சனி, 27 பிப்ரவரி, 2010

முதுகெலும்புள்ள அஜீத் - என்னய்யா தப்பு செய்தார்?

மண்புழு மண்ணில் கிடப்பதற்க்கு காரணம் அதற்க்கு மூளையில்லாததால் அல்ல, முதுகெலும்பில்லாததால்... சில நாட்களுக்கு முன் யாரோ ஒருவர் இப்படி பேசிகேட்டேன், முதுகெலும்பில் 12 அறுவை சிகிச்சைகள் செய்திருந்தும் முதுகை வளைத்து குழைந்து பயந்து நடுங்கிபோகாமல் தன் மனதில் பட்டதை பேசியிருக்கிறார் அஜீத்.

ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட ராஜகம்பீர மன்னர் கருணாநிதி அவர்களுக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாரா வாரம் நடைபெறும் பல மணிநேர புகழுரைகள், நடிகைகளின் அரைகுறை ஆடை நடனங்கள் அதை படம் பிடித்து தங்கள் தொலைக்காட்சியில் போட்டு காசு பார்ப்பது என மன்னர் ரசிக்கும் ஒரு பாராட்டுவிழாவில் தான் இப்படி பேசியிருக்கார், எல்லாத்துக்கும் நாங்க வரணுமென்று மிரட்டுகிறார்கள் என்று... இதில் என்ன தவறு??

சினிமாவிலும் பேட்டிகளிலும் அரசியல் பொறிபறக்க ரசிகர்களை தூண்டிவிட்டு அதனால் சொந்த லாபம் சம்பாதித்து அதே நேரத்தில் தமிழகத்திற்க்கும் தமிழனத்துக்குமான கூட்டமென்றால் காணாமல் போய்விடும் திருட்டு நடிகன் அல்ல அஜீத். எதற்க்கும் வரமாட்டார், பொதுவாகவே எந்த விழாக்களிலும் எந்த கூட்டங்களிலும் கலந்து கொள்ளாதவர் அனல் பறக்க அரசியல் பேசிவிட்டு இனம் மொழி என்று பேட்டிகளில் பரபரப்பு காட்டுபவர் அல்ல, அவர் தன் வேலைகளுண்டு என்று போய்க்கொண்டே இருப்பவர், எல்லோருக்கும் அரசியல் ஆர்வமும் சமூக ஆர்வமும் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை அவர்களை வற்புறுத்துவது எதற்காகவும் தவறு. ஆனால் எந்த அரசியல் சமூக காரணமுமின்றி இவர்களின் முகங்களை படம்பிடித்து தம் தொலைக்காட்சியில் அரைகுறை நடனங்களுக்கு நடுவே காட்டி இதன் மூலம் காசு சம்பாதிக்கும் பொறுக்கிதனத்திற்க்கு எதிராக ஆவேசமாக கூட இல்லை லேசாக முனகி எதிர்ப்பு தெரிவித்ததற்க்கே அஜீத்தை இந்த பாடு படுத்துகிறார்கள்...

முதலில் ஜாக்குவார் தங்கம் என்ற ஸ்டண்ட் மாஸ்டர் அஜீத் மீது வழக்கு போட கூறுதல் அதன் தொடர்ச்சியாக உடனடியாக அஜீத் ரசிகர்கள் ஜாக்குவார் வீட்டை உடைத்ததாக வழக்கு என அஜீத் மீது தொடர்ச்சியான அழுத்தங்கள், இந்த இடத்தில் நான் கடவுள் படம் தொடர்பான பண விவகாரம் தொடர்பாக பாலாவும் அவருக்கு ஆதரவாக சீமான் மற்றும் சில அரசியல் தொடர்புள்ளவர்கள் அஜீத்தை மிரட்டியதாக செய்தி வந்திருந்த நேரம் அது அப்போதும் கூட அஜீத் தன் ரசிகர்களை தூண்டிவிடாமல் என் பிரச்சினையை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று அமைதியாக்கியவரை தான் ஜாக்குவார் தங்கம் வீட்டை அடிக்க தூண்டியதாக கேஸ் போடுகிறார்கள், ஜாக்குவார் தங்கம் நாடாராம் அதனால் நாடார் சங்கம் கொதிக்குதாம்...

அஜீத் போன்ற முதுகெலும்புள்ள சுயமரியாதை உடையவர்களை நிச்சயம் நாம் ஆதரிக்க வேண்டும்... ஆம் அஜீத் மீதான அதிகாரத்துவத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக என் கண்டனத்தை பதிப்பிக்கின்றேன்(இந்த ஒரு எழவைத்தவிர வேறென்ன செய்ய முடியும் என்னால்)

6 கருத்துகள்:

Nagaraj-நாகராசு சொன்னது…

Excellent Soori, I'm very impressed with the way he spoke in front of CM. please also review the interview of VC Guganathan who had commented about Ajith on the same.How abt VTV review.

பெயரில்லா சொன்னது…

தமிழனை யாரும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் . அவன் தயவில் வாழ்ந்தாலும் , அவனுக்காக ஒரு சிறு துரும்பைக்கூட கிள்ளிப்போடவிட்டாலும், ஏன் அவன் சோற்றையே தின்றுவிட்டு அவனுக்கு துரோகம் செய்தாலும் என்னைப்போல தமிழன் இருக்கும் வரை அஜித் போன்றவர்களை யாரும் அசைக்க கூட முடியாது - சூரியன்.

பெயரில்லா சொன்னது…

பாலா , சீமான் எல்லாம் மதுரைக்காரப்பசங்க , மண்ணை நேசிப்பவர்கள், உண்மையான கூட்டத்தை உடன் வைத்திருப்பவர்கள், அவர்களையெல்லாம் வெறும் விசிலடிச்சான் குஞ்சுகளை வைத்து மிரட்ட முடியாது. ஒழுங்க பேசக்கூட தெரியதவனைஎல்லாம் நடிகனா கொண்டாடுகிற உங்களைப்போன்ற கூட்டங்களையெல்லாம் என்ன செய்வது.

Sooriyan சொன்னது…

Mr.Anonymous,

உதவிசெய்றேன்னு சொல்லிட்டு உபத்திரம் செய்வதைவிட ,அஜித்தைப் போல் எதுவும் செய்யாதவர்களே மேல்.உங்களைப்போல் எல்லாரும் தமிழ் பெயரால் தமிழனை ஏமாற்றும் கருணாநிதிக்கு கூழைக்கும்பிடு போட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் சரி என்று நினைக்கிறீர்கள்.நீங்கள் சினிமாவில் அஜித்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவறேனில் நான் இங்கு அதைப் பற்றி சொல்லவில்லை .உங்களில் எத்தனைப் பேருக்கு முதல்வர் இருக்கும் மேடையில் இப்படி உரக்க சொல்ல தைரியம் வந்தது .நடிகனை நடிகனாக இருக்க விட்டு விடுங்கள் .நீங்கள் இப்படி எல்லாம் எதிர்பார்பதால் தான் நாளைக்கு அவன் நானும் முதலமைச்சர் ஆகப்போறேன்னு கிளம்பி நாட்டை கெடுக்கிறான்.ஒரு சினிமா முதலமைச்சர் போதாதா..இன்னுமா எதிர்ப்பார்க்கிறீர் ?

பெயரில்லா சொன்னது…

//உதவிசெய்றேன்னு சொல்லிட்டு உபத்திரம் செய்வதைவிட//

//உதவிசெய்றேன்னு சொல்லிட்டு உபத்திரம் செய்வதைவிட//
நானும் இதையே தான் சொல்லுகிறேன். தமிழர்களுக்காக கூட்டப்படும் கூட்டங்களுக்கு வந்துவிட்டு சும்மாவாவது இருந்துவிட்டு போகாமல் அதன் ஒற்றுமையை கெடுக்கும் நோக்கத்தோடு பேசுவதுதான் உபத்திரவம். இலங்கைத் தமிழர்களுக்காக நடந்த கூட்டத்தில் வந்து நடிகனை நடிகனாக இருக்க விடுங்கள் என்று சொல்லிவிட்டு போனவன் தானேஇவன்.

Sakthi Doss சொன்னது…

நக்கீரன் தினத்தந்தி இந்தியா டுடே தினமலர் உள்ளிட்ட பத்திரிகைகள் அனைத்தும் அஜித்தின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.அதை விட தாங்கள் அஜித்தின் உரைக்கு ஆதரவு தெரிவித்திருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.