திங்கள், 1 பிப்ரவரி, 2010

ஆயிரத்தில் ஒருவன் - ஒரு அலசல்

"ஆயிரத்தில் ஒருவன்" இந்த பெயரை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் யார்யாரோ ,என்னென்னவோ செய்தார்கள் ,செய்துகொண்டிருக்கிறார்கள் ,இனிமேலும் செய்வார்கள் .இப்போது இளைஞர்களின் இயக்குனர் செல்வராகவனும் செய்திருக்கிறார் ஒரு திரைப்படத்தை .இப்படி ஒரு படத்தை செல்வராகவன் அறிவித்ததிலிருந்தே தமிழ் சினிமா வுலகில் பரபரப்பு தொற்றிக்கொண்டு விட்டது .பொத்தி பொத்தி வெடிக்கும் பட்டாசு புஸ்வனமாகத்தான் போகும் என்பது தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி (சங்கர் போன்றவர்கள் இதிலும் விதிவிலக்கு ).ஆனால் இந்த படம் எப்படி என்பதை நாம் கடைசியில் பார்ப்போம் .

இந்நேரம் தமிழ்நாட்டில் பெரும்பலனவர்களுக்கும் இப்படத்தின் கதை தெரிந்திருக்கும் ,ஏனென்றால்  படம் பார்த்தார்களோ இல்லையோ கதையை தெரிந்து கொண்டிருந்திருப்பார்கள் .  நான் ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் படம் வெளியாகி மூன்றாவது நாள் நானும் என் நண்பர்களும் படம் பார்க்க செல்லும் போது திரையரங்கில் நங்கள் வெறும் நான்கு பேர்தான் .படம் ஆரம்பித்த பிறகும் கொஞ்சம் கூட்டம் வந்தது ,ஆனாலும் மொத்தத்தில் நூறைத்தாண்ட வில்லை .எனக்கு அப்போது காரணம் என்னவென்று புரியவில்லை .அதற்குள் ஊருக்குள் இந்த படம் சரியில்லை என்று பேச்சு .அனால் நான் இது போல் பல பேச்சுக்களை கேட்டிருக்கிறேன் ,ஆவர்களின் பேச்சையும் மீறி படம் ஹிட்டானதும் மாற்றி பேசுவதையும் கேட்டிருக்கிறேன் .அதனால் யார் பேச்சையும் கேட்காமல் நான் என்னுடைய சொந்த  கருத்தை அறிய விழைந்து படம் பார்க்க சென்றேன்.  

நான் ஏற்கனவே சொன்னது போல எல்லாருக்கும் இப்படத்தின் கதை தெரிந்திருக்கும் என்பதால் நான் நேராக விமர்சனத்துக்குள் செல்லலாமென்று நினைக்கிறேன் .படம்  பார்த்துவிட்டு வெளியே வந்த எனக்கு "ச்சே ,என்னமா எடுத்திருக்கான்யா படத்தை ,சூப்பர் என்று தான் சொல்ல வாய் வந்தது ,அப்படித்தான் நானும் சொன்னேன் .ஆனால் விமர்சனம் எழுதவேண்டும் என்று அமர்ந்து யோசிக்கும் போதுதான் அதில் எவ்வளவு  குறைபாடுகள் உள்ளது ,ஏன்  இந்த படம் மக்களுக்கு பிடிக்க வில்லை ? (புரியவில்லை! ) என்ற கேள்விக்கான விடைகள் கிடைக்க ஆரம்பித்தன .அதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆர்வமாகி இதோ எழுதுகிறேன் ........

முதலில் இந்த படத்தை ஆங்கில படம் போல எடுத்திருக்கிறார்கள் என்று எல்லோரும் சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன் ,ஏனென்றால் உண்மைலேயே ஆங்கில படத்திலிருந்த நிறைய காப்பி பண்ணித்தான் எடுத்திருக்கிறார்கள் .செல்வராகவன் ஆங்கில படத்திற்கு இணையாக எடுப்பது என்பது ,அதை பார்த்து அப்படியே காப்பி அடிப்பது என்று நினைத்து விட்டார் போல ( பார்க்கவும் மம்மி,கிளாடியேட்டர் ,மெக்கனாஸ் கோல்ட் ).கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் காப்பி அடித்துவிட்டு இதை நிரூபித்தால் நான் சினிமா எடுப்பதையே விட்டுவிடுகிறேன்  என்று சவால் வேறு . 


யோகி எடுத்து கெட்ட அமீர் போல ,ஆ.ஒ மூலம் கெட்ட செல்வராகவன் என்று தான் எனக்கு சொல்ல தோன்றுகிறது .படத்தின் முதல் பாதி உண்மைலேயே மிக அருமை ,போரடிக்காமல் செல்வராகவன் தனக்கே உரிய செக்ஸ் நடையில் படம் எடுத்திருந்தார் .எப்பவும் போல அதை ரசித்து கைதட்டி ரசித்த மக்களுக்கு இடைவேளைக்கு முன் படத்தில் வரும் கார்த்தி ,ரீமாசென் ,ஆண்ட்ரியா (அப்பாடா !!! படத்தில் நடித்தவர்கள் பெயர் சொல்லியாச்சு )காது கிழிவது போல கிழிகிறது இரண்டாம் பாதியில் .அவ்வளவு சத்தம் எதற்கென்று தெரியவில்லை ,கொடுரம் ஏனென்றும் தெரியவில்லை .தேவையல்லாத கட்சிகள் நிறைய இருக்கிறது படத்தில் ,செல்வராகவன் எதோ ஒரு ராஜா ,ராணி என்று சொல்லிவிட்டு போயிருந்தால் இவ்வளவு  பிரச்சினையே கிடையாது.அவருடைய சொந்த கற்பனைக்கெல்லாம் சோழ ,பாண்டியர்களை வம்பிக்கிழுத்ததுதான் பெரிய பிரச்சினையே .அந்த மன்னர் குடும்பத்தினர் அவமரியாதை வழக்கு போட்டால் இவர்  அம்பேல் தான் . படத்தில் எல்லோரும் சொல்வது போல சோழர்களை காட்டு மிராண்டிகளாக காட்டியது மிகப்பெரிய தவறு.தான் மிகப்பெரிய ஆராய்ச்சி செய்து இப்படத்திற்கு திரைக்கதை எழுதியாக சொன்னார் இயக்குனர் ,என்ன ஆராய்ச்சி செய்தாரோ தெரியவில்லை சோழர்களை பற்றிய படம் எடுக்க இவர் எதற்கு ரோமானிய மன்னர்களை பற்றி ஆராய்ச்சி பண்ணார் என்றுதான் எனக்கு சுத்தமாக விளங்கவில்லை .புரியவில்லையா ? இதோ சொல்கிறேன் ,படத்தில் அவர் காட்டிய போர்முறைகள் ரோமானியர்களின் போர்முறைகளாகும்.எந்த தமிழ மன்னனும் அடிமைகளையும் ,கைதிகளையும் மோத விட்டு வேடிக்கை பார்த்தது கிடையாது .எனக்கு தெரிந்து தமிழ்நாட்டில் யாரும் ஆப்பிரிக்கர்களை மிஞ்சும் அளவுக்கு கருப்பாக இருந்ததாகவும் ,இருப்பதாகவும் கேள்விப்பட்டதும் ,படித்ததும் இல்லை .இன்னும் பற்பல லாஜிக் ஓட்டைகள் குவிந்து கிடக்கின்றன இப்படத்தில் .ஏழு கண்டம் தாண்டி வரும் இடத்திற்கு ஹெலிகாப்டர்கள் கிளைமாக்சில் சட்டென்று வருவது ,வியட்நாம் நாட்டு தீவில் இந்திய ராணுவம் வந்து சிங்கள ராணுவம் போல கொடூரங்கள் நிகழ்த்துவது .இதெல்லாம் அவதார் படத்தில் வரும் பண்டோரா கிரகத்தில் வேண்டுமானால் நடக்கலாம் ,இப்புவியில் நடக்க வாய்ப்பே இல்லை .இன்னும் எவ்வளவோ ஓட்டைகள் படத்தில் .

என்னடா இவன் இப்படி காய்ச்சி எடுக்கிறானே ,படத்தில் எதுவுமே நன்றாக இல்லையா என்று நினைத்து விடாதீர்கள் .இருக்கின்றன ,அதெல்லாம் செல்வராகவன் படத்தில் நாங்கள் எதிர்பார்த்து போனவைகள்,மிகவும் நன்றாகவே செய்திருந்தார் முதல் பாதியை .ஏனோ இரண்டாம் பாதி எழுதும் போது அவருக்கு மூளை குழம்பிப்போய் இருந்திருக்கலாம் .படத்தில் மொத்தம் மூன்று முக்கிய  கதாபாத்திரங்கள்  (கார்த்தி ,ரீமா,.பார்த்திபன் ),இவர்கள் இந்த மொத்த படத்தையும் தாங்கி செல்கிறார்கள் ,ஓரளவுக்கு  தூக்கியும் நிறுத்துகிறார்கள் .ஒரு திறமையான இயக்குனரான பார்த்திபனுக்கு கூட இயக்குனர் கதையை சொல்லவில்லையாம் ,அது இந்த படத்தை பார்க்கும் போதே தெரிகிறது .படம் முழுக்க பார்த்திபன் என்ன கதையாக இருக்கும் என்று யோசிப்பதுபோலவே மிரட்சியுடன் திரிகிறார்.

ரீமாசென் பாராட்டப்பட வேண்டிய நடிப்பு .பார்த்திபன் அந்த கிளைமாக்ஸ் ல் அவருடைய நடிப்பு ,உணர்ச்சி வெளிப்படுத்தும் விதம் விருது கொடுத்து பாராட்டப்பட வேண்டியது .இவருக்கு கதை சொல்லிருந்தால் இன்னும் பண்பட்ட நடிப்பை வெளிக்கொனர்ந்திருப்பார் .கார்த்தி இவர் உண்மையிலேயே தமிழ் சினிமாவில் ஒரு அரிதான நடிகராக இருக்கிறார் .எந்த வொரு build up இல்லாமல் பன்ச் டயலாக் இல்லாமல் படம் முழுக்க அடிவாங்குகிறவராகவே உலா வருகிறார்.இதற்கும் ஒரு தைரியம் துணிச்சல் வேண்டும் .

இசை -என்னமோ போங்க ,நெல்லாடிய ,உன்மேல ஆசைதான் தவிர வேறெந்த பாட்டும் மனதில் நிற்கவில்லை ,பின்னணி இசை கூட பரவாயில்லைதான் .செல்வராகவன் படத்தில் பின்னணி இசைவரைக்குமே தனியாக டவுன்லோட் செய்தது கேட்பவர்கள் உண்டு ,அந்த அளவுக்கு பிரசித்தம் .செல்வராகவன் உங்களுக்கு இவர் சரிவரமாட்டார் விட்டுவிடுங்கள்.

படத்தில் எந்தவொரு குறையும் சொல்லாத மாதிரி  இருப்பது எதுவென்றால் ஒளிப்பதிவும் ,கலையும் (Art ) தான் .இரண்டாம் பாதியில் editor கூட கொஞ்சம் தூங்கிட்டார் போலிருக்கிறது .ரொம்ப நீளமான காட்சிகள் நிறைய இருக்கிறது .

என்ன செய்து யாருக்கு புண்ணியம் எல்லாத்தையும் சாப்பிட்டு யாப்பம் விட்டுவிட்டது சொதப்பலான செல்வராகவனின் கதையும்,திரைக்கதையும் .இனிமேலாவது சொந்தமாக யோசிக்காமல் உதவி இயக்குனர்களின் கருத்துக்களுக்கும்  மதிப்பு கொடுங்கள் சார் .இன்னொரு சேரனாக உருவாகிவிடாதீர்கள் .நாங்கள் உங்களிடம் இன்னும் நம்பிக்கையோடு எதிர்பார்த்து காத்திருக்கிறோம் .ஆளானப்பட்ட பாலாவே ஆறு மாசத்தில் படம் எடுக்க வந்துவிட்டார் நீங்களெல்லாம் ஏன் இன்னும் வருஷ கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்.

சரி படம் எப்படி என்று கேட்பவர்களுக்கு ஒரு நினைவூட்டல் ,நான் ஆரம்பத்தில் சொன்னது போலவே தமிழ் சினிமாவின் செண்டிமெண்டை மீண்டும் நிரூபித்த படம் "ஆயிரத்தில் ஒருவன் ".(விதி விலக்கல்ல ).

-சூரியன்

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இங்கே சென்றால் பல காரணங்கள் உங்களுக்குப் புரியலாம்

Siddharth சொன்னது…

this is movie inspired or copied from the french movie VINAYAN
THE SAME STORY WITHOUT PARTHIPAN.

Sakthi Doss சொன்னது…

நாதாரி தனம் பண்ணினாலும் நாசூக்கா பண்ணனும் என்பதற்கு ஆ. ஒ சிறந்த உதாரனம்..

பெயரில்லா சொன்னது…

he copied that film from

movie 300,cannibal holocaust,time line, blair witch project, gladiator,mckennas gold,indiana jones, armour of gods, hostel and many more...

stupid selvaraghavan Mr.hollywood wanna be, selva is a porn master.