சனி, 2 ஜனவரி, 2010

ஜனவரி-1 புத்தாண்டு - காரணம் என்ன?



புத்தாண்டு

புத்தாண்டு என்றதும் எல்லோருக்கும் ஞாபகம் வருவது முந்தைய நாள் Party யும் ,அடுத்தநாள் வரப்போகும் தொலைக்காட்சி நிகழ்ச்சியும்தான். என்றாவது ஒருநாள் ,ஒருநிமிடம் உங்களில் யாராவது யார் இந்த புத்தாண்டை உருவாக்கியது ? ஏன் ஜனவரி1 ஐ மட்டும் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். உலகில் ஒவ்வொரு நாட்டினரும் ஒவ்வொரு நாளை  புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள் ,இருப்பினும் ஜனவரி 1 ல் அப்படி என்ன சிறப்பு ,அதை மட்டும் ஏன் இப்படி எல்லாரும் தூக்கி வைத்துக்கொண்டாடுகிறார்கள்  என்று யோசித்து பார்த்திருக்கிறீர்களா? அப்படி யோசித்தேன் என்று நீங்கள் சொல்வீர்களானால் ,நான் வடிவேலு போல உங்களை பார்த்து என் இனமடா நீ என்று சொல்ல ஆசைப்படுகிறேன் .

அப்படி இதுவரை யோசித்திராதவர்களுக்கு ,யோசிக்கவேண்டாதபடி நான் இங்கே ஜனவரி 1 எப்படி புத்தாண்டாக வந்தது என்று சொல்ல நினைக்கிறேன் .இது ஒன்றும் என்னுடைய சொந்த கருத்தோ ,சுய சிந்தனையோ கிடையாது .எங்கள் ஊர் சோளிங்கரில் வருடாவருடம் மாட்டு பொங்கல் தினத்தன்று "புரட்சி கவிஞர் கலை இலக்கிய மன்றம்" சார்பில் பொங்கல்விழா மற்றும் திருவள்ளுவர் நாள்விழ நிகழ்ச்சி நடத்துவது வழக்கம் ,கடந்த ஆண்டு சிறப்புவிருந்தினராக எல்லோராலும் சு.ப.வீ என்று அன்பாகஅழைக்கப்படும் பேராசிரியர் திரு.சுப வீரபாண்டியன் அவர்கள் வந்திருந்தார் .அன்றைய நிகழ்ச்சியில் சு.ப.வீ ஆற்றிய உரையிலிருந்து ஒருசிறு பகுதியைத்தான் உங்களுடன் பகிர இருக்கிறேன் .

ஒரு வருடத்திற்கு எத்தனை நாள் ?

ஆரம்ப காலங்களில் ( இங்கு நான் ஆரம்ப காலம் என்று கூறுவது கி.மு ) இப்போது உள்ளது போல ஒரு வருடத்திற்கு 365 1/4 நாள் கிடையாது .நம்மில் பலர் இந்த 1/4 நாள் கணக்கை மறந்தே போயிருப்பர்.அப்ப்தெல்லாம் ஒரு வருடத்திற்கு 400 நாட்கள்.அதுமட்டுமல்லாமல் வருடத்திற்கு 10 மாதங்களே. ஜனவரி தொடங்கி டிசம்பர் முடிய. இடையில் புதிதாய் வந்தவைகள் ஜூலை யும் ,ஆகஸ்ட் -ம். உங்களுக்கு புரிய வேண்டுமென்றால் நான் ஒரு ஆதாரம் தருகிறேன். இந்தி தெரிந்தவர்கள் இதை சுலபமாக புரிந்து கொள்ள முடியும் .நம்முடைய கடைசி நான்கு மாதங்களின் பெயர்களையும் இந்தியில் ஒன்று ,இரண்டு எண்ணிக்கையையும் ஒப்பிட்டுபார்த்தீர்களேயானால் உண்மை விளங்கும்.

செப்டம்பர் - ச்சே (Che) -6
அக்டோபர் - ஆட் (Aat) -8
நவம்பர் - நவ் ( Nou) -9
டிசம்பர் - தஸ் (Dus) -10

ஜூலை,ஆகஸ்ட் ?

இத்தாலியில் ஜூலியஸ் சீசர் ஆட்சிக்கு வந்தபின் தன்னுடைய பெயரில் ஒருமாதத்தை உருவாக்கி இணைத்துவிட்டார்  .அப்போதெல்லாம் ஜூலை 1 தான் புத்தாண்டாக எல்லோராலும் கொண்டாடப்பட்டு வந்தது .இதை அன்றைய மதகுருமார்களும் ஏற்றுக்கொண்டார்கள் ,ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்பது வேறு விஷயம்.

ஜூலியஸ்-க்குப்பின்பு  ஆட்சிக்கு வந்த அகஸ்டியஸ் சீசர், தன்னுடைய பெயரில் ஒரு மாதத்தினை உருவாக்கி ,மாதத்திற்கு 30 நாட்கள் ,வருடத்திற்கு 12 மாதங்கள் என்ற வரையறையை கொண்டுவந்தார் .இயேசு கிருஸ்த்து பிறக்கும் வரை இப்படியாகத்தான் இருந்தது. பின்பு இயேசு என்று ஒருவர் தோன்றி அவர்கடவுளான!!! பின்பு தான் மாற்றங்கள் நடக்க தொடங்கியது .

ஜனவரி 1 - புத்தாண்டு

கிருஸ்த்துவ மத சம்பந்தமான அனைத்து பஞ்சாயத்துகளையும் நடத்தும் வாடிகன் நகரமும் ,போப்பும் கிரிச்நதுவா மதத்தினை உலகெங்கும் பரப்பும் நோக்கினால் இயேசு பிறந்தநாளான டிசம்பர் 25 -ஐ புத்தாண்டாக அறிவித்தது .ஆனால் இது வெகுஜன மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல் விமர்சனத்துக்குள்ளனதாகவே இருந்தது.இப்படியே சென்று கொண்டிருந்த நாட்களில் மீண்டும் ஒரு புதிய முடிவு எடுக்கப்பட்டது ,அதுதான் இனிமேல் ஜனவரி மாதத்தை ஆண்டின் தொடக்கமாக கொண்டு ஜனவரி -1 ஐ இனிமேல் புத்தாண்டாக கொண்டாடவேண்டும் என்பது .இதற்க்கு காரணம் இல்லாமல் இல்லை ,ஜனவரி -1 என்பது இயேசுவிற்கு பெயர் வைத்த நாளாம்,அவரால் தான் இந்த உலகம் தோற்றுவிக்கப்பட்டது என்று நம்பும் அனைவரும் இதை ஏற்றுக்கொண்டுவிட்டனர் .

பின்னாளில் இதுவே உலகெங்கும் பரவி இன்று போதை இல்லாத புத்தாண்டு ஏது (Waste) என்ற நிலை வந்துள்ளது.தோழர்களே! தெரிந்து கொள்ளுங்கள் நாம் இன்று கொண்டாடும் ஜனவரி 1 -புத்தாண்டு என்பது ஏசுவிற்கு பெயர் வைத்த நாள் ,அதனால் தான் நாம் இந்தநாளை கொண்டாடுகிறோம்.( அனால் இந்துக்கோவில்களில்  எதற்காக ஏசுவிற்கு பெயர் வைத்த நாளில்  இரவு 12 மணிக்கு பூஜை நடத்துகிறார்கள் என்று என்னை கேட்காதீர்கள் ??!!!).

தமிழ்புத்தாண்டு

அனால் இன்று பலபேர் பலவிதமாக விமர்சனம் செய்துகொண்டிருக்கும் தை -1 தமிழ்புத்தாண்டு என்பது வெற்றுக்காரனங்களுக்காக உண்டாக்கப்பட்டதல்ல .ஆரியர்களின் வருகைக்குப்பின் திராவிடர்களின் புத்தாண்டு தை-1 ஒன்றாகத்தான் இருந்துள்ளது .இதை நாம் சங்ககால தமிழ் இலக்கியங்களின் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஆரியர்களின் வருகைக்குப்பின்தான்,தமிழர்களின் புத்தாண்டு சித்திரை-1 ஆக மாற்றப்பட்டது. நீங்கள் ஒன்றை இங்கே நன்றாக கவனிக்கவும் தமிழர்களின் ஆண்டின் பெயர் தமிழில் இல்லை ,சமஸ்கிருதத்தில் தான் உள்ளது என்பது,தமிழர்களாகிய நமக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானமாகும் .

 ஆங்கில புத்தாண்டைக்கொன்டாடும்  தோழர்களே! தமிழ்புத்தான்டையும் கொண்டாடுங்கள் ,தமிழர்நாளில் கொண்டாடுங்கள்.!!!

மேலும் தமிழ்புத்தாண்டு பற்றிய முழு விவரங்களையும்,அது எப்படி தீர்மானிக்கப்பட்டது ,யாரால் முடிவு செய்யப்பட்டது ( நீங்கள் நினைப்பது போல அது தி.மு.க தலைவரால் முடிவு செய்யப்பட்டதல்ல ) என்ற தெளிவுரைகளை நாம் ஜனவரி-14 (தை-1 ) அன்று பார்ப்போம் .

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை கூறிக்கொண்டு விடைபெறும் ,

-சூரியன்.

3 கருத்துகள்:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

அன்புள்ள சூரியனுக்கு,

உங்களுக்கு மேலும் சில சிறு தகவல்கள்... எனக்கு தெரிந்தது. உண்மையா என்பது அறியபட வேண்டிய ஒன்று.

நாம் பயன்படுத்தும் ஜனவரி,
பிப்ரவரி,மார்ச்,... வழக்கத்தில் பயன்படுத்தும் நாட்காட்டி முறை கிரேக்கத்தை சார்ந்தது.

வசந்தகாலம் துவங்கும் காலத்தை மார்ச் இறுதியை அவர்கள் முதலில் புத்தாண்டாக கொண்டாடினார்கள். பின்பு 1852ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்க்கு மாற்றப்பட்டது.

(நீங்கள் இந்தியை பற்றி குறிப்பு கூறி இருந்தீர்கள் அதற்காக, ஹோலி என்று பண்டிகை அந்த காலத்தில் வசந்தத்தை வரவேற்கும் ஒருநாளாக கொண்டாடினர். இன்றும் மார்ச் மாதம் நடைமுறையில் பின்பற்றி கொண்டாடி மகிழ்வது சந்தோசமான நிகழ்வில் ஒன்று. ஹோலி என்பது வட இந்தியர்கள் மட்டும் கொண்டாடும் ஒன்றல்ல என்பது என்னுடைய கருத்து.)

அதனை மறந்து மார்ச் மாதம் புத்தாண்டை கொண்டாடியவர்களை முட்டாள் தினமாக மாற்றி இன்றும் மகிழ்ந்து வருகின்றோம்.


ஆனால் ரோம் நாட்காட்டியின் முறைப்படி ஜனவரி 1ம்தேதி புதுவருடமாக கொண்டாடபட்டுவந்தது. மிகவும் பழமையானதும் ஆகும்.


அறிவியல், வானசாஸ்திரம் என எல்லாவற்றிலும் இந்தியர்கள் மற்றவர்களுக்கு நிகராக இருந்தனர் என்பது மறுக்கமுடியாத உண்மை.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

மன்னிக்கவும்...
1582ம் ஆண்டு...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

Month - Latin - Meaning
January - Januarius - Named after the god Janus.
February - Februarius - Named after Februa, the purification festival.
March - Martius - Named after the god Mars.
April - Aprilis - Named either after the goddess Aphrodite or the Latin word aperire, to open.
May - Maius - Probably named after the goddess Maia.
June - Junius - Probably named after the goddess Juno.
July - Julius - Named after Julius Caesar in 44 B.C.E. Prior to that time its name was Quintilis from the word quintus, fifth, because it was the 5th month in the old Roman calendar.
August - Augustus - Named after emperor Augustus in 8 B.C.E. Prior to that time the name was Sextilis from the word sextus, sixth, because it was the 6th month in the old Roman calendar.
September - September - From the word septem, seven, because it was the 7th month in the old Roman calendar.
October - October - From the word octo, eight, because it was the 8th month in the old Roman calendar.
November - November - From the word novem, nine, because it was the 9th month in the old Roman calendar.
December - December - From the word decem, ten, because it was the 10th month in the old Roman calendar.