வெள்ளி, 12 மார்ச், 2010

விண்ணைத்தாண்டி வருவாயா!!! - விமர்சனம்

விண்ணைத்தாண்டி வருவாயா ? இயக்குனர் இந்தப்படம் பார்க்க வரும் ரசிகர்களை நோக்கி கேட்பது போல் இருந்தது எனக்கு .ஏனென்றால் தமிழ் சினிமாவின் காதல் நாயகன் எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதை இந்த படத்தின் நாயகன் சிம்பு செய்கிறார் .ஒரு காதல் நாயகன் செய்யக்கூடிய எந்த சாகசங்களையும் செய்யாமல் நம்மமுடைய நண்பர்கள் கூட்டத்திலிருப்பவனின் காதல் பயணத்தை நாம் அனுபவித்தது போல் இருக்கிறது இந்த படம்.

கொஞ்சம் மெதுவாகத்தான் செல்கிறது ,ஒருவேளை ரசிகர்கள் அந்த காதல் உணர்வில் நன்றாக ஊறி திளைக்க வேண்டும் என்று மெதுவாக கொண்டு சென்றாரோ என்று நினைக்கத்தோன்றுகிறது .படம் முழுக்க கிளைமாக்ஸ் காட்சி தவிர அனைத்தையும் ரசிகர்கள் ஒருவிதமான புன் சிரிப்புடன் ,நமட்டு சிரிப்புடனும் ,ஒருவிதமான ஆச்சர்ய பார்வையுடனும் ரசித்ததை என்னால் காண முடிந்தது .
 

ஒரு வேளை அதற்க்கெல்லாம் காரணம் நஅம்முடைய காதல் போலவே இருக்கிறதே என்று அர்த்தமோ என்னவோ,அதை அவர்களே வந்து சொன்னால் தான் தெரியும் :) .
ரொம்ப நாளைக்கு அப்புறம் எந்தவிதமான மசாலா அயிட்டங்களும் இல்லாமல் ,யாதொரு சமரசமும் செய்துகொள்ளாமல் ஒரு முழுமையான இயக்குனரின் படமாக வெளிக்கொண்டு வந்ததற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் இயக்குனர் கௌதமிற்கும் ,இப்படத்தின் நாயகன் சிலம்பரசனுக்கும் நன்றி சொல்லியே ஆக வேண்டும் . சிம்பு நினைத்திருந்தால் இந்த படத்தை எப்படி வேண்டும் என்றாலும் சிதைத்திருக்கலாம் அல்லது தவிர்த்திருக்கலாம் ,ஆனால் அவர் எடுத்த முயற்சியினால் நமக்கு வெளியில் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு அழகான காதல் கதை கொண்ட தரமான திரைப்படம் கிடைத்துள்ளது .

இந்த படத்தைப் பற்றி நான் இவ்வளவு Positive Comments சொன்னதுக்கு நான் ஏதோ காதலில் விழுந்து விட்டதால் தான் உணர்வு பூரவமாக சொல்கிறேன் என்று சிலபேர் நினைப்பார்கள். இப்படியொரு தரமான படத்தை பார்த்து அதை சந்தோஷமாக பலபேருடன் பகிர்ந்து கொள்ள காதலிக்க வேண்டும் என்று அவசியமில்லை .
சிலம்பரசன் ,த்ரிஷா நடிப்பு ,கௌதம் மேனன் இயக்கம் இதெல்லாம் ஒரு ஆச்சர்யத்தை தந்தால்,இதென்ன இதற்க்கு மேல் நான் தருகிறேன் என்று படம் முழுக்க ஆக்கிரமித்திருக்கிறார் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் .

ஹோசான பாடலுக்கும் ,இந்த படத்தின் கிளைமாக்ஸ் சீனுக்குமே கொடுத்த 50 ரூபாய் காலி .இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த தருணம் எதுவென்று கேட்டால் கடைசி 30 நிமிடங்கள் என்று சொல்லுவேன் .

கடைசியில் சினிமா பேனரில் இயக்கம் - கார்த்திக் என்றிருப்பது மாறி கௌதம் மேனன் என்று மாறும் வரை ..எங்கும் எதிலும் இயக்குனரின் கைவண்ணம் மின்னுகிறது .

இதற்க்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை ...சுருக்கமாக சொல்வதென்றால் இதைப்படிக்கும் எல்லோரும் கண்டிப்பாக போய் படத்தை பாருங்க ..இதுபோல் இன்னும் நல்ல முயற்சிகள் தொடர வாழ்த்துங்கள் .

படம் முடிந்து எழுத்து போடும் போது ஒலிக்கும் ஜெஸ்ஸி ..... ஆங்கில பாடல் மிகவும் அருமை - அதை யாரும் மிஸ் பண்ணிடாதீங்க !!!!!

-சூரியன்


கருத்துகள் இல்லை: