ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

இந்தியா வளர்கிறதா? இல்லை அடிமையாகுதா?

வளர்ந்து வரும் இந்தியா,உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது .இந்த வளர்ச்சி ஒருபுறம் சில நாடுகளிடையே கழ்ப்புணர்ச்சி உருவாகவும் காரணமாக அமைந்துள்ளது .குறிப்பாக நம்மை எப்போதும் எதிரியாக நினைக்கும் பாகிஸ்தான் ,சீன்டிபார்க்கும் சீன ,இந்த பக்கம் இலங்கைகூட இந்தியாவின் பொறுமையை சோதித்து வருகிறது.

எல்லைப்பகுதியில் ஏற்படும் அச்சுறுத்தல்களை சமாளிப்பதில்தான் நாட்டின் பாதுகாப்பும்,வளர்ச்சியும் இருக்கிறது.அந்த வகையில் இந்தியாவிடம் சிறப்பான படைபலமும்,ஆயுத பலமும் இருக்கத்தான் செய்கிறது.
இதெற்கெல்லாம் பெருமை சேர்க்கும் விதமாக தற்போது நவீன போர்கருவி ஒன்றின் தயாரிப்பு பணி வெற்றிகரமாக முடிந்துள்ளது.

கில் வெய்க்கில்  :
 
கில்
வெய்க்கில் (Kill Vehicle) எனப்படும் இந்த லேசர் கருவி எதிரிகளை எல்லைக்கு வெளியிலேயே வீழ்த்தும் நவீன வகையைச் சேர்ந்தது .எனவே எதிரிகளை ஏவுகணைகள்,விமானங்களை இந்திய வான் எல்லைக்கு வெளியிலேயே இது வீழ்த்திவிடும் .

ஏற்கனவே தரைதளத்தில் இருந்து எதிரிகளின் இலக்கை அழிப்பது ,ஏவுகணைகளை வழிமறித்து தாக்குவது போன்ற போர் ஏவுகணைகளை வழிமறித்து தாக்குவது போன்ற போர் ஏவுகணைகள் இந்தியா வசம் உள்ளது.இது போன்ற ஏவுகணைகள் பல்வேறு நாடுகளிடமும் இருக்கிறது.2007 ம் ஆண்டு சீன,தரையில் இருந்து நெடுன்தூரத்திலேயே வழிமறித்து தாக்கும் ஏவுகணையை தயாரித்தது.2008 ம் ஆண்டு அமெரிக்கா கப்பல் தளத்தில் இருந்து வழிமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை நடத்தியது.

தற்போது இந்தியா தயாரித்திருக்கும் 'கில் வெய்க்கில் ' இவற்றைவிட சக்தி வாய்ந்தது .விண்ணில் இருந்து செயற்கைக்கோள் உதவியுடன் இதை இயக்க முடியும்.இதனால் எதிரிகளின் வியூகத்தை இந்திய வான் எல்லைக்கு வெளியில் வைத்தே யூகித்து சமாதியாக்க முடியும். 

இதைவிட மேலான சிறப்பம்சம் என்னவெனில் இந்தக் கருவி விண்ணிலேயே செயற்கைக்கோள் போல நிலைநிறுத்தி வைக்கப்படுகிறது என்பதுதான் .இந்த நவீன உத்தியால்  உலகமே இந்தியாவை உன்னிப்பாக கவனிக்கத் தொடநிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

இந்தியா அடிமையாகுதா?

நீங்கள் இப்போது படித்து போன்ற புத்திசாலிதனமாக இந்திய சில விஷயங்களை செய்து உலக நாடுகளை மூக்கின் மேல் விரல்வைக்க வைத்தாலும் ,அவர்களே எள்ளி நகையாடும் வகையில் ஒரு காரித்தை செய்தது என்றால் நீங்கள் நம்புவீர்கள்தானே ?


அது என்னெவென்றால் ,சில நாட்களுக்கு முன்பு இந்தியா ஒரு போர்க்கப்பலை அமெரிக்காவிடமிருந்து வாங்கியது (சும்மா இல்லை 900 கோடி ரூபாய் விலைக்கு ).உடனே நீங்கள் அது என்னமோ Latest technology உள்ள கப்பல் என்று நீகக் தவறாக நினைத்து இந்தியாவை மதிப்பிடாதீர்கள்.அந்த கப்பல் அமெரிக்க இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தியது.50 வருடங்களுக்கு பிறகு காயலான் கடையில் போடுவதற்கு பதிலாக இளிச்சவாய இந்தியாவிற்கு 900 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது ,அதை இந்த தலையாட்டி சாமி மன்மோகன் அரசு வாங்கி இருக்கிறது .இதேல்லாம் விட பெரிய கொடுமை இந்த கப்பலை வாங்கும் போது அமேரிக்கா போட்ட ஒப்பந்தம் தான் .அதாவது இந்த கப்பலை இந்தியா எக்காரணம் கொண்டும் போரில் பயன்படுத்தக்கூடாது என்பதுதான் .
என்ன கொடுமை சார் இது ! ஒரு போர்க்கப்பலை போரில் பயன்படுத்தக்கூடாது என்றால்  எந்த ______ க்கு 900 கோடி ரூபாய் கொடுத்து வாங்கணும்.அந்த அளவிற்கா நாம் அமெரிக்கா காரனிடம் அடிமைப்பட்டு போயிருக்கோம் .

இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு துட்டு ???????? யோசிங்க .......!!!!!!!!!!!!!!!!!!


-சூரியன் .

7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

May be to under stand the technology behind. It may be worth buying. There will be some more importance which we, common people dont understand.

பெயரில்லா சொன்னது…

//May be to under stand the technology behind. It may be worth buying. There will be some more importance which we, common people dont understand.//
You mean from II-World War scrap metal. Good joke friend...

Unknown சொன்னது…

அறிந்து கொள்ள வேண்டிய நல்ல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி

மதன் சொன்னது…

ஆமாங்க தல உண்ம தான் சில விசயங்கள்ல நாம புத்திசாலியா தெரிஞ்சாலும் பல மேட்டர்ல நம்பள ஏமாத்திடுற்ங்க இத போல கொக்க கோலா பெப்சி எல்லாம் நம்ப ஊட்ட காச கொல்ல அடிக்க வந்ததது தான். நல்ல பதிவு வாழ்த்துகள்.

SARAVANAN சொன்னது…

THALAIVA,
NALATHORU NEWS PUBLISH PANNIYARTHUKU NANDRI.
MUTHAL PARAVAI PADITHAVUDUN EN UDAMBELEAM SLIRTHTHATHU.
ERANDAVATHU PARAVAI PADITHAVUDUN EN ULLAMELLEM STHARIYATHU.
EN ENTHA MUTTALTHANAM.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

Hi Sooriyan,

Are you taking about the INS Jalashwa which we bought for USD 48 million on 2007 from US.

you can get some more details about the ship here,

http://en.wikipedia.org/wiki/INS_Jalashwa

http://en.wikipedia.org/wiki/USS_Trenton_(LPD-14)

I don't know exactly how true that, what you are saying India done a foolish stuff something? or not. Let we see & discuss about this.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

அன்புள்ள சூரியன்,

தலைவா. ஏன் கோபமாகிறிங்க? பொறுமை. யார் அப்பன் வீட்டு சொத்து. எல்லாம் நம்ம அப்பன் வீட்டு சொத்துதான்.

அறுவால சந்தையில விக்கிறவன், மனுசன வெட்டுறத்துக்குனு சொல்லி தனியா விக்க முடியாது. புரிஞ்சுதா?

ஒரு போர்க்கப்பலை போரில் பயன்படுத்தக்கூடாது என்றால் எந்த _________ க்கு 900 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிருப்போமுனு இன்னொரு பக்கமும் யோசன பண்ணலாமே?

கப்பல வச்சிகிட்டு வழியக்க சண்டைக்குதான் போக கூடாது. ஆனா சண்டை வந்தா பயன்படுத்த கூடாதுனு இல்ல.

பொருத்திருந்து பார்ப்போம். விமர்சிப்போம்.