உண்மை தான், மீண்டு வந்து விட்டார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். தனது சாம்பலிலிருந்து மீண்டு வருமாம் பீனிக்சு பறவை, புலிகளும் அதே போல தனது சாம்பலிலிருந்து மீண்டு வந்திருப்பார்கள் என நினைக்கின்றேன். சொல்வது நானாக இருந்தால் உங்களுக்கு ஐயம் எழுவது இயற்கை. ஆனால் இதைச் சொன்னது இந்திய உளவுத்துறை. நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இது தான் உண்மை.
புலிகள் இந்தியாவின் தெற்கு கடலோர பகுதி வழியாக அண்மையில் ஊடுருவி தற்பொழுது தமிழகத்தில் இருக்கின்றார்கள். சனவரி மாதம் தமிழகம் வரும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும், இந்திய உள் துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் அவர்கள் குறிவைத்துள்ளார்கள், மேலும் தமிழக முதல்வர். கருணாநிதியையும் அவர்கள் குறிவைத்துள்ளார்கள் என இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழ்நாட்டின் மாநில காவல்துறைத் தலைவர். இலத்திகா சரண் அவர்கள் (இவர் முதலில் இந்த பதவிக்கு தமிழக அரசால் நியமிக்கப்பட்டதும், அதன் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்ததும் அதில் அரசு இவருக்கு ஆதரவாக பேசியதும் வாசகர்கள் எல்லோருக்கும் தெரியும், அதனால் இவர் அரசின் சார்பாக பேசுகின்றார் என வாசகர்கள் நினைப்பதை நான் தடுக்க முடியாது, ஏன் என்னால் தடுக்க முடியாது என்பதை நான்காவது பத்தியில் விரிவாக கூறியுள்ளேன்). மேலும் அந்த அறிக்கையில் இந்த தகவலை வழங்கியது இந்திய உளவு துறை(IB) என்றும் அவர் கூறியுள்ளார்.(1)
இது இன்று வந்த செய்தி, இப்பொழுது நாம் நேற்று வந்த ஒரு செய்தியைப் பார்ப்போம். ஏனென்றால் வரலாறு என்பது நேற்றைய நிகழ்வுகளின் தொடர்ச்சி என என் நண்பர். செந்தில் அடிக்கடி கூறுவார். நேற்றையச் செய்தி இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும் என்று சென்னை உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார் மதிமுக தலைவர். வைகோ அவர்கள். இதில் அரசு தனது பதிலை அளிக்க வேண்டுமென நீதிபதி நேற்று உத்தரவிட்டுள்ளார்.(2)
ஒருவேளை புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி பதிவு செய்யப்பட்ட வழக்கில் அரசு தரப்பு தனது பிரதிவாதத்தை அளிக்க வேண்டும் என நேற்று சொன்னதால் இன்று இப்படி ஒரு அறிக்கை வந்திருக்கலாமோ என வாசகர்களாகிய நீங்கள் எண்ணுவதை நான் தடுக்க முடியாது, ஏனென்றால் இந்தியா ஒரு மக்களாட்சி நாடு, ஒவ்வொரு குடிமகனுக்கும் “பேச்சுரிமை”, “எழுத்துரிமை”, “தாமாக சிந்திக்கும் உரிமை” உண்டு என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். ஏற்கனவே கடந்த சூன் 12,2010 அன்று நடைபெற்ற விழுப்புரம் தண்டவாள குண்டுவெடிப்பை விடுதலைப் புலிகள் செய்திருக்கலாம் என இதே தமிழக காவல்துறை வழக்கைப் பதிந்து இன்னும் துப்பு(?) துலக்குவது தாங்கள் எல்லோரும் அறிந்ததே. அதற்குள்ளாக விடுதலைப் புலிகள் அமைப்பின் மேல் மேலும் ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளது தமிழக காவல் துறை. இந்த குற்றச்சாட்டிற்கு நீங்கள் ஆதாரம் எல்லாம் கேட்கக்கூடாது, அப்படி கேட்டாலும் கிடைக்காது. ஏனென்றால் இது இந்தியாவின் பாதுகாப்புத் தொடர்பானது, சட்டப்படி இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை வெளியிடுவது தவறு என தமிழக காவல் துறை கூறும், ஒரு வேளை உண்மையான தகவல் உங்களுக்கு கிடைத்தாலும் நீங்களும் வெளியிட முடியாது. அப்படி வெளியிட்டால் உங்கள் மீது தேச துரோக வழக்கு பாயும்.
நன்றி : நற்றமிழன்.
வியாழன், 6 ஜனவரி, 2011
புதன், 5 ஜனவரி, 2011
கமல்…நீங்கள் வலது கால் செருப்பா? இடது கால் செருப்பா?
மன்மதன் அம்பு என்ற படத்தில் நன்றாக சிரிக்க வைத்துக் கொண்டே செருப்பால் அடிக்கின்றீர்களே. இது என்ன புது வித்தை. இந்த வித்தையை எங்கே கற்றுக் கொண்டீர்கள் நண்பர்.கமல் அவர்களே.
மன்மதன் அம்பு அருமையான நகைச்சுவைப் படமாக இருந்திருக்க வேண்டியது. ஆனால் நீங்கள் வைத்த சில கருத்துகள் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத்தின் மீது எச்சில் உமிழ்வது போல உள்ளது. இப்படிப்பட்ட ஒரு படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியது நீங்கள் தான் என்பதை நான் முதலில் உங்களைத் தொடரும் இரசிககண்மணிகளுக்கு தெரியப்படுத்தி விடுகின்றேன். ஒருவேளை நீங்கள் இதில் நடித்தவர் மட்டுமே, இந்தப்படத்தின் கதை, வசனத்தில் எல்லாம் உங்களுக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் இருந்திருக்கலாம் என அவர்கள் எண்ணக்கூடும்.
காசுமீரிகளின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் நீங்கள் முதலில் எச்சில் உமிழ ஆரம்பிக்கின்றீர்கள். ஆம், காசுமீரி தீவிரவாதிகள் ஒருவன் தான் படத்தில் உங்களின் கதாநாயகியையும், அவரது தந்தையையும் கடத்தி வைத்திருப்பதாக கூறுகின்றீர்கள். படத்தின் கதைப்படி இது ஒரு மூன்று வருடம் முன்னர் நடக்கின்றது. அதாவது 2009ல் நீங்கள் இந்தக் கதையை எழுதியிருந்தால் 2006ல் அப்படி ஒரு நிகழ்வு காசுமீரில் நடந்திருக்க வேண்டும். குறிப்பாக 2006ல் அப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை என்கிறது என் ஆய்வு. காசுமீர் என்ற உடனே தீவிரவாதிகள் என்ற எண்ணத்தை உங்களது படத்தில் வரும் இந்தக் காட்சியும் மக்களின் மனதில் உருவாக்கும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அப்புறம் எதற்கு இப்படி ஒரு காட்சியை நீங்கள் படத்தில் வைத்தீர்கள் என நான் உங்களை கேட்கலாம் என நினைக்கின்றேன். ஏன் காசுமீரில் தீவிரவாதம் உருவானது என நீங்கள் இதுவரை யோசித்ததே கிடையாதா? 1987 தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை மூன்றாண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைத்து கொடுமை படுத்தி(1), மக்களின் கடைசி நம்பிக்கையான தேர்தல் வழியையும் அடைத்து அவர்களின் கைகளில் ஆயுதங்களை திணித்ததே ஆக்கிரமிப்பு செய்யும் இந்தியா தானே. இது உங்களுக்கு தெரிந்திருக்குமே. இதன் பின்னால் தானே அங்கே ஆயுதப் போராட்டம், தீவிரவாதம் எல்லாமே. சரி அதை எல்லாம் விடுங்கள். கடந்த 2010ல் மக்களனைவரும் வீதிக்கு வந்து கற்களின் மூலம் தங்களின் சோகக்கதைகளை உலகத்தாரிடம் கூறியதற்கு பரிசாக 113 சிறுவர், சிறுமியர்கள் இந்திய ஆயுதப் படையினரால் கொல்லப்பட்டார்களே. கடந்த வருடத்தில் போராளிக்குழுக்கள் தாக்குதலால் இறந்தவர்களை விட பன்மடங்கு மக்கள் இந்திய ஆயுதப்படை தாக்கியதால் இறந்தார்கள் என எல்லா ஊடகங்களும் தமுக்கு அடிக்காத குறையாக கூறினார்களே, அதெல்லாம் உங்கள் காதுகளில் விழவில்லையா, இல்லை விழாதது போல் நடிக்கின்றீர்களா? அங்குள்ள களநிலைமை இவ்வாறு இருக்கையில் நீங்கள் இந்தப் படத்தில் வைத்திருக்கும் அந்தக் காட்சி அங்கு போராடுகின்ற மக்களின் முகத்தில் எச்சில் உமிழும் செயல் என்றால் அது மிகையாகது என நான் நினைக்கின்றேன். அதே போல இங்கே நான் கொடுக்கின்ற தகவல்களை எல்லாம் பாருங்கள் காசுமீரில் 1987ல் இருந்து 2010 சூலை வரையிலான தகவல்கள் இவை. 2010 சூலையிலிருந்து இறந்த பொதுமக்களின் எண்ணிக்கையை மேலே நான் கொடுத்துள்ளேன்.
கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 93,214
விசாரணையில் இருக்கும் போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,969 கைது செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 1,17,117
விதவைகளாக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 22,726
அநாதையாக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 1,07,347
பாலியல் வல்லுறவுக்கு ஆக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 9,912
அதே போல படத்தில் வரும் ஒரு வசனம் விருமாண்டியின் தொடர்ச்சி என நினைக்கின்றேன். இனிமேல் இந்தியா பாகிசுதானுக்கு இடையே சண்டை கிடையாது, இருவருமே நட்பு நாடுகள் ஆகிட்டோம் அப்படின்னு சொன்னதுக்கு அப்புறம், நான் என் நண்பனை (சண்டையில்)கொன்ன பாகிசுதான் இராணுவ வீரனை தேடி போயி கொல்ல முடியாதில்லை என நீங்கள் சொல்வீர்கள். இதே கேள்வியை அங்க இருக்கிற பாகிசுதானைச் சேர்ந்த இராணுவ வீரனும் கேட்கலாமே. இந்தக் கேள்வி உங்கள் தரப்பில் சரி என்றால், அவர்களது தரப்பிலும் சரி தானே. நான் தெரியாம தான் கேட்கிறேன் இதுக்கும் அந்தக் காட்சிக்கும் என்ன தொடர்பு. இந்தப் படத்தில் வரும் மேற்கூறிய இரு காட்சிகளின் கருத்தியலில் தான் இந்துத்துவ மதவெறியர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அப்படின்னா நீங்க யாரு நண்பர்.கமல் அவர்களே? உங்களை எல்லாம் நாத்திகவாதி எனக் கூறுகின்றார்களே. அதெல்லாம் பொய், நீங்கள் ஒரு இந்துத்துவ வெறியர் அப்படின்னு இந்த இரண்டு காட்சிகள் சொல்லுதே, இதற்கு உங்கள் பதில் என்ன நண்பர். கமல் அவர்களே.
அப்புறம் தமிழ் தெருப்பொறுக்கும், மெல்லச்சாவும் என்ற வசனங்கள் தேவையா, இல்லை தேவையான்னு கேட்கிறேன், கேட்டா என்ன சொல்லுவீங்க தமிழ் மெல்லச் சாவும் என பாரதி தாசனே கூறிவிட்டார், அவர் கூறிய இடமும் நீங்கள் கூறிய இடமும் ஒன்றா நண்பர்.கமல். அதென்ன தமிழ் தெருப்பொறுக்கும்? புரியலை உங்களை கதை, வசனம் எழுதவிட்டால் இனி தமிழ் தெருப்பொறுக்கும் என மறைமுகமாக ஏதும் சொல்ல வருகின்றார்களா?. இதில் ஈழத்தமிழ் இனத்தை கேவலப்படுத்தி இருக்கீங்க. இதுக்கு கொஞ்சம் பின்னாடி யோசிச்சு பார்த்தோம்னா, பாரதி ராசா தனது பத்ம சிறீ விருதை இந்திய அரசிடம் திருப்பிக் கொடுத்த போது(ஈழத்தில் போர் உச்ச நிலையில் இருந்த காலகட்டம், காரணம் இந்தியா தான் அந்த போரை நடத்துகின்றது எனக்கூறி, அதை பின்னாட்களில் மன்மோகன் சிங் சென்னையிலேயே ஒப்புக்கொண்டார்) உங்களையும் சூடு, சொரணையோடு பத்ம சிறீ விருதை திருப்பி தரச் சொல்லியும், அய்ஃபா (iifa) விருதுகள் வழங்கும் விழாவை இனப்படுகொலை இலங்கையில் நட த்தும் FICCIயின் தென்னிந்திய இயக்குநராக இருக்கும் உங்களை அந்த பதவியில் இருந்து விலகக்கோரியும் சென்னையில் மே 17 இயக்கமும், மற்ற பிற இயக்கங்களும் போராடின, அவர்களை கூட நீங்கள் சிறு அலை எனக் கூறியதாக ஞாபகம். ஒருவேளை இதை மனதில் வைத்துக்கொண்டு தான் நீங்கள் படத்தில் வேண்டுமென்றே அப்படி ஒரு காட்சியை வைத்து, ஈழத்தமிழர்களை கேவலப்படுத்துகின்றீர்களோ என என் உள்ளம் எண்ணுவதை என்னால் தடுக்க இயலவில்லை. மே 15, 16,17 என்ற மூன்று நாட்களில் மட்டும் ஒவ்வொரு நாளும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்கள் என ஐ.நா கூறுகின்றது. அவர்களுக்கு எதிராக இனப்படுகொலை இலங்கை மேற்கொண்ட போர்க்குற்றங்கள் ஒவ்வொன்றாக வெளிவரும் இன்றைய நிலையில் இப்படி ஒரு காட்சியை நீங்கள் வைத்ததால் நீங்களும் ஒரு ஐந்தாம் படையோ என்ற கேள்வி எழுகின்றது.
நன்றி : நற்றமிழன்
மன்மதன் அம்பு அருமையான நகைச்சுவைப் படமாக இருந்திருக்க வேண்டியது. ஆனால் நீங்கள் வைத்த சில கருத்துகள் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத்தின் மீது எச்சில் உமிழ்வது போல உள்ளது. இப்படிப்பட்ட ஒரு படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியது நீங்கள் தான் என்பதை நான் முதலில் உங்களைத் தொடரும் இரசிககண்மணிகளுக்கு தெரியப்படுத்தி விடுகின்றேன். ஒருவேளை நீங்கள் இதில் நடித்தவர் மட்டுமே, இந்தப்படத்தின் கதை, வசனத்தில் எல்லாம் உங்களுக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் இருந்திருக்கலாம் என அவர்கள் எண்ணக்கூடும்.
காசுமீரிகளின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் நீங்கள் முதலில் எச்சில் உமிழ ஆரம்பிக்கின்றீர்கள். ஆம், காசுமீரி தீவிரவாதிகள் ஒருவன் தான் படத்தில் உங்களின் கதாநாயகியையும், அவரது தந்தையையும் கடத்தி வைத்திருப்பதாக கூறுகின்றீர்கள். படத்தின் கதைப்படி இது ஒரு மூன்று வருடம் முன்னர் நடக்கின்றது. அதாவது 2009ல் நீங்கள் இந்தக் கதையை எழுதியிருந்தால் 2006ல் அப்படி ஒரு நிகழ்வு காசுமீரில் நடந்திருக்க வேண்டும். குறிப்பாக 2006ல் அப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை என்கிறது என் ஆய்வு. காசுமீர் என்ற உடனே தீவிரவாதிகள் என்ற எண்ணத்தை உங்களது படத்தில் வரும் இந்தக் காட்சியும் மக்களின் மனதில் உருவாக்கும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அப்புறம் எதற்கு இப்படி ஒரு காட்சியை நீங்கள் படத்தில் வைத்தீர்கள் என நான் உங்களை கேட்கலாம் என நினைக்கின்றேன். ஏன் காசுமீரில் தீவிரவாதம் உருவானது என நீங்கள் இதுவரை யோசித்ததே கிடையாதா? 1987 தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை மூன்றாண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைத்து கொடுமை படுத்தி(1), மக்களின் கடைசி நம்பிக்கையான தேர்தல் வழியையும் அடைத்து அவர்களின் கைகளில் ஆயுதங்களை திணித்ததே ஆக்கிரமிப்பு செய்யும் இந்தியா தானே. இது உங்களுக்கு தெரிந்திருக்குமே. இதன் பின்னால் தானே அங்கே ஆயுதப் போராட்டம், தீவிரவாதம் எல்லாமே. சரி அதை எல்லாம் விடுங்கள். கடந்த 2010ல் மக்களனைவரும் வீதிக்கு வந்து கற்களின் மூலம் தங்களின் சோகக்கதைகளை உலகத்தாரிடம் கூறியதற்கு பரிசாக 113 சிறுவர், சிறுமியர்கள் இந்திய ஆயுதப் படையினரால் கொல்லப்பட்டார்களே. கடந்த வருடத்தில் போராளிக்குழுக்கள் தாக்குதலால் இறந்தவர்களை விட பன்மடங்கு மக்கள் இந்திய ஆயுதப்படை தாக்கியதால் இறந்தார்கள் என எல்லா ஊடகங்களும் தமுக்கு அடிக்காத குறையாக கூறினார்களே, அதெல்லாம் உங்கள் காதுகளில் விழவில்லையா, இல்லை விழாதது போல் நடிக்கின்றீர்களா? அங்குள்ள களநிலைமை இவ்வாறு இருக்கையில் நீங்கள் இந்தப் படத்தில் வைத்திருக்கும் அந்தக் காட்சி அங்கு போராடுகின்ற மக்களின் முகத்தில் எச்சில் உமிழும் செயல் என்றால் அது மிகையாகது என நான் நினைக்கின்றேன். அதே போல இங்கே நான் கொடுக்கின்ற தகவல்களை எல்லாம் பாருங்கள் காசுமீரில் 1987ல் இருந்து 2010 சூலை வரையிலான தகவல்கள் இவை. 2010 சூலையிலிருந்து இறந்த பொதுமக்களின் எண்ணிக்கையை மேலே நான் கொடுத்துள்ளேன்.
கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 93,214
விசாரணையில் இருக்கும் போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,969 கைது செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 1,17,117
விதவைகளாக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 22,726
அநாதையாக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 1,07,347
பாலியல் வல்லுறவுக்கு ஆக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 9,912
அப்புறம் தமிழ் தெருப்பொறுக்கும், மெல்லச்சாவும் என்ற வசனங்கள் தேவையா, இல்லை தேவையான்னு கேட்கிறேன், கேட்டா என்ன சொல்லுவீங்க தமிழ் மெல்லச் சாவும் என பாரதி தாசனே கூறிவிட்டார், அவர் கூறிய இடமும் நீங்கள் கூறிய இடமும் ஒன்றா நண்பர்.கமல். அதென்ன தமிழ் தெருப்பொறுக்கும்? புரியலை உங்களை கதை, வசனம் எழுதவிட்டால் இனி தமிழ் தெருப்பொறுக்கும் என மறைமுகமாக ஏதும் சொல்ல வருகின்றார்களா?. இதில் ஈழத்தமிழ் இனத்தை கேவலப்படுத்தி இருக்கீங்க. இதுக்கு கொஞ்சம் பின்னாடி யோசிச்சு பார்த்தோம்னா, பாரதி ராசா தனது பத்ம சிறீ விருதை இந்திய அரசிடம் திருப்பிக் கொடுத்த போது(ஈழத்தில் போர் உச்ச நிலையில் இருந்த காலகட்டம், காரணம் இந்தியா தான் அந்த போரை நடத்துகின்றது எனக்கூறி, அதை பின்னாட்களில் மன்மோகன் சிங் சென்னையிலேயே ஒப்புக்கொண்டார்) உங்களையும் சூடு, சொரணையோடு பத்ம சிறீ விருதை திருப்பி தரச் சொல்லியும், அய்ஃபா (iifa) விருதுகள் வழங்கும் விழாவை இனப்படுகொலை இலங்கையில் நட த்தும் FICCIயின் தென்னிந்திய இயக்குநராக இருக்கும் உங்களை அந்த பதவியில் இருந்து விலகக்கோரியும் சென்னையில் மே 17 இயக்கமும், மற்ற பிற இயக்கங்களும் போராடின, அவர்களை கூட நீங்கள் சிறு அலை எனக் கூறியதாக ஞாபகம். ஒருவேளை இதை மனதில் வைத்துக்கொண்டு தான் நீங்கள் படத்தில் வேண்டுமென்றே அப்படி ஒரு காட்சியை வைத்து, ஈழத்தமிழர்களை கேவலப்படுத்துகின்றீர்களோ என என் உள்ளம் எண்ணுவதை என்னால் தடுக்க இயலவில்லை. மே 15, 16,17 என்ற மூன்று நாட்களில் மட்டும் ஒவ்வொரு நாளும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்கள் என ஐ.நா கூறுகின்றது. அவர்களுக்கு எதிராக இனப்படுகொலை இலங்கை மேற்கொண்ட போர்க்குற்றங்கள் ஒவ்வொன்றாக வெளிவரும் இன்றைய நிலையில் இப்படி ஒரு காட்சியை நீங்கள் வைத்ததால் நீங்களும் ஒரு ஐந்தாம் படையோ என்ற கேள்வி எழுகின்றது.
எனது நண்பர்கள் சொல்லுகின்றார்கள் நீங்கள் பகுத்தறிவுவாதியாம். இப்படிப்பட்ட பகுத்தறிவுவாதியா “குப்பனுக்கும், சுப்பனுக்கும் அறிவு இல்லை” என கூறுவார்(உன்னைப் போல் ஒருவன்)? மேற்கூறிய பெயர்களை எந்த ஒரு சமூகம் வைக்கும் என்பதை நான் உங்களுக்கு விலக்கத்தேவை இல்லை என நினைக்கின்றேன். மற்றுமொரு உதாரணம் எங்கள் சமூகத்திலும் இப்பொழுது படித்த ஆட்களெல்லாம் இருக்கின்றார்கள் என தசாவதாரம் படத்தில் நீங்கள் கூறுவீர்கள். உங்களது இந்தக் கூற்றின் படி முன்னாட்களில் அந்த சமூகம் படிப்பறிவில்லாத சமூகம், அதற்கு அவர்கள் தான் காரணம் என சொல்ல வருகின்றீர்கள். மெத்த படித்த உங்களைப் போன்ற ‘பகுத்தறிவுவாதி’ இப்படி சொல்வது முறையா? 1937வரை மருத்துவ நுழைவுத் தேர்வு சமசுகிருதத்தில் இருந்தது உங்களுக்கு தெரிந்திருக்குமே நண்பர்.கமல். அந்த காலகட்டத்தில் சமசுகிருதம் தெரிந்தவர்கள் தமிழ்நாட்டில் மூன்று விழுக்காடு தானே. அப்பொழுது யார் மருத்துவம் படித்திருப்பார்கள் ? ஒரு சமூகத்தை நீங்கள் குறிவைத்து தாக்குகின்றீர்களோ என என்னுள் அச்சம் எழுவதை என்னாள் தவிர்க்க முடியவில்லை நண்பர்.கமல் அவர்களே. உடனே உங்கள் நற்பணி மன்ற நண்பர்கள்( அதாவது இரசிகர்கள்), இதற்கும் கமலுக்கும் என்னத் தொடர்பு, அவர் வெறும் நடிகர் தானே என விரைந்தோடி வந்து என்னைக் கேட்கலாம். தசாவதார படத்தின் கதை, வசனம் எழுதியது அவர் தான், உன்னைப் போல் ஒருவன் படத்தின் கதை, வசனம் எழுதிய குழுவில் கமலும் ஒருவர். இது போன்ற கருத்துகளினால் நீங்கள் ஒரு பகுத்தறிவுவாதியா ? என உங்களை நான் கேட்பது சரி என்று உங்களுக்கு தெரியும். அப்படியே உங்கள் கண்மனிகளுக்கும் சொல்லிவிடுங்கள்.
பின்குறிப்பு: இந்த தலைப்பு உங்கள் மனதை புண்படுத்தவோ, அல்லது உங்கள் இரசிக கண்மணிகளின் உள்ளத்தை புண்படுத்தவோ நான் வைக்கவில்லை. நீங்கள் என்ன காரணத்திற்காக உங்கள் படத்தில் ஒரு ஈழத்தமிழர் கூறுவதாக இப்படி ஒரு வரியை வைத்தீர்களோ, அதே நோக்கத்தில் தான் நானும் இதை வைத்துள்ளேன். பொதுவாக நான் திரைப்படங்களை பற்றி எழுதுவது கிடையாது, ஆனால் இந்தப் பதிவு நீங்கள் தேசிய இனங்களின் போராட்டங்களைக் கொச்சைப்படுத்திய காரணத்தினாலும், குறிப்பிட்ட சமூகத்தை நீங்கள் தொடர்ந்து தாக்கி வருவதாலும் இதைப்பற்றி நான் எழுதவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். நன்றி : நற்றமிழன்
செவ்வாய், 7 டிசம்பர், 2010
அரங்கநாதரையும் வரலட்சுமியையும் இப்படியா அவமானப்படுத்துவது? – கமலுக்கு கண்டனம்
சினிமா பாடலில் அரங்கநாத சுவாமியையும், வரலட்சுமி தேவியையும் கேவலப்படுத்தி எழுதியுள்ளார் கமல் என கண்டனக் குரல் எழுந்துள்ளது.
மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் மிகவும் அறுவறுக்கத்தக்கதாகவும் ஆபாசமாகவும் உள்ளதாகவும், இதில் அரங்கநாதர் மற்றும் வரலட்சும் ஆகிய தெய்வங்களை தேவையின்றி இழிவுபடுத்துவதாகவம் கூறி, இந்து மக்கள் கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இப்படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி, இயக்குனர் ரவிக்குமார், ஹீரோ கமல்ஹாஸன், நடிகை த்ரிஷா மற்றும் இசையமைப்பாளருக்குஇந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணன்.
அந்த நோட்டீஸில் இப்படிக் குறிப்பிட்டுள்ளனர்:
மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கண்ணோடு கண்ணை கலந்தால் என்றால் என்ற பாடல், இந்து சமயத்தை வழிபடுபவர்களையும், கோடி கணக்கான இந்து சமயத்தை சார்ந்தவர்களையும், இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் மனவருத்தம் அடையச் செய்துள்ளது.
நமது நாட்டின் சட்டங்களையும், மதஉணர்வுகளையும் புண்படுத்த கூடாது என்ற நோக்கில் இந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்துள்ள கருத்து, எந்த பிரிவு மக்களிடையேயும் வேறுபாட்டையும், சகிப்பு தன்மைக்கு ஊறு நிகழா வண்ணம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.
இந்த பாடலில் இடம்பெற்றுள்ள அரங்கநாதர் மற்றும் ஸ்ரீவரலட்சுமி குறித்த வரிகள் இந்து மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளன. எனவே மேற்படி பாடல் ஒலி,ஒளி எந்தவடிவத்திலும் படத்தில் இடம்பெறக்கூடாது. அதனை மீறி செயல்படும் பட்சத்தில், சட்டப்போரைச் சந்திக்க வேண்டி வரும்”, என்று கூறியுள்ளார்.
நன்றி : நெருடல் இணையம்

செவ்வாய், 9 நவம்பர், 2010
கமலஹாசனின் பகுத்தறிவு பேச்சு அலறும் இந்துத்துவாக்கள் !
விஜய் டிவி தீபாவளி நிகழ்ச்சியாக காபி வித் அனுவில் கமல் நிகழ்ச்சியில் கமல் பேசிய பகுத்தறிவு கருத்துகளை தினமலர் யாரோ ஒரு பாண்டே என்பவர் மூலம் சர்சை ஆக்க முயன்றுள்ளது. கமல் நிகழ்ச்சியில் என்ன சொன்னார் ?
1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது,ஆபாசமானது; அர்த்தமற்றது.
2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர்.
3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக்
குடித்துக்கொள்கிறார். என்ன தப்பு?
4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர்.
இதற்கு பாண்டே பதில் கூறுவதாக உளறி இருக்கிறார்
1. படுக்கையறை உணர்வுகளை எப்போதுமே மறைத்து வைக்கத் தெரியாதவர் கமல்ஹாசன். அவருடைய உணர்வுகளும், உறவுகளும் உலகறிந்த விஷயம். அப்படிப்பட்டவர், படுக்கையறை ரகசியங்களை பிறரோடு பகிர்ந்துகொள்ளக் கூடாதுஎன பேசியதே வியப்பு. இருந்தாலும், ஆத்திகவாதிகள் அதை அடக்கி வாசிக்கவேண்டும் என்றால், நாத்திகவாதி ஏன் அதைப் பற்றி, "டிவி'யில் பிரஸ்தாபிக்கிறார்?தனது நாத்திக உணர்வுகளை, தனக்குள்ளேயே வைத்திருக்க வேண்டியது தானே.இவரைப் போன்ற சிலர் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி இத்தகையபிரசாரங்களில் ஈடுபடுவதால் தான், ஆத்திகமும் பீறிட்டு எழ வேண்டியிருக்கிறது.
கமல் போன்ற பெரிய நடிகர்கள் முதல் குத்தாட்ட நடிகைகள் வரை அனைவரின் படுக்கை அறைகளை எட்டிப் பார்த்து திரைச் செய்திகள், துணுக்கு மூட்டை, கிசு கிசு என்பதாக எழுதுவது தினமலர் போன்ற செய்தி / வார இதழ்கள் தன்னிச்சையாக செய்வதே அன்றி, எந்த ஒரு நடிகரும் / நடிகையும் தான் இன்னாருடன் குடித்தனம் நடந்துகிறேன், (கள்ள) உறவு வைத்திருக்கிறேன் என்பதாகச் சொல்லுவதில்லை, இப்பவும் கூட பிரபுதேவா - நயந்தாரா ஆகியோர் பின்னால் மோப்ப நாய்களைப் போல் அலைகிறார்கள். கடவுள் வியாபாரத்தில் பிராச்சாரம் செய்வது தனிமனிதர் ஒருவரின் உரிமை என்றால் அதை மறுப்பதும் அதன் கேடுகள் உணர்ந்து, பிடிக்காத தனிமனிதனின் உரிமை ஆகும். கமல் பொதுத்தளத்தில் நாத்திக பகுத்தறிவு பேசுவது ஆன்மிக வா(ந்)திகளுக்கு பொது இடத்தில் பேசும் உரிமை போன்றது தான்.
2. உலக நாயகனாக இன்று பரிணமித்திருக்கும் நடிகர் கமல், தனது சொந்த ஊர் எதுஎன்று கேட்டால், பரமக்குடியைத் தானே குறிப்பிடுவார்? "யாதும் ஊரே; யாவரும்கேளிர்' என தத்துவம் உதிர்ப்பாரோ. பிரபஞ்சம் முழுக்க இறைவன் வியாபித்திருந்தாலும், தெய்வ சாந்நித்தியம் குவிந்திருக்கும் இடங்கள் என்று சிலஉண்டு. திருப்பதி அவற்றில் ஒன்று. கமலின், "மன்மதன் அன்பு' படம்வெளியாகிவிட்டால், அவரவர் இருந்த இடத்தில் இருந்தே பார்த்துவிட முடியுமா? தியேட்டருக்குச் சென்று தானே பார்க்க வேண்டும்!
எந்த ஒரு தேசியவியாதியும் தான் தமிழன் என்றே சொல்லிக் கொள்ளாத போது, தான் பரமகுடிக்காரன் தமிழகத்தைச் சேர்ந்தவன் என்று சொல்வதில் என்ன தப்பு ? பிரபஞ்ச,ம் முழுவதும் கடவுள் இருக்கிறா இல்லையா என்பதே பிரச்சனை இல்லை, ஒரு மசூதியில் கடவுள் இருப்பதையோ, காஃபாவில் கடவுள் இருப்பதையோ, எருசலேமில் ஏசு அவதரித்தார் என்பதையோ இந்த இந்துத்துவாக்கள் முதலில் நம்புவார்களா ? அது எப்படிங்க பிரபஞ்சம் முழுவதும் இருக்கும் கடவுள் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் இருக்க மாட்டார்?. திரைபடம் திரை அரங்கு போய் தான் பார்க்க வேண்டுமா ? டிவி பெட்டியில் பார்க்க முடியாதா ? வெளிநாடுகளில் படம் வெளியாகும் அன்றே ஒரிஜினல் டிவிடியும் வெளி ஆகிவிடுகிறதே. பாண்டேக்கள் ஒப்பிடு என்றால் திரைப்படத்தையும் கடவுளையும் ஒப்பிடுவாங்க, அதையே மற்றவர்கள் அரசியல் தலைவர்களையும் கடவுளையும் ஒப்பிட்டால் இந்து மதத்தை அவமதித்துவிட்டார்கள் அலறுவார்கள்
3. பெருந்தெய்வங்கள் பற்றியும், குறுந்தெய்வங்கள் பற்றியும், தெய்வ நம்பிக்கையே இல்லாத கமலுக்கு என்ன கவலை? யார், யாரைக் கும்பிட்டால் என்ன? இவர் ஏன்குறுந்தெய்வங்களுக்காக வக்காலத்து வாங்குகிறார்? அப்படி என்றால்,குறுந்தெய்வங்கள் இருப்பதை ஒப்புக்கொள்கிறாரா? இவர் குறிப்பிடுவது போல,எங்கேயாவது குறுந்தெய்வங்களுக்கு, அவமரியாதை நடந்திருக்கிறதா? அல்லது,சுடலை மாடசாமி சாராயம் குடிப்பதைப் பற்றி, பெருந்தெய்வங்களைப் போற்றும்ஆன்மிகத் தலைவர்கள் யாராவது இவரிடம் ஆதங்கப்பட்டார்களா?
இதே போன்று தான் ஆலய நுழைவு போராட்டம் நடத்திய திகவினரிடமும் கடிந்து கொண்டார்கள், நீ சூத்திரன் இல்லை என்றால் மூடிக் கொண்டு போக வேண்டியது தானே, உங்களுக்கு தான் நால்வருண கோட்பாட்டின் மீது நம்பிக்கை இல்லையே, எங்களைப் பொறுத்த அளவில் சூத்திரன் உண்டு அவன் தீண்டத் தகாதவன் கோவிலுக்குள் விடமாட்டோம் என்றார்கள். ஒரு அநியாயத்தை தட்டிக்கேட்க பாதிக்கப்பட்டவனாகத்தான் இருக்கனுமாம். பாதிக்கப்பட்டவனுக்காக எவரும் பேசக் கூடாதாம். அடங்கொக்கா மக்கா ஜெயலலிதா ஆடுகோழி பலி இட தடை போட்டத்தை இவனுங்க வசதியாக மறந்துட்டு நாமும் மறந்திருப்போம் என்றே பேசுறானுங்க. ஆடுகோழி வெட்ட சுடுகாட்டிற்கெல்லாம் சென்று மறைந்து நின்று பலி இட்ட நிகழ்வும் அதை தமிழக போலிசார் ஒட ஓட விரட்டி பிடித்து வழக்கு பதிவு செய்த நிகழ்வும் தமிழகத்தில் தானே நடந்தது. விராலி மலை முருகனுக்கு சுருட்டு படைக்கக் கூடாது என்று இன்னும் தடை வரவில்லை :). ஆன்மிகத் தலைவர்கள் ஆதங்கப்பட்டு ஜெ வை அத்தகைய சட்டம் போடுவது வழிபாட்டு உரிமையை பறிப்பதாகும் என்று சொல்லி தடுத்திருக்கலாமே. இல்லாத ஒன்றை இந்து மதம் என்பது போலவே பார்பனர் வழிபாட்டு முறைகளை அனைவருக்கும் பொதுவானது என்று கூறுவது முட்டாள் தனமன்றோ.
4. ஆகம விதிகள் என்பது, அறிவியலை மையமாகக் கொண்டது. ஃபைவ் ஸ்டார்ஓட்டலில் ரூம் போட்டு, பலான பலான சரக்குகளோடு எழுதப்படும் திரைக்கதைபோன்றது அல்ல. அது தவிர, தங்கள் கோவில் எப்படி கட்டப்பட வேண்டும் என்பது,கோவில் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயமே தவிர,பகுத்தறிவுப் புலிகளுக்கு இதில் வேலை இல்லை. தன்னுடைய வீட்டை, என்விருப்பப்படி கட்டுவாரா? தன் விருப்பப்படி கட்டுவாரா கமல்? "ஏழைகுடிசைவாசிகளின் ஏக்கத்தைப் புறக்கணித்து, பங்களா கட்டிக்கொண்டுள்ளார் கமல்'என புகார் சொன்னால், அதை நியாயம் என்பாரா ?
ஆகமவிதி கோவி(லி)ல் கருவரையில் தான் தேவநாதன் ஆணுறைகளை கழட்டிப் போட்டான். ஆகமவிதிகள் எதையும் கடைபிடிக்காத கண்ணப்பனுக்குத்தான் அருளினான் என்று பெரிய புராணத்திலேயே வருகிறதே. சிவ ஆகமங்கள் அனைத்தும் சிதம்பரத்தில் கறையான் அரிக்க பூட்டப்பட்டு நம்பியாண்டார் நம்பி தலைமையில் அதை மீட்டெடுத்தான் இராஜராஜன் என்று தான் வரலாறு சொல்லுகிறதே. ஆகம விதி என்றால் என்ன ? தற்போதைக்கு பார்பனர் வடமொழியில் அருச்சனை செய்வது அதுவும் அவர்கள் மட்டுமே செய்வது இதைத்தானே ஆகமம் என்று கூறுகின்றார்கள். முக்தி என்ற பெயரில் நந்தனார் எரிக்கப்பட்டதாக...இவர்களின் ஆகமவிதிப்படி சூத்திரன் கோவிலுக்குள் நுழையக்கூடாது. இது போன்ற ஆகமவிதிகளை அடுப்பில் பொசுக்கி ஆண்டுகள் கடந்துவிட்டதே.
நன்றி : காலம்

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010
ராஜபக்சேவுக்காக ஆள்பிடிக்கும் அசின்! - காய்ச்சி எடுக்கும் அமீர்
இலங்கைக்குப் போயிருக்கும் அசினை வைத்து ஆயிரம் அரசியல் நடக்கிறது. அவரை வைத்து இங்குள்ள சூர்யா போன்ற நடிகர்களை வளைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது ராஜபக்சே அரசு, என்றார் இயக்குநர் அமீர்.
ஈழப் பிரச்சினைக்காக குரல் கொடுத்து முதல் முறையாகக் கைதானவர்கள் இயக்குநர் அமீரும் சீமானும்தான். இப்போது மீண்டும் சீமான் சிறைப்பட்டுள்ளார். அவரை மீட்க இயக்குநர் சங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்விக்கு, "சீமான் கைதுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் கைது செய்யப்பட்ட விவகாரம், கட்சி ரீதியானது. அதை அவர் கட்சி ரீதியாகத்தான் அணுகுவார்!'' என்று பதில் கூறிவிட்டார் இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா.
அவரது இந்தப் பேச்சு ஈழ ஆதரவு இயக்குநர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. முன்பு சீமான், அமீர் இருவரும் கைதானபோது, அவர்களை மீட்க மொத்தத் திரைத் துறையும் போராடியது. ஆனால், இப்போது கைதாகி இருக்கும் சீமானுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பக்கூட திரைத் துறை தயாராக இல்லை. இப்படியொரு நிலையில் சீமானுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் பாரதிராஜா பேசி இருப்பது, திரைத் துறைக்குள் பெரும் புகைச்சலைக் கிளப்பியுள்ளது.
ஏற்கெனவே சீமானோடு கைதானவரும், இயக்குநர்கள் சங்க இணைச் செயலாளருமான இயக்குநர் அமீர் இதுகுறித்து 'ஜூனியர் விகடனுக்கு' அளித்துள்ள பேட்டி:
ஈழப் போர் நடந்த நேரத்தில் ஆர்ப்பாட்டம், உண்ணா விரதம் என பெரிய அளவில் போராடிய திரைத் துறை, இப்போது ஈழ விவகாரத்தையே அடியோடு மறந்துவிட்டதே?
''போர் நிறுத்தப்பட வேண்டும். ஈழ மக்களும் போராளித் தலைவர் பிரபாகரனும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் உணர்வுப் போராட்டமாக இருந்தது. எத்தனையோ விதமான போராட்டங்களை நடத்தியும்,
முத்துக்குமார் போன்ற வாழைக் குருத்துகளை வாரிக் கொடுத்தும், நம்மால் போரைத் தடுக்க முடியவில்லை. உலகமே வேடிக்கை பார்க்க... ஈழமே இழவுக் காடாகிவிட்டது.
புலிகள் இயக்கம் இதுவரை காணாத வீழ்ச்சியை அடைந்துவிட்டது. புலித் தலைவரின் முகத்தைப் போன்ற பிரேதத்தைக் காட்டி, எழ முடியாத அளவுக்கு தமிழ் மக்களின் மனதை சிங்களச் சதி வீழ்த்திவிட்டது.
திரைத் துறையினரும் மக்களின் ஓர் அங்கம்தான். ஈழத்தின் வீழ்ச்சிதான் திரையுலகினரை அடியோடு முடக்கிப் போட்டதே தவிர, ஈழ உணர்வு இற்றுப் போய்விட்டதாகச் சொல்ல முடியாது.
சுதந்திரத்துக்காகப் போராடிய தமிழ் மக்களை சோற்றுக்காகப் போராடவைத்து, இனி தனி ஈழ எண்ணமே அவர்களுக்கு எழாதபடி சிங்கள அரசு செய்துவிட்டது.
முள்வேலிக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு விடிவு பிறக்கச் செய்ய இங்கே பெரிதான போராட்டங்கள் இல்லை. ஒருமித்த கைகோர்ப்பும் இல்லை. 'இனி ஈழ விடிவுக்கு வழியே இல்லை' என மக்களுக்குள் உண்டாகி இருக்கும் இயலாமையும் சோகமும் அவர்களை அமைதியாக்கிவிட்டது. அவர்களை மீண்டும் உசுப்ப... இங்கே யாரும் இல்லை!''
ஆரம்பத்தில் ஈழ விவகாரத்துக்காக சீமானோடு ஜெயிலுக்குப் போனவர் நீங்கள். 'நாம் தமிழர்' இயக்கத்தை தொடங்கி சீமான் இன்று வரை போராடிவரும் நிலையில், உங்களைப் போன்றவர்கள் அப்படியே அமைதியாகிவிட்டீர்களே? அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உங்களை அந்த அளவுக்குப் பயமுறுத்தி இருக்கிறதா?
''ஈழ விவகாரத்துக்காகத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த ராமேஸ்வரம்
பேரணியில் கலந்துகொண்டு நான் பேசினேன். அதேபோல் முதல்வர், துணை முதல்வர் நடத்திய மனிதச் சங்கிலி ஊர்வலத்திலும் முதல் ஆளாகக் கலந்து கொண்டேன். போராட்டங்களை என் தலைமையில் நடத்துகிற அளவுக்கோ, பெரும் கூட்டத்தைத் திரட்டுகிற அளவுக்கோ எனக்கு சக்தி இல்லை. ஈழத்துக்காக தனி இயக்கம் தொடங்கி நடத்துவதற்கான தகுதி என்னிடம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். சுய பரிசோதனை இல்லாமல் 'நானும் களத்தில்' எனச் சொல்லி என்னால் நாடகமாட முடியாது.
தனி இயக்கம் தொடங்கி நடத்துகிற வல்லமையும் ஆற்றலும் தனக்கு இருப்பதாக சீமான் நினைக்கிறார். அதற்காகப் போராடுகிறார். ஆனால், என்னால் முடிந்தது ஆக்கபூர்வப் போராட்டங்களுக்கு தனிப்பட்ட எனது பங்களிப்பைச் செய்வது மட்டுமே. நாளைக்கே முள்வேலி மக்களுக்காக ஒரு போராட்டத்தை யாராவது நடத்தட்டும். அதில் அழையாத ஆளாக நான் பங்கேற்கத் தயாராக இருக்கிறேன். மற்றபடி, அரசுத் தரப்பில் இருந்து எனக்கு எவ்வித மிரட்டலும் இல்லை. எத்தகைய மிரட்டலுக்கும் நான் அஞ்சுகிற ஆளும் இல்லை!''
சீமானின் போராட்டம்
அரசியல் சார்ந்தது. அவருடைய கைதுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாரதிராஜா சொல்லி இருக்கிறாரே?
''ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒவ்வொரு தலைவர் உருவெடுப்பார். இதுதான் வரலாறு. அதில் தவிர்க்க முடியாத சக்தியாக ஈழ எழுச்சிக்கு என இப்போது சிலர் உருவெடுக்கிறார்கள். கைக்கெட்டும் தூரத்தில் ரத்த உறவுகள் தத்தளிக்கும் நிலையை எண்ணி எல்லோருடைய ஈரக் குலையும் துடிக்கத்தான் செய்கிறது.
ஆனால், எல்லோராலும் வீதிக்கு வர முடியவில்லை. செவிகளைக் கிழிக்கும் அளவுக்கு முழங்கி, தார்க் குச்சி போட்டு தமிழர்களைத் தயார்படுத்துகிற வேகம் சீமானிடம் தெரிகிறது. அதற்குக் கைகொடுக்காவிட்டாலும், அவரைக் காயப்படுத்தாமல் இருப்பதுதான் இப்போது அவசியமானது.
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து முழங்கியதால்தானே சீமான் சிறைக்குப் போனார்! இதே முழக்கத்தைத்தானே கடிதம் வாயிலாக தமிழக முதல்வரும் மத்திய அரசு
க்கு உரைக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்
இதற்காகத்தானே இலங்கை தூதரகத்தையே பூட்டுவோம் என்கிறார். அப்பாவி மீனவர்கள் கொல்லப்படக் கூடாது என்கிற ஒரே நோக்கம்தான் எல்லோருக்கும். அதன் வார்த்தை வடிவங்கள்தான் வேறு. இதில் சீமானுக்கு மட்டும் எங்கே இருந்து அரசியல் வந்தது? அப்படியே அரசியலாக இருந்தாலும் அதற்கான விதையைப் போட்டது பாரதிராஜாதானே! அவரைப் பார்த்தும், அவருடைய ஆதங்கப் பேச்சைக் கேட்டும்தானே ஈழ உணர்வு எங்களுக்குள் வந்தது.
ஈழப் போர் தடுக்கப்படாததைக் கண்டித்து மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ பட்டத்தைத் தூக்கி வீசி தமிழனின் கோபம் எப்படிப்பட்டது என்பதை நிரூபித்த பாரதிராஜா, சீமான் கைது குறித்து இப்படிச் சொல்லலாமா?
பத்மஸ்ரீ பட்டத்தை வீசியதைக் காட்டிலும், மீனவர்களுக்காகக் குரல் கொடுத்தது ஆவேச மிகுதியா? கோபத்தையும் கொந்தளிப்பையும் கற்றுக்கொடுத்த பாரதிராஜா, இன்று எதற்காக இப்படி ஒரு வாதத்தை வைக்கிறார்? சீமான் கைது குறித்து அவர் உதிர்த்த வார்த்தைகளால் இணைய தளங்களில் 'பாரதிராஜாவா பசில் ராஜாவா?' என விவாதமே நடத்துகிறார்கள். உங்களைப் பின்பற்றி வளர்ந்தவர்களான நாங்கள் அதையெல்லாம் வெறுமனே வேடிக்கை பார்க்கக் கூடிய சூழலில் இருக்கிறோம்!''
உங்களின் 'யோகி' பட பாடல் கேசட் வெளியீட்டு விழாவில், 'இனி ஒரு வருடத்துக்கு எந்த விழா விலும் பேச மாட்டேன். ஈழத் துக்கத்துக்காகமௌனம் காக்கப்போகிறேன்' எனச் சொன்ன பாரதிராஜா முதல்வர் கலந்துகொண்ட விழாவில் அவரை வானளாவப்புகழ்ந்தாரே?
''இதே கேள்வியை பலரும் என்னிடம் கேட்கிறார்கள். மாபெரும் கலைஞராக, தமிழ் மண்ணை உரித்துக் காட்டிய படைப்பாளராக பாரதிராஜாவை மனதுக்குள் பூஜிக்கிறவர்கள்தான் நாங்கள். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் 'திரையுலகத் தமிழீழ ஆதரவுக் குழு' அமைத்து விவாதித்தபோது, அங்கே இருந்தவர் பாரதிராஜா! அங்கே அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக திரைத் துறையினர் பிரசாரம் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது. உடனே நான் எழுந்து, 'நாம் கட்சி நடத்தவில்லை. ஓட்டு கேட்பது நம் வேலையும் இல்லை' எனச் சொன்னேன். அவர்கள் ஏற்பாடு செய்த கூட்டங்களையும் தவிர்த்தேன். அன்றைக்கு அ.தி.மு.க. வெற்றிக்கு வித்திடும்விதமாக திரையுலகத் தமிழீழ ஆதரவுக் குழு போராடியதை பாரதிராஜா தடுத்திருக்கலாமே? ஏன் அதை பாரதிராஜா செய்யவில்லை?
'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என அன்று கோஷம் எழுப்பிய சீமானுக்கு ஈழ அரசியல் குறித்து பாரதிராஜா எடுத்துச் சொல்லி இருக்கலாமே? அன்று பாரதிராஜா ஏன் அதைச் செய்யவில்லை? அப்படிப்பட்ட அவர் இப்போது மனம்மாறி வேறு விதமாகப் பேசுகிறார்.
அப்போது 'இலை'க்காக சீமான் பேசியது அரசியல் சார்பற்ற ஒரு நடவடிக்கை என்றால், இப்போது 'ஈழம்' பற்றி பேசிவிட்டு சிறைக்குப் போயிருப்பது எப்படி அவருடைய கட்சி சார்ந்த நடவடிக்கையாக மட்டுமே இருக்க முடியும்? 'இலை'க்காக வலம்வந்த சீமானின் நடவடிக் கைகளில் அப்போதே எங்களுக்கு உடன்பாடு இல்லை!
மற்றபடி வசதிக்கேற்ப தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்பவர்களைப் பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை.
அசின் இலங்கைக்குப்போய் ஈழ மக்களை சந்தித்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்?
''ஐ.நா சபை பிரதிநிதிகளையே விரட்டி அடிக்கும் ராஜபக்ஷே அரசு, அசினுக்கு மட்டும் ஏன் வெற்றிலை பாக்கு வைக்கிறது? அசின் என்ன ஐ.நா-வையே மிஞ்சியதேவலோக தூதரா? நம்முடைய கைகளாலேயே நம் கண்ணைக் குத்தும் வேலையை அசின் மூலமாக கனகச்சிதமாக அரங்கேற்றுகிறது சிங்கள அரசு.
அசின் விவகாரத்தில் ஆயிரம் அரசியல் இருக்கிறது. சூர்யா உள்ளிட்ட நடிகர்களையும் ஈழ மக்கள் பார்க்க விரும்புவதாகச் சொல்லி, ஆள் பிடிக்கும் வேலையையும் அசின் செய்யத் தொடங்கி இருக்கிறார். அவரை அழகுப் பதுமையாக ஆராதிக்கும் தமிழக மக்கள் இதில் இருக்கும் அரசியலைப் புரிந்துகொள்ளவேண்டும்!''
சீமானை மீட்கும் முயற்சிகளில் உங்களைப்போன்ற திரை உலகத்தினர் ஈடுபடுவார்களா?
''யாரும் செய்ய மாட்டார்கள். இது சீமானுக்கும் தெரியும். சீமானின் தற்போதைய நடவடிக்கைகளை ஆதரிக்க இங்கே இருக்கும் உணர்வாளர்கள் தயாராக இல்லை. சீமானுடன் சிறையில் இருந்து அவருடைய மனவோட்டத்தை அறிந்தவனாகச் சொல்கிறேன்... சிறை ஒருபோதும் அவருடைய உணர்வைச் சிதைக்காது!''
லட்சக்கணக்கான மக்கள் முள்வேலிக்குள் முடக்கப் பட்டு இருக்கும் நிலையில், அவர்களின் மீட்சிக்காக சினிமா துறையினர் இனி எத்தகைய முயற்சிகளையும் எடுக்க மாட்டார்களா?
''பாக்கு தொடங்கி கோக் விளம்பரம் வரைக்கும் சினிமா தாண்டியும் நட்சத்திரங்கள் பிஸியாக இருப்பதற்கென்று ஆயிரம் வேலைகள் இருக்கின்றன. இருப்பினும், அவர்கள் போராட வந்துபோதுகூட, 'த்ரிஷாவோட டிரஸ்ஸை பார்த்தியா? விஜய்யோட ஷ¨வை பார்த்தியா?' என அப்போதும் நடிகர் களாகவே வேடிக்கை பார்த்தவர்கள்தானே நாம்? காவிரி பிரச்னை தொடங்கி,ஈழப் பிரச்னை வரைக்கும் ரஜினியையும் கமலையும் தொங்கித் தொங்கியே நாம் தோற்றுப்போனது போதும்! ஒவ்வொரு தமிழனும் உண்மையான உணர்வோடு வீதிக்கு வந்தால், நம் பின்னால் ரஜினியும் கமலும் கண்டிப்பாக நிற்பார்கள். தவிர்க்க முடியாத அந்தக் கட்டாயமே அவர்களை நம் பின்னால் அணி வகுக்கச் செய்யும்.
இந்த நேரத்தில் என் ஒரே கோரிக்கை... தயவு செய்து சினிமாவில் தலைவர்களைத் தேடும் வேலையை இனியும் செய்யாதீர்கள். காரணம், அதற்கான தகுதி இங்கே யாருக்கும் இல்லை!''
நன்றி- தட்ஸ் தமிழ்
ஈழப் பிரச்சினைக்காக குரல் கொடுத்து முதல் முறையாகக் கைதானவர்கள் இயக்குநர் அமீரும் சீமானும்தான். இப்போது மீண்டும் சீமான் சிறைப்பட்டுள்ளார். அவரை மீட்க இயக்குநர் சங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்விக்கு, "சீமான் கைதுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் கைது செய்யப்பட்ட விவகாரம், கட்சி ரீதியானது. அதை அவர் கட்சி ரீதியாகத்தான் அணுகுவார்!'' என்று பதில் கூறிவிட்டார் இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா.
அவரது இந்தப் பேச்சு ஈழ ஆதரவு இயக்குநர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. முன்பு சீமான், அமீர் இருவரும் கைதானபோது, அவர்களை மீட்க மொத்தத் திரைத் துறையும் போராடியது. ஆனால், இப்போது கைதாகி இருக்கும் சீமானுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பக்கூட திரைத் துறை தயாராக இல்லை. இப்படியொரு நிலையில் சீமானுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் பாரதிராஜா பேசி இருப்பது, திரைத் துறைக்குள் பெரும் புகைச்சலைக் கிளப்பியுள்ளது.
ஏற்கெனவே சீமானோடு கைதானவரும், இயக்குநர்கள் சங்க இணைச் செயலாளருமான இயக்குநர் அமீர் இதுகுறித்து 'ஜூனியர் விகடனுக்கு' அளித்துள்ள பேட்டி:
ஈழப் போர் நடந்த நேரத்தில் ஆர்ப்பாட்டம், உண்ணா விரதம் என பெரிய அளவில் போராடிய திரைத் துறை, இப்போது ஈழ விவகாரத்தையே அடியோடு மறந்துவிட்டதே?
''போர் நிறுத்தப்பட வேண்டும். ஈழ மக்களும் போராளித் தலைவர் பிரபாகரனும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் உணர்வுப் போராட்டமாக இருந்தது. எத்தனையோ விதமான போராட்டங்களை நடத்தியும்,
முத்துக்குமார் போன்ற வாழைக் குருத்துகளை வாரிக் கொடுத்தும், நம்மால் போரைத் தடுக்க முடியவில்லை. உலகமே வேடிக்கை பார்க்க... ஈழமே இழவுக் காடாகிவிட்டது.
புலிகள் இயக்கம் இதுவரை காணாத வீழ்ச்சியை அடைந்துவிட்டது. புலித் தலைவரின் முகத்தைப் போன்ற பிரேதத்தைக் காட்டி, எழ முடியாத அளவுக்கு தமிழ் மக்களின் மனதை சிங்களச் சதி வீழ்த்திவிட்டது.
திரைத் துறையினரும் மக்களின் ஓர் அங்கம்தான். ஈழத்தின் வீழ்ச்சிதான் திரையுலகினரை அடியோடு முடக்கிப் போட்டதே தவிர, ஈழ உணர்வு இற்றுப் போய்விட்டதாகச் சொல்ல முடியாது.
சுதந்திரத்துக்காகப் போராடிய தமிழ் மக்களை சோற்றுக்காகப் போராடவைத்து, இனி தனி ஈழ எண்ணமே அவர்களுக்கு எழாதபடி சிங்கள அரசு செய்துவிட்டது.
முள்வேலிக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு விடிவு பிறக்கச் செய்ய இங்கே பெரிதான போராட்டங்கள் இல்லை. ஒருமித்த கைகோர்ப்பும் இல்லை. 'இனி ஈழ விடிவுக்கு வழியே இல்லை' என மக்களுக்குள் உண்டாகி இருக்கும் இயலாமையும் சோகமும் அவர்களை அமைதியாக்கிவிட்டது. அவர்களை மீண்டும் உசுப்ப... இங்கே யாரும் இல்லை!''
ஆரம்பத்தில் ஈழ விவகாரத்துக்காக சீமானோடு ஜெயிலுக்குப் போனவர் நீங்கள். 'நாம் தமிழர்' இயக்கத்தை தொடங்கி சீமான் இன்று வரை போராடிவரும் நிலையில், உங்களைப் போன்றவர்கள் அப்படியே அமைதியாகிவிட்டீர்களே? அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உங்களை அந்த அளவுக்குப் பயமுறுத்தி இருக்கிறதா?
''ஈழ விவகாரத்துக்காகத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த ராமேஸ்வரம்
பேரணியில் கலந்துகொண்டு நான் பேசினேன். அதேபோல் முதல்வர், துணை முதல்வர் நடத்திய மனிதச் சங்கிலி ஊர்வலத்திலும் முதல் ஆளாகக் கலந்து கொண்டேன். போராட்டங்களை என் தலைமையில் நடத்துகிற அளவுக்கோ, பெரும் கூட்டத்தைத் திரட்டுகிற அளவுக்கோ எனக்கு சக்தி இல்லை. ஈழத்துக்காக தனி இயக்கம் தொடங்கி நடத்துவதற்கான தகுதி என்னிடம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். சுய பரிசோதனை இல்லாமல் 'நானும் களத்தில்' எனச் சொல்லி என்னால் நாடகமாட முடியாது.தனி இயக்கம் தொடங்கி நடத்துகிற வல்லமையும் ஆற்றலும் தனக்கு இருப்பதாக சீமான் நினைக்கிறார். அதற்காகப் போராடுகிறார். ஆனால், என்னால் முடிந்தது ஆக்கபூர்வப் போராட்டங்களுக்கு தனிப்பட்ட எனது பங்களிப்பைச் செய்வது மட்டுமே. நாளைக்கே முள்வேலி மக்களுக்காக ஒரு போராட்டத்தை யாராவது நடத்தட்டும். அதில் அழையாத ஆளாக நான் பங்கேற்கத் தயாராக இருக்கிறேன். மற்றபடி, அரசுத் தரப்பில் இருந்து எனக்கு எவ்வித மிரட்டலும் இல்லை. எத்தகைய மிரட்டலுக்கும் நான் அஞ்சுகிற ஆளும் இல்லை!''
சீமானின் போராட்டம்
அரசியல் சார்ந்தது. அவருடைய கைதுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாரதிராஜா சொல்லி இருக்கிறாரே?''ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒவ்வொரு தலைவர் உருவெடுப்பார். இதுதான் வரலாறு. அதில் தவிர்க்க முடியாத சக்தியாக ஈழ எழுச்சிக்கு என இப்போது சிலர் உருவெடுக்கிறார்கள். கைக்கெட்டும் தூரத்தில் ரத்த உறவுகள் தத்தளிக்கும் நிலையை எண்ணி எல்லோருடைய ஈரக் குலையும் துடிக்கத்தான் செய்கிறது.
ஆனால், எல்லோராலும் வீதிக்கு வர முடியவில்லை. செவிகளைக் கிழிக்கும் அளவுக்கு முழங்கி, தார்க் குச்சி போட்டு தமிழர்களைத் தயார்படுத்துகிற வேகம் சீமானிடம் தெரிகிறது. அதற்குக் கைகொடுக்காவிட்டாலும், அவரைக் காயப்படுத்தாமல் இருப்பதுதான் இப்போது அவசியமானது.
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து முழங்கியதால்தானே சீமான் சிறைக்குப் போனார்! இதே முழக்கத்தைத்தானே கடிதம் வாயிலாக தமிழக முதல்வரும் மத்திய அரசு
க்கு உரைக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்
இதற்காகத்தானே இலங்கை தூதரகத்தையே பூட்டுவோம் என்கிறார். அப்பாவி மீனவர்கள் கொல்லப்படக் கூடாது என்கிற ஒரே நோக்கம்தான் எல்லோருக்கும். அதன் வார்த்தை வடிவங்கள்தான் வேறு. இதில் சீமானுக்கு மட்டும் எங்கே இருந்து அரசியல் வந்தது? அப்படியே அரசியலாக இருந்தாலும் அதற்கான விதையைப் போட்டது பாரதிராஜாதானே! அவரைப் பார்த்தும், அவருடைய ஆதங்கப் பேச்சைக் கேட்டும்தானே ஈழ உணர்வு எங்களுக்குள் வந்தது.ஈழப் போர் தடுக்கப்படாததைக் கண்டித்து மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ பட்டத்தைத் தூக்கி வீசி தமிழனின் கோபம் எப்படிப்பட்டது என்பதை நிரூபித்த பாரதிராஜா, சீமான் கைது குறித்து இப்படிச் சொல்லலாமா?
பத்மஸ்ரீ பட்டத்தை வீசியதைக் காட்டிலும், மீனவர்களுக்காகக் குரல் கொடுத்தது ஆவேச மிகுதியா? கோபத்தையும் கொந்தளிப்பையும் கற்றுக்கொடுத்த பாரதிராஜா, இன்று எதற்காக இப்படி ஒரு வாதத்தை வைக்கிறார்? சீமான் கைது குறித்து அவர் உதிர்த்த வார்த்தைகளால் இணைய தளங்களில் 'பாரதிராஜாவா பசில் ராஜாவா?' என விவாதமே நடத்துகிறார்கள். உங்களைப் பின்பற்றி வளர்ந்தவர்களான நாங்கள் அதையெல்லாம் வெறுமனே வேடிக்கை பார்க்கக் கூடிய சூழலில் இருக்கிறோம்!''
உங்களின் 'யோகி' பட பாடல் கேசட் வெளியீட்டு விழாவில், 'இனி ஒரு வருடத்துக்கு எந்த விழா விலும் பேச மாட்டேன். ஈழத் துக்கத்துக்காகமௌனம் காக்கப்போகிறேன்' எனச் சொன்ன பாரதிராஜா முதல்வர் கலந்துகொண்ட விழாவில் அவரை வானளாவப்புகழ்ந்தாரே?
''இதே கேள்வியை பலரும் என்னிடம் கேட்கிறார்கள். மாபெரும் கலைஞராக, தமிழ் மண்ணை உரித்துக் காட்டிய படைப்பாளராக பாரதிராஜாவை மனதுக்குள் பூஜிக்கிறவர்கள்தான் நாங்கள். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் 'திரையுலகத் தமிழீழ ஆதரவுக் குழு' அமைத்து விவாதித்தபோது, அங்கே இருந்தவர் பாரதிராஜா! அங்கே அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக திரைத் துறையினர் பிரசாரம் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது. உடனே நான் எழுந்து, 'நாம் கட்சி நடத்தவில்லை. ஓட்டு கேட்பது நம் வேலையும் இல்லை' எனச் சொன்னேன். அவர்கள் ஏற்பாடு செய்த கூட்டங்களையும் தவிர்த்தேன். அன்றைக்கு அ.தி.மு.க. வெற்றிக்கு வித்திடும்விதமாக திரையுலகத் தமிழீழ ஆதரவுக் குழு போராடியதை பாரதிராஜா தடுத்திருக்கலாமே? ஏன் அதை பாரதிராஜா செய்யவில்லை?
'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என அன்று கோஷம் எழுப்பிய சீமானுக்கு ஈழ அரசியல் குறித்து பாரதிராஜா எடுத்துச் சொல்லி இருக்கலாமே? அன்று பாரதிராஜா ஏன் அதைச் செய்யவில்லை? அப்படிப்பட்ட அவர் இப்போது மனம்மாறி வேறு விதமாகப் பேசுகிறார்.
அப்போது 'இலை'க்காக சீமான் பேசியது அரசியல் சார்பற்ற ஒரு நடவடிக்கை என்றால், இப்போது 'ஈழம்' பற்றி பேசிவிட்டு சிறைக்குப் போயிருப்பது எப்படி அவருடைய கட்சி சார்ந்த நடவடிக்கையாக மட்டுமே இருக்க முடியும்? 'இலை'க்காக வலம்வந்த சீமானின் நடவடிக் கைகளில் அப்போதே எங்களுக்கு உடன்பாடு இல்லை!
மற்றபடி வசதிக்கேற்ப தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்பவர்களைப் பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை.
அசின் இலங்கைக்குப்போய் ஈழ மக்களை சந்தித்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்?
''ஐ.நா சபை பிரதிநிதிகளையே விரட்டி அடிக்கும் ராஜபக்ஷே அரசு, அசினுக்கு மட்டும் ஏன் வெற்றிலை பாக்கு வைக்கிறது? அசின் என்ன ஐ.நா-வையே மிஞ்சியதேவலோக தூதரா? நம்முடைய கைகளாலேயே நம் கண்ணைக் குத்தும் வேலையை அசின் மூலமாக கனகச்சிதமாக அரங்கேற்றுகிறது சிங்கள அரசு.
அசின் விவகாரத்தில் ஆயிரம் அரசியல் இருக்கிறது. சூர்யா உள்ளிட்ட நடிகர்களையும் ஈழ மக்கள் பார்க்க விரும்புவதாகச் சொல்லி, ஆள் பிடிக்கும் வேலையையும் அசின் செய்யத் தொடங்கி இருக்கிறார். அவரை அழகுப் பதுமையாக ஆராதிக்கும் தமிழக மக்கள் இதில் இருக்கும் அரசியலைப் புரிந்துகொள்ளவேண்டும்!''
சீமானை மீட்கும் முயற்சிகளில் உங்களைப்போன்ற திரை உலகத்தினர் ஈடுபடுவார்களா?
''யாரும் செய்ய மாட்டார்கள். இது சீமானுக்கும் தெரியும். சீமானின் தற்போதைய நடவடிக்கைகளை ஆதரிக்க இங்கே இருக்கும் உணர்வாளர்கள் தயாராக இல்லை. சீமானுடன் சிறையில் இருந்து அவருடைய மனவோட்டத்தை அறிந்தவனாகச் சொல்கிறேன்... சிறை ஒருபோதும் அவருடைய உணர்வைச் சிதைக்காது!''
லட்சக்கணக்கான மக்கள் முள்வேலிக்குள் முடக்கப் பட்டு இருக்கும் நிலையில், அவர்களின் மீட்சிக்காக சினிமா துறையினர் இனி எத்தகைய முயற்சிகளையும் எடுக்க மாட்டார்களா?
''பாக்கு தொடங்கி கோக் விளம்பரம் வரைக்கும் சினிமா தாண்டியும் நட்சத்திரங்கள் பிஸியாக இருப்பதற்கென்று ஆயிரம் வேலைகள் இருக்கின்றன. இருப்பினும், அவர்கள் போராட வந்துபோதுகூட, 'த்ரிஷாவோட டிரஸ்ஸை பார்த்தியா? விஜய்யோட ஷ¨வை பார்த்தியா?' என அப்போதும் நடிகர் களாகவே வேடிக்கை பார்த்தவர்கள்தானே நாம்? காவிரி பிரச்னை தொடங்கி,ஈழப் பிரச்னை வரைக்கும் ரஜினியையும் கமலையும் தொங்கித் தொங்கியே நாம் தோற்றுப்போனது போதும்! ஒவ்வொரு தமிழனும் உண்மையான உணர்வோடு வீதிக்கு வந்தால், நம் பின்னால் ரஜினியும் கமலும் கண்டிப்பாக நிற்பார்கள். தவிர்க்க முடியாத அந்தக் கட்டாயமே அவர்களை நம் பின்னால் அணி வகுக்கச் செய்யும்.
இந்த நேரத்தில் என் ஒரே கோரிக்கை... தயவு செய்து சினிமாவில் தலைவர்களைத் தேடும் வேலையை இனியும் செய்யாதீர்கள். காரணம், அதற்கான தகுதி இங்கே யாருக்கும் இல்லை!''
நன்றி- தட்ஸ் தமிழ்
திங்கள், 12 ஜூலை, 2010
விடாது செம்மொழி!
மழை விட்டும் தூவானம் விடாதகுறையாக, செம்மொழி மாநாடு முடிந்தபிறகும் இன்னமும் அது தொடர்பான சர்ச்சைகளிலும் சாகசங்களிலும்தான் தமிழக அரசியல் சுழன்றாடிக் கொண்டிருக்கிறது. ‘கருணாநிதி போர்க் குற்றவாளி’ என்று ஜெயலலிதா கொதிக்க, ‘ஈழப்பிரச்னைக்காக பதவியை ராஜினாமா செய்தவன் நான்’ என ஃபிளாஷ்பேக் நினைவுகளில் மூழ்கினார் முதல்வர் கருணாநிதி. இதற்கிடையே செம்மொழி மாநாட்டுத் தீர்மானங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க தமிழக அரசு சில முடிவுகளையும் எடுத்திருக்கிறது. இதற்கான கூட்டத்தில் முதல் வேலையாக முதல்வரைப் பாராட்டி தீர்மானம் போட்டுவிட்டுத்தான் அடுத்த தீர்மானங்கள் பற்றியே யோசிக்க ஆரம்பித்தார்கள்.
பொருட்காட்சி மைதானத்தில் தொலைந்த குழந்தை போல, கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ் மொழி தொலைந்து போய் விட்டிருந்தது. பழம்பெருமை பேசியே நிகழ்காலச் சிக்கல்களை மறக்கடித்துவிடும் சாமர்த்தியம் அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை! அப்படி தமிழர்களின் பழம்பெருமைகளை சுட்டிக்காட்டும் ‘இனியவை நாற்பது’ ஊர்வலமும், கண்காட்சி அரங்கும் தமிழர்களை பரவசப்பட வைத்து, ஈழச் சிக்கல்களை மறக்கச் செய்தது. வாலியும் வைரமுத்துவும் நா.முத்துகுமாரும் செம்மொழி நாயகனைப் புகழ்ந்துகொண்டிருந்த அதே நேரத்தில், இலங்கையில் முக்கியமான பல சம்பவங்கள் நடந்தேறின. ஈழ மண்ணில் நிகழ்ந்த இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க, ஐக்கிய நாடுகள் சபை ஒரு குழுவை நியமித்தது. ‘ஐ.நா. அமைப்பு இப்படி ஒரு குழுவை நியமித்தது சட்டவிரோதமானது. எங்கள் நிர்வாகத்தில் குறுக்கிட அவர்கள் யார்? இந்தக் குழுவில் இருக்கும் யாருக்கும் விசா தரமாட்டோம்’ என்று கொதித்தது இலங்கை அரசு. ஐ.நா. அமைப்பை கண்டித்து ராஜபக்ஷே கட்சியின் சார்பில் இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் நடக்க, ஒரு அமைச்சர் இன்னும் ஒரு படி மேலே போய் ‘கொழும்பில் இருக்கும் ஐ.நா. அலுவலகத்தைத் தாக்குவதில் தவறில்லை’ என்றுகூட பேசினார்.
‘இலங்கை பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பது நுடுல்ஸ் தயாரிப்பது போல சில நிமிட வேலை கிடையாது. அதற்கென நாங்கள் எவ்வளவு காலம் தேவையோ, அவ்வளவு நேரம் எடுத்துக்கொள்வோம்’ என்று இலங்கை அதிபர் ராஜபக்ஷே வெளிப்படையாகவே சொன்னார். இந்நிலையில், செம்மொழி மாநாட்டின் சாரலாக, இலங்கை பிரச்னைக்காக மீண்டும் ஒருமுறை பிரதமருக்குக் கடிதம் எழுதப் போவதாக அறிவித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி. செம்மொழி மாநாட்டு அழைப்பிதழைக்கூட முதல்வர் சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று கொடுத்துவிட்டு வந்தார். செம்மொழி மாநாட்டு அழைப்பிதழ் முக்கியம்; இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பான கடிதம் சாதாரணமானதா?
மொழிக்காக நடத்தப்படும் மாநாட்டில் ஆய்வு முடிவுகள் முக்கியமானவை; தமிழின் வரலாற்றுச் சிறப்பை எடுத்துச் சொல்லும் புதிதான ஆய்வுகள், நவீன காலத்துக்கு ஏற்றவகையில் தமிழில் செய்யவேண்டிய மாற்றங்கள், பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு வரவேண்டியவை என்னென்ன?, கணினி பயன்பாட்டுக்கு ஏற்றவகையில் தமிழுக்கு என்ன செய்யவேண்டும்... இப்படியான முடிவுகளை எடுக்க அடிகோலும் ஆய்வுக் கட்டுரைகள் மாநாட்டில் முக்கிய இடம்பிடிக்க வேண்டும். 380 கோடி செலவிடப்பட்ட செம்மொழி மாநாட்டில் எண்ணூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் படிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ஆய்வரங்குகளில் கூட்டமே இல்லை. படித்த கட்டுரைகள் மீது என்ன முடிவு எடுக்கப்பட்டது? ஒன்றுமில்லை!
தமிழின் சிறந்த நூல்களை பிறமொழிகளில் மொழிபெயர்க்கவும், பிறமொழி நூல்களை தமிழில் கொண்டுவரவும் ஒரு வல்லுநர் குழுவை அமைக்க முடிவு செய்திருப்பதும், யூனிகோட் எழுத்துரு பயன்பாடு தொடர்பாக தமிழக அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையும், தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தருவதாக வெளியாகி இருக்கும் அறிவிப்புமே இந்த மாநாட்டால் நடந்த உருப்படியான விஷயங்கள். ஆனாலும், தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை தர நினைக்கும் இந்த அரசு, தமிழில் படிப்பதற்கான வாய்ப்புகளை உருப்படியாக உருவாக்கி வைத்திருக்கிறதா என்பதை மனசாட்சியோடு யோசிக்க வேண்டியிருக்கிறது. பொறியியல், மருத்துவம் போன்ற உயர்கல்விகளை தமிழில் படிக்க வேண்டும் என்றால் அதற்கான புத்தகங்களே இல்லை; தரமான புத்தகங்களை மொழிபெயர்க்க இதுவரை நடந்த எந்த முயற்சிக்கும் அரசின் ஆதரவு இல்லை. பள்ளி பாடப் புத்தகங்கள் தமிழில் இருந்தாலும், சகல வசதிகளும் அரசு பள்ளிகளில் இருந்தாலும், தனியார் பள்ளிகளோடு போட்டியிட்டு மாணவர்களுக்கு நம்பிக்கை தருகிற ஒரு சூழ்நிலை அந்தப் பள்ளிகளில் இல்லை என்பதை யாராவது மறுக்கமுடியுமா? தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு ‘தரமான கல்வியைத்தான் பெறுகிறோம்’ என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
மரபணுப்பூங்கா, செம்மொழிப் பூங்கா என கட்டிடங்களும் நினைவுச் சின்னங்களும் தமிழை வளர்த்துவிடாது. உலகெங்கும் இருக்கும் தமிழர்களுக்கு நிம்மதியான வாழ்க்கை வேண்டும்; கட்சி வேறுபாடுகளைக் கடந்து தமிழகத் தலைவர்கள் அதற்கான ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும். முல்லைபெரியாறு அணைக்காக பிரதமரைச் சந்திக்க கேரளத்து காங்கிரஸ் எம்.பி.க்களும் கம்யூனிஸ்ட் எம்.பி.க்களும் ஒன்றாகக் கரம்கோர்த்து செல்வார்கள். தி.மு.க.வினரும் அ.தி.மு.க.வினரும் அப்படிச் செல்வதை யாராவது கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியுமா?
உலகெங்கிலும் இருக்கும் தமிழர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுத்தர விரும்பினாலும் அதற்கு எளிய எழுத்துப் பயிற்சிகளைக் கொண்ட முழுமையான புத்தகங்கள் கிடைப்பதில்லை; தமிழின் தாய்பூமியான இங்கு அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். இன்னும் படிக்கப்பட்டாத கல்வெட்டுகளிலும், இடிந்துகிடக்கும் ஏராளமான கோயில்களிலும் தமிழகத்தின் & தமிழனின் வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறது.அழிவிலிருந்து அதை மீட்க வேண்டும்.
உண்மையில் இதையெல்லாம் செய்வதற்கு செம்மொழி மாநாட்டுக்கு ஆன செலவைவிட அதிகம் ஆகிவிடாது; தேவை, நிஜமான அக்கறை மட்டுமே!

நன்றி : தெனாலி
வெள்ளி, 18 ஜூன், 2010
ராவணன் - விமர்சனம்
சுரண்டல் மயமான அதிகார வர்க்கத்துக்கும் மக்களின் எதிர்ப்புணர்வுக்கும் இடையே நடக்கும் மோதலில் சிக்கும் ஒரு பெண்ணின் கதை என்று மணி ரத்னத்தின் ராவணன் கதையைச் சுருக்கலாம்.
திருநெல்வேலியை அடுத்துள்ள வனப் பகுதியில் வசிக்கும் மக்களின் தலைவன் வீரா என்கிற வீரய்யா (விக்ரம்). அந்தப் பகுதியிலும் சுற்றியுள்ள இடங்களிலும் மக்களின் காவலன். போலீஸால் தேடப்படும் குற்றவாளி. இவனைப் பிடிக்க அல்லது கொல்ல முயலும் தேவ் (பிருத்விராஜ்) தலைமையிலான போலீஸ் இவனது தங்கையை (பிரியாமணி) சூறையாடுகிறது. ஆத்திரம் கொண்ட வீரா, தேவின் மனைவி ராகினியை (ஐஸ்வர்யா) கடத்துகிறான். ராகினியைத் தேடவும் வீராவைக் கொல்லவும் தேவ் பெரிய படையுடன் களம் இறங்குகிறான். காட்டில் ராஜாங்கம் நடத்தும் வீராவை அவனால் நெருங்க முடிந்ததா என்பது படத்தின் ஆதாரமான கேள்வி. கடத்தப்பட்ட ராகினிக்கும் கடத்திய வீராவுக்கும் இடையே நடைபெறும் ரசாயன மாற்றங்கள் கதையின் திருப்பம். ஆபத்திலிருந்து மீண்டு வரும் மனைவியை தேவ் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டானா, வீரா - தேவ் மோதலில் வெல்வது யார், ராகினியின் நிலை என்ன ஆகிய கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் விடை சொல்கிறது.
அதிரப்பள்ளி அருவியின் பேரிரைச்சலையும் பீதியூட்டும் நீரின் பாய்ச்சலையும் பின்னணியாகக் கொண்டு தொடங்கும் படம் நேரத்தை வீணடிக்காமல் கதையின் ஆதார முடிச்சுக்குள் போய்விடுகிறது. எடுத்த எடுப்பிலேயே கடத்தல், சட்டென்று சலனம் கொள்ளும் வீராவின் மனம் என்று திருப்பங்கள் அருவியின் சுழல்போலக் கதையை உருமாற்றுகின்றன. தேடுதல் வேட்டையும் காதல் ஏக்கமுமாக நகரும் படம் தொய்வின்றி முன்னேறுகிறது. இயக்குநர் எந்த இடத்திலும் துருத்திக்கொண்டு தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் கதை, சம்பவங்கள், பாத்திரங்கள் ஆகியவற்றைப் பார்வையாளர்களோடு உறவாட விடுகிறார். சுஹாசினியின் வசனங்கள் கூர்மையாக இருக்கின்றன (உங்க பொம்பளைங்க மட்டும் மரகதம், எங்க பொம்பளைங்க மட்டும் கல்லா...). ஆனால் மணி ரத்னம் முக்கியமான பல காட்சிகளை வசனத்தின் உதவியின்றிக் காட்சிப்படுத்தலிலேயே வலுவாகக் கொண்டுவந்துவிடுகிறார்.
வீரா, ராகினி அளவுக்கு தேவ் உள்ளிட்ட மற்ற பாத்திரங்கள் அழுத்தமாகச் சித்தரிக்கப்படவில்லை. தவிர, வீராவின் போராட்டத்திற்கான பின்னணியை, அவன் மக்கள் தலைவனாக வளர்ந்த விதத்தை வலுவாகச் சித்தரிக்கத் தவறிவிட்டார் இயக்குநர். வீராவின் பின்னணி தேவின் குரலில் சொல்லப்பட்டுக் கவன ஈர்ப்பின்றிக் கடந்து போகிறது. தேடுதல் வேட்டையில் ஈடுபடும் காவல் துறையின் அட்டூழியங்களைக் காட்டுவதிலும் இதே தயக்கம் வெளிப்படுகிறது. திரைக்கதையின் வலுவை இது குறைக்கிறது. எடுத்துக்கொண்ட கதையின் தாக்கத்தை இன்னும் அழுத்தமாக பதியச் செய்யாமல் அந்தத் தயக்கம் தடுக்கிறது. கிளைமாக்ஸ் பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.
ஐஸ்வர்யா இன்னமும் 50 கேஜி தாஜ்மஹால். அழகால் திரையை ஆளுகிறார். அழகும் கம்பீரமும் நளினமும் இணைந்த ஐஸ்வர்யா ராய் கண்களில் வியாபித்து நிற்கிறார். விக்ரம், பிரபு, கார்த்திக், பிருத்விராஜ் போன்ற திறமையான நடிகர்கள் மத்தியில் தனித்து நிற்கிறார் ஐஸ்வர்யா. அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காயாகவும் பணயப் பொருளாகவும் மாற்றப்படுவது குறித்த வேதனையையும் கோபத்தையும் அபாரமாக வெளிப்படுத்துகிறார். தன்னைக் கடத்தி வந்தவன் மீதான கோபம் மெல்ல மெல்லக் கரையும் மாற்றத்தை நுட்பமாக வெளிப்படுத்துகிறார். மலை ஏறுவது, அருவியில் குதிப்பது, பள்ளத்திலிருந்து விழுதைப் பிடித்துக்கொண்டு ஏறுவது என்று உடல் பலம் சார்ந்த காட்சிகளிலும் கிறங்கடிக்கிறார். பிளாஷ்பேக்காக வரும் ரொமாண்டிக் காட்சிகளில் கவர்ச்சியும் நளினமும் கலந்து வசீகரிக்கிறார். சொந்தக் குரலில் பேசியிருக்கும் முனைப்புக்கு ஒரு சலாம் போடலாம்.
முரட்டு உடம்போடு மிரட்டுகிறார் விக்ரம். கண்களில் கோபமும் முறுக்கேறியிருக்கும் நரம்புகளில் ஆவேசமும் தெறிக்கும் காட்டுத் தலைவன் வேடத்தில் விக்ரம் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார். ஆவேசமாகச் சீறுவது, தங்கை சீரழிக்கப்படும்போது குமுறுவது, கடத்தி வந்த பெண்ணின் மீது ஈர்ப்பு ஏற்படும்போது அதைக் கையாளத் தெரியாமல் குழம்புவது, உணர்வுகளைக் கொட்டிப் பேசுவது என்று பட்டையைக் கிளப்புகிறார். போலீஸ், அரசாங்கம் ஆகியவற்றைப் பற்றிய கோபம், தங்கை குறித்த துக்கம், தான் விரும்பாமலேயே தனக்குள் வந்து ஒட்டிக்கொண்ட காதல் ஆகியவற்றை முக பாவங்களாலும் உடல் மொழியாலும் வெளிப்படுத்தும் நுட்பம் குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாகத் தண்ணீரில் விழுந்து கிடக்கும் ராகினியைப் பார்க்கும்போது வீராவின் மனசுக்குள் ஏற்படும் சஞ்சலம் கண்களில் சிறு மாற்றமாக வெளிப்படும் இடம் அற்புதம்.
வேட்டையாடும் போலீஸ் வேடத்துக்கேற்ற முக பாவங்களுடனும் உடல் மொழியுடனும் பிருத்விராஜ், தன் வேலையை ஒழுங்காகச் செய்கிறார். ஐஸ்வர்யாவுடனான ரொமான்ஸ் காட்சிகளில் ஜோடிப்பொருத்தம் கொஞ்சம் மிஸ்ஸிங். கார்த்திக், பிரபு, முன்னா ஆகியோர் துணைப் பாத்திரங்களாக வந்து தங்கள் வேலையை ஒழுங்காகச் செய்கிறார்கள். குறிப்பாக அனுமனை நினைவுறுத்தும் பாத்திரத்தில் கார்த்திக்கின் சேட்டைகள் ரசிக்கவைக்கின்றன. இரண்டு காட்சிகளில் வந்தாலும் பிரியாமணி அழுத்தமான முத்திரை பதிக்கிறார். தனக்கு நேர்ந்த கொடுமையை அவர் சொல்லும் காட்சி மனதைத் தொடுகிறது. ரஞ்சிதாவுக்கு இந்தப் படத்தில் என்ன வேலை என்று தெரியவில்லை.
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனும், இசையப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் படத்தின் மற்ற இரண்டு ஹீரோக்கள். அருவியின் அழகு, ஆவேசம், காட்டின் வசீகரம், அபாயம் ஆகியவற்றைக் கச்சிதமாகப் படம்பிடித்துத் தந்திருக்கிறது சந்தோஷ் சிவனின் கேமரா. ஐஸ்வர்யா ராயைப் பார்க்கும்போதெல்லாம் கேமிராவுக்குத் தனி உற்சாகம் வந்துவிடுகிறது. ஐஸ் மரக்கிளைகளில் விழுந்து கிடக்கும் காட்சியும் நீரிலிருந்து எழும் அவரது முகமும் தேர்ந்த சித்திரக் காட்சிகளாக மனத்தில் நிற்கின்றன. ஒவ்வொரு பிரேமையும் கவனித்து இழைத்திருக்கிறார் சிவன். கள்வரே, காட்டுச் சிறுக்கி, உசுரே போகுதே பாடல்களில் வைரமுத்துவின் வரிகளில் இளமை பொங்குகிறது.
ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் எல்லாப் பாடல்களும் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்டன. படத்தோடு சேர்ந்து ஒலிக்கும்போது அவற்றின் மீதான மதிப்பு கூடுகிறது. குறிப்பாக உசுரே போகுது பாடல். இந்தப் பாடலும் காட்டுச் சிறுக்கி பாடலும் படமாக்கப்பட்ட விதம் அருமை. பின்னணி இசை படத்துக்குக் கூடுதல் பரிமாணத்தைச் சேர்க்கிறது.
அதிகார வர்க்கத்துக்கும் காட்டில் வசிக்கும் மக்களுக்கும் இடையேயான பிரச்னையைக் களமாகக் கொண்ட படம் ராவணன். இந்தக் களத்தை அழுத்தமான சித்திரமாகத் தீட்டிக் காட்ட அதிகம் மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். அவருடைய கதையும், கதையின் பாத்திரங்களும் இயக்குநரின் உழைப்பைச் பளிச்சென்று சொல்கின்றன.
மணிரத்தினத்தின் ராவணா வசிகரீக்கிறான்.
- நன்றி : தெனாலி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)