்டுமென்றே எங்கள் இயக்கத் தம்பிகளை அவர் கைகாட்டி இருக்கிறார். தைரியமிருந்தால் தேர்தல் களத்தில் இளங்கோவன் எங்களோடு மோதிப் பார்க்கட்டும்.

சிவாஜி கணேசன், வாழ்ப்பாடி ராமமூர்த்தி போன்றவர்கள் தனிக் கட்சி ஆரம்பித்தபோது, அவர்களுக்கு சாமரம் வீசிய இளங்கோவனுக்கு இப்போதுதான் ராஜீவ்காந்தி பாசம் பொத்துக் கொண்டு வருகிறதா? ராஜீவ் குடும்ப அன்பைப் பெறவும், அரசியலில் தான் இன்னமும் இருப்பதாகக் காட்டிக் கொள்ளவுமே பிரபாகரனின் போஸ்டரை இளங்கோவன் கிழித்திருக்கிறார்.

போஸ்டர் கிழிப்பதும் புளுகு பேசுவதுமே இளங்கோவனுக்குப் பிழைப்பாகிவிட்டது. இதற்கெல்லாம் பயப்படப் போவதில்லை. காற்றில் முறியும் முருங்கையல்ல நாங்கள், வேங்கையின் பிடரியை உலுக்கும் புலிகள் என்றார் சீமான்.

புதன், 2 டிசம்பர், 2009

சீமான் கர்ஜனை! மிரண்டு போன கனடா!!!



தமிழீழ தாயக விடுதலைக்காக களமாடி உயிர்நீத்த போராளிகளின் நினைவுகளை போற்றும் விதமாக ஒவ்வொரு வருஷமும் நவம்பர்- 27-ல் "மாவீரர் நாள்' நிகழ்வுகள் ஈழத்தில் பிரமாண்டமாக கொண்டாடப்படும். மாவீரர் நாளில் பிரபாகரன் நிகழ்த்தும் உரையை உலக நாடுகளே உற்று கவனிக்கும்.போரினால் ஈழத்தில் ஏற்பட்ட விளைவுகளுக்குப் பின்னால்...

வருகிற இந்த வருட மாவீரர் நாள் நிகழ்வுகள் புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் வசிக்கும் நாடுகளிலிருந்து துவங்கியது. உலக முழுவதும் உள்ள ஈழத் தமிழர்கள், தமிழர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள் அனைத்தும், ஒவ்வொரு நாட்டிலும் பிரபாகரன் பிறந்த நாளையும் மாவீரர் நாளையும் பிரமாண்டப்படுத்தினர்.கனடா தமிழர் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த "மாவீரர் நாள்' நிகழ்வில்
கலந்து கொள்ள சென்ற சீமான், இந்நிகழ்விற்கு முதல்நாள் டோரொண்டோவில் கனடிய தமிழ் இளைஞர்களும் மாணவர்களும் ஏற்பாடு செய்திருந்த "பிரபாகரன் பிறந்த நாள்' நிகழ்வில் கலந்து கொண்டார்.
ஒரு மண்டபத்தில் நடந்த இவ்விழாவில் ஈழத் தமிழர்களும் இளைஞர்களும் பெருமளவில் திரண்டிருந்தனர்.விழாவில் பேசிய சீமான், தனக்கே உரிய வழக்கமான பாணியில் ஏக கர்ஜனை செய்ய... உடனடியாக அவரை இந்தியா வுக்கு திருப்பி அனுப்பி விட்டது கனடிய அரசு. இந்த சம்பவத் தால் ஏகத்துக்கும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள்.""இந்த வருட மாவீரர் நாள் நிகழ்வு, சர்வதேச நாடுகள் முழுமைக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
மாவீரர் நாளில் ஈழ இளைஞர்களிடம் உருவாகும் தமிழீழ எழுச்சியை, அழிக்கத் திட்டமிட்டு ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தனது தூதரகம் மூலம் அந்தந்த நாட்டின் அரசாங்கத்தோடு ஒரு இணக்கப்பாட்டை முன்கூட்டியே ஏற்படுத்திக் கொண்டது சிங்கள ராஜபக்சே அரசு.
அப்படிப்பட்ட ஒரு இணக்கப்பாட்டை கனடா அரசோடு இங்குள்ள சிங்கள தூதரக மும் போட்டுக் கொண்டது. ஏற்கனவே சிங்கள தூதரகத்திற்கும் கனடா அரசுக்கும் "நல்ல புரிதல்' உண்டு. அதன் அடிப்படையிலே, நிகழ்வு துவங்குவதற்கு முன்பே, கனடிய உளவுத்துறை யினர் மண்டபத்திற்கு வந்து கண்காணிக்கத் துவங்கினர். இதற்காக தமிழ்மொழி அறிந்த ஒரு அதிகாரியையும் அழைத்து வந்திருந்தனர். இங்குள்ள சிங்கள தூதரகம், இந்த அதிகாரியை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.விழா துவங்கியதும் அந்த அதிகாரி சொல்ல சொல்ல ஒவ்வொரு நிகழ்வை யும் குறிப்பெடுத்தனர் உளவுத் துறையினர்.
சீமான் பேசிய பேச்சுக்களும் அவ்வாறே குறிப்பெடுக்கப்பட்டது. விழா முடிந்ததும் தனது அறைக்கு சென்றுவிட்டார் சீமான். அடுத்த சில மணி நேரங்களில் கனடா அரசு ஒரு முடிவை மேற்கொண்டு, அதிரடியாக சீமானை திருப்பி அனுப்பிவிட்டது. உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டின்படியே இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக நினைக்கிறோம். மாவீரர் நாள் நிகழ் வில் சீமான் பேசுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை'' என்கின்றனர் விழா ஏற்பாட்டாளர்களான கனடிய தமிழ் இளைஞர்கள்.
அப்படி என்ன பேசினார் சீமான்?""கனடாவிற்கு எதற்காக வந்தேன், தன்னிடம் பிரபாகரன் கட்டளையிட்டது என்ன, "நாம் தமிழர்' இயக்க செயல்பாடுகள், தமிழீழத்திற்காக உயிர்நீத்த மாவீரர்களின் தியாகம் என்பது குறித்தெல்லாம் உணர்ச்சி பொங்க பேசிய சீமான், ""புலிகளை ஒழித்து விட்டோம், போராட்டம் ஓய்ந்துவிட்டது, போர் நின்று விட்டது என்று நினைக்கிறான் ராஜபக்சே. உலகத்திலுள்ள தமிழர்கள் அத்தனைபேரையும் புலிகளாக மாற்றிவிட்டு... ஒழித்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறான் ராஜபக்சே. புலி என்றால் யார் என்றே அவனுக்குத் தெரியவில்லை. சீமான் புலி. அவன் செத்தால் அவன் தம்பி புலி.
"சிங்கள ராணுவத்தின் கொடூரத் தாக்குதலில் அப்பாவி தமிழர்கள் 50 பேர் பலியானார்கள். 500 பேர் புலியானார்கள்' என்பார் சோலை. அப்படி புலியானவர் களடா நாங்கள். அது தெரியாமல் போர் நின்றுவிட்டது, போராட்டம் ஓய்ந்து விட்டது, புலிகளை அழித்துவிட்டோம் என்கின்றான். ஆனா அப்படி இல்லை. இனி என் தலைவன் (பிரபாகரன்) கையில் இல்லை போர். தம்பிகள் கைகளில் இருக்கிறது.ஒரு பள்ளிக்கூடத்தில் குண்டு போட்டாயா? 100 சிங்கள பள்ளிகள் மீது குண்டு போட்டிருந் தோமேயானால்... தமிழச்சியின் மார் அறுக்கி றாயா? சிங்களச்சியின் மாரை அறுத்தெறிந்திருப் போமேயானால்... அவனுக்கும் அந்த வலி தெரிந்திருக்கும். சர்வதேச சமூகத்தாருக்கும் வலித்திருக்கும்.
இதையெல்லாம் செய்யாத என் தலைவன் பயங்கரவாதி. இதையெல்லாம் செய்த ராஜபக்சே ஜனநாயகவாதியா?இனி மரபுவழி போர் கிடையாது. இனி எங்கள் நிலப்பரப்பிலும் (ஈழம்) சண்டை கிடை யாது. இலங்கை தலைநகர் கொழும்பில்தான் சண்டை. 1000 கரும்புலிகள் போதும். வாரத்திற்கு ஒரு குண்டு. ஒரு கரும்புலி சிதறினால் 1000 சிங்களவன் சிதற வேண்டும். தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருப்பான் கரும்புலி. நாம் தனித்தனியாக சிறு நெருப்பாக சிதறிக் கிடந்தது போதும். ஒன்றிணைந்து ஒரு பெரு நெருப்பாக மாற வேண்டும். என் இழப்பு, சிங்களவனுக்கு 100 மடங்கு இழப்பு என்பது போல் நம் வெறி மாற வேண்டும். அவன் ஒரு வெட்டு என்றால் நாம் 100 வெட்டு வெட்ட வேண்டும் ஓய்ந்து விடக்கூடாது.
விடுதலைப் போராட்டம் இனி நம் கையில்தான் இருக்கிறது. நம் வலிமையை பார்த்துதான் தலைவர் விரைவாக வருவதும் மெதுவாக வருவதும் இருக்கிறது. வேக வேகமாக களமாட தயாராகுங்கள் என் தம்பிகளே! விடுதலையை வென்றெடுக்க வேண்டும். தமிழீழம் உருவாகியே தீரும்'' என்றார் மிக ஆவேசமாக.
தனது 46 நிமிட ஆவேச பேச்சில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளையும் தமிழகத்தையும் கடுமையாக விமர்சித்த சீமான், எது பயங்கரவாதம் என்பது குறித்தும் சர்வதேச சமூகத்திடம் நிறைய கேள்விகளை எழுப்பினார். சீமானின் ஆவேசத்தை கண்டு ஆர்ப்பரித்தது கனடாவில் உள்ள ஈழத் தமிழினம்.""நிகழ்வில் பேசிய சீமானின் பேச்சுக்களை கனட அரசிடம் உளவுத்துறையினர் ரிப்போர்ட்டாக தர, அந்த ரிப்போர்ட்டின்படி "கனடா பார்டர்ஸ் சர்வீஸ் ஏஜென்சி' என்கிற இமிக்ரேஷன் டிபார்ட்மென்ட்டிடம் ஆக்ஷன் எடுக்கும்படி கேட்டுக் கொண்டது கனடா அரசாங்கம்.
அதன்பேரில் அதன் அதிகாரிகள், சீமான் தங்கியிருந்த அறைக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, இலங்கைக்குள் மீண்டும் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும், சிங்களவர்கள் வாழவே கூடாது, ஒரு பள்ளிக்கூடம் மீது குண்டு விழுந்தால் 100 பள்ளிக்கூடம் மீது குண்டு வீசுவோம் என்று பேசியுள்ளீர்கள்.எங்கள் நாட்டில் தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்தை ஆதரித்து இங்கு அசாதா ரணமான சூழலை உருவாக்குகிறீர்கள். அதனால், நீங்கள் உடனடியாக கனடாவை விட்டு வெளியேற வேண்டும். இல்லையேல், உடனடியாக நாடு கடத்தப்படுவீர்கள் என்று எச்சரிக்கை செய்தனர். ஆனால், சீமானும் அவரது வழக்கறி ஞர் ஹதாயத் நஹாமியும் "30-ந்தேதி வரை விசா இருக்கிறது' என்று வாதாடினர்.
ஏற்க மறுத்த அதிகாரிகள், அவரை ஏர்போர்ட்டுக்கு அழைத்து வந்து திருப்பி அனுப்பினர்'' என்கின்றன கனடாவில் இருந்து கிடைக்கிற தகவல்கள்.சீமானின் வழக்கறிஞரான ஹதாயத் நஹாமி, ""இமிக்ரேஷன் அதிகாரிகளின் நோக்கம், சீமானை உடனடியாக கனடாவை விட்டு வெளியேற்றிவிட வேண்டுமென்பதிலேயே இருந்தது. தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசக்கூடாது என்பதையே திரும்பத் திரும்ப சொன்னார்கள்'' என்கிறார்.ஏர்போர்ட்டில் இருந்த சீமான், ""தமிழின விடுதலைக்காக போராடும் அனைவரையும் ஒடுக்க வேண்டுமென்பதில் சிங்கள இனவாதம் தீவிரமாக இருக்கிறது. அதனால் போராடும் எங்கள் மீது அடக்கு முறைகளை ஏவிவிட்டிருக்கிறது. ராஜபக்சே சகோ தரர்கள் கொடுத்த நெருக்கடியின் காரணமாகவே, நான் பேசவிருந்த மாவீரர் நாள் உரையை தடுத்து நிறுத்தி கனடா அரசு என்னைத் திருப்பி அனுப்பி யுள்ளது. இந்த அச்சுறுத்தல்களுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். தமிழீழ விடுதலைக்காக என் போராட்டம் தொடரும்'' என்றார் உறுதி தளராமல்.
இனி வெளிநாடுகளுக்கு செல்ல முடியுமா?
கனடாவில் இருந்து வலுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சீமான் இனி வெளிநாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்படுமோ என்கிற கவலை ஈழ ஆதரவாளர் கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த சூழலில் இமிகிரேஷன் அதிகாரி கள் சிலரிடம் சீமானுக்கான சிக்கல் குறித்து பேசினோம்.
""வெளிநாட்டில் இருந்து வருகின்ற நபர்களை இரண்டு வகையில் தடுப்பார்கள் இமிக் ரேஷன் அதிகாரிகள். ஒரு நபர் தான் செல்லும் நாட்டின் கரன்சியை போதுமான அளவு வைத்துக் கொள்ளாமல் இருத் தல், போதுமான ஆவணங்கள் இல்லாமை, முறைகேடான ஆவணங்கள் உள்ளிட்ட தவறு கள் இருப்பின் விமான நிலை யத்தில் இருந்தே அந்த நபரை திருப்பி அனுப்பி விடுவார்கள். இதற்கு "ரெஃப்யூஸ்டு என்ட்ரி' என்று பெயர்.
ஒரு நாட்டுக்குள் அனு மதிக்கப்பட்டு அதன்பிறகு நடைபெறும் தவறுகளுக்காக சம்பந்தப்பட்ட நபரை திருப்பி அனுப்புவதை "டீபோர்ட் என்ட்ரி' என்பார்கள்.
சீமானைப் பொறுத்தவரை அவர் கனடா நாட்டின் விசா பெற்று அங்கு சென்றிருக்கிறார். அங்கே நடந்த கூட்டத்தில் அவர் பேசியவை கனடா சட்டப்படி குற்றம் என்பதால் அவர் திருப்பி அனுப்பப்படுவதாக தெரிகிறது. இதுபோன்ற நேரங்களில் பொது வாக சம்பந்தப்பட்ட நாட்டின் இமிக்ரேஷன் அதிகாரிகள் வெளி யேற்ற உத்தரவை தனியாக தயா ரித்து, எந்த விமான நிறுவனம் குறிப் பிட்ட நபரை தங்கள் நாட் டுக்கு அழைத்து வந்ததோ அந்த விமான நிறுவனத்திடம் கொடுப்பார்கள். அந்த விமான நிறுவனம் சம்பந்தப் பட்ட நபரை எங்கிருந்து ஏற்றிய தோ அங்கேயே இறக்கிவிடும்.
அந்த வகையில் சீமான் மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இங்கே இந்திய இமிகிரேஷன் அதிகாரி கள், "என்ன காரணத்துக்காக உங் களை கனடா அரசு திருப்பி அனுப் பியது?' என்று சீமானிடம் விசா ரித்து அவரை அனுமதிப்பார்கள்.
சீமான் பாஸ்போர்ட்டில் அவர் வெளியேற்றப்பட்டது தொடர்பாக எதுவும் இடம்பெற வாய்ப்பில்லை. ஆனால் கனடா அரசு தன்னுடைய ஆவணங் களில் சீமான் பெயரை பிளாக்லிஸ்ட் செய்துவிடும். எனவே கனடா வைத் தவிர மற்ற நாடுகளுக்கு செல்வதில் அதிகம் சிக்கல் இருக் காது'' என்றனர்.
நன்றி : தமிழ்வெளி

வியாழன், 12 நவம்பர், 2009

மரபணு கத்தரிக்காய் உண்ணாதீர்கள் – எச்சரிக்கை.


பி.டி.கத்தரிக்காய்: எதிர்ப்புகள் வலுப்பது ஏன்?

கத்தரிக்காய் முற்றினால் கடைக்குத் தான் வந்தாகனும்' என்ற பழமொழி தமிழ்நாட்டில் பிரபலம். இப்போது பி.டி. கத்தரிக்காய் எனப்படும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் விவகாரம் சந்தைக்கு வருவதற்கு முன்பே சந்தி சிரிக்கிறது.

இந்த சர்ச்சைகளுக்கு வித்திட்டிருப்பது மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம். அதன் கீழ் வரும் 'மரபணு பொறியியல் அங்கீகார குழுமம் இதற்கும் அமைச்சர் 'முல்லை பெரியாறு'' புகழ் ஜெய்ராம் ரமேஷ்தான்!

மான்சான்ட்டோ

இதில் என்ன பிரச்சனை? நவீன விவசாயத்தை ஏற்கவேண்டியது தானே? விஞ்ஞான வளர்ச்சி மூலம் அதிக லாபம் பெறலாமே? என பலரும் கேட்கிறார்கள். இதில் தொலை நோக்கு அபாயம் இருக்கிறது. நமது சந்ததிகளின் நலன் குறித்த எச்சரிக்கை இருக்கிறது.

அமெரிக்காவின் மான்சான்டோ நிறுவனத்தின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் விவசாய பொருள்களின் விதைகளை நமது வயல்களில் தெளித்தால் அது செழித்து வளரும், காய்த்து கொட்டும்.

ஆனால் அதன்மூலம் வரும் விதைகளைப் பயன்படுத்த முடியாது.விதைகளின் விற்பனை உரிமை மான்சான்டோ என்ற அமெரிக்கா நிறுவனத்தின் கீழ் இருக்கும். (பார்க்க: பெட்டி செய்தி)

பழைய அனுபவம்

இதன் அபாயங்கள் இந்தியாவுக்கு புதிதல்ல. இவர்களின் மரபணு மாற்று பருத்தி விதைகள் பெரும் விளம்பரங்களோடு 1990களில் இந்தியாவுக்கு அறிமுகமானது.

அது உணவுப்பொருள் அல்ல என்பதால் பெரிதாக யாரும் எதிர்க்கவில்லை. எழுந்த எதிர்ப்புகளும் வலுவாக உருவாகவில்லை.

அந்த பருத்தி விவசாயம் ஆரம்பத்தில் லாபம் தருவதுபோல் தெரிந்தது. பின்னர் தன் வேலையை காட்டியது, அந்த பருத்திகளை தின்ற மாடுகள் தொண்டை புற்று நோய் வந்து மண்டன. ஆடுகள் கொத்து, கொத்தாக மண்ணில் வீழ்ந்தன.

அந்த பருத்தியை பயிரிட்ட மண் பாதிப்புக்குள்ளானது. மறு விவசாயம் செய்ய முடியவில்லை. விவசாயம் கேள்விக்குறியானது. விவசாயிகள் கடனாளியாயினர். அதனால் ஆந்திராவில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலையால் மரணம் அடைய, அது ஆந்திராவில் புயலை கிளப்பியது.

அந்த மான்சான்டோ நிறுவனம் இப்போது மஹிகோ என்ற தனது துணை நிறுவனம் மூலம் கத்தரிக்காயை மரபணு மாற்றம் செய்து நுழைய பார்க்கிறது. இந்திய வேளாண் விஞ்ஞானிகளையும். ஆட்சியி¬ருக்கும் புள்ளிகளையும் சரி கட்டி இந்திய விவசாயத்தை விழுங்க பார்க்கிறது.

இது பருத்தி போல் அல்லாமல் உணவுப் பொருள் என்பதால் எதிர்ப்பு வலுவாகி அது மக்கள் மயப்படுத்தப்பட்டதால் மத்திய, மாநில அரசுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.

ஏன் இந்த மரபணு மாற்றம்?

சமீபகாலமாக புதிய வகை பூச்சிகள் கத்தரிக்கயை தாக்குவதால், கத்தரிக்காய் விவசாயிகள் சமீபகாலமாக பாதிப்புக்குள்ளாகினர். இதை எதிர்கொள்ள அதிக வீரியம் கொண்ட பூச்சி மருந்துகளை தெளித்தனர். அதில் விளைந்த கத்தரிக்காய்களை உண்பதால் மனிதர்களுக்கு சுகாதார கேடுகள் வருவதாக புகார்கள் எழுந்தன, இதற்கான மாற்று முயற்சியாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை அறிமுகப்படுத்துவது என யோசிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பி.டி. கத்திரிக்காயில் பூச்சிகளின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் அதன் மரபணுவில் நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கி அதன் மரபணுவை மாற்றம் செய்து, விவசாயிகளை நஷ்டத்திலிருந்து காப்பாற்ற எடுத்த விஞ்ஞான முயற்சி!

அதாவது பல்வலி என டாக்டரிடம் வந்தவருக்கு, கேன்சர் நோய் வருவதற்கான மருந்துகளை எழுதிக் கொடுப்பது போல! விஷத்தை விஷத்தால் முறியடிப்பது என விளக்கம் வேறு!

இப்படித்தான் பி .டி .பருத்திக்கும் விளக்கம் சொன்னார்கள், பருத்தியும் அழிந்து விவசாயிகளும் வீழ்ந்த அனுபவத்தை அறிந்திருந்த இந்திய விவசாய அமைப்புகள், வேளாண் நிபுணர்கள், தொண்டு அமைப்புகள் பி.டி. கத்தரிக்காயை ஏற்கமாட்டோம் என கொந்தளித்துவிட்டனர். நாடு முழுவதும் பொதுமக்களின் கருத்தை கேட்ட பின்னரே பி.டி. கத்தரிக்காயை வணிக நோக்கில் பயிரிட அனுமதி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்து பின்வாங்கியிருக்கிறார்.

உடல் நலத்திற்கு ஆபத்து

இந்த மரபணு மாற்ற கத்தரிக்காய் குறித்து பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி எரிக் செரானி என்பவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதை சாப்பிட்ட எலிகள் தண்ணீர் தாகத்தோடு தவித்ததாகவும், அதன் ஈரலின் எடை குறைந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

செடியில் இந்த கத்தரிக்காய் இருக்கும்போது அதோடு ஒட்டி வாழும் இதர உயிரினங்களுக்கும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்திருக்கிறார்.

அப்படியெனில், மனிதர்களுக்கு என்ன ஆபத்துகளை தரும் என்பதை விளக்க தேவையில்லை. உடல்அரிப்பு, தோல் வெடிப்பு, உடல் உறுப்புகள் வீக்கம் என மனிதர்களை இ.ப, கத்தரிக்காய் பலவகையிலும் பாதிக்கும் அபாயம் உள்ளது. பிரபல இந்திய இயற்கை விவசாய ஆர்வலர் தேவந்திர சர்மா இதற்கு எதிரான எழுத்து யுத்தத்தையே நடத்தி வருகிறார்.

சர்வதேச எதிர்ப்புகள்

சமீபத்தில் ரோமில் கூடிய ஐ.நா. உணவு மாநாட்டில் மரபணு மாற்று பி.டி விதைகள் பற்றி உரையாற்றியவர்கள் இது ஆபத்தானது என்பதை சுட்டிக் காட்டியுள்ளனர்.

இங்லாந்து, பிரான்ஸ், இத்தாலி போன்ற பல ஐரோப்பிய நாடுகள் விதைகளை எதிர்த்துள்ளன.

2006 ல் அக்ரா என்ற அமைப்பு ஆப்பிரிக்காவில் உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் முன்னாள் ஐ.நா. பொதுச் செயலாளரான கோபி அன்னான்!

ஆப்பிரிக்காவின் முக்கிய உணவுப் பொருள்களுக்கான விதைகளில் மரபணு மாற்றம் செய்யப்படுவதை அனுமதிக்கமாட்டோம். பாரம்பரிய விவசாய முறையை பின்பற்றுவோம். விவசாயத்தை வணிகமாக்க அனுமதிக்க மாட்டோம் என்று அக்ரா அமைப்பு பிரகடனப்படுத்திவிட்டது.

தேவை தடை

விவசாயத்துறை என்பது மாநில அதிகாரத்தின் கீழ் இடம் பெறுகிறது தமிழக அரசு நமது மண்வளம், விவசாய முறைகள், அடுத்த தலைமுறைகளின் நலன், நிகழ்கால தலைமுறைகளின் ஆரோக்கியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மரபணு மாற்ற விதைகளை தடை செய்வதாக அறிவித்து மத்திய அரசுக்கே முன் மாதிரியாக திகழ வேண்டும்,

மான்சான்டோவின் உலக முதலாளித்துவ சதிக்கு பலியாகாமல் வேளாண் விஞ்ஞானிகள் இதற்கு எதிராக அணி வகுக்க வேண்டும்.

இன்று கத்தரிக்காய் என்பார்கள், பிறகு தக்காளி, உருளை, தேங்காய், மா, பலா, வாழை, என நுழைந்து இறுதியாக நெல். கோதுமை என அனைத்திலும், ஏதாவது ஒரு காரணத்தை கூறி மரபணு மாற்ற முயற்சிகளை நம்மீது திணிப்பார்கள், பிறகு அனைத்து உணவு பொருள்களுக்கும் அவர்களிடமே கையேந்த வேண்டிய அவலம் வரும். இதன் மூலம் நமது நாட்டில் அனைத்து சமூக, அரசியல் சிக்கல்களும் உருவாகும்.

இப்போது நாட்டில் உணவுபஞ்சம் இல்லை! விலைவாசி உயர்வு தான் இருக்கிறது! மரபணு மாற்று விதைகளை பயிரிட வேண்டிய எந்த நெருக்கடியும் இல்லை. விவசாயிகளும் கேட்கவில்லை.

உண்மையான இந்தியா, கிராமங்களில் இருப்பதாக காந்தி கூறினார், கிராமங்கள் விவசாயத்தை சார்ந்தே இருக்கின்றன. காந்தியின் இந்தியா என்பது இந்தியாவை விவசாய நாடு என்ற தூர நோக்கில் விளக்குகிறது. நமது சமூகமும். நாடும் வாழவேண்டுமெனில் விவசாயமும் , விவசாயிகளும் பாதுகாக்கப்பட வேண்டும், அப்படியெனில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை நிரந்தரமாக தடைசெய்து மத்திய அரசு சட்டம் ஏற்ற வேண்டும்.

பெட்டிச் செய்தி - அது என்ன மான்சான்டோ?

அமெரிக்காவின் புகழ்பெற்ற (?) மான்சான்ட்டோ என்ற விவசாய நிறுவனம்தான் மரபணு மாற்று கத்தரிக் காய் விதையின் தந்தை. உலக விவசாயத்தை தனது கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வருவதுதான் இக்கம்பெனியின் லட்சியம்.

அதிக மகசூல், குறைந்த செலவு, நிறைந்த லாபம், குறுகிய கால உழைப்பு என்பதெல்லாம் இக்கம்பெனியின் விளம்பர வாசகங்கள். ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளின் இயற்கை வளத்தையும், விவசாயத்தையும் அழித்து அந்நாடுகளை அமெரிக்காவிடம் அடிமை படவைப்பதும்,உலகத்தையே உணவுக்காக தன்னிடம் கையேந்த வைப்பதும் மான்சான்ட்டோ நிறுவனத்தின் திட்டமாகும். இச்சதித்திட்டங்களுக்கு பல நாடுகளும், கோடிக்கணக்கான விவசாயிகளும் பலியாகும் அபாயம் உருவாகியிருக்கிறது.இந்த விதைகளினால் அப்படி என்ன இழப்பு?

நம்ம ஊர் தக்காளியை பயிரிட்டு, அது செடியாகி, அதன்வழி காய்க்கும் கனிகளி¬ருந்து நாம் மீண்டும் விதைகளை பிரித்து, செலவில்லாமல் நடும் இயற்கை விவசாய முறை இதில் எடுபடாது,

மான்சான்ட்டோவின் விதைகளை ஒரு முறை பயிரிட்டால் அதன் விதை பயனை தொடர்ச்சியாக அனுபவிக்க முடியாது, ,மீண்டும் பயிரிட மான்சான்ட்டோ கம்பெனியிட மிருந்துதான் அவர்கள் விற்கும் விலைக்கே விதைகளை வாங்க வேண்டியது வரும்.,
அவர்களது விதை விழுந்த நிலத்தில் மீண்டும் இயற்கை விவசாயம் செய்ய முடியாது, மண் மலடாகிவிடும், அந்த அளவுக்கு அவர்களது விதையின் வீரியமும், மரபணு மாற்று தந்திரமும் அடங்கியுள்ளது,

மான்சான்ட்டோ கம்பெனியின் வழிகாட்டல் படி; அவர்களது விலை நிர்ணயத்தின் படிதான் விவசாயிகள் செயல் பட முடியும் ஆரம்பத்தில் பரபரப்பாக தொடங்கும் இந்த விவசாய முறையில், வளரும் மற்றும் ஏழை நாடுகளை சேர்ந்த விவசாயிகளால் அடுத்தடுத்து தாக்குப்பிடிக்க முடியாத நிலை உருவாகிவிடும், தங்கள் கட்டுப்பாட்டில் விவசாயத்தை நடத்தியவர்கள். மான்சான்ட்டோ கட்டுப் பாட்டுக்கு தானாகவே வந்துவிடுவார்கள், மிகுந்த நச்சு சிந்தனைகளுடன், தொலைநோக்கோடு உருவாக்கப்படும். இந்த சதிகளுக்கு வேளாண் விஞ்ஞாணிகள், அரசியல்வாதி கள், பத்திரிக்கையாளர்கள், ஆட்சியாளர்கள் எளிதாக துணை போகின்றனர், காரணம் லஞ்சம்!
இதற்காகவே தனி ஒரு வர்த்தக பிரிவை மான் சான்ட்டோ நிறுவனம் இயக்கி வருகிறது, தன்னை எதிர்ப்பவர்களையும், விமர்சிப்பவர்களையும் பணத்தால் வளைப்பதுதான் இப்பிரிவின் வேலை, இதை இந்தியாவிலும் வெற்றிகரமாக செய்ய தொடங்கியிருப்பது தான் அபாயத்தின் அறிகுறி.

-அபூ அயிஷா . TMMK INFO

புதன், 4 நவம்பர், 2009

நாட்டு நடப்பு

மாற்று பாதையில் சேது சமுத்திர திட்டம் சாத்தியமா?
டிசம்பர் 11 - ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு .