இந்தியாவுக்கு அவுட்சோர்சிங் பணிகளைக் கொடுக்கும் அமெரிக்க நிறுவனங்கள் மீது மீண்டும் பாய்ந்துள்ளார் அதிபர் பாரக் ஒபாமா.
இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அவுட்சோர்சிங் பணிகளைக் கொடுக்கும் அமெரிக்க நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்பவையாக கருதப்படுவர் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து புளூம்பெர்க் வார இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இங்கேயே வர்த்தகம் நடத்தினால், இங்குள்ள தொழிலாளர்களைப் பயன்படுத்தினால், இங்கேயே அனைத்து வர்த்தகத்தையும் மேற்கொண்டால் உங்களுக்கு 35 சதவீத வரி விலக்கு கிடைக்கும்.
அதேசமயம், நீங்கள் உங்கள் பணிகளை இந்தியாவுக்கு கொண்டு சென்றால், அங்கு முதலீடு செய்தால், உங்களது வேலைகளை இந்தியாவில் வைத்துக் கொண்டால், உங்களது தலைமையிடத்தை மட்டும் இங்கு வைத்துக் கொண்டு தொழில் பிரிவுகளை இந்தியாவில் அமைத்தால், நிச்சயம் உங்களுக்கு வரி விலக்கு கிடைக்காது. மேலும் வரி ஏய்ப்பு செய்பவர்களாகவும் நீங்கள் கருதப்படுவீர்கள் என்று எச்சரித்துள்ளார் ஒபாமா.
நன்றி : தட்ஸ்தமிழ்
சனி, 13 பிப்ரவரி, 2010
ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010
இந்தியா வளர்கிறதா? இல்லை அடிமையாகுதா?
வளர்ந்து வரும் இந்தியா,உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது .இந்த வளர்ச்சி ஒருபுறம் சில நாடுகளிடையே கழ்ப்புணர்ச்சி உருவாகவும் காரணமாக அமைந்துள்ளது .குறிப்பாக நம்மை எப்போதும் எதிரியாக நினைக்கும் பாகிஸ்தான் ,சீன்டிபார்க்கும் சீன ,இந்த பக்கம் இலங்கைகூட இந்தியாவின் பொறுமையை சோதித்து வருகிறது.
எல்லைப்பகுதியில் ஏற்படும் அச்சுறுத்தல்களை சமாளிப்பதில்தான் நாட்டின் பாதுகாப்பும்,வளர்ச்சியும் இருக்கிறது.அந்த வகையில் இந்தியாவிடம் சிறப்பான படைபலமும்,ஆயுத பலமும் இருக்கத்தான் செய்கிறது.
இதெற்கெல்லாம் பெருமை சேர்க்கும் விதமாக தற்போது நவீன போர்கருவி ஒன்றின் தயாரிப்பு பணி வெற்றிகரமாக முடிந்துள்ளது.
கில் வெய்க்கில் :
கில் வெய்க்கில் (Kill Vehicle) எனப்படும் இந்த லேசர் கருவி எதிரிகளை எல்லைக்கு வெளியிலேயே வீழ்த்தும் நவீன வகையைச் சேர்ந்தது .எனவே எதிரிகளை ஏவுகணைகள்,விமானங்களை இந்திய வான் எல்லைக்கு வெளியிலேயே இது வீழ்த்திவிடும் .
ஏற்கனவே தரைதளத்தில் இருந்து எதிரிகளின் இலக்கை அழிப்பது ,ஏவுகணைகளை வழிமறித்து தாக்குவது போன்ற போர் ஏவுகணைகளை வழிமறித்து தாக்குவது போன்ற போர் ஏவுகணைகள் இந்தியா வசம் உள்ளது.இது போன்ற ஏவுகணைகள் பல்வேறு நாடுகளிடமும் இருக்கிறது.2007 ம் ஆண்டு சீன,தரையில் இருந்து நெடுன்தூரத்திலேயே வழிமறித்து தாக்கும் ஏவுகணையை தயாரித்தது.2008 ம் ஆண்டு அமெரிக்கா கப்பல் தளத்தில் இருந்து வழிமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை நடத்தியது.
தற்போது இந்தியா தயாரித்திருக்கும் 'கில் வெய்க்கில் ' இவற்றைவிட சக்தி வாய்ந்தது .விண்ணில் இருந்து செயற்கைக்கோள் உதவியுடன் இதை இயக்க முடியும்.இதனால் எதிரிகளின் வியூகத்தை இந்திய வான் எல்லைக்கு வெளியில் வைத்தே யூகித்து சமாதியாக்க முடியும்.
இதைவிட மேலான சிறப்பம்சம் என்னவெனில் இந்தக் கருவி விண்ணிலேயே செயற்கைக்கோள் போல நிலைநிறுத்தி வைக்கப்படுகிறது என்பதுதான் .இந்த நவீன உத்தியால் உலகமே இந்தியாவை உன்னிப்பாக கவனிக்கத் தொடநிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் இப்போது படித்து போன்ற புத்திசாலிதனமாக இந்திய சில விஷயங்களை செய்து உலக நாடுகளை மூக்கின் மேல் விரல்வைக்க வைத்தாலும் ,அவர்களே எள்ளி நகையாடும் வகையில் ஒரு காரித்தை செய்தது என்றால் நீங்கள் நம்புவீர்கள்தானே ?
அது என்னெவென்றால் ,சில நாட்களுக்கு முன்பு இந்தியா ஒரு போர்க்கப்பலை அமெரிக்காவிடமிருந்து வாங்கியது (சும்மா இல்லை 900 கோடி ரூபாய் விலைக்கு ).உடனே நீங்கள் அது என்னமோ Latest technology உள்ள கப்பல் என்று நீகக் தவறாக நினைத்து இந்தியாவை மதிப்பிடாதீர்கள்.அந்த கப்பல் அமெரிக்க இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தியது.50 வருடங்களுக்கு பிறகு காயலான் கடையில் போடுவதற்கு பதிலாக இளிச்சவாய இந்தியாவிற்கு 900 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது ,அதை இந்த தலையாட்டி சாமி மன்மோகன் அரசு வாங்கி இருக்கிறது .இதேல்லாம் விட பெரிய கொடுமை இந்த கப்பலை வாங்கும் போது அமேரிக்கா போட்ட ஒப்பந்தம் தான் .அதாவது இந்த கப்பலை இந்தியா எக்காரணம் கொண்டும் போரில் பயன்படுத்தக்கூடாது என்பதுதான் .
என்ன கொடுமை சார் இது ! ஒரு போர்க்கப்பலை போரில் பயன்படுத்தக்கூடாது என்றால் எந்த ______ க்கு 900 கோடி ரூபாய் கொடுத்து வாங்கணும்.அந்த அளவிற்கா நாம் அமெரிக்கா காரனிடம் அடிமைப்பட்டு போயிருக்கோம் .
இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு துட்டு ???????? யோசிங்க .......!!!!!!!!!!!!!!!!!!
-சூரியன் .
எல்லைப்பகுதியில் ஏற்படும் அச்சுறுத்தல்களை சமாளிப்பதில்தான் நாட்டின் பாதுகாப்பும்,வளர்ச்சியும் இருக்கிறது.அந்த வகையில் இந்தியாவிடம் சிறப்பான படைபலமும்,ஆயுத பலமும் இருக்கத்தான் செய்கிறது.
இதெற்கெல்லாம் பெருமை சேர்க்கும் விதமாக தற்போது நவீன போர்கருவி ஒன்றின் தயாரிப்பு பணி வெற்றிகரமாக முடிந்துள்ளது.
கில் வெய்க்கில் :
கில் வெய்க்கில் (Kill Vehicle) எனப்படும் இந்த லேசர் கருவி எதிரிகளை எல்லைக்கு வெளியிலேயே வீழ்த்தும் நவீன வகையைச் சேர்ந்தது .எனவே எதிரிகளை ஏவுகணைகள்,விமானங்களை இந்திய வான் எல்லைக்கு வெளியிலேயே இது வீழ்த்திவிடும் .
ஏற்கனவே தரைதளத்தில் இருந்து எதிரிகளின் இலக்கை அழிப்பது ,ஏவுகணைகளை வழிமறித்து தாக்குவது போன்ற போர் ஏவுகணைகளை வழிமறித்து தாக்குவது போன்ற போர் ஏவுகணைகள் இந்தியா வசம் உள்ளது.இது போன்ற ஏவுகணைகள் பல்வேறு நாடுகளிடமும் இருக்கிறது.2007 ம் ஆண்டு சீன,தரையில் இருந்து நெடுன்தூரத்திலேயே வழிமறித்து தாக்கும் ஏவுகணையை தயாரித்தது.2008 ம் ஆண்டு அமெரிக்கா கப்பல் தளத்தில் இருந்து வழிமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை நடத்தியது.
தற்போது இந்தியா தயாரித்திருக்கும் 'கில் வெய்க்கில் ' இவற்றைவிட சக்தி வாய்ந்தது .விண்ணில் இருந்து செயற்கைக்கோள் உதவியுடன் இதை இயக்க முடியும்.இதனால் எதிரிகளின் வியூகத்தை இந்திய வான் எல்லைக்கு வெளியில் வைத்தே யூகித்து சமாதியாக்க முடியும்.
இதைவிட மேலான சிறப்பம்சம் என்னவெனில் இந்தக் கருவி விண்ணிலேயே செயற்கைக்கோள் போல நிலைநிறுத்தி வைக்கப்படுகிறது என்பதுதான் .இந்த நவீன உத்தியால் உலகமே இந்தியாவை உன்னிப்பாக கவனிக்கத் தொடநிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
இந்தியா அடிமையாகுதா?
அது என்னெவென்றால் ,சில நாட்களுக்கு முன்பு இந்தியா ஒரு போர்க்கப்பலை அமெரிக்காவிடமிருந்து வாங்கியது (சும்மா இல்லை 900 கோடி ரூபாய் விலைக்கு ).உடனே நீங்கள் அது என்னமோ Latest technology உள்ள கப்பல் என்று நீகக் தவறாக நினைத்து இந்தியாவை மதிப்பிடாதீர்கள்.அந்த கப்பல் அமெரிக்க இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தியது.50 வருடங்களுக்கு பிறகு காயலான் கடையில் போடுவதற்கு பதிலாக இளிச்சவாய இந்தியாவிற்கு 900 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது ,அதை இந்த தலையாட்டி சாமி மன்மோகன் அரசு வாங்கி இருக்கிறது .இதேல்லாம் விட பெரிய கொடுமை இந்த கப்பலை வாங்கும் போது அமேரிக்கா போட்ட ஒப்பந்தம் தான் .அதாவது இந்த கப்பலை இந்தியா எக்காரணம் கொண்டும் போரில் பயன்படுத்தக்கூடாது என்பதுதான் .
என்ன கொடுமை சார் இது ! ஒரு போர்க்கப்பலை போரில் பயன்படுத்தக்கூடாது என்றால் எந்த ______ க்கு 900 கோடி ரூபாய் கொடுத்து வாங்கணும்.அந்த அளவிற்கா நாம் அமெரிக்கா காரனிடம் அடிமைப்பட்டு போயிருக்கோம் .
இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு துட்டு ???????? யோசிங்க .......!!!!!!!!!!!!!!!!!!
-சூரியன் .
திங்கள், 1 பிப்ரவரி, 2010
மன்னிக்கவும்!!!
தோழர்களே !
கடந்த ஒரு மாதமாக சில அலுவலக மற்றும் சொந்த காரணங்களால் என்னால் சரிவர வலைதளத்தில் எழுத முடியவில்லை ,தினமும் வந்து என்னுடைய வலைதளத்தை பார்க்கும் நண்பர்களுக்கு இது நிச்சயம் ஏமாற்றத்தை கொடுத்திருக்கும்,அதற்காக தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் .இனிமேல் நாம் வழக்கம் போல நம்முடைய கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் .
என்றும் உங்க ஆதரவை நாடும் ,

ஆயிரத்தில் ஒருவன் - ஒரு அலசல்
"ஆயிரத்தில் ஒருவன்" இந்த பெயரை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் யார்யாரோ ,என்னென்னவோ செய்தார்கள் ,செய்துகொண்டிருக்கிறார்கள் ,இனிமேலும் செய்வார்கள் .இப்போது இளைஞர்களின் இயக்குனர் செல்வராகவனும் செய்திருக்கிறார் ஒரு திரைப்படத்தை .இப்படி ஒரு படத்தை செல்வராகவன் அறிவித்ததிலிருந்தே தமிழ் சினிமா வுலகில் பரபரப்பு தொற்றிக்கொண்டு விட்டது .பொத்தி பொத்தி வெடிக்கும் பட்டாசு புஸ்வனமாகத்தான் போகும் என்பது தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி (சங்கர் போன்றவர்கள் இதிலும் விதிவிலக்கு ).ஆனால் இந்த படம் எப்படி என்பதை நாம் கடைசியில் பார்ப்போம் .
இந்நேரம் தமிழ்நாட்டில் பெரும்பலனவர்களுக்கும் இப்படத்தின் கதை தெரிந்திருக்கும் ,ஏனென்றால் படம் பார்த்தார்களோ இல்லையோ கதையை தெரிந்து கொண்டிருந்திருப்பார்கள் . நான் ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் படம் வெளியாகி மூன்றாவது நாள் நானும் என் நண்பர்களும் படம் பார்க்க செல்லும் போது திரையரங்கில் நங்கள் வெறும் நான்கு பேர்தான் .படம் ஆரம்பித்த பிறகும் கொஞ்சம் கூட்டம் வந்தது ,ஆனாலும் மொத்தத்தில் நூறைத்தாண்ட வில்லை .எனக்கு அப்போது காரணம் என்னவென்று புரியவில்லை .அதற்குள் ஊருக்குள் இந்த படம் சரியில்லை என்று பேச்சு .அனால் நான் இது போல் பல பேச்சுக்களை கேட்டிருக்கிறேன் ,ஆவர்களின் பேச்சையும் மீறி படம் ஹிட்டானதும் மாற்றி பேசுவதையும் கேட்டிருக்கிறேன் .அதனால் யார் பேச்சையும் கேட்காமல் நான் என்னுடைய சொந்த கருத்தை அறிய விழைந்து படம் பார்க்க சென்றேன்.
நான் ஏற்கனவே சொன்னது போல எல்லாருக்கும் இப்படத்தின் கதை தெரிந்திருக்கும் என்பதால் நான் நேராக விமர்சனத்துக்குள் செல்லலாமென்று நினைக்கிறேன் .படம் பார்த்துவிட்டு வெளியே வந்த எனக்கு "ச்சே ,என்னமா எடுத்திருக்கான்யா படத்தை ,சூப்பர் என்று தான் சொல்ல வாய் வந்தது ,அப்படித்தான் நானும் சொன்னேன் .ஆனால் விமர்சனம் எழுதவேண்டும் என்று அமர்ந்து யோசிக்கும் போதுதான் அதில் எவ்வளவு குறைபாடுகள் உள்ளது ,ஏன் இந்த படம் மக்களுக்கு பிடிக்க வில்லை ? (புரியவில்லை! ) என்ற கேள்விக்கான விடைகள் கிடைக்க ஆரம்பித்தன .அதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆர்வமாகி இதோ எழுதுகிறேன் ........
முதலில் இந்த படத்தை ஆங்கில படம் போல எடுத்திருக்கிறார்கள் என்று எல்லோரும் சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன் ,ஏனென்றால் உண்மைலேயே ஆங்கில படத்திலிருந்த நிறைய காப்பி பண்ணித்தான் எடுத்திருக்கிறார்கள் .செல்வராகவன் ஆங்கில படத்திற்கு இணையாக எடுப்பது என்பது ,அதை பார்த்து அப்படியே காப்பி அடிப்பது என்று நினைத்து விட்டார் போல ( பார்க்கவும் மம்மி,கிளாடியேட்டர் ,மெக்கனாஸ் கோல்ட் ).கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் காப்பி அடித்துவிட்டு இதை நிரூபித்தால் நான் சினிமா எடுப்பதையே விட்டுவிடுகிறேன் என்று சவால் வேறு .
யோகி எடுத்து கெட்ட அமீர் போல ,ஆ.ஒ மூலம் கெட்ட செல்வராகவன் என்று தான் எனக்கு சொல்ல தோன்றுகிறது .படத்தின் முதல் பாதி உண்மைலேயே மிக அருமை ,போரடிக்காமல் செல்வராகவன் தனக்கே உரிய செக்ஸ் நடையில் படம் எடுத்திருந்தார் .எப்பவும் போல அதை ரசித்து கைதட்டி ரசித்த மக்களுக்கு இடைவேளைக்கு முன் படத்தில் வரும் கார்த்தி ,ரீமாசென் ,ஆண்ட்ரியா (அப்பாடா !!! படத்தில் நடித்தவர்கள் பெயர் சொல்லியாச்சு )காது கிழிவது போல கிழிகிறது இரண்டாம் பாதியில் .அவ்வளவு சத்தம் எதற்கென்று தெரியவில்லை ,கொடுரம் ஏனென்றும் தெரியவில்லை .தேவையல்லாத கட்சிகள் நிறைய இருக்கிறது படத்தில் ,செல்வராகவன் எதோ ஒரு ராஜா ,ராணி என்று சொல்லிவிட்டு போயிருந்தால் இவ்வளவு பிரச்சினையே கிடையாது.அவருடைய சொந்த கற்பனைக்கெல்லாம் சோழ ,பாண்டியர்களை வம்பிக்கிழுத்ததுதான் பெரிய பிரச்சினையே .அந்த மன்னர் குடும்பத்தினர் அவமரியாதை வழக்கு போட்டால் இவர் அம்பேல் தான் . படத்தில் எல்லோரும் சொல்வது போல சோழர்களை காட்டு மிராண்டிகளாக காட்டியது மிகப்பெரிய தவறு.தான் மிகப்பெரிய ஆராய்ச்சி செய்து இப்படத்திற்கு திரைக்கதை எழுதியாக சொன்னார் இயக்குனர் ,என்ன ஆராய்ச்சி செய்தாரோ தெரியவில்லை சோழர்களை பற்றிய படம் எடுக்க இவர் எதற்கு ரோமானிய மன்னர்களை பற்றி ஆராய்ச்சி பண்ணார் என்றுதான் எனக்கு சுத்தமாக விளங்கவில்லை .புரியவில்லையா ? இதோ சொல்கிறேன் ,படத்தில் அவர் காட்டிய போர்முறைகள் ரோமானியர்களின் போர்முறைகளாகும்.எந்த தமிழ மன்னனும் அடிமைகளையும் ,கைதிகளையும் மோத விட்டு வேடிக்கை பார்த்தது கிடையாது .எனக்கு தெரிந்து தமிழ்நாட்டில் யாரும் ஆப்பிரிக்கர்களை மிஞ்சும் அளவுக்கு கருப்பாக இருந்ததாகவும் ,இருப்பதாகவும் கேள்விப்பட்டதும் ,படித்ததும் இல்லை .இன்னும் பற்பல லாஜிக் ஓட்டைகள் குவிந்து கிடக்கின்றன இப்படத்தில் .ஏழு கண்டம் தாண்டி வரும் இடத்திற்கு ஹெலிகாப்டர்கள் கிளைமாக்சில் சட்டென்று வருவது ,வியட்நாம் நாட்டு தீவில் இந்திய ராணுவம் வந்து சிங்கள ராணுவம் போல கொடூரங்கள் நிகழ்த்துவது .இதெல்லாம் அவதார் படத்தில் வரும் பண்டோரா கிரகத்தில் வேண்டுமானால் நடக்கலாம் ,இப்புவியில் நடக்க வாய்ப்பே இல்லை .இன்னும் எவ்வளவோ ஓட்டைகள் படத்தில் .
என்னடா இவன் இப்படி காய்ச்சி எடுக்கிறானே ,படத்தில் எதுவுமே நன்றாக இல்லையா என்று நினைத்து விடாதீர்கள் .இருக்கின்றன ,அதெல்லாம் செல்வராகவன் படத்தில் நாங்கள் எதிர்பார்த்து போனவைகள்,மிகவும் நன்றாகவே செய்திருந்தார் முதல் பாதியை .ஏனோ இரண்டாம் பாதி எழுதும் போது அவருக்கு மூளை குழம்பிப்போய் இருந்திருக்கலாம் .படத்தில் மொத்தம் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் (கார்த்தி ,ரீமா,.பார்த்திபன் ),இவர்கள் இந்த மொத்த படத்தையும் தாங்கி செல்கிறார்கள் ,ஓரளவுக்கு தூக்கியும் நிறுத்துகிறார்கள் .ஒரு திறமையான இயக்குனரான பார்த்திபனுக்கு கூட இயக்குனர் கதையை சொல்லவில்லையாம் ,அது இந்த படத்தை பார்க்கும் போதே தெரிகிறது .படம் முழுக்க பார்த்திபன் என்ன கதையாக இருக்கும் என்று யோசிப்பதுபோலவே மிரட்சியுடன் திரிகிறார்.
ரீமாசென் பாராட்டப்பட வேண்டிய நடிப்பு .பார்த்திபன் அந்த கிளைமாக்ஸ் ல் அவருடைய நடிப்பு ,உணர்ச்சி வெளிப்படுத்தும் விதம் விருது கொடுத்து பாராட்டப்பட வேண்டியது .இவருக்கு கதை சொல்லிருந்தால் இன்னும் பண்பட்ட நடிப்பை வெளிக்கொனர்ந்திருப்பார் .கார்த்தி இவர் உண்மையிலேயே தமிழ் சினிமாவில் ஒரு அரிதான நடிகராக இருக்கிறார் .எந்த வொரு build up இல்லாமல் பன்ச் டயலாக் இல்லாமல் படம் முழுக்க அடிவாங்குகிறவராகவே உலா வருகிறார்.இதற்கும் ஒரு தைரியம் துணிச்சல் வேண்டும் .
இசை -என்னமோ போங்க ,நெல்லாடிய ,உன்மேல ஆசைதான் தவிர வேறெந்த பாட்டும் மனதில் நிற்கவில்லை ,பின்னணி இசை கூட பரவாயில்லைதான் .செல்வராகவன் படத்தில் பின்னணி இசைவரைக்குமே தனியாக டவுன்லோட் செய்தது கேட்பவர்கள் உண்டு ,அந்த அளவுக்கு பிரசித்தம் .செல்வராகவன் உங்களுக்கு இவர் சரிவரமாட்டார் விட்டுவிடுங்கள்.
படத்தில் எந்தவொரு குறையும் சொல்லாத மாதிரி இருப்பது எதுவென்றால் ஒளிப்பதிவும் ,கலையும் (Art ) தான் .இரண்டாம் பாதியில் editor கூட கொஞ்சம் தூங்கிட்டார் போலிருக்கிறது .ரொம்ப நீளமான காட்சிகள் நிறைய இருக்கிறது .
என்ன செய்து யாருக்கு புண்ணியம் எல்லாத்தையும் சாப்பிட்டு யாப்பம் விட்டுவிட்டது சொதப்பலான செல்வராகவனின் கதையும்,திரைக்கதையும் .இனிமேலாவது சொந்தமாக யோசிக்காமல் உதவி இயக்குனர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பு கொடுங்கள் சார் .இன்னொரு சேரனாக உருவாகிவிடாதீர்கள் .நாங்கள் உங்களிடம் இன்னும் நம்பிக்கையோடு எதிர்பார்த்து காத்திருக்கிறோம் .ஆளானப்பட்ட பாலாவே ஆறு மாசத்தில் படம் எடுக்க வந்துவிட்டார் நீங்களெல்லாம் ஏன் இன்னும் வருஷ கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்.
சரி படம் எப்படி என்று கேட்பவர்களுக்கு ஒரு நினைவூட்டல் ,நான் ஆரம்பத்தில் சொன்னது போலவே தமிழ் சினிமாவின் செண்டிமெண்டை மீண்டும் நிரூபித்த படம் "ஆயிரத்தில் ஒருவன் ".(விதி விலக்கல்ல ).

-சூரியன்
வியாழன், 21 ஜனவரி, 2010
'பிரபாகரன் உடல்' பற்றிய தொழில்நுட்பத்தை ராஜபக்சேவிடம்தான் கேட்க வேண்டும்!- புலிகள் கிண்டல்
சாலச் சிறந்த ஆதாரமாக பிரபாகரனே விரைவில் கண்முன் தோன்றுவார் வெகு விரைவில், என புலிகளின் செய்தித் தொடர்பாளர் ச.தமிழ்மாறன் அறிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் நலமாக பாதுகாப்பாக உள்ளார் என்று விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ இணைய தளமான www.lttepress.com செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால் இது தொடர்பில் பலத்த சந்தேகங்கல் எழுப்பப்பட்டன. அனைவரது சந்தேகத்துக்கும் விடையாக, புலிகளின் செய்தித் தொடர்பாளரே இப்போது பேட்டி அளித்துள்ளார்.
பிரகாரன் உடல் என்று சிங்கள ராணுவம் காட்டியது பற்றிய கேள்விக்கு, அந்த உடல் 'செய்யப்பட்ட' அதீத தொழில்நுட்பம் பற்றி ராஜபக்சே அல்லது பொன்சேகாவிடம்தான் கேட்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
ஜூனியர் விகடனில் வந்துள்ள தமிழ்மாறனின் பேட்டி:
"புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாகச் சொல்கிறீர்கள். ஆனால், சிங்கள ராணுவம் அவர் கொல்லப்பட்டு விட்டதாக இந்தியாவுக்கு சான்றிதழே கொடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறதே...?"
''தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறார். பல தடவை இப்படியான நாடகத்தை இலங்கை அரசு நடத்தியதும், அதன் பின்னர் அதன் முகத்திரை கிழிவதும் வழக்கமான ஒன்றுதான். இப்போதும் அப்படித்தான் நடந்திருக்கிறது. இறப்புச் சான்றிதழ் என்பதும் ஒரு திட்டமிட்ட நாடகமே!''
''கடைசிக் கட்டப் போரில் இருந்து பிரபாகரன் எப்படித் தப்பினார்?''
''இலங்கை அரசுடனான இறுதிக்கட்டப் போரில் தேசியத் தலைவர் நேரடிச் சமரில் ஈடுபட்டார். இலங்கை அரசின் கடும் சுற்றி வளைப்பில் நாம் போர் யுக்தியினையும் தந்திரோபாயத்தையும் பயன்படுத்தி தலைவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றோம்.
இதில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட கரும்புலிகள் வீரச் சாவைத் தழுவிக் கொண்டனர். முக்கியத் தளபதிகள் சகிதம் தலைவர் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது பயன்படுத்திய தந்திரோபாயத்தையும் போர் யுக்தியையும் இன்றைய சூழலில் சொல்வது சிறப்பாக இருக்காது.''
''அப்படியென்றால் சிங்கள ராணுவம் பிரபாகரனின் உடலாகக் காட்டியது எது?''
''சிதைக்கப்பட்ட தலைவரை ஒத்த அந்த உருவம் பற்றி ராஜபக்ஷே அல்லது சரத் ஃபொன்சேகாவிடம்தான் கேட்க வேண்டும். ஏனென்றால், அந்த அதீத மருத்துவ தொழில் நுட்பம் பற்றி அவர்களுக்குத்தானே தெரியும்.''
''வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லாததால்தான் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக சொல்லப்படும் கருத்து சிலரால் விமர்சிக்கப்படுகிறது. உரிய ஆதாரங்களை நீங்கள் சமர்ப்பிக்கலாமே?''
''தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. இருப்பினும் இன்றைய சூழலில் அவற்றை வெளியிடுவது பொருத்தமானதாக இருக்காது. சாலச் சிறந்த ஆதாரமாக வெகு விரைவிலேயே தேசியத் தலைவர் உலகத் தமிழர்கள் முன் தோன்றுவார்!''
''அவருடைய கருத்தாக ஏதும் வெளிவருமா? இல்லை... அவரே நேரடியாக வெளியே வந்து பேசுவாரா?''
''மாவீரர் தினம் மற்றும் சிறப்பு நேர்காணல்களில் தேசியத் தலைவர் எப்படித் தோன்றுவாரோ... அப்படியேதான் தோன்றுவார்!''
''ஈழப் போரில் கடைசிக் கட்ட நிலைமைகள் எப்படி இருந்தன? இறுதியில் ஆயுதங்களை மௌனிக்க வேண்டிய நிலைக்கு புலிகள் எப்படித் தள்ளப்பட்டார்கள்?''
''ஒரே நாளில் 25 ஆயிரம் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டதே இலங்கை அரசு போரை எவ்வளவு கொடூரமாக நடத்தியது என்பதற்கு சாட்சி. எமது மக்களை இலங்கை ராணுவம் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டது. அதனால்தான் பதில் தாக்குதலை தவிர்த்து, தலைவரின் உத்தரவின் கீழ் நாம் மௌனமானோம்.''
''புலிகளுக்கு ஆதரவாகக் காட்டிக் கொண்டு இன்றைய நிலையில் பல்வேறு இணைய தளங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நீங்கள்தான் அதிகாரபூர்வ இணையதளம் என்பதை எப்படி நம்புவது?''
''குழப்புகின்ற இணைய தளங்களும், குழப்புகின்றவர்களும் இருக்கிறார்கள் என்பது எமக்கும் தெரியும். இவற்றை எல்லாம் தாண்டி எமது தலைவரின் வழிகாட்டுதலுடன் இயங்கும் விடுதலைப் புலிகளை எமது மக்கள் சரியாக இனம்கண்டு கொள்வார்கள். எது நிஜம் என்பது அவர்களுக்குத் தெரியும்!''
''புலிகளின் உளவுத் துறை தலைவர் பொட்டு அம்மான் கொல்லப்பட்டதாக சொல்லப்படுவது குறித்து..?''
''தேசியத் தலைவர் பாதுகாப்பாக உள்ளார் என்ற பதிலே இதற்கும் பொருந்தும்!''
''பிரபாகரனின் குடும்பத்தினர் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாகச் சொல்லும் சிங்களத் தரப்பு, அதற்கு ஆதாரமாக பாலச்சந்திரன், துவாரகா போன்றோரை ஒத்த படங்களை வெளியிட்டிருக்கிறதே?''
''தேசியத் தலைவரின் மகன் சார்ல்ஸ் ஆண்டனி களத்தில் வீரச்சாவு அடைந்தது உண்மை. தலைவரின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோர் பாதுகாப்பாகவே உள்ளனர்.''
''புலிகள் அடுத்த கட்டமாக எத்தகைய போராட்டத்தைக் கையிலெடுக்கப் போகிறார்கள்?''
''இது மக்கள் விடுதலைப் போராட்டம். எமது மக்கள் நலன் கருதித்தான் எங்களின் ஆயுதங்கள் மௌனமாகின. அமைதி வழியை விரும்பிய எம்மை சிங்கள அரசு தொடர்ந்து ஏமாற்றியே வந்தது. மீண்டும் எமது மக்களுக்கு சரியான தீர்வுத் திட்டத்தை சிங்கள அரசு முன்வைக்காவிட்டால், மக்கள் எழுச்சியுடன் எமது ஆயுதப் போராட்டம் தொடரும்!''
''கடைசிகட்டப் போரில் சர்வதேச சமாதானப் புள்ளிகளை நம்பி புலிகள் ஏமாந்து விட்டதாகச் சொல்லப்படுகிறதே... அது உண்மையா?''
''சர்வதேச உளவு வலையில் எமது சில முக்கிய உறுப்பினர்கள் வீழ்ந்தது உண்மைதான். அதனால் சில பாதிப்புகள் ஏற்பட்டதும் உண்மைதான். எமது போராட்ட வரலாற்றில் துரோகம் என்பது காலம் காலமாகவே நடந்துவரும் ஒன்றுதான். இவற்றையெல்லாம் தாண்டி எமது தேசியத் தலைவர் எமது போராட்டத்தை தொடர்ந்து வழி நடத்துகிறார்.''
''இலங்கையில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென புலிகள் விரும்புகிறார்கள்?''
''தேர்தல் குறித்து நாம் கருத்துக் கூற வேண்டிய அவசியம் இல்லை. சிங்களப் பேரினவாதம் பற்றி எமது மக்கள் தெளிவுடனேயே உள்ளார்கள்.''
''போரில் உண்டான தோல்வி, பிரபாகரனை எந்தளவுக்கு வருத்தி இருக்கிறது?''
''மக்களின் இழப்பும் போராளிகளின் இழப்பும் தேசியத் தலைவரை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. எமது மக்களின் கொடூர மரணங்கள் தலைவரின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. இவற்றையெல்லாம் தாண்டி எமது மக்கள் சுதந்திர தமிழீழத்தில் வாழ வேண்டும் என்பதில் தலைவர் உறுதியாகவே இருக்கிறார்.''
''தந்தை வேலுப்பிள்ளையின் மறைவின்போது பிரபாகரனின் மனநிலை எப்படி இருந்தது?''
''உறவுகளுக்கு அப்பாற்பட்டு எமது மக்களை நேசிப்பவர், எமது தேசியத் தலைவர் பிரபாகரன். இதுவே உங்களின் கேள்விக்கான பதில்!''.
நன்றி : தட்ஸ்தமிழ்
சனி, 9 ஜனவரி, 2010
ஜக்குபாய் : திருடனை கொட்டிய தேள் !
உலகத் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஷூட்டிங் முடிந்து சில தினங்களே ஆன ‘ஜக்குபாய்’ திரைப்படம் இணையதளங்களில் ரிலீஸ் ஆக, தமிழ் திரைப்பட உலகம் பரபரப்புக்குள் ஆழ்ந்திருக்கிறது. ஓசியில் கிடைத்தாலும் ஜக்குபாயைப் பார்க்க ஆளில்லை என்பது வேறு விசயம். உடனே ‘இது கொலைக்கு சமமான குற்றம்’ என்று தமிழ் திரையுலக நடிகர்கள் பதறி துடித்தார்கள். ‘ஐய்யய்யோ… 15 கோடி’ என அழுதேவிட்டார் ராதிகா. முதல்வர் கருணாநிதியிடம் ஓடிப்போய் மனு கொடுக்க அவர் ஒரு கோயம்புத்தூர் பையனைப் பிடித்து உள்ளேப் போட்டார்.
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர் என்பது மட்டுமல்ல, அவர்தான் நடிகர் சங்கத்தின் தலைவர். சரத்குமாரின் மனைவி ராதிகாவின் ‘ராடன் பிலிம்ஸ்’தான் ஜக்குபாயின் தயாரிப்பு நிறுவனம். கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரமாண்டமாக படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில்தான் இணைய தளத்தில் ரிலீஸ் செய்துவிட்டனர். ‘நடிகர் சங்கத் தலைவர் படத்துக்கே இந்தக் கதியா?’ என படை திரண்ட கோடம்பாக்க நடிகர்கள் ஆளாளுக்கு கண்டன அறிக்கைகள் விட்டார்கள். உணர்ச்சி இயக்குநர் சேரன், ‘‘இந்த திருட்டு வி.சி.டி. தயாரிக்கும் கும்பலை ஒழித்தால்தான் தமிழ் சினிமா உருப்படும். எங்காவது திருட்டு வி.சி.டி. தயாரிப்பதோ, விற்பதோ தெரிந்தால் அவர்களை அடித்து உதைக்க வேண்டும். இதற்காக திரையுலகம் சார்பாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 10 இளைஞர்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் அளவுக்கு அவர்களுக்கு சம்பளம் தரலாம்’’ என அதிகாரப்பூர்வமாக ஒரு கூலிப்படையை உருவாக்கும் யோசனையை முன் வைத்திருக்கிறார். தனது குருநாதர் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவான ஜக்குபாய்க்கு நேர்ந்திருக்கும் கதி கண்டு உணர்ச்சிவசப்பட்டு சேரன் இவ்வாறு பேசிவிட்டார் என்று இதை எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அவர் காலம்தோறும் இப்படித்தான் பேசி வருகிறார். இப்படித்தான் பேசுவார். அதில் ஒன்றும் அதிர்ச்சி இல்லை. ஆனால் சினிமாத் தொழில் நசுக்கப்படுகிறது என்றும் அதைக் காப்பாற்ற ஒரு கூலிப்படையை உருவாக்க வேண்டும் என்றும் ஆவேசமாக பேசும் சேரன், அதே சினிமாத் துறையில் பல விதங்களில் நசுக்கப்படும் உதிரித் தொழிலாளர்கள் குறித்து இதுவரை என்ன பேசியிருக்கிறார்? லைட்மேன் தொடங்கி, மேக்&அப் மேன் வரை தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சி, சுயமரியாதையையும் பறிக்கும் திமிர்த்தனத்தை என்ன விதத்தில் எதிர்த்திருக்கிறார்? தன் உதவியாளர்களுக்கு முறையாக ஊதியம் கூட தராத எத்தனையோ இயக்குநர்களின் பட்டியலில் சேரனின் பெயரும் இருக்கிறது.
இந்த ஜக்குபாய் பிரச்னைக்காக திரையுலகினர் ஓர் அவசர ஆலோசனைக் கூட்டம் போட்டார்கள். சென்னை ஃபோர் பிரேம்ஸ் அரங்கத்தில் நடத்தப்பட்டக் கூட்டத்துக்கு, பொதுவில் இம்மாதிரியான எந்த நிகழ்ச்சிகளுக்கும் வந்திடாத கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்கள் வந்திருந்தனர். கூட்டத்தில் பேசிய ரஜினிகாந்த் ‘‘ஜக்குபாய் கதையில் முதலில் நான்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் ஜக்குபாய் என்ற டைட்டிலிலேயே ஏதோ மிஸ்டேக் இருக்கிறது. நானும் கே.எஸ்.ரவிக்குமாரும் பல மாதங்கள் டிஸ்கஸ் பண்ணியும் கதை நகரவே இல்லை. அதன்பிறகுதான் ஜக்குபாய் கதையில் சரத்குமார் நடித்தார். நமக்குதான் செட் ஆகவில்லை, சரத்குமாருக்கு சரியாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அவருக்கும் இப்போது பிரச்னை ஆகிவிட்டது’’ என்று சரத்குமார் தலையில் கூடுதலாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். ‘சூப்பர் ஸ்டாரை அழைத்துப் பேச வைத்தால் விநியோகஸ்தர்களை சமாளித்து படத்தை விற்றுவிடலாம்’ என்று சுப்ரீம் ஸ்டார் கணக்குப் போட்டிருக்க, ரஜினியோ ‘டைட்டிலே வௌங்கலை. எவனோ பில்லி சூனியம் வெச்சுட்டான்’ என்று எக்ஸ்ட்ரா பஞ்சாயத்தை கூட்டினார். அதைத் தொடர்ந்த ரஜினிகாந்த்தின் பேச்சுதான் முக்கியமானது.
அவர் சொல்கிறார், ‘‘ஜக்குபாய்க்காக ‘Wasabi’ என்ற பிரெஞ்சு படத்தின் சி.டி.யை கே.எஸ்.ரவிக்குமார் கொண்டுவந்து கொடுத்தார். படம் பார்த்தபோது பிரமாதமாக இருந்தது. பத்து அலெக்ஸ் பாண்டியனுக்கு சமமான ஒரு ஓய்வு பெற்ற பெற்ற போலீஸ் அதிகாரியையும், அவருடைய மகளையும் பற்றிய கதை அது. அந்த போலீஸ் அதிகாரியின் மகள் வெளிநாட்டில் கோடீஸ்வரியாக இருக்கிறாள். அவளைப் பார்க்க அப்பா போகிறார். அந்த பெண்ணை சாகடிக்க ஒரு கும்பல் சதி செய்கிறது. அவர்களை அடித்து வீழ்த்தி மகளைஅந்த போலீஸ் அதிகாரி எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை. இது பிரமாதமான ஸ்க்ரிப்ட். நிச்சயம் வெற்றிபெறும். அதனால் இந்த வி.சி.டி. வெளியானதைப் பற்றி எல்லாம் சரத்குமார் கவலைப்படத் தேவையில்லை’’ என்று ரஜினிகாந்த் உள்ளது உள்ளபடியே போட்டுக்கொடுத்தார். ஒரு பிரெஞ்சு படத்தை அப்படியே திருடி தமிழில் எடுப்பது பற்றிய ஒப்புதல் வாக்குமூலமாக ரஜினிகாந்த்தின் பேச்சைக் கருதலாம்.
அதே விழாவில் பேசிய கமல் என்னும் காமன்மேனின் பேச்சு அபாயத்தின் உச்சமாகவும், விஷத் தன்மையுடனும் இருந்தது. ‘‘குறைந்த விலையில் வி.சி.டி.யிலும், டி.வி.டி.யிலும் படம் பார்ப்பதை மக்கள் சந்தோஷமாக நினைக்கிறார்கள். அதை திருத்த முடியாது. ஹேராம் சி.டி. பர்மா பஜாரில் விற்கப்பட்டது எல்லோருக்கும் தெரியும். இதுபோன்ற சட்ட விரோதமான செயல்கள் எல்லாம் கறுப்பு பணத்தில் இருந்து வருவதுதான். திருட்டு வி.சி.டி. மூலம் கிடைக்கும் பணம் எல்லாம் மும்பை குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதை நாம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். திருட்டு வி.சி.டி. பணம் எல்லாம் தேசத் துரோகத்துக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும்’’ என்பது காமன்மேன் கமலின் பேச்சு.
மிக அபாயகரமான இந்தப் பேச்சின் பொருள் என்ன? திருட்டு வி.சி.டி. விற்கும் பணத்தில்தான் மும்பையில் குண்டு வைக்கிறார்கள் என்றால் கமல் யாரை சொல்கிறார்? இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. மிக நேரடியாக முஸ்லீம்களை குறிவைத்தே இந்தக் குற்றச்சாட்டை அவர் சொல்கிறார். ஏன், திருட்டு வி.சி.டி. விற்கும் பணத்தில் இருந்து கரசேவையும், மாலேகான் குண்டுவெடிப்பும் நடக்காதா? பர்மா பஜாரில் திருட்டு வி.சி.டி. விற்கும் அத்தனை பேரும் பாய்களா? அப்படியே விற்றாலும் அந்த பணம் தேச விரோத செயல்களுக்குதான் பயன்படுத்தப்படுகிறது என்ற முடிவுக்கு கமல் எப்படி வருகிறார்? அவை அடிமனதில் ஊறிக் கிடக்கும் இஸ்லாமிய காழ்ப்பில் இருந்து வரும் சொற்கள். கமலின் இந்தப் பேச்சை வைத்து அவர் மீது வழக்கு தொடுப்பதற்கான எல்லா நியாயங்களும் இருக்கின்றன. அப்புறம், திருட்டு வி.சி.டி. விற்கும் பணம் எல்லாம் தேசத் துரோகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது என்றால், சினிமாக்காரர்கள் சம்பாதிக்கும் பணம் எல்லாம் நாட்டை வளமாக்கப் பயன்படுகிறதா என்ன?
கும்பகோணம் தீ விபத்தின்போது பந்தாவாக ‘நான் 5 லட்சம் தாறேன், நான் 10 லட்சம் தாறேன்’ என்று அறிக்கைவிட்ட கொழுப்பெடுத்த கோடீஸ்வர நடிகர்களில் முக்கால்வாசிப் பேர் இதுவரைக்கும் ஒரு பைசாவும் தரவில்லை. இதைப்பற்றி பலமுறை பத்திரிகைகளில் செய்திகள் வந்தும் அந்த நேர்மையின்மைப்பற்றி பேசவே மறுக்கிறார்கள். இந்த யோக்கியவான்கள்தான் இப்போது திருட்டு வி.சி.டி. பற்றி அலறுகின்றனர். ‘சரத்குமாருக்கே இந்த கதியா, ஒரு பெரிய பட்ஜெட் படத்துக்கே இந்த நிலைமையா?’ என்று இழவு வீடு போல் நடிக்கின்றனர். சில நடிகர்கள் ஒரு படி மேலே போய் ‘தமிழனுக்கு சொரணை இல்லை. திருட்டு வி.சி.டி. பார்த்துக் கெட்டுப்போறான்’ என்று சாபம் விடுகிறார்கள். சினிமா என்பது ஒரு தொழில். அதில் ஏற்படும் பிரச்னைக்கும் தமிழனின் சொரணைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? ஒரு தொழிலில் சந்திக்கும் சிக்கலை சமூகப் பிரச்னையாக மாற்றுகின்றனர். ஜக்குபாய் இணையத்தில் ரிலீஸ் ஆனதாலும், அதன்பொருட்டு ராதிகாவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாலும் தமிழ் சமூகத்துக்கு என்ன குடிமுழுகிப் போய்விட்டது? லாபகரமாக தியேட்டருக்கு வந்து ஓடினால் மட்டும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு லாபத்தில் பங்கு தரப்போகிறாரா ராதிகா? உழைக்கும் மக்களின் பணத்தை கேளிக்கையின் பெயரால் கொள்ளையடித்து சேர்த்து வைத்திருக்கும் இவர்களின் அநியாயத் திருட்டைவிட வேறு பெரிய திருட்டு ஊரில் இல்லை.
ஒரு பொது மேடையில் ‘வாசபி’ என்ற பிரெஞ்சு படத்தை திருடிதான் ஜக்குபாய் எடுக்கப்படுகிறது என்று ரஜினிகாந்த் ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்திருக்கிறார். இதைப்பற்றி எந்தக் கருத்தும் சொல்லாத நடிகர்கள், வி.சி.டி. திருட்டுப் பற்றி மட்டும் வாய் கிழியப் பேசுகின்றனர். பொதுவாக திருடர்கள், தாங்கள் திருடியப் பொருளை இழந்துவிட்டால் அதைப்பற்றி வெளியே சொல்வதற்கு தயங்குவது பொது எதார்த்தம். திருடனுக்குத் தேள் கொட்டியைதைப்போல என நாம் பழமொழியே வைத்திருக்கிறோம். ஆனால் வாசபியைத் திருடி ஒரு தமிழ் படத்தை எடுத்துவிட்டு, அதை ஒருத்தன் திருடிவிட்டான் என்றவுடன் எகிறிக் குதிக்கிறார்கள். மோசடியும், ஆபாசமும் நிறைந்த இந்த வர்த்தக விபச்சாரத்தைப்பற்றி எந்த நடிகரும் வாய் திறக்கவில்லை. உடலின் அனைத்து துவாரங்களையும் மூடிக் கொண்டிருக்கின்றனர். இப்போது மட்டும்தான் என்றில்லை. ஒரு சில தனிப்பட்ட காழ்ப்புகள் உச்சத்திற்கு வரும் சந்தர்ப்பங்கள் நீங்களாக எப்போதுமே தமிழ் சினிமா வென்றுகள், தங்களின் தவறுகளை ஒத்துக்கொண்டதோ, மன்னிப்புக்கேட்டதோ, அதைப்பற்றி விவாதம் செய்ததோ கிடையாது.
அண்மையில் தென்னாப்பிரிக்க படமான Tsotsi யை அப்படியே உருவி ‘யோகி’யாக்கி அமீர் எடுத்தப் படம் பற்றி கோடம்பாக்கத்தின் நேர்மையாளர்கள் என்ன கருத்தை சொன்னார்கள்? ஒரு விபத்து, அதில் சந்திக்கும் மூவரின் கதைகள் தனித்தனி கோணங்களில் விவரிக்கப்படும் அம்ரோஸ் ஃபெரோஸ் என்ற படத்தை சுட்டு மணிரத்னம் ஆயுத எழுத்து எடுத்தார். ‘sliding doors’ -ன் தாக்கத்தில் ஜீவா ‘12பி’ எடுத்தார். shoot em up-ல் ஐந்து விரல்களுக்கு இடையே ஐந்து தோட்டாக்களை வைத்து கையைத் தீயில் காட்ட, துப்பாக்கி இல்லாமலேயே தோட்டாக்கள் சீறிப்பாய்ந்து எதிரில் நிற்பவனைத் தாக்கும் காட்சியை அச்சு பிசகாமல் அப்படியே சுட்டு நியூட்டனின் மூன்றாம் விதியில் வைத்தார் எஸ்.ஜே.சூர்யா. இப்படியான கலைத் திருட்டுக்காக எக்காலத்திலும் குற்றவுணர்வு அடைபவர்கள் இல்லை இவர்கள்.
ஆனால் இவர்களின் நலன்களுக்காகவே இயங்கும் இந்த அரசு சினிமாக் காரர்களின் பிரச்னை என்றால் மட்டும் ஓடோடி வந்து தீர்த்து வைக்கிறது. சினிமா கலைஞர்கள் குடியிருக்க வீடு இல்லாமல் அல்லாடுவதால் மாமல்லபுரம் சாலையில் 95 ஏக்கர் நிலத்தை அவர்களுக்காக ஒதுக்கித் தந்திருக்கிறார் கருணாநிதி. அண்மையில் கூட கமல்ஹாசன் கலந்துகொண்ட சினிமா வர்த்தக கருத்தரங்குக்கு தமிழக அரசு சார்பாக 50 லட்ச ரூபாய் கொடுத்தார். பாவம், சினிமாக்காரர்கள் கஞ்சிக்கு இல்லாமல் பஞ்சத்தில் தவிக்கிறார்கள். இவர் போய் உதவியிருக்கிறார். என்ன அநியாயம் இது? சினிமா என்பது ஒரு தொழில். அதன் முன்னேற்றத்துக்காக கேட்டுக் கேள்வியில்லாமல் மக்கள் பணம் செலவிடப்படுவது எத்தனைப் பெரிய அநியாயம்? இன்று, ஆட்டோ ஓட்டுனர்கள், சலவைத் தொழிலாளர்கள், பனைத் தொழிலாளர்கள், முடி திருத்துபவர்கள், வழக்கறிஞர்கள் என சமூகத்தின் உழைக்கும் சக்தியாக இருக்கும் எத்தனையோ வகையினர் முதல்வர் கருணாநிதியை சந்திக்க காத்திருக்கின்றனர். அதற்கான நியாயமான காரணங்களும் அவர்களுக்கு இருக்கின்றன. ஆனால் கருணாநிதியோ நடிகை சோனா, குஷ்பு போன்றவர்களை சந்திக்கவே முன்னுரிமை தருகிறார். அந்த அடிப்படையிலேயே ஜக்குபாய் படத்தை இணையத்தில் ரிலீஸ் செய்த குற்றவாளிகளை மின்னல் வேகத்தில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்திருக்கிறார் கருணாநிதி. இவ்வளவு வேகமான நடவடிக்கை வேறு எந்த மக்கள் பிரச்னைகளுக்கும் எடுக்கப்பட்டிருக்கிறதா என்று நினைத்துப் பாருங்கள். ஒரு வருமானச் சான்றிதழ் வாங்கவே வாரக்கணக்கில் அலைய வேண்டியிருக்கிற நாட்டில் ராதிகாக்களின், சரத்குமார்களின் பிரச்னைகளுக்கு மட்டும் உடனடி தீர்வை அளிப்பதில் இந்த அரசு கூடுதல் கரிசனம் கொண்டிருக்கிறது.
நன்றி : வினவு

சனி, 2 ஜனவரி, 2010
ஜனவரி-1 புத்தாண்டு - காரணம் என்ன?
புத்தாண்டு
புத்தாண்டு என்றதும் எல்லோருக்கும் ஞாபகம் வருவது முந்தைய நாள் Party யும் ,அடுத்தநாள் வரப்போகும் தொலைக்காட்சி நிகழ்ச்சியும்தான். என்றாவது ஒருநாள் ,ஒருநிமிடம் உங்களில் யாராவது யார் இந்த புத்தாண்டை உருவாக்கியது ? ஏன் ஜனவரி1 ஐ மட்டும் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். உலகில் ஒவ்வொரு நாட்டினரும் ஒவ்வொரு நாளை புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள் ,இருப்பினும் ஜனவரி 1 ல் அப்படி என்ன சிறப்பு ,அதை மட்டும் ஏன் இப்படி எல்லாரும் தூக்கி வைத்துக்கொண்டாடுகிறார்கள் என்று யோசித்து பார்த்திருக்கிறீர்களா? அப்படி யோசித்தேன் என்று நீங்கள் சொல்வீர்களானால் ,நான் வடிவேலு போல உங்களை பார்த்து என் இனமடா நீ என்று சொல்ல ஆசைப்படுகிறேன் .
அப்படி இதுவரை யோசித்திராதவர்களுக்கு ,யோசிக்கவேண்டாதபடி நான் இங்கே ஜனவரி 1 எப்படி புத்தாண்டாக வந்தது என்று சொல்ல நினைக்கிறேன் .இது ஒன்றும் என்னுடைய சொந்த கருத்தோ ,சுய சிந்தனையோ கிடையாது .எங்கள் ஊர் சோளிங்கரில் வருடாவருடம் மாட்டு பொங்கல் தினத்தன்று "புரட்சி கவிஞர் கலை இலக்கிய மன்றம்" சார்பில் பொங்கல்விழா மற்றும் திருவள்ளுவர் நாள்விழ நிகழ்ச்சி நடத்துவது வழக்கம் ,கடந்த ஆண்டு சிறப்புவிருந்தினராக எல்லோராலும் சு.ப.வீ என்று அன்பாகஅழைக்கப்படும் பேராசிரியர் திரு.சுப வீரபாண்டியன் அவர்கள் வந்திருந்தார் .அன்றைய நிகழ்ச்சியில் சு.ப.வீ ஆற்றிய உரையிலிருந்து ஒருசிறு பகுதியைத்தான் உங்களுடன் பகிர இருக்கிறேன் .
ஒரு வருடத்திற்கு எத்தனை நாள் ?
ஆரம்ப காலங்களில் ( இங்கு நான் ஆரம்ப காலம் என்று கூறுவது கி.மு ) இப்போது உள்ளது போல ஒரு வருடத்திற்கு 365 1/4 நாள் கிடையாது .நம்மில் பலர் இந்த 1/4 நாள் கணக்கை மறந்தே போயிருப்பர்.அப்ப்தெல்லாம் ஒரு வருடத்திற்கு 400 நாட்கள்.அதுமட்டுமல்லாமல் வருடத்திற்கு 10 மாதங்களே. ஜனவரி தொடங்கி டிசம்பர் முடிய. இடையில் புதிதாய் வந்தவைகள் ஜூலை யும் ,ஆகஸ்ட் -ம். உங்களுக்கு புரிய வேண்டுமென்றால் நான் ஒரு ஆதாரம் தருகிறேன். இந்தி தெரிந்தவர்கள் இதை சுலபமாக புரிந்து கொள்ள முடியும் .நம்முடைய கடைசி நான்கு மாதங்களின் பெயர்களையும் இந்தியில் ஒன்று ,இரண்டு எண்ணிக்கையையும் ஒப்பிட்டுபார்த்தீர்களேயானால் உண்மை விளங்கும்.
செப்டம்பர் - ச்சே (Che) -6
அக்டோபர் - ஆட் (Aat) -8
நவம்பர் - நவ் ( Nou) -9
டிசம்பர் - தஸ் (Dus) -10
ஜூலை,ஆகஸ்ட் ?
இத்தாலியில் ஜூலியஸ் சீசர் ஆட்சிக்கு வந்தபின் தன்னுடைய பெயரில் ஒருமாதத்தை உருவாக்கி இணைத்துவிட்டார் .அப்போதெல்லாம் ஜூலை 1 தான் புத்தாண்டாக எல்லோராலும் கொண்டாடப்பட்டு வந்தது .இதை அன்றைய மதகுருமார்களும் ஏற்றுக்கொண்டார்கள் ,ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்பது வேறு விஷயம்.
ஜூலியஸ்-க்குப்பின்பு ஆட்சிக்கு வந்த அகஸ்டியஸ் சீசர், தன்னுடைய பெயரில் ஒரு மாதத்தினை உருவாக்கி ,மாதத்திற்கு 30 நாட்கள் ,வருடத்திற்கு 12 மாதங்கள் என்ற வரையறையை கொண்டுவந்தார் .இயேசு கிருஸ்த்து பிறக்கும் வரை இப்படியாகத்தான் இருந்தது. பின்பு இயேசு என்று ஒருவர் தோன்றி அவர்கடவுளான!!! பின்பு தான் மாற்றங்கள் நடக்க தொடங்கியது .
ஜனவரி 1 - புத்தாண்டு
கிருஸ்த்துவ மத சம்பந்தமான அனைத்து பஞ்சாயத்துகளையும் நடத்தும் வாடிகன் நகரமும் ,போப்பும் கிரிச்நதுவா மதத்தினை உலகெங்கும் பரப்பும் நோக்கினால் இயேசு பிறந்தநாளான டிசம்பர் 25 -ஐ புத்தாண்டாக அறிவித்தது .ஆனால் இது வெகுஜன மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல் விமர்சனத்துக்குள்ளனதாகவே இருந்தது.இப்படியே சென்று கொண்டிருந்த நாட்களில் மீண்டும் ஒரு புதிய முடிவு எடுக்கப்பட்டது ,அதுதான் இனிமேல் ஜனவரி மாதத்தை ஆண்டின் தொடக்கமாக கொண்டு ஜனவரி -1 ஐ இனிமேல் புத்தாண்டாக கொண்டாடவேண்டும் என்பது .இதற்க்கு காரணம் இல்லாமல் இல்லை ,ஜனவரி -1 என்பது இயேசுவிற்கு பெயர் வைத்த நாளாம்,அவரால் தான் இந்த உலகம் தோற்றுவிக்கப்பட்டது என்று நம்பும் அனைவரும் இதை ஏற்றுக்கொண்டுவிட்டனர் .
பின்னாளில் இதுவே உலகெங்கும் பரவி இன்று போதை இல்லாத புத்தாண்டு ஏது (Waste) என்ற நிலை வந்துள்ளது.தோழர்களே! தெரிந்து கொள்ளுங்கள் நாம் இன்று கொண்டாடும் ஜனவரி 1 -புத்தாண்டு என்பது ஏசுவிற்கு பெயர் வைத்த நாள் ,அதனால் தான் நாம் இந்தநாளை கொண்டாடுகிறோம்.( அனால் இந்துக்கோவில்களில் எதற்காக ஏசுவிற்கு பெயர் வைத்த நாளில் இரவு 12 மணிக்கு பூஜை நடத்துகிறார்கள் என்று என்னை கேட்காதீர்கள் ??!!!).
தமிழ்புத்தாண்டு
அனால் இன்று பலபேர் பலவிதமாக விமர்சனம் செய்துகொண்டிருக்கும் தை -1 தமிழ்புத்தாண்டு என்பது வெற்றுக்காரனங்களுக்காக உண்டாக்கப்பட்டதல்ல .ஆரியர்களின் வருகைக்குப்பின் திராவிடர்களின் புத்தாண்டு தை-1 ஒன்றாகத்தான் இருந்துள்ளது .இதை நாம் சங்ககால தமிழ் இலக்கியங்களின் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஆரியர்களின் வருகைக்குப்பின்தான்,தமிழர்களின் புத்தாண்டு சித்திரை-1 ஆக மாற்றப்பட்டது. நீங்கள் ஒன்றை இங்கே நன்றாக கவனிக்கவும் தமிழர்களின் ஆண்டின் பெயர் தமிழில் இல்லை ,சமஸ்கிருதத்தில் தான் உள்ளது என்பது,தமிழர்களாகிய நமக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானமாகும் .
ஆங்கில புத்தாண்டைக்கொன்டாடும் தோழர்களே! தமிழ்புத்தான்டையும் கொண்டாடுங்கள் ,தமிழர்நாளில் கொண்டாடுங்கள்.!!!
மேலும் தமிழ்புத்தாண்டு பற்றிய முழு விவரங்களையும்,அது எப்படி தீர்மானிக்கப்பட்டது ,யாரால் முடிவு செய்யப்பட்டது ( நீங்கள் நினைப்பது போல அது தி.மு.க தலைவரால் முடிவு செய்யப்பட்டதல்ல ) என்ற தெளிவுரைகளை நாம் ஜனவரி-14 (தை-1 ) அன்று பார்ப்போம் .
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை கூறிக்கொண்டு விடைபெறும் ,
-சூரியன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)