வியாழன், 31 டிசம்பர், 2009

மிகவும் மாசுபட்ட 10 நகரங்கள் பட்டியலில் வேலூருக்கு முதலிடம்!!!



இந்தியாவின் மாசுபட்ட 10 நகரங்கள் பட்டியலில் வேலூர் இடம்பெற்றுள்ளது.


தொழிற்சாலை கழிவுகள், மக்களின் அக்கறையின்மை போன்றவற்றால் அதிகம் மாசடைந்த நகரங்கள் பட்டியலைத் தயாரித்துள்ளது மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியம்.

'முதலிடம்' வேலூருக்கு....


அந்தந்த மாநிலங்களில் உள்ள சுற்றுச் சூழல் துறை மற்றும் ஐஐடி உதவியுடன் 88 தொழில் நகரங்களில் ஆழ்ந்த ஆராய்ச்சியை மேற்கொண்டது இந்த வாரியம். Comprehensive Environmental Pollution Index (CEPI) எனும் அளவீட்டின்படி நகரங்களின் மாசடைந்த தன்மை சோதிக்கப்பட்டது.

தமிழகத்தில் மட்டும் கோவை, கடலூர், மணலி, மேட்டூர், திருப்பூர், ஈரோடு மற்றும் வேலூர் ஆகிய 7 தொழில் நகரங்கள் இதில் இடம்பெற்றன.

இவற்றில் வேலூர் நகரம்தான் மிக மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. வேலூரில் மட்டும் 100-க்கு 81.79 CPEI புள்ளிகள் காற்று, நீர் மாசடைந்துள்ளது என இந்த சர்வே தெரிவிக்கிறது. நினைவிருக்கட்டும் இது தனியார் நடத்தியதல்ல. மத்திய அரசின் நிறுவனம் மாநில அரசுடன் சேர்ந்து நடத்திய சர்வே.

தமிழகத்தில் அதிக அளவு மாசடைந்த நகரங்களின் பட்டியலில் இரண்டாவதாக வருகிறது கடலூர். இங்கு காற்றும் நீரும் 77.45 சதவிகிதம் மாசடைந்துள்ளதாம். மணலியில் காற்று மிக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாம். ஒட்டுமொத்தமாக இங்கு 76.32 சதவிகிதம் சுற்றுச் சூழல் சீர்கேடடைந்துள்ளது.

கோவையில் தண்ணீர் கடுமையாக மாசடைந்துள்ளதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. காற்று மாசுபாடு அபாயகட்டத்தில் இருப்பதாகவும், நில மாசுபாடு மட்டும் ஓரளவு பரவாயில்லை என்றும், ஒட்டுமொத்தமாக 72.38 சதவிகிதம் சுற்றுச் சூழல் கெட்டுப்போயுள்ளதாகவும் கூறுகிறது.

திருப்பூர் நகரின் நிலம், நீர், காற்று மூன்றின் சுற்றுச் சூழலுமே அபாயகட்டத்தில் உள்ளது. இங்கு 68.38 சதவிகித மாசுபாடு பதிவாகியுள்ளது.

மேட்டூரிலும் இதே நிலைதான். ஆனால் இங்கு தண்ணீரின் நிலை படு மோசமாகியுள்ளது. 68.98 சதவிகிதம் மாசுபாடு கண்டறியப்பட்டுள்ளது.

இந்த 7 தொழில் நகரங்களிலும் சற்று குறைவான மாசுபாடு ஈரோட்டில்தான் பதிவாகியுள்ளது. ஏராளமான தோல் தொழிற்சாலைகள் மற்றும் சாயப்பட்டறைகள் உள்ள இந்த நகரில் 58.19 சதவிகிதம் அளவு சுற்றுச் சூழல் சீர்கெட்டுள்ளது.

ஆனால் இந்தியாவின் பிற மாநில நகரங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தின் சூற்றுச் சூழல் மாசுபாடு குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.

'குஜராத் ரொம்ப மோசம்!'

குஜராத்தின் அங்கலேஷ்வர்தான் அதிக மாசடைந்த நகரமாக உள்ளது, இந்திய அளவில். இங்கு சுற்றுச் சூழல் மாசுபாடு அளவு 100க்கு 88.5 புள்ளிகள். இதே மாநிலத்தின் வாபி நகரம் 88.09 சதவிகிதம் மாசடைந்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் காஸியாபாத் 87.37 புள்ளிகளும், மகாராஷ்ட்ராவின் சந்திராபூர் 83.88 புள்ளிகளும், சத்தீஷ்கரின் கோர்பா 83 புள்ளிகளும், ராஜஸ்தானின் பிவாடி 82.91 சதவிகிதமும், ஒரிஸாவின் தல்சர் 82.09 புள்ளிகளும் பெற்றும் மாசடைந்த நகரங்கள் வரிசையில் முன்னணியில் உள்ளன.

இந்த சர்வேக்காக தேர்வு செய்யப்பட்ட 88 தொழில் நகரங்களில் 43 நகரங்கள் நிலை மிகவும் கவலை தருவதாக உள்ளதாகவும், பல நகரங்களின் சுற்றுச் சூழல் அளவு சீர் செய்ய முடியாத அளவு கைமீறிப் போய்விட்டதாகவும் மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியம் கவலை தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை வெளியிட்ட மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், "பல தொழில் நகரங்களின் நிலையை உயர்த்த ஏராளமான தொகையை அரசு செலவிட்டுள்ளது. இந்த நகரங்களில் உள்ள தொழிற்சாலைகள் இனி மாசுபடுத்த ஒன்றுமே இல்லை எனும் அளவு சுற்றுப் புறத்தை நச்சாக்கி வைத்துள்ளன என்ற உண்மையை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அவற்றின் தரத்தை உயர்த்த முடியுமா என்று தெரியவில்லை. இன்னும் முயற்சித்துக் கொண்டுதான் உள்ளோம்.." என்றார்.

தமிழகத்தின் வேலூரில் அதிகபட்ச தோல் தொழிற்சாலைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றிலிருந்து வரும் கழிவுகளை அகற்ற அரசு மிக அதிக அளவு நிதியை செலவிட்டும் இம்மியளவு கூட முன்னேற்றம் ஏற்படவில்லை. மேலும் பாழானதுதான் மிச்சம். இனி ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் உண்மை என்கிறது சுற்றுச்சூழல் வாரிய அறிக்கை.


என்ன செய்யப் போகிறார்கள் வேலூர் மக்கள்?

 
நன்றி : தட்ஸ்தமிழ்

திங்கள், 28 டிசம்பர், 2009

சூழ்நிலைக் கைதிகள்.. - படித்ததில் பிடித்தது

சூழ்நிலைக் கைதிகள்..  -   படித்ததில் பிடித்தது


”சூழ்நிலை அமையாத வரை எல்லோரும் நல்லவர்களே” என்பது எத்தனை சத்தியமான உண்மை. இதற்கு எழுத்தாளர் திரு எஸ்.ரா அவர்கள் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் சொன்ன இரண்டு விஷயங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

சம்பவம் 1:

ஒரு சிறிய நகரத்தின் நகைக்கடை ஒன்றில் தனது இருபதாவது வயதிலிருந்தே கணக்குப் பிள்ளையாக வேலை செய்யும் வயது ஐம்பதைக் கடந்துவிட்ட நேர்மையான ஒரு மனிதர். அவரின் முதலாளி கணக்குப் பிள்ளையின் மீது இருக்கும் நம்பிக்கையில் பெரும்பாலும் கடைக்கு வருவதில்லை, பொறுப்பையுணர்ந்த கணக்குப் பிள்ளையும் முதலாளியின் மீது அளவு கடந்த விசுவாசத்தோடு இருந்தார். ஒரு நாள் முதலாளி தனக்கு வயதாகிவிட்டதாலும், கடையில் பெரிதாய் வருமானம் வராததாலும் நகைக்கடையை மூடிவிட முடிவு செய்து கணக்கப் பிள்ளைக்கு சேர வேண்டிய சம்பளத்தொகையையும் மேற்கொண்டு கொஞ்சம் பணமும் கொடுத்து, ”நாளையிலிருந்து வேலைக்கு வரவேண்டாம்,வேறு வேலை தேடிக்கொள்” என்கிறார்.

கணக்குப் பிள்ளை,”இந்த வயதில் என்னை எங்கே புதிதாய் வேலைக்குச் சேர்ப்பார்கள்” என்று ஆரம்பித்து, ”திருமணத்திற்கு காத்திருக்கும் மகள் மற்றும் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவேன்” என முதலாளியிடம் தொடர்ந்து கடையை நடத்துமாறு கெஞ்சிக் கேட்கிறார். முதலாளிக்கும் கணக்குப் பிள்ளையின் நிலை புரிந்தாலும் லாபமில்லாத கடையை இனிமேலும் நடத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களைச் சொல்லிவிட்டு கைவிரித்து விடுகிறார்.

வழக்கம் போல் கடையை மூடிவிட்டு சாவியை முதலாளி வீட்டிற்கு கொடுக்க போகும்போது தன் மகளின் திருமணச் செலவுகளை நினைத்து பயம்கொண்ட கணக்குப்பிள்ளைக்கு அன்று வசூலான பணத்தையும்,நகையில் கொஞ்சமும் எடுத்தால் என்ன என்ற எண்ணம் வருகிறது.பெரிய மனப் போராட்டத்திற்கு ஆளாகிறார்.

சம்பவம் 2:

சின்ன வயதிலிருந்தே தன்னை வளர்த்த தனது அண்ணன் குடும்பம்தான் எல்லாமே என்று திருமணமே வேண்டாம் என்று இருக்கும் தம்பி தன் மொத்த வருமானத்தையும் அண்ணன் குடும்பத்திற்கே கொடுக்கிறான். அண்ணன் எவ்வளவோ வற்புறுத்தியும் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள மறுக்கிறான்.

ஒரு நாள் அண்ணன் வீட்டில் இல்லாத போது சமையலறையில் தண்ணீர் குடிக்கச் செல்லும் தம்பி சமைத்துக்கொண்டிருக்கும் அண்ணியின் விலகிய முந்தானையைப் பார்த்து சபலம் கொண்டு வெறித்துப் பார்க்கிறான்.பிறகு தனது சம்பாத்தியத்தின் கீழ் இருப்பவர்கள்தானே தொட்டால் என்ன என்கிற எண்ணம் வர கையைப் பிடிக்கிறான் மிரண்டுபோய் செய்வறியாது நிற்கும் அண்ணியின் முகத்தைப் பார்த்து சுதாரித்து கையை விடுவித்துவிட்டு தனது அறைக்கு திரும்பி விடுகிறான்.

விஷயம் அறிந்துகொள்கிற அண்ணன் ஒரு பெரிய தொகை மற்றும் தம்பி பெயரிலான பேங்க் பாஸ்புக் ஆகியவற்றைக் கொடுத்துவிட்டு,”தயவு செய்து வேறு எங்கேயாவது தங்கிக்கொள்” என்கிறான். அண்ணனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் தம்பியை ஆறுதலாய் பிடித்துக்கொள்ளும் அண்ணன் சொல்கிறான்,”இதுக்குதான்டா கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னேன் ” என்று கூறிவிட்டு மேலும் “இது உனக்கும் எனக்குமான பிரச்சனை இல்லை உலகத்துப் பிரச்சனையே இதுதான்டா” என்கிறான்.

சம்பவம் ஒன்றில் தனது வாழ்நாளின் பெரும்பான்மையை நேர்மையாக கடந்துவிட்ட ஒரு மனிதரை தனது நேர்மைக்கு எதிரான எண்ணத்தை அவரிடம் விதைத்தது எது? அவர் அந்த பணத்தை களவாடியிருப்பின் அதுநாள் வரை அவரின் மேலிருந்த நல்லவர் பிம்பத்தை எத்தனை எளிதாக கேலி செய்து அசிங்கப்படுத்திவிடும் சமூகம்.

சம்பவம் இரண்டில் தன்னைச் சார்ந்து இருக்கும் மனிதர்களையும் தனது உடமைகளைப் போல் எண்ணுகிற மனோபாவம் வந்துவிடுகிறது. மேலும் அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சிக்கும்போது அவள் மிரண்டு நின்றாலும் எதிர்ப்பை தெரிவிக்காமல் செய்வதறியாது நிற்க வைத்தது எது?

அந்த கணக்குப் பிள்ளையும் சரி,தம்பியும் சரி தான் இப்படி நடந்து கொள்வோம் என்பதை அப்படியொரு சூழ்நிலை அமையும் வரை கற்பனையில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

நாம் எல்லோருமே தவறுகள் செய்யும்போது அதற்கு ஒரு நியாயத்தைக் கற்பித்துக்கொண்டு நல்லவர்களாகக் காட்டிக்கொள்ள முயற்சிப்போம். அதே மற்றவர்களுக்கென்று வரும்போது அவர்களை நிராகரிப்பது, கார்னர் செய்து ஆளாளுக்கு நீதிமான்களாகி தண்டனை கொடுப்பது போன்றதைச் செய்வோம்.

தவறு செய்வது எல்லோருக்கும் பொதுவான இயல்பு என்பதையும், நாம் அனைவருமே தண்ணீரைப் போன்றவர்கள் சூழ்நிலை என்னும் பாத்திரம் மட்டுமே நமது வடிவத்தை தீர்மானிக்கும் சக்தி என்பதை அறிந்தும் அடுத்தவரின் சூழ்நிலைகளை புரிந்துகொண்டு சக மனிதர்களை நேசிப்போம்.

குறிப்பு : அடிப்பதற்கும்,கொலை செய்வதற்கும் கூட ஏதோ சூழ்நிலையிருக்கும் என்றெல்லாம் கேட்க மாட்டீங்க தானே. :)))))


நாடோடி இலக்கியன் பக்கம்

புதன், 23 டிசம்பர், 2009

தெலுங்கானா தேவையா ?




தெலுங்கானா ?

தெலுங்கானா...இந்த வார்த்தை இன்று இந்தியாவில் யாரும் சொல்லக்கூடாத, பிரச்சினைக்குரிய வார்த்தையாகிவிட்டது .ஏன்இப்படி?எதனால் ? என்றெல்லாம் சிந்தித்தோமானால் நன்கு புலப்படும் . இன்று இந்தியாவில் இருப்பவர்களுக்கு தெலுங்கு தெரிகிறதோ இல்லையோ தெலுங்கானா நன்றாக  தெரியும்.அந்த வகையில் தெலுங்கானா கோரி போராடுபவர்களுக்கு ஒரு வெற்றி கிடைத்தது உண்மை .

தெலுங்கானா -தனிமாநிலம்

தெலுங்கானா - என்ன இது? அப்படியென்றால் என்ன ? ஏன் திடீரென்று தனிமாநிலம் கேட்டு ஆந்திராவில் போராட்டம் செய்கிறார்கள் ? என்று நினைப்பவர்களுக்கு ஒன்று சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் .இந்த தெலுங்கானா போராட்டம் இன்று நேற்று வந்ததல்ல ,இந்திய சுதந்திரம் வாங்குவதற்கு முன்பிருந்தே இந்த போராட்டம் நடந்து வருகிறது .என்ன முன்பு பாகிஸ்தானுடன்  இணைவோம் என்று சொல்லிவந்தவர்கள் இன்று தனிமாநிலம் கேட்கிறார்கள் அவ்வளவுதான் .  
இந்திய சுதந்திரம் அடைந்த பிறகும் இன்றைய தெலுங்கானா ( அன்று நிஜாம்அரசு ) நிஜாம் மன்னரிடமே இருந்தது ,அது

இந்தியநாட்டின் வரையறைக்குள் வரவில்லை என்று சொல்வதைவிட நிசாம் இந்தியாவுடன் சேர விரும்பவில்லை என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் .அவருடைய எண்ணமெல்லாம் பாகிஸ்தானுடன் இணையவேண்டும் என்பதாக இருந்தது .

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அனைவராலும் போற்றப்படும் ,இந்தியாவின் முதல் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தியும் ,தூதுக்குழுவினரை அனுப்பியும் நிஜாம் பாகிஸ்தானுடன் நட்புறவு என்ற கொள்கையிலிருந்து மாறவில்லை .எனவே வேறுவழியின்றி இந்திய ராணுவம் நிஜாமுடன் போரிட்டு நிஜாமாபாத்தை  மீட்டது .
பின்னர் மொழிவாரி மாநிலம் என்ற கோரிக்கைக்கு செவி சாய்க்க விரும்பிய இந்திய அரசு தெலுங்கனா,ஆந்திரம் இரண்டு இடத்திலும் மக்கள் பேசும் மொழி தெலுங்கு என்ற அடிப்படையில் தெலுங்கானாவை ஆந்திரத்தில் சேர்த்துவிட்டது .அன்று முதல் இன்று வரை ஆந்திரம் தெலுங்கானா பகை ஓயவில்லை . அனால்

தெலுங்கானா மக்கள் பேசும் மொழி தெலுங்கு ,மராட்டி,பிஹாரி சேர்ந்த கலவையாக இருக்கும் ,இன்று வரை தெலுங்கு திரைப்படங்களில் கேலி செய்வதற்கு மட்டுமே இந்த மொழியை பயன்படுத்துகின்றனர் ஆந்திரத்தை சேர்ந்தவர்கள் .

உண்மையில் இன்று ஆந்திராவில் போராடுபவர்கள்  அனைவருக்கும் இந்திய நாட்டு பற்று உள்ளதா ? அதன் காரணமாகத்தான் இவ்வளவு போராட்டமா என்றெல்லாம் நீங்கள் கேட்டால் நான் சத்தியமாக இல்லை என்று தான் சொல்லுவேன் .இந்த போராட்டங்கள் அனைத்தும் பொதுமக்களாலோ,இல்லை மாணவர் சங்கங்களாலோ முன்னெடுத்து செல்லப்படவில்லை. ஹைதராபாத்தில் கோடிக்கணக்கான சொத்துக்களை வாங்கி போட்டிருக்கும் தொழிலதிபர்கள் ,அரசியல்வாதிகள் போன்றோர் எங்கே தெலுங்கானா பிறந்துவிட்டால் நம்முடைய சொத்துக்களுக்கு பங்கம் வந்துவிடுமோ என்ற தனிமனித சுயநலத்திற்காகத்தான் இவ்வளவு கலவரங்களை தூண்டிவிட்டு  வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கிறார்களே தவிர ,உண்மையில் மாநில உணர்வோ ,தாய்நாட்டு உணர்வோ அல்ல .இன்று தூண்டிவிட்ட அனைவரும் சுவிஸ் பாங்க்கில் கோடிக்கணக்கான பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களே!!!.

தெலுங்கானா வளர்ச்சி 

 சுதந்திரம் அடைந்து இத்தனை வருடத்தில் அந்திரப்ரதேசம் அடைந்துள்ள வளர்ச்சி பிரம்மிக்கவைக்கக்கூடையது ,பாராட்டத்தக்கது. ஆனால் அந்த வளரச்சிஎல்லாம் எங்கே என்று பார்த்தீர்களேயானால் ( ஹைதராபாத் தவிர்த்து ) அனைத்தும் ராயலசீமா மற்றும் கடலோர பகுதிகள் என்பது கண்கூடாக தெரியும். தெலுங்கானா ஆரம்பத்திலிருந்தே இவ்விரண்டு பகுதியினரால் புறக்கணிக்கப்பட்டே வருகிறது .இப்போது கூட ஹைதராபாத்தை தவிர்த்த தெலுங்கானா மாநிலம் என்றால் இவர்கள் பிரச்சினை செய்யமாட்டார்கள் .நீங்கள் கேட்கலாம் ஹைதராபாத்  தெலுங்கானாவில் தானே உள்ளது,தெலுங்கானாவை புறக்கணிக்க நினைத்தால் இவர்கள்  ஹைதராபாத்தை வளரவிட்டிருக்கக்கூடாது அல்லவா என்று .இந்த இடத்தில் நீங்கள் ஒன்று யோசித்து பார்க்கவேண்டும் சில ஆண்டுகளுக்கு  முன்பு வரை ஹைதராபாத் ஆந்திராவின் தலைநகர் இல்லை.கர்நூல்தான் அதன் தலைநகராக இயங்கி வந்தது .தெலுங்கானா இணைப்பிற்கு பிறகு ஹைதராபாத் நகரின் வளர்ச்சி ,நிஜாம் ஏற்படுத்தியிருந்த வளங்கள் ஹைதராபாத்தை ஆந்திராவின் தலைநகராக ஆக்க வைத்தது .

இன்றுவரை ஹைதராபாத்தை வளர்த்த ஆந்திர அரசும் சரி ,ஊடகங்களும்
சரி ,தெலுங்கானாவின் மற்ற முக்கிய நகரங்கலான கரீம் நகர் ,நிசாமாபாத் ,மகபூப் நகர்களைப் பற்றி செய்திகூட வெளியிடுவதில்லை,முற்றிலும் மறைக்கப்படுகிறது . இன்று இந்த போராட்டம் தெலுங்கானா மாநிலம் உருவாகக்கூடாது என்பதற்காக அல்ல .ஹைதராபாத் தெலுங்கானவுடன் சேர்க்கக்கூடாது என்பதற்க்காத்தான் என்பது தினமும் வரும் தெலுங்கானா பிரச்சினைகளை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு தெரியும். இன்றுவரை (நேற்று முளைத்த சத்தீஸ்கர் ,ஜார்கண்ட் மாநில பிரச்சினைவரை )தனிமாநிலம் வேண்டும் என்றுதான் போராட்டம் நடந்திருக்கிறதே தவிர ,கூடாது என்பதற்காக போராட்டம் நடப்பது இந்திய வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை .

கூர்க்காலாந்து கோரிக்கை

 இன்று தெலுங்கர்கள் இவ்வளவு வன்முறையை கையிலெடுத்த பின்   முக்கியத்துவம் கொடுக்கும் மத்திய அரசு ,கடந்த 26 வருடங்களாக தங்களுக்கு என்று தனிமாநிலம் வேண்டும் என்று கோரும் கூர்க்கா மக்களின் கூர்க்காலாந்து போராட்டத்தை கண்டுகொள்ளவே இல்லை இன்றுவரையிலும் கூட. பாவம் கூர்க்காமக்கள் தமிழர்களின் கோரிக்கைகள் போலவே அவர்களின் கோரிக்கைகளும் மத்திய அரசால் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கப்படுகின்றன .

நான் இவ்வளவு சொல்வதனால் நான் தெலுங்கானா கோரிக்கைக்கு ஆதரவாளனோ என நீங்கள் நினைக்க கூடும்.தெலுங்கானா என்ற மாநிலம் உதிப்பதற்கு முன் இந்த இந்திய அரசு சிலபல சட்டதிருத்தங்களையும் ,சட்டங்களையும் கொண்டுவரவேண்டும் .ஏனென்றால் நிசாம் என்கிற மன்னன் ஆரம்பத்திலேயே தெலுங்கானாவை இந்தியாவுடன் இணைத்திருந்தால் அது இன்றைக்கு ஜம்மு-காஷ்மீர் போல ஒரு தனிசட்டதிட்டம் கொண்ட மாநிலமாக இருந்திருக்கும்.இன்று இரண்டாம்தர மக்களாக ஆந்திரா மக்களால் பார்க்கப்படும் தெலுங்கானா மக்களுக்கு ஒரு விடிவு பிறக்காமல் இந்த தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்படுமேயனால் அது சந்திரசேகர ராவ் என்ற தனிமனிதன் முதலமைச்சர் ஆவதற்கு மட்டுமே பயன்படும் .

மேலும் ஜார்கண்ட்  மாநிலத்தில் ஒரு மதுகோடா போல இங்கு  யாரும் உருவாகாமல் தடுக்கப்பட வேண்டும் .கண்டிப்பாக தெலுங்கானா என்ற மாநிலம் பிறந்தால் அது தமிழகத்தை(கலைஞர் ) போல சந்திரசேகர ராவ் அன்ற மனிதனின் குடும்ப சொத்தாக 99 % வாய்ப்புள்ளது .இதெயெல்லாம் மத்திய அரசும் ,மக்களும் சிந்தித்து பார்க்கவேண்டும் .

எதோ நான் அறிவுஜீவிபோல ,எல்லாவற்றையும் பற்றி பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்க கூடும் ,உண்மையில் என்னை இந்த கட்டுரை எழுதவைத்தது நான் என்னுடைய வலைதலத்தில் போட்டிருந்த வாக்களியுங்கள் பகுதிதான் .அதில் பலபேர் அளித்தபதிலில் தெலுங்கானாவே ஒரு தப்பான கோரிக்கை என்று நினைக்கிறார்களோ என்று எனக்கு ஐயம் ஏற்பட்டதனால் ,அதைப்பற்றி என்னால் முடிந்த அளவுக்கு உங்கள் அனைவருக்கும் விலக்கிவிடவேண்டும் என்றே இந்த கட்டுரையை எழுதினேன் .


ஏனென்றால் என்வலைதளத்தைப் படிப்பவர்கள் தெலுங்கானாவைப் பற்றி எதுவும் தெரியாது என்று யாரிடமும் சொல்லக்கூடாது !!!!.நாம் இங்கு தற்கால அரசியல் ,சினிமா ,உலகநிலவரம் முதற்கொண்டு அனைத்தையும் விவாத்து தெளிவுபெற வேண்டும்  என்பதே என்னுடைய ஆசை .

தோழர்களே!! ஒன்று கூடுங்கள் !! விவாதிக்க .நான் மேல்குறிப்பிட்டவற்றில் உங்களுக்கு ஏதேனும் மாற்று கருத்து இருப்பின் தவறாமல் விமர்சிக்கவும். ஒத்தகருத்து இருப்பின் அதையும் தெரிவிபடுத்தவும் .....இப்படிக்கு...

-சூரியன் .

திங்கள், 21 டிசம்பர், 2009

வேட்டைக்காரன் - திரைவிமர்சனம்

 
வேட்டைக்காரன்! விஜய் படம் என்பதற்காகவே அதை எதிர்க்கும் நண்பர்களுக்கிடையே நான் இந்த படத்தை சென்று பார்த்தேன்.(கூடவே உலக சினிமாவை மட்டுமே பார்க்கும் அறிவு ஜீவிகளுடன்??!!!).சும்மா சொல்லக்கூடாது தியேட்டர் சென்றவுடன் தமிழ்நாடா,கர்நாடகாவா என்றே குழம்பும் அளவுக்கு பேனர்கள் ,கட்அவுட்டுகள் ,தோரணங்கள் என்று களைகட்டியிருந்தது .என்னுடன் வந்த ஒருவன் டேய்! கர்நாடகாவுல விஜய்க்கு இவ்ளோ ரசிகர்களா என்று வியக்கும் அளவுக்கு இருந்தது தியேட்டரில் கூட்டமும் .

நாங்கள் முன்கூட்டியே சென்றதால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் டிக்கெட் எடுத்து கியூவில் நின்றோம் .தியேட்டருக்கு போகும் போதுதான் சிலபல வேலைகள்  செய்யவேண்டும் என்று எங்கள் கூட்டத்தில் ஒருவர் இருக்கிறார்.அவரால் நங்கள் கொஞ்சம் படபடப்பாக வேண்டியதாயிற்று. அப்பாடா ஒருவழியாக உள்ளே போய் நல்ல சீட்டாக பார்த்து உட்கார்ந்தாச்சு.

வேட்டைக்காரன் கதை :

தூத்துக்குடியில் +2  நான்காவது முறையாக எழுதி ரிசல்ட் க்காக  வெயிட் பண்ணிக்கொண்டிருக்கும் ரவி (இல்லை இல்லை போலீஸ் ரவி ,இதுதான் படத்தில் ஹீரோவோட பேரு ) ஊரில் நடக்கும் தவறுகளை தட்டி கேட்டுக்கொண்டு  ஒரு போலிசாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறான் .இவனுடைய லட்சியமெல்லாம் Encounter specialist  தேவராஜ் (தெலுங்கு நடிகர் ஸ்ரீ ஹரி ) மாதிரியே பெரிய போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பதுதான் . அவருக்காக ஊர் நடுவில் பெரிய கட்அவுட்டு வைக்கிற அளவுக்கு பெரிய விசிறி . 

இப்படியே போய்கொண்டிருக்கிற போலீஸ் ரவி வாழ்கையில் திடீரென்று ஒரு அசம்பாவிதம் நிகழ்கிறது .அது அவரு +2  பாஸ் பண்றதுதான் .அப்புறம் ஒரு வழியாக தேவராஜ் படிச்ச அதே காலேஜ்ல சீட் வாங்கி  சேர்கிறார்  விஜய்.முதல் நாளே தன் சக மாணவிக்கு நேரும் அவமானத்திற்கு பதில் தீர்த்து மாணவர்கள் மத்தியில் நல்ல பேரை வாங்கும் விஜய் ,அப்படியே அந்த மாணவியை தன்னுடைய தோழி ஆக்கிகொள்கிறார்.  அவள் மூலமாகவே தேவராஜ்போல் தானும் ஆட்டோ ஒட்டி சம்பாதித்துதான்  படிக்க வேண்டும் என்ற ஆசையையும் நிறைவேற்றிக்கொள்கிறார்.

ஹீரோ சிட்டிக்கு வந்தாச்சே !! இப்போ வில்லன் என்ட்ரி அகனுமே ? வருகிறார் சாய்குமார் வித்தியாசமான கெட் டப்பில் .அவருக்கு அழகான பெண்களை பார்த்தவுடனே படுக்கைக்கு  அழைக்கும் ( கடத்தி செல்லும் )  குணம். அதை நிறைவேற்றுவதற்காகவே கூட 5 அல்லக்கைகள் .தன் தோழி மீது  அதே வில்லனின் கடைக்கண் பார்வை விழ !!! ஹீரோ வில்லனுடன் மோதுகிறார் ,அவரை அடித்து வீழ்த்தி ஆஸ்பத்திரியில் படுக்க வைக்கிறார் ,கூடவே அவருக்கு இருந்த Image ஐ யும் உடைக்கிறார். இப்போ போலீஸ் வந்து வில்லனை பிடிப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால்  தவறு,அவர்கள் விஜய்ஐ சிறையில் அடைத்து துன்புறுத்துகிறார்கள்.ஒரு கட்டத்தில் பொங்கி எழும் ஹீரோ சிறையை உடைத்து வெளியில் வர பெரிய Polica force வந்து அவரை மடக்கி பிடித்து மறுபடியும் சிறையில் அடிக்கிறார்கள் .மேலும் பழைய வெடிகுண்டு கேஸில் விஜய் பெயரையும் சேர்த்து Encounter  la போட்டு தள்ள காட்டுக்கு அழைத்து செல்கிறார்கள் ,அங்கிருந்து  தப்பிக்கும் விஜய் ஆற்றின்  முடிவான அருவியில் இருந்து குதித்து சின்ன முழங்கால் காயத்தோடு தப்பிக்கிறார்!!!! ????? .

தப்பித்த விஜய் நேராக பெரிய வில்லன் சலீம் கௌஸ் முன்னாள் போய் நிற்க அவர் விஜயை கூட்டிக்கொண்டு தன்னுடை ஒரு நாள் வேலையை விளக்குகிறார் ( பயம் காட்றாராமாம்). இதன் மூலம் எதிரியின் கோட்டையை புரிந்து கொள்ளும் விஜய் அவனை அழிக்க தானும் ரவுடி ஆகிறார் ( புலி உறுமுது  பாடல் ஒலிக்க). எப்படி அவர் வில்லனை அழிக்கிறார் ,தன்னுடைய நிஜ ஹீரோ தேவராஜை பார்த்தாரா இல்லை அவர் என்ன ஆனார் என்பதுடன் படம் முடிவடைகிறது இடை இடையே காதல்,காமெடி காட்சிகளுடன் .

விமர்சனம் :   

இதற்க்கு முன் வந்த படங்களை விட இந்த படத்தில் விஜயின் அறிமுக காட்சியில் அடக்கி வாசித்திருக்கிறார்கள் .Opening song ல் விஜயுடைய பையன் வந்து ஆடுவது  கலகலப்பு ,விஜய்க்கு இவ்வளவு  பெரிய மகனா என்று தியேட்டரில் பெரும்பாலனோர்  சலசலத்தது கேட்கமுடிந்தது. ஊரில் செய்யும் கலாட்டா அதை தொடர்ந்து சென்னைக்கு கிளம்புவது வரை ஏற்கனவே பல படங்களில் பார்த்தது போலவே இருந்தது பலவீனம் .ரயில்வே ஸ்டேஷன் ல அனுஷ்காவை பார்த்ததும் விஜய்யும் சத்யனும் செய்யும்  காமெடி கலாட்டா தூள் .


சென்னை வந்ததும் ஸ்ரீஹரியை போய் பார்க்கும் விஜய் அவர் ஊரில் இல்லை என்றதும் எங்கு தங்குகிறார் என்பதெற்கெல்லாம் விடை இல்லை .விஜய்யும் ,அனுஷ்காவின் பாட்டி சுகுமாரியும் சேர்ந்து செய்யும்  காமெடி கலாட்டவில் தியேட்டரே கல கல . ஸ்ரீநாத் காமெடி செய்கிறேன் பேர்வழி என்று வந்து உண்மைலேயே காமெடி பீஸாகி போகிறார். வடிவேல் ,விவேக்,சந்தானம் போன்ற காமெடியன்களின் உதவி இல்லாமல் கதையோடு விஜய் செய்யும் காமெடிகள் ரசிக்க தக்கவை . ஒரு மசாலா படத்திலேயே இவ்வளவு செய்ய முடிகிற விஜய், கமல் போல ஒரு முழுநீள நகைச்சுவை படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் விருப்பம் . 

சண்டைக்காட்சிகள் அனைத்தும் அனல்பறக்க உள்ளது ,அனால் வில்லனின் அடியாட்களுடன் விஜய் பின்னால் பறப்பது எல்லாம் டூமச் .அதை பார்த்து சிரிப்பதை தவிர வேறு வழியில்லை. வில்லன் கதாபாத்திர  வடிவமைப்பில் ஏதும் புதுமை இல்லை,அதே காட்டு கத்தல் தான் . சலீம் கௌஸ் -ன் நடிப்பு அருமை ,அதுவும் கிளைமாக்ஸ்ல் அவர் பேசும் வசனமும் ,அந்த தொனியும் சூப்பர்.

அனுஷ்கா - ரசிகர்கள் அவரிடம் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதை தெரிந்து நடித்திருக்கிறார் .மற்றபடி வழக்கம் போல விஜய் பட நாயகியாக வந்து அவரை காதல் செய்வதைத்தவிர யான் வேறொன்றும் அறியேன் பராபரமே என்று சொல்லி செல்கிறார். சத்யன் இந்த படத்தில் ஹீரோ friend என்கிற அந்தஸ்துக்கு  உயர்ந்திருக்கிறார், இதே போல் வாய்ப்புகளை செலக்ட் செய்து நடித்தால் அவருக்கு பெரிய எதிர்காலமுண்டு .
  
தில்,தூள்,திருப்பாச்சி,பகவதி படங்களின் பாதிப்பு அங்கங்கே தென்படுவதை தவிர்க்கமுடியவில்லை .ஒருவேளை டைரக்டர் இந்த படத்தை எப்படியாவது ஹிட்டாக்கியே தீரவேண்டுமென்று இப்படிசெய்துவிட்டாரோ என்னவோ.ஆனால் படத்தில் Director Touch என்ற வார்த்தைக்கு ஒரே காட்சி கூட இல்லை ,இயக்குனர் முழுக்க முழுக்க விஜய் என்ற தனிமனிதனை நம்பி களத்தில் இறங்கியிருப்பது படம் பார்க்கும் கடைசி ரசிகனுக்கு கூட கண்கூடாக  தெரிகிறது .சத்யன் கொலைக்கு பழிவாங்க விஜய் செய்யும் செயல்கள் கண்மூடி திறப்பதற்குள் முடிந்துவிடுவதால் ,என்ன நடக்கிறது என்பதை எல்லோராலும் புரிந்துகொள்ளமுடியவில்லை .சாய்குமாரை கொலை செய்ய காரை தண்ணியில் தள்ளி remote மூலம் Door lock செய்வதெல்லாம் ரசிக்கும்படி இருந்தது .
பஞ்ச் டயலாக் இல்லாத விஜய் படம் ( ஒரே ஒரு டயலாக் " சாமிகிட்ட மட்டும்தான்" தவிர) .உபயம்: சன் பிக்சர்ஸ்.

பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட்டாகிவிட்டன  .புலி உறுமுது பாடல் எதிர்பார்த்த அளவுக்கு படமாக்கப்படவில்லை. மற்ற பாடல்கள் அனைத்தும் அருமை .பின்னணி இசையில் ஒன்றும் புதிதாக சொல்வதற்கில்லை ,விஜய் அந்தோனி இன்னும் கொஞ்சம் நன்றாக முயற்சித்திருக்கலாம்  .ஒளிப்பதிவு -கோபிநாத் பாடல் காட்சிகளை தவிர மற்ற எதிலும் அவர் சாதிக்கவில்லை. படத்தொகுப்பு -V.T.விஜயன் ,பாடல்கள் அனைத்தும் திடீரென்று முடிந்து காட்சிகள் தொடர்வது சற்று கடினமாக உள்ளது ,இன்னும் Soft Editing செய்திருக்கலாம் .விஜயிடம் எல்லோரும் எதிர்பார்க்கும் டான்ஸ் இந்த படத்தில் குறைவு.சொல்லிக் கொள்கிற  அளவுக்கு விஜய்க்கு இந்த படத்தில் Dance movements இல்லை (உச்சி மண்டை பாடலில் வரும் தலைகீழ் நடனம் தவிர )என்பது  ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் .கோடிக்கணக்கான விஜய் ரசிகர்களின் சார்பாக ஒரே வேண்டுகோள் ..இந்த படம் ஓடுகிறது என்பதற்காக மீண்டும் இதே போல் நடிக்காமல் atleast கதையாவது புதுசா தேர்ந்தெடுத்து நடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .

3 மணிநேரத்திரைப்படம் ,போரடிக்காமல் செல்கிறது...காமெடி,காதல் என்று முதல் பாதி அருமை . வழக்கம் போல அடிதடி ,பழிவாங்கல் என்று இரண்டாம் பாதி.

விஜய் ரசிகர்களுக்கு நல்ல தீனி ,மற்றவர்களுக்கு ஓகே ரகம்.

வேட்டைக்காரன் - ரசிகர்களை வேட்டையாடாதவன்.

-சூரியன்

சனி, 19 டிசம்பர், 2009

தினமலர் – மலிவு விலையில் மனு தர்மம் !!!


தினமலருக்கு ஆகாதவர்களின் பட்டியல் மிக நீளமானது. பெரியார் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டபிறகும் அவரை மட்டம்தட்டி இன்றளவும் செய்திகளை வெளியிடுகிறார்கள். இசுலாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து அந்த சமூகத்தையே தமிழ் நாட்டில் அச்சுறுத்தியதில் ஆ.எஸ்.எஸுக்கு அடுத்த இடம் நிச்சயம் தினமலருக்குத்தான். ஈழ ஆதரவாளர்களை புலி ஆதரவாளரென அரசுக்கு ஆள்காட்டி வேலை பார்த்ததில் தொடங்கி விவசாயிகள் உரிமைக்கு போராடுவோரை நக்சலைட்டுக்கள் என பரப்புரை செய்வது வரை தினமலரது திருப்பணிகளின் கணக்கிலடங்காதவை. தங்களின் வாசகர்களின் பெரும் சதவீதமானவர்களாக உள்ள அரசு ஊழியர்களின் போராட்டத்தை அவதூறு செய்து நன்றியுணர்ச்சிக்கு புது இலக்கணம் வகுத்தவர்கள் இவர்கள், முன்னாள் இலங்கை துணைத்தூதர் அம்சாவை பெருந்தன்மையானவர் என சொன்ன ஒரே தமிழ் ஊடகம் தினமலர்தான்.

மேற்கூறிய பிரிவினருக்கு எல்லாம் தினமலர் தங்களுக்கு எதிரானது என்பது தெரியும். ஆனால் பெரும்பாலான தாழ்த்தப்பாட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு தினமலர் தங்களுக்கும் எதிரி என்பது தெரிவதில்லை. அதன் இந்துத்துவா முகம் எல்லா இந்துக்களுக்கும் ஆதரவான பத்திரிக்கையைப்போல ஒரு மாயத்தோற்றத்தை தோற்றுவிக்கிறது. மதமாற்றம் பற்றி ஓலமிடும் செய்திகள், இந்து அமைப்புக்களின் செயல்பாடுகளுக்கு தரப்படும் அதீத முக்கியத்துவம், நிறைந்து வழியும் கோயில் குளம் பற்றிய செய்திகள் என்பன போன்ற செயல்களால் இது இந்துக்களுக்கான பத்திரிக்கையாக பலருக்கும் தோண்றுகிறது.

உண்மையில் அதன் பார்ப்பன சிந்தனை வாரமலர் கதைகளில்கூட பிரதிபலிக்கிறது. டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டி ஒன்று வாரமலரில் நடத்தப்படுகிறது. அதில் சாதிக்கொடுமை, இடஒதுக்கீடு பற்றி வந்த மூன்று கதைகளின் சுருக்கத்தை மட்டும் பாருங்கள்.

1. இடஒதுக்கீட்டில் பலனடைந்த ஒரு குடும்பத்தின் வாரிசுகள் இடஒதுக்கீடு பற்றி தங்கள் குடும்ப நண்பர் ஒருவருடன் விவாதிக்கிறார்கள் (மதிப்பெண் எதிர்பார்த்த அளவு வராவிட்டாலும் தனக்கு இட ஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என ஒரு வாரிசு சொல்வதில் இருந்து விவாதம் துவங்குகிறது ) .குடும்ப நண்பரோ தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்றுவதற்காக அரசு இடஒதுக்கீட்டை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழங்கி வருவதாகவும், இடஒதுக்கீட்டில் பலனடைந்த ஒரு தலைமுறை தங்கள் வாரிசுகளையும் அந்த ஒதுக்கீட்டில் பலனடைய வைப்பதால் பலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போவதாகவும் கவலைப்படுகிறார். உடனே மனம் திருந்துகிறார்கள் அந்த இளைஞர்கள். அந்த குடும்பத்தில் பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர் தான் இடஒதுக்கீட்டை நாடாமல் பொதுப்பிரிவில் என்ன படிப்பு கிடைக்குமோ அதை படிக்கப்போவதாக சொல்வதுடன் கதை சுபமாக முடிகிறது. ( சென்ற ஆண்டில் முதல் பரிசு பெற்ற கதை )

2. ஒரு கிராமப்பள்ளியில் ஒரு தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களை தொடர்ந்து கழிவறையை சுத்தம் செய்ய சொல்கிறார்கள் ஆசிரியர்கள். மாணவர்கள் தங்கள் வீட்டில் இது பற்றி முறையிடுகிறார்கள். பெற்றோர்கள் திரண்டு சென்று ஆசிரியர்களுடன் வாக்குவாதம் செய்கிறார்கள். மாணவர்கள் படிப்பு பாழாகிவிடுமோ என அஞ்சி பதில் நடவடிக்கையை ஊருக்கு போய் முடிவு செய்யலாமென பெற்றோர்கள் திரும்புகிறார்கள். மறுநாள் தலைமை ஆசிரியர் தங்கள் அலுவலகத்தை திறக்கும்போது சகிக்க முடியாத துர்நாற்றம் வீசுகிறது. எல்லா வகுப்பறைகளும் இதே மாதிரி அசிங்கம் செய்யப்பட்டிருப்பதாக மற்ற ஆசிரியர்களும் குற்றம் சாட்டுகிறார்கள். இதை யார் செய்து இருப்பார்கள் என யூகித்த தலைமை ஆசிரியர் காவல்துறைக்கு தகவல் சொல்ல கிளம்புகிறார். முந்தைய நாட்களில் கழிவறையை சுத்தம் செய்யும்படி நிர்பந்திக்கப்பட்ட மாணவர்கள் தானாகவே முன்வந்து தாங்களே பள்ளியை சுத்தம் செய்வதாக சொல்கிறார்கள். பிறகு ( இளகிய மனம் படைத்தவர்கள் கண்களை துடத்துக்கொள்ளத்தயாராய் இருக்கவும் ) இந்த செயலால் மனம் திருந்திய தலைமையாசிரியர் அவர்களை இனி இந்த வேலையை செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டு, பள்ளியை சுத்தம் செய்ய ஆட்களை அழைத்துவருமாறு தமது ஊழியரை பணிக்கிறார். ( இந்த ஆண்டு இரண்டாம் பரிசு )

3. ஒரு கிராமத்தின் சலவைத்தொழிலாளியின் குடும்பம் ஒன்றில் தன் மகளை சலவைத்துணி வாங்கி வருமாறு பணிக்கிறாள் தாய். சலித்தபடியே துணி வாங்கச்செல்லும் மகள் ( பள்ளியிறுதி மாணவி ) வழியில் தங்கள் மீதான ஒடுக்குமுறையை பற்றி சிந்தித்தபடி செல்கிறார். துணி வாங்கும் வீட்டிலும் அவள் சுயமரியாதையை பாதிக்கும் செயல்கள் நடக்கின்றன. ( சலவைகாரப்பெண்னை வெறும் கையோடு அனுப்பாமல் ஏதாவது பட்சணம் கொடுத்தனுப்பு என்று ஒரு பெண் சொல்வதையும் மீதமான உணவை தங்கள் தலையில் கட்டும் தந்திரம் என சரியாக கணிக்கிறாள் அப்பெண் ). வீட்டிற்கு திரும்பியவளிடம் அவள் அம்மா, இன்று உன் அத்தை உன்னை பெண் பார்க்க வருவதாக சொல்கிறார். மனவளர்ச்சியில்லாத அத்தை மகனை மணக்க விரும்பாமல் தான் விரும்பிய இளைஞனை ( அவ்வூரில் பிணம் எரிக்கிறார் அவர் ) மணந்து அந்த ஊரிலேயே வசிக்கிறார் அப்பெண். கதையின் துவக்கத்தில் குறிப்பிட்ட அவளது வாழ்வியல் சிரமங்களைப்பற்றி மேலதிக தகவல்கள் இல்லாமல் முடிகிறது கதை. ( இவ்வாண்டு பிரசுரத்திற்கு தேர்வான ஆறுதல் பரிசுக்கதை

பரிசுக்கதைகளை கவனியுங்கள். ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட கதை நாயகர்கள் யாரும் தங்களுக்கான நியாயத்தை உரத்துக்கூட கேட்கவில்லை. ஒரு முறைக்கு மேல் இட ஒதுக்கீடு எதற்கு ? என்று தினமலரின் கருத்தை சொல்வதால்தான் இந்த கதை பரிசுக்குரியதாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. மற்ற கதைகளும் விதித்ததை ஏற்றுக்கொள் என நமக்கு பாடம் நடத்துகிறது. கதையை கதையாக மட்டும் பார் என அறிவுரை சொல்லும் ஆட்களை செருப்பால் அடிப்பதுபோல ஒரு கருத்தை சொல்லி தான் யார் என்பதை காட்டியது தினமலர். நவம்பர் எட்டாம் தேதி வாரமலரின் ஞானாந்தம் பகுதியில் ” எந்த ஒரு மனிதனும் தான் பிறந்த குலத்திற்கு தகுந்த குணங்களையே கொண்டிருப்பான். அவரை போட்டால் துவரை முளைக்குமா ? ” என நேரடியாக மனுதர்ம விஷத்தை கக்குகிறது தினமலர். அதை விளக்க வைரம் ராஜகோபால் சொன்ன ஒரு கதையின் சுருக்கம் கீழே,

ஒரு ஞானியை கைது செய்கிறான் ஒரு அரசன் ( அவர் பிச்சையெடுத்த குற்றத்திற்காக ) . அவர் ஒரு பெரிய ஞானி என அறிந்து அவரிடம் பல விசயங்களைக்கேட்டு தெளிவு பெறுகிறான். அவர் தன் அறிவை நிரூபிக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கு பிறகும் கூடுதலாக ஒரு பட்டை சாதம் தினமும் தர உத்தரவிடுகிறான் அரசன். ஒருநாள் அரசன் தான் எப்படிப்பட்டவன் என சொல்லும்படி ஞானியிடம் கேட்கிறான். ஞானியோ தயங்கியபடி நீங்கள் ஒரு சமயல்காரனுக்கு பிறந்தவர்.. ராஜாவுக்கு பிறந்தவரல்ல என்கிறார். இதை தன் தாயிடம் கேட்கிறான் அரசன், தாயும் நீ சமையல்காரனுக்குப் பிறந்தவன்தான் என ஒப்புக்கொள்கிறார். அந்த ஞானியிடம் இதை எப்படி கண்டுபிடித்தீர்கள் என கேட்கிறான் அரசன். நீ ராஜகுலத்தில் பிறந்தவனெனில் எனக்கு பொன்னையும் பொருளையும் தரச்சொல்லியிருப்பாய், சமையல்காரனுக்கு பிறந்தவன் என்பதால் பட்டை சாதம் தர சொன்னாய் என்கிறார் ஞானி. ( சில விதிவிலக்குகள் இருக்கலாம் எனவும் சொல்கிறார் வைரம்- ஜெயேந்திரனை பார்த்துவிட்டு எல்லா பிராமணனும் ஸ்த்ரீ லோலனோ என நாம் நினைத்துவிடக்கூடாதில்லையா?? )

இந்து ஆதரவு எனும் போர்வையில் தனது பார்பன சிந்தனையை வாசகர்களுக்குள் திணிக்கிறது தினமலர். இதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறது. தினமலரின் நீண்டகால வாசகர்கள் பலர் ‘ இனியும் இடஒதுக்கீடு எதற்கு, திறமைக்கு முன்னுரிமை தரவேண்டும் சாதிக்கு அல்ல, சாதீய வேறுபாடுகள் மறைந்துவிட்டதால் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருப்பவருக்கு இடஒதுக்கீடு கொடு’ எனபன போன்ற சிந்தனையோட்டத்தில் இருப்பதைக்காண முடிகிறது.

தான் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பு பெண் என புதியவர்களுடன் அறிமுகமாகும்போதே சொல்லிவிடுவேன் என்கிறார் என் தோழி ஒருவர் ( பிற்பாடு தெரிந்துகொண்டால் பழகுவதில் வேறுபாடு காட்டுவார்களோ என அஞ்சி ). தாழ்த்தப்பட்டவர் என சுலபமாக அடையாளம் காட்டும் தன் பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறார் நான் அறிந்த ஒரு பொறியியல் பட்டதாரி. இவை எல்லாம் எங்கோ ஒரு மூலையில் நடப்பவை அல்ல, தொழில் நகரமான கோவையில் நடந்தவை. தனிக்குவளை போய் டிஸ்போசபிள் கப் வந்ததுதான் சாதிவேறுபாட்டை களைவதில் நாம் கண்ட முன்னேற்றம். கிராமப்பகுதிகளில் முரட்டுத்தனமாக வெளிப்படும் ஜாதீயம் நகர் பகுதிகளில் நாசூக்கான வழிகளில் வெளிப்படுகிறது அவ்வளவுதான்.

இந்த வெளிப்பூச்சு சமத்துவத்தை இடஒதுக்கீட்டிற்கு எதிரான ஆயுதமாக்கும் தினமலர்தான் பக்தியின் பின்னால் நின்று வர்ண வேறுபாட்டை நியாயப்படுத்துகிறது. பாம்பையும் பார்பானையும் கண்டால் பார்பானை முதலில் அடி என்றார் பெரியார், அப்போது எத்தனை பிராமணர்கள் தாக்கப்பட்டார்கள் ?? ஆனால் பசு ஒரு தெய்வம் என செய்யப்பட்ட பிரச்சாரத்தால் செத்த மாட்டை அறுத்த தலித்துகள் எரித்துக்கொல்லப்பட்டார்கள் வடக்கே. வார்த்தைகளின் பின்னால் இருப்பவனின் நோக்கம்தான் பின்பற்றுபவனின் செயல்பாட்டைத் தீர்மானிக்கிறது. ராஜராஜனுக்கு பிறகு வந்த சோழ அரசர்கள் பிராமணரல்லாத மக்களை படிப்படியாக தஞ்சை நகரை விட்டு வெளியேற்றினார்கள், இது வரலாறு. இதற்காக யாரும் சமகால பிராமணரிடம் வாக்குவாதம் செய்தால் அது நியாயமில்லை என்று சொல்லலாம். ஆனால் இன்றைக்கும் எம் மக்களையும் எங்கள் மொழியையும் வழிபாட்டில் தொடங்கி இசை வரை ஒதுக்கிவைக்கும் வழக்கத்தை என்ன செய்வது ? போராடு என்றனர் பெரியாரும் அம்பேத்கரும், அடுத்த ஜென்மம் வரை காத்திரு என்கிறது தினமலர்.

I.I.T. இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ” இரண்டாயிரம் ஆண்டு காத்திருந்தவர்களால் ஒரு வருடம் காத்திருக்கமுடியாதா” என ஒரு நீதிபதியை கேட்க வைத்தது எது ?. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆலய நுழைவுப்போராட்டம் நடந்தபோது மீனாட்சி செத்துவிட்டாள் எனக்கூறி அர்ச்சகர்களை வெளிநடப்பு செய்யவைத்தது எது?. சிறீரங்கம் உஷாவைத்தவிர மற்ற எல்லா சௌபாக்கியங்களும் சிறையில் ஜெயேந்திரனுக்கு தரப்பட்டது. தன்னை எதிர்த்தவனை கொல்ல சூத்திரனை நியமித்த ஜெயேந்திரன் சிறையில் தனக்கு சமைக்க மட்டும் பிராமணனை நியமிக்க சொன்னது ஏன் ? எல்லோரும் சமமென்றாகிவிட்டபிறகு ( தினமலர் கணிப்பின்படி) அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதை தடுப்பது எது ? கே.ஆர். நாராயணன் குடியரசுத் தலைவரானபொழுது திருப்பதி தேவஸ்தானம் இனி தாங்கள் விரும்புபவர்களுக்கு மட்டும்தான் முதல் மரியாதை தருவோம் என முடிவெடுத்த திமிரின் அடித்தளம் எங்கிருக்கிறது ?

தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தினமலர் வாசகர்கள் அல்லது தினமலரது கருத்துடன் உடன்படுபவர்கள் மேலே உள்ள கேள்விகளுக்கு விடைகாண முற்படுங்கள். அதுதான் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான முதல் படி. அதைவிட்டுவிட்டு வாரமரலரின் கதை நாயகர்களைப்போல கையைக்கட்டிக்கொண்டு நானே கக்கூசை கழுவுறேன் சாமி என்றால் நம் பிள்ளைகளுக்கும் துடைப்பம்தான் மிஞ்சும்.

-நன்றி வில்லவன்

வெள்ளி, 18 டிசம்பர், 2009

வேட்டைக்காரன்... அடேங்கப்பா !



படம் இன்னிக்கு தான் வெளியாகுது, முன்பதிவு தொடங்குகிறது என்ற கேள்விப்பட்டதும், சிங்கப்பூர், கோல்டன் வில்லேஜ் யூசுன் திரையரங்கில் நேற்று மாலை நுழைவுச் சீட்டு பெற காந்திருந்தவர்களின் நீண்ட வரிசை தான் மேலே பார்க்கும் படம்.


மிக்க நன்றி : காலம்

வியாழன், 17 டிசம்பர், 2009

சீமான் உள்ளிட்ட ‘முற்போக்கு’ நரிகளின் தேவர் சாதிவெறி




தமிழ்த் தேசியம், தமிழீழம், பெரியார் கொள்கை பற்றி எல்லாம் மேடைதோறும் முழங்குபவர்களும் சரி, தமிழகத்தில் “முற்போக்கு சக்திகள்’எனத் தம்மைக் கருதிக் கொள்வோரும் சரி, உள்ளூர சாதிவெறி புழுத்து நாறுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதிர்ச்சியூட்டும் இந்த உண்மைகள், அண்மைக்காலத்தில் ஒவ்வொன்றாக அம்பலமாகத் தொடங்கியுள்ளன.

மேடை தோறும் ஈழம், பிரபாகரன், தமிழ்த் தேசியம் பற்றி உணர்ச்சி பொங்கப் பேசியும், தன்னைப் பெரியாரின் பேரன் என்று முழங்கியும் வந்த திரைப்பட இயக்குநர் சீமான், பிரபாகரன் படம் பொறித்த சட்டையணிந்து வந்து தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு தன் சாதி வெறியை வெளிப்படுத்தியுள்ளார். சீமானின் தேவர் சாதிப் பற்றை பெரியார் தி.க. ஆதரவு இணையதளம் மட்டும் விமர்சித்துள்ளது. இதுவரை “தம்பி’சீமானை சீராட்டிவந்த மற்ற ஈழ ஆதரவு சக்திகளோ, இப்போது அவரைக் கண்டுகொள்ளாது கைகழுவி விட்டுவிட்டன. இவர், ஏற்கெனவே தனது “தம்பி’ திரைப்படத்தில் தேவர் புகைப்படத்தை இடம்பெறச் செய்தபோதே விமர்சிக்கப்பட்டார். அதனைத் தவறென ஒத்துக் கொண்ட சீமான், இப்போது தேவர் ஜெயந்தியில் கலந்து கொண்டதை, “இம்மானுவேல் சேகரனுக்கும் மாலை போட்டதை”க் குறிப்பிட்டு நியாயப்படுத்தியுள்ளார். அதாவது, சாதி ஒடுக்குமுறையாளருக்கும் ஒடுக்கப்பட்டவருக்கும் ஒரே மரியாதை. இதுதான், இந்தப் “பெரியாரின் பேரனது’சாதி ஒழிப்பு சமத்துவம்!

இதே பித்தலாட்டத்தைத்தான் புரட்சி பேசும் சி.பி.எம். கட்சியும் செய்திருக்கிறது. சி.பி.எம்-மின் “தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக உத்தப்புரத்தில் போராடுகிறது. அதே கட்சியின் பொதுச் செயலர் என்.வரதராசன், அறுவை சிகிச்சை முடித்து கறுப்புக் கண்ணாடி அணிந்தவாறே, சாதி ஒடுக்குமுறையின் சின்னமான தேவர் சிலைக்கு ஓடோடிப் போய் மாலை போட்டு மரியாதை செய்தார்.

சென்ற ஆண்டு தேவர் ஜெயந்தியை ஒட்டி, சாதிவெறியாட்டம் ஆடிய சட்டக் கல்லூரியின் ஆதிக்க சாதி மாணவர்கள், தாழ்த்தப்பட்டோரிடம் வாங்கிக் கட்டிக்கொண்டதை, சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், “ஒரு மாணவனைப் போய் இந்த அடி அடித்தார்களே’ என்று சுயசாதிவெறியோடு ஒரு வருடமாக பேசியும் எழுதியும் வந்த வலது கம்யூனிஸ்டு கட்சியின் தா.பாண்டியன், தன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான லிங்கத்தை பசும்பொன்னுக்கே அனுப்பிவைத்து தேவருக்கு மரியாதை செய்தார். முதலாளிகளின் சீட்டாட்டக் கிளப்பான “லயன்ஸ் கிளப்”பில் முத்துராமலிங்கம் என்ற சொந்த சாதிக்காரர் இருப்பதால், அந்த கிளப்பின் விழாவை தா.பாண்டியன் வாழ்த்தும் விளம்பரம் “ஜனசக்தி”யில் வெளிவந்துள்ளது. தேவர் சாதிவெறித் தலைவர்களான முத்துராமலிங்கத் தேவர், மூக்கையாத் தேவர் போன்றோருக்கு அவ்வப்போது சிறப்புக் கட்டுரைகளை வெளியிடும் ஜனசக்தியில் பணிபுரியும் ஜீவபாரதியோ, டஜன் கணக்கில் தேவர் பெருமை பேசும் நூல்களையும் வெளியிடுபவர். ஜனசக்தி ஆசிரியர் தா.பாண்டியனோ, முக்குலத்தோர் சாதிகளில் ஒன்றான அகமுடையார் சங்க கல்வி அறக்கட்டளை விழாவில் கலந்துகொண்டு “அதில் என்ன தவறு?”என நியாயப்படுத்துபவர்.

“முதுகுளத்தூர் சாதிக் கலவரத்தை நிறுத்தவேண்டுமானால், முத்துராமலிங்கத்தைப் பிடித்துச் சிறைக்குள் தள்ள வேண்டும்”எனக் கோரியவர் பெரியார். அவர் ஆரம்பித்த தி.க.வின் “விடுதலை’”பத்திரிக்கையோ, வழக்கம்போல இந்த ஆண்டும் “தேவர் ஜெயந்தி’விழாவிற்கு விளம்பரம் வாங்கிப் பிரசுரித்துக் கொண்டது. சமூகநீதி, சாதி ஒழிப்பு, சமத்துவம் என்றெல்லாம் வாய்ப்பந்தல் போடும் வீரமணி கும்பலின் பித்தலாட்டம், தேவர் ஜெயந்தியோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. திராவிடர் கழகத்தின் தென்மாவட்டப் பிரச்சாரக் குழுத் தலைவராக இருக்கும் தே.எடிசன் ராஜா, நாடார் சங்கத்திலும் செயல்படுகிறார். மும்பையில் நாடார் சங்கம் நடத்தும் காமராசர் நினைவுப் பள்ளி விழாவில் எடிசன் ராஜாவுக்கு “நாடார்”வால் முளைத்து, “எடிசன் ராஜா நாடார்’ஆக மாறினார். பாரம்பரியமான திராவிட இயக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தி.க.வின் தகவல் தொடர்பு செயலாளருமான வழக்கறிஞர் அருள்மொழியின் தாயார் சரசுவதி சென்ற ஆண்டு மறைந்தபோது, “இந்து” நாளேட்டில் தந்திருந்த அஞ்சலி விளம்பரத்திலும் தனது “உடையார்”சாதி அடையாளத்தைத் தெளிவாகவே காட்டியிருந்தார்.

தேவர் சாதியைச் சேர்ந்த திரைப்பட பிரபலங்கள், தங்கள் சாதி விழாக்களில் அண்மைக்காலமாகக் கலந்துகொண்டு சாதி வளர்க்கின்றனர். இவர்களில் செந்தில், மனோரமா, விவேக் வரிசையில் இப்போது தி.மு.க.வைச் சேர்ந்த திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்துவும் இணைந்துவிட்டார். நகைச்சுவை நடிகர் கருணாஸ், தேவரைப் புகழ்ந்து “முக்குலத்தின் முகவரி”எனும் பாடல்தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். இதில் முகவரியை எழுதுவதற்கு வைரமுத்து “திருப்பாச்சி அறுவாளை’’த் தூக்கிக் கொண்டு குதித்திருக்கிறார்.

“ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று சேருங்கள்”என்ற கொள்கை முழக்கத்தைக் கொண்டிருக்கும் வே.ஆனைமுத்துவின் மார்க்சிய-பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியோ, “வன்னியர்களே ஒன்றுசேருங்கள்”என்று சொல்லவில்லையே தவிர, வன்னியகுல சத்திரிய “சமூகநீதி’யைத் தாண்டி வரவே இல்லை.

“அம்பேத்கரின் சாதி ஒழிப்பு செயல்திட்டங்களை ஆழமாகப் புரிந்து கொள்ள’ச் சொல்லி சி.பி.எம். கட்சிக்கு “பாடம் நடத்தும்”தலித் முரசில், “இந்து ஆதிதிராவிட மணமகனுக்கு அதே உள்பிரிவில் மணமகள் தேவை”என விளம்பரம் வருகிறது. சாதி காக்கும் இச்செயல் ஒவ்வோர் இதழிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

“சாதியை மறந்து தமிழர்களாக நாம் ஒன்றுபட வேண்டும்”என கருணாநிதி பேசுகிறார். ஆனால், அவரின் மகள் கனிமொழியோ, திருப்பூர்-மல்லம்பாளையம் நாடார் சங்கக் கல்வி நிறுவன விழாவிற்கு நாடார் சாதி தி.மு.க. அரசியல்வாதிகளான சற்குணபாண்டியன், கீதாஜீவன், பூங்கோதை போன்றவர்களுடன் கலந்து கொண்டு “நாடார்களாக ஒன்றுபடுகிறார்’.

பெரியாரின் கொள்கைகளைத் தங்கள் கொள்கையாகக் கருதுவோரும், தமிழ்த்தேசியத்தை வென்றெடுக்கக் களம் கண்டிருப்பவர்களும், சாதி ஒழிப்பிற்குப் பிறகுதான் சோசலிசம் எனத் தலித்தியம் பேசுபவர்களும், தாங்கள் கொண்டிருக்கும் இலட்சியத்திற்குக் கூட விசுவாசமாக இல்லாமல் சாதி உணர்வாளர்களாகவோ, வெறியர்களாகவோதான் இருக்கிறார்கள். தங்களின் தோலைக் கீறி சாதி இரத்தம் ஓடுவதை அவர்களாகவே ஒவ்வோர் நிகழ்விலும் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியும் விடுகின்றனர்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமூகத்தை சாதி எனும் நுகத்தடி அழுத்திக் கொண்டிருக்கிறது. மனிதநீதிக்கு எதிரான சாதி ஆதிக்கவெறியை அழிப்பதற்கு, மாபெரும் சமூகப் புரட்சியே தேவைப்படுகிறது. அப்புரட்சி, சாதி வெறியர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, முற்போக்கு வேடம் போடும் இத்தகைய களைகளுக்கும் எதிரானதுதான். இத்தகைய சுயசாதி மோகம் கொண்டோர்களையும், சாதியத்தைப் பாதுகாத்துவரும் ஓட்டுப் பொறுக்கிகளையும் களைந்தெறியாமல் சாதிவெறிக்கெதிரான போராட்டத்தில் முன்னேறிச் செல்லவே முடியாது.


-புதிய ஜனநாயகம், டிசம்பர்’ 2009

புதன், 16 டிசம்பர், 2009

ரஜினி 60 ஸ்பெஷல் : ‘இது ச்சும்மா ட்ரைலர்தாம்மா…!’






சோளிங்கர் ரஜினி ரசிகர் மன்றம் மிக மிக வித்தியாசமான முறையில் ரஜினி-60 மணிவிழாவைக் கொண்டாடியது . தலைவர் ரஜினியின் 60 ஆம் ஆண்டு பிறந்த தினத்தையொட்டி அற்புதமான பிறந்த நாள் மலர் ஒன்றினை வெளியிட்டார்  வேலூர் மாவட்ட பொருளாளர் என் ரவி.


விழா மலர் என்றால் வழக்கம் போல சாதாரணமாக இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள்… ரஜினியின் அசத்தலான போஸ்களை 60 அற்புதமான ஓவியங்களாகத் தீட்டி, அதற்கு பொருத்தமான கவிதைகளை ஒவ்வொரு பக்கமும் இடம்பெறச் செய்துள்ளனர்.

அந்தப் படங்களைத்தான் இந்தப் பக்கத்தில் பார்க்கிறீர்கள்…

மிக மிக நேர்த்தியான இந்த ஓவியத் தொகுப்பு மலரை ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று சோளிங்கரில் நடந்த  பிரமாண்ட விழாவில் வெளியிட்டனர் . தனது சொந்த செலவில் இந்த மலரை உருவாக்கியுள்ளார் என் ரவி.

இந்த மலருக்கு அணிந்துரை வழங்கியிருப்பவர் ரஜினியின் குருநாதர் இயக்குநர் கே பாலச்சந்தர். ரஜினிக்கு தனது வாழ்த்துக்களையும் இந்த மலர் மூலம் அவர் தெரிவித்துள்ளார்

இன்னொரு முக்கியமான விஷயம்… இந்த மலரை வெளிக் கொணர்பவர்கள் ஒரு பிரபல பதிப்பகத்தினர்… விவரம் விரைவில்!


ச்சும்மா அதிருதுல்ல…!!




‘அரக்கன் வந்தான்… ஆரம்பித்தது அழிவு!’


‘அரக்கன் வந்தான்… ஆந்திரத்தில் பேரழிவு தொடங்கிவிட்டது!’ – வைணவத் துறவியின் வாக்கு

ராஜபக்சே இரண்டு முறை திருப்பதி வந்தார். அவர் கால்பட்டதால்தான் ஆந்திராவுக்கே அழிவுகாலம் வந்துவிட்டது என வைணவ துறவி ஒருவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தன் பெயர் மற்றும் அடையாளங்களை வெளியிட விரும்பாத அந்தத் துறவி மேலும் கூறுகையில், ராஜபக்சே ஒரு மனித அரக்கன். பஞ்சமா பாதகங்களைச் செய்துவிட்டு ஒன்றும் தெரியஆதவர் போல் நடிக்கிறார்.

உலகின் கொடும் அரக்கன் என்றால் சந்தேகமில்லாமல் இந்த ராஜபக்சேதான்! இனப் படுகொலை நடத்தி பல இலட்சக்கணக்கான மக்களை கொன்ற கம்ப்யூட்டர் கால கொடுங்கோலன் ராஜபக்சே! இந்த அரக்கனுக்கு உதவி செய்தவை இந்திய பார்ப்பனியமும், அமெரிக்க மற்றும் சீன அரசுகளும்தான்.

இரண்டு முறை இந்தியாவில் உள்ள திருப்பதி கோவிலில் வந்து சாமி கும்பிட்டு போனார் ராஜபக்சே.

இலங்கையில் இறுதி யுத்தம் நடந்தபோது அவர் முதல் முறை திருப்பதி வந்தார். அப்போது, மக்கள் தலைவராகத் திகழ்ந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து போனார்.

இரண்டாவது முறை வந்து திருப்பதி ஏழு மலையானை வணங்கி விட்டு போனார் இந்த கொடுங்கோலன். இன்று பற்றி எரிகிறது ஆந்திர மாநிலமே.

ஆந்திர வரலாற்றில் இது போன்று ஒரு பெரிய போராட்டம் நடந்தது கிடையாது. தெய்வம் நின்றல்ல… அன்றே கொல்லும் வலிமை படைத்தது. ராஜபக்சேவை கோயிலுக்குள் நுழையாதே என்று தெய்வம் சொல்லவில்லை… ஆனால் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து உள்ளே அமர வைத்த ஆந்திரத்தை தண்டிக்கிறது இன்று. இந்த தெய்வத்தின் உண்மையான பக்தர்கள் லட்சக்கணக்கில், வரிசையில் காத்திருக்க, சம்பந்தமே இல்லாத இந்த அரக்கனை முதல் மரியாதை தந்து சந்நிதானத்தில் அமர வைத்த கொடுமையை தெய்வம் எப்படிப் பொறுக்கும். இதைச் செய்த அந்த பூசாரிகளுக்கும் அழிவுகாலம் காத்திருக்கிறது.

தமிழர்களின் எல்லை தெய்வம் திருப்பதி ஏழுமலையான். தன் மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளை திருப்பதி ஏழுமலையானாலேயே பொறுத்துக் கொள்ளவில்லை. இந்த சண்டாளன் தனது சன்னிதானத்திற்கு வந்து சாமி கும்பிட்டதற்கு எதிர்வினை காட்டுகிறார் இன்று.

இவர்கள் என்ன பரிகாரம் பண்ணப் போகிறார்கள்? இந்தப் பாவியின் வருகையினால் இந்தியாவிற்கு மிகப் பெரும் அழிவு நடக்கப் போகிறது.

ஆந்திர மாநிலம் இந்த அளவிற்கு பாதிப்படைந்து, எனது ஐம்பது வருட காலத்தில் பார்த்தது இல்லை. இன்னும் என்னென்ன நடக்குமோ.

எனவே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மஹத்தி தோஷம் பீடித்த ராஜபக்‌ஷே நுழைந்ததால் ஏற்பட்ட தீட்டைக் கழிக்க தக்க பரிகார பூஜைகள் யாகங்கள் நடத்தப்பட வேண்டும். இல்லை என்றால் ஆந்திர தேசத்திற்கும் இந்தியாவிற்கும் மிகப்பெரிய அவலமும் அழிவும் ஏற்படும்.

எனவே உண்மையான வைணவர்களும், ஏழுமலையான பக்தர்களும் துரிதமாக செயற்பட்டு திருப்பதி கோவிலில் தீட்டுக் கழிக்கும் பரிகார நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்… அதுமட்டுமல்ல, பாதிக்கப்பட்ட தமிழினத்துக்கும் உரிய பரிகாரத்தை இலங்கை செய்ய வேண்டும். அதற்கு ஏற்ப இந்தியா இனியாவது செயல்பட வேண்டும்” என அந்த வைணவத் துறவி கேட்டுக்கொண்டார்.

இந்தத் துறவியின் கூற்றில் பகுத்தறிவு உள்ளதா இல்லையா என்ற விவாதம் ஒருபுறமிருக்கட்டும்… திருவிழா, பண்டிகை போன்றவற்றை நாம் கொண்டாடுவதே கூட, அதன் பெயரால் சில நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என்ற நோக்கில்தான் என்பார்கள் பெரியவர்கள். கடவுளின் மீதுள்ள பயமாவது ராஜபக்ச மற்றும் இந்திய ஆட்சியாளர்களின் மனதை மாற்றுமா? அல்லது கடவுளையே இவர்கள் மாற்றிவிடுவார்களா? பார்க்கலாம்!

மற்றபடி தனக்கு சாதகமான விஷயங்களை எங்கிருந்து வந்தாலும் ஏற்கும் பாமர மனநிலையிலேயே இதை எடுத்துக் கொள்ளவும்!

நன்றி : என்வழி 

பிரபாகரன் மகள் சித்திரவதை செய்து படுகொலை?

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவின் உடல் எனக் கூறி சில படங்கள் வெளியாகியுள்ளன. நிர்வாண கோலத்தி்ல உடல் உள்ளதால் அவர் பாலியல் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


ஈழப் போரின் கடைசி கட்டத்தில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பலர் ராணுவத்திடம் சரணடைந்தனர். சில வெளி சக்திகளின் அறிவுரையின் பேரில், கேபி உள்ளிட்டோரின் அறிவுறுத்தலின் பேரில் இவர்கள் சரணடைந்தனர். அவர்களில் துவாரகாவும் ஒருவர் எனத் தெரிகிறது.

இந் நிலையில் துவாரகாவின் உடல் என்று கூறி சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இது பிரபாகரனின் மகள்தானா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

ஆனால் இந்தப் பெண்ணின் உடல் கடும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டது போலத் தெரிகிறது. நிர்வாண கோலத்தில் உடல் உள்ளது. எனவே ராணுவத்தினரால் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அந்தோணியின் மரணம் மட்டுமே புலிகள் இயக்கத்தினரால் உறுதி செய்ய்பட்டுள்ளது. பிரபாகரன் [^], அவரது மனைவி மதிவதனி, இளைய மகன் பாலச்சந்திரன், துவாரகா ஆகியோர் குறித்து தெளிவான தகவல்கள் யாரிடமும் இல்லை.

சில மாதங்களுக்கு முன்பு பாலச்சந்திரனின் உடல் என்று கூறி சில புகைப்படங்கள் வெளியாகின. இந்த நிலையில் துவாரகாவின் உடல் என்று கூறி சில படங்கள் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இலங்கை ராணுவத்தினர் எந்த அளவுக்குக் கொடூரமாக, ஐ.நா. போர் நிறுத்த ஜெனீவா உடன்படிக்கையை மீறி வெறித்தனமாக நடந்து கொண்டுள்ளனர் என்பதைக் காட்டுவதற்காக இந்தப் படங்கள் வெளியாகியுள்ளதாக ஈழத் தமிழர் இணையங்கள் கூறியுள்ளன.

சரணடைய வந்த புலிகள் தலைவர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லுமாறு கோத்தபயா ராஜபக்சே உத்தரவிட்டார் என்று சில தினங்களுக்கு முன்பு பொன்சேகா கூறியிருந்தார். ஆனால் சிங்களர்கள் மத்தியில், நம்மைக் காட்டிக் கொடுத்து விட்டார் என்று கொதிப்பு கிளம்பியதால் நான் அப்படிச் சொல்லவில்லை என்று அவர் மறுத்தார் என்பது நினைவிருக்கலாம்.

கொல்லப்பட்ட இந்தப் பெண் துவாரகாவோ இல்லையோ, ஒரு பெண் மிகக் கொடூரமான பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்ட்டிருக்கிறார். அதைச் செய்தது இலங்கை ராணுவம் என்ற உண்மை மட்டுமே இப்போதைக்கு தெளிவாகத் தெரியும் உண்மையாகும்.

நன்றி : தட்ஸ்தமிழ்

செவ்வாய், 15 டிசம்பர், 2009

கடலில் மிதந்து வரும் பிரமாண்ட பனிக் கட்டி-கப்பல்களுக்கு எச்சரிக்கை


அன்டார்டிக் பனிப் பகுதியிலிருந்து உடைந்து வந்த பிரமாண்ட பனிக்கட்டி ஆஸ்திரேலியா அருகே மிதந்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் அந்தப் பகுதி வழியாக செல்ல வேண்டாம் என கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் தென் மேற்குக் கடல் பகுதியில் 1700 கிலோமீட்டர் தொலைவில் அந்த பனிக் கட்டி மிதந்து கொண்டிருக்கிறது. இதற்கு B17B என்று பெயரிடப்பட்டுள்ளது.

செயற்கைக் கோள் மூலம் இந்த பனிக் கட்டி மிதந்து வருவது தெரிய வந்தது. 12 மைல் நீளமும், 5 மைல் அகலமும் கொண்டதாக இது உள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியாவை நோக்கி இது வந்து கொண்டுள்ளது.

கடந்த 2000மாவது ஆண்டு அன்டார்டிகாவில் ராஸ் மற்றும் ரான் ஆகிய இரு மிக பிரமாண்ட பனிக் கட்டிகள் உடைந்தன. அதிலிருந்து பிரிந்த ஒரு துண்டுதான் இந்த பனிக் கட்டி எனக் கூறப்படுகிறது.

கடந்த மாதம் இந்த பிரமாண்ட பனிக்கட்டி நியூசிலாந்து கடல் பகுதியில் வந்தபோது கப்பல்கள் அந்தப் பகுதி வழியாக செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஏற்கனவே அன்டார்டிகாவிலிருந்து நூற்றுக்கணக்கான பனிக் கட்டிகள் உடைந்து மிதந்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது வரும் பனிக் கட்டி பிரமாண்டமானதாக இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலுக்கு மேலே 50 மீட்டர் உயரத்தில் பிரமாண்டமாக இருக்கும் இந்த பனிக் கட்டி, மான்ஹாட்டன் தீவை விட 2 மடங்கு பெரியதாக இருக்கிறது.

தற்போது இந்தப் பனிக் கட்டி மெதுவாக உடைய ஆரம்பித்துள்ளது. இன்னும் சில வாரங்கள் அல்லது ஒரு மாதத்தில் இது கரைந்து போய் விடும் என கணிக்கப்பட்டுள்ளது.

அன்டார்டிகாவில் வெப்ப நிலை அதிகரித்திருப்பதே இப்படி பனிக்கட்சிகள் உருகி வரக் காரணம். கடந்த 60 ஆண்டுகளில் அங்கு 3 சென்டிகிரேட் வெப்பம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 11 டிசம்பர், 2009

உண்ணா நோன்புகள் மிரட்டலா ? போராட்டமா ?

மிரட்டி ஒரு செயலை சாதிப்பது ஏற்க முடியாத ஒன்று, இல்ல அமைப்புகளில் இது பரவலாக நடைமுறையில் இருக்கிறது, ஆண்கள் தற்கொலை செய்து கொள்கிறேன் என்றும், பெண்கள் கண்ணீராலும் மிரட்டல் விடுவது இல்ல அமைப்புகளில் வழமையாக நடப்பவை. தன்னை வருத்திக் கொண்டேனும் நினைத்ததை முடிக்க வேண்டும் என்பது துணிவா அல்லது இயலாமையின் இறுதி முடிவா என்பது இன்னும் உளவியல் சிக்கலாகவே இருக்கிறது. ஞாயமான கோரிக்கைகள் புரிந்து கொள்ளப்படாதபோது அல்லது மறுக்கப்படும் போது இத்தகைய மிரட்டல் வழிகள் கைகொடுக்கிறது என்பது பரவலான உணர்வு (நம்பிக்கை அல்ல) ஆக இருக்கிறது.

எந்த வித ஆயுதமற்ற போராட்டமாக இருந்தாலும் அது அந்தக்கால உப்பு சத்தியாகிரக போராட்டமாக இருந்தாலும் சரி, இன்றைய வேலை புறக்கணிப்பு போராட்டங்களாக இருந்தாலும் சரி, ஞாயங்களை எடுத்துச் சொல்ல அவை மிரட்டல் கருவிகளாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது என்றே நினைக்கிறேன். ஒரு கோரிக்கையை ஞாயங்கள் சொல்லியும் பிடிவாதமாக ஏற்க மறுக்கும் போது அதை எதிர்நோக்க அதே பிடிவாதமான மிரட்டல் வழிகளை தேர்ந்தெடுப்பது உணர்வு பூர்வமாக சரியாகவே இருக்கும் என்று நம்புகின்றனர். இது மனித புரிந்துணர்வுகள் போராட்டங்களினால் ஏற்கப்படுவதும், வழியுறுத்தப்படுவதும் உளவியல் சிக்கல்.

ஆயுதப் போராட்டங்கள் தவிர்த்து கோரிக்கை ஒன்றை குறித்த பிறவகைப் போராட்டத்தில் மிரட்டல் என்பதன் வடிவமாக தற்காலிக வேலை துறப்பு, உண்ணா விரதம் ஆகியவை நடக்கின்றன. ஆனாலும் இதில் கவனிக்கத் தக்கது என்னவென்றால் எளியவன் ஒரு கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருந்தால் அவன் சாகட்டம் என்றே விட்டுவிடுவார்கள், ஆனால் பெரும் தலைவர்கள் அவ்வாறு உண்ணாவிரதம் இருக்கும் போது அதன் பாதிப்புகள் பெரிய அளவில் என்பதால் அதற்கான உடனடி பலன் கிடைத்துவிடுகிறது.

கடைசி முயற்சி என்பதாக உண்ணாவிரதம் வரை சென்ற பின் போராட்டங்களுக்கு அரசு தரப்பு ஒத்திசைப்பது என்பது அரசுகளின் சந்தர்பவாதமாகவே படுகிறது. அரசு தரப்புகளால் இதுவரை ஞாயமற்றது என்பதாக புறக்கணிக்கப்படும் கோரிக்கைகளை தலைவர்களின் உண்ணாவிரதங்களால் நிறைவேறுகிறது என்றால் அங்கே ஞாயங்கள் என்பது வெறும் தலைவர்களின் உயிரின் மதிப்பு, அதனால் ஏற்படும் சமூக கொந்தளிப்பு என்ற அளவிற்குள் சுறுங்கிவிடுகிறது.

எந்த ஒரு பொது கோரிக்கைகளுக்கும் பெரும்பான்மை ஆதரவு என்பதாக எண்ணிக்கைகளினாலே பார்க்கப்பட்டு தீர்ப்பு சொல்லப்படுகிறது. தெலுங்கான கோரிக்கை தெலுங்கான பகுதிவாழ் பெரும்பான்மை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும் போது அதை என்றோ ஆராய்ந்து முடிக்காமல் உண்ணாவிரதம், கடுமையான போராட்டம் வரை காந்திருந்து தீர்ப்பு சொல்வது ஏற்க முடியவில்லை. இவை தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடுகிறது. போராடினால் தான், கடுமையாகப் போராடினால் தான் ஞாயங்களைப் ஆளும் வர்க்கத்திற்கு புரிய வைக்கமுடியும் என்கிற வரலாற்று பதிவாகவே தெலுங்கான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது.

உங்கள் கோரிக்கைகள் தீர்க்கபட வேண்டுமென்றால் நீங்கள் தலைவராக இருக்க வேண்டும், அப்படி இருந்தாலும் ஆளும்வர்கததை மிரட்டினால் தான் உங்கள் கோரிக்கையை சாதிக்க முடியும். என்பதை அரசுகள் வரலாற்றில் சுவடுகளாக விட்டுச் செல்கின்றன.

எப்போதும் எதாவது ஒன்றிற்கு எல்லா தரப்பினரும் அவ்வப்போது போராடுவதைப் பார்க்கும் போது பொது மக்களுக்கு எரிச்சல் ஏற்படும், ஏனெனில் நேரடியாக பாதிக்கப்படுவது பொது மக்கள் தான். ஆனால் எல்லாவற்றிற்கும் போராடத்தான் வேண்டி இருக்கிறது, என்பதை பொது மக்களாகிய நாம் புரிந்து கொள்ளவதில்லை. அனைத்து சமூகங்களுமே (ஆளும்) வர்க ரீதியாக வளர்ந்து இன்றைய நிலையை அடைந்திருக்கிறது, ஞாயமே ஆனாலும் உடனடியாக ஏற்றுக் கொள்வதை கவுரவக் குறைச்சலாகவே நினைக்கிறார்கள். மன்றாடினால், வேண்டினால் தான் நினைத்த காரியம் நடக்கும் என்பதை ஆன்மிக சித்தாந்தமாகவே சொல்லிக் கொடுக்கப்பட்டு சமூகம் வளர்ந்தால், எந்த ஒரு கோரிக்கையும் செயலுக்கு வர போராட்டம் தேவை என்பது விதியாகவே மாறி இருக்கிறது என்றே தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.

உலகத்தில் வேறெந்த நாடுகளிலும் இல்லாத ஒரு வழக்கமாக உண்ணா நோன்பை போராட்டதிற்கு பயன்படுத்துவது இந்தியாவில் நடக்கும் அரசியல் கூத்தாகவே மாறி இருக்கிறது. சோற்றால் அடித்த பிண்டங்கள் அதைத் துறப்பது மிகப் பெரியதும், போராட்டத்தில் ஒன்று போலும்.

போராடுங்கள் வெற்றிபெறுவீர்கள் ! என்பது மக்கள் ஆட்சி தத்துவமாக மாறிவிட்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் எருமைமாடுகளாக அசைந்து கொடுக்காத போது போராட்டங்கள் மிரட்டலாக மாறி இருப்பது தவறு அல்ல என்றே கருதுகிறேன்.

நன்றி : காலம்

வியாழன், 10 டிசம்பர், 2009

மருத்துவக் காப்பீடு திட்டம்: மு.க.வின் கருணையா? நரித்தனமா?


 ஐந்தாம் முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏறியுள்ள கருணாநிதியின் ‘பொற்கால’ ஆட்சியின் சாதனையாக “உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்” எனும் புதியதொரு திட்டத்தை தற்போது தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. “நுரையீரல் புற்றுநோயாளிக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை” என்றும் “சென்னை தனியார் மருத்துவமனையில் 15 வயது சிறுமிக்கு மூளைக்கட்டி இலவசமாக அகற்றப்பட்டது” என்றும் தினசரிகளில் செய்திகள் வந்து குவிகின்றன.

தமிழக அரசின் 26 நல வாரியங்களின் உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்தினரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என்றும், இதன் மூலம் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குக் குறைவாக உள்ள மக்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள் என்றும் இத்திட்டம் கூறுகிறது. ஒவ்வொரு பயனாளிக்கும் ஸ்மார்ட் கார்டு (கிரெடிட் கார்டைப் போன்ற) ஒன்று வழங்கப்படுமாம். மாநிலமெங்கும் அரசு ஊழியர்கள் முகாம்களை நடத்தியும், வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தியும், நல வாரியங்கள் எவற்றிலும் உறுப்பினராக இல்லாத பயனாளிகளை அடையாளம் கண்டு இத்திட்டத்தில் சேர்ப்பார்களாம்.

“ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைடு இன்சூரன்சு” என்ற பன்னாட்டு காப்பீடு நிறுவனத்திடம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்நிறுவனம் பட்டியலிட்டிருக்கும் தனியார் மருத்துவமனைகளில் அரசு ஊழியர்களுக்கு 4 ஆண்டு காலத்திற்கு இரண்டு லட்சம் ரூபா வரைக்கும் சிகிச்சை தரப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு அரசு ஊழியரிடமும் மாதாமாதம் ரூ.50-ஐ வசூலித்து காப்பீட்டு நிறுவனத்துக்கு இத்தொகையை அரசு வழங்கும். இதன் மூலம் காப்பீட்டு நிறுவனத்துக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் நிரந்தர வருவாயை அரசு உறுதிப்படுத்தியுள்ளது. சிகிச்சை பெற வரும் மக்களிடம் ஒட்டக் கறந்துவிடும் தனியார் மருத்துவமனைகள் திடீரெனக் கருணை பொங்க ‘இலவசமாக’ சிகிச்சை சேவதன் பின்னணி இதுதான்.

இத்திட்டத்தின்படி ஏழைக் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் அரசே ஆண்டொன்றுக்கு ரூ.500 வீதம் காப்பீடு தொகையாக ஸ்டார் காப்பீட்டு நிறுவனத்துக்குச் செலுத்தி வரும். சென்ற ஜூலை மாதம் சென்னையில் நடந்த இதற்கான தொடக்கவிழாவில் இவ்வாண்டின் முதல் காலாண்டு பிரீமியமாக ரூ.130 கோடியை ஸ்டார் ஹெல்த் நிறுவன அதிகாரிகளிடம் கருணாநிதி வழங்கினார்.

உலகின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள், தமிழ்நாட்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உருவாக்கப்படுகிறார்கள். தலைசிறந்த மருத்துவர்களாக இருக்கும் அரசு மருத்துவர்களைக் கொண்டு மக்களுக்குத் தரமான சிகிச்சை அளிக்காமல் தனியார் மருத்துவமனைகளிடம் அதனை ஒப்படைத்தது ஏன் என்ற கேள்விக்கு, “முதலமைச்சரின் மருத்துவ நிதி உதவி பெற விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏழைகளுக்கும் தரமான சிகிச்சை கிடைக்கவேண்டும். எனவேதான் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது” என்று அரசு காரணம் ல்கிறது.

ஆண்டுதோறும் இத்திட்டத்திற்கு அரசு வழங்கப்போகும் தவணைத் தொகை மட்டும் ரூ.517 கோடிகளாகும். அதே நேரத்தில், மதுரை அரசு மருத்துவமனையை அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞான கழகம் (எம்ஸ்) தரத்திற்கு உயர்த்தப் போவதாக அறிவித்து அரசு ஒதுக்கியுள்ள தொகையோ ரூ. 150 கோடிகள்தான். இதன்படி பார்த்தால், காப்பீடுக்குத் தனியாரிடம் ஒவ்வோராண்டும் போய்ச்சேரும் பணத்தைக் கொண்டு மூன்றுக்கும் மேற்பட்ட நவீன உயர்தர மருத்துவமனைகளைக் கட்டி விடமுடியும்.

அரசு மருத்துவர்களோ, “சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் இருக்கும் 30 அறுவைசிகிச்சை மையங்களில் 25 மையங்கள் தினமும் காலை 8 முதல் மதியம் 2 வரை மட்டுமே இயங்குகின்றன. 24 மணி நேரமும் இயங்குபவையோ அவற்றில் வெறும் ஐந்துதான். இவற்றை முறைப்படுத்தி 24 மணிநேரமும் இயங்குபவையாக மாற்ற எந்த நடவடிக்கையும் இல்லை” என்று புலம்புகின்றனர். ஏற்கெனவே இருக்கும் அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பையும் நிர்வாகத்தையும் சீரமைத்தாலே தரமான சிகிச்சையினை அரசே தரமுடியும் என்றும் மருத்துவர்கள் ல்கின்றனர்.

ஆனால் இதனைச் சேயாத அரசோ, கருணாநிதியின் திட்டத்தில் இடம்பெற்றுள்ள இதயநோக்கான பலூன் வால்வு சீரமைப்பிலும் இதய வால்வு சீரமைப்பிலும் நிபுணத்துவம் மிக்க சென்னை ரயில்வே மருத்துவமனையை தனியாருக்குத் தாரைவார்த்துத் தரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதில் முதல்கட்டமாக, ரயில்வே மருத்துவமனையையும் தனியாரையும் சேர்த்து மருத்துவக்கல்லூரி தொடங்க முடிவு செய்துள்ளது.

மருத்துவ சேவையை தனியார்மயப்படுத்தினால் ஏற்படும் பேரவலத்துக்கு அமெரிக்கா சரியான முன்னுதாரணமாகும். அங்கு மருத்துவம் முழுக்க தனியார் காப்பீடு நிறுவனங்களின் பிடிக்குள் இருப்பதால், காப்பீடுத் தவணை செலுத்த முடியாத ஏழைகளுக்கு மருத்துவ சேவையே முற்றிலும் மறுக்கப்படுகின்றது. காப்பீடு நிறுவனங்களின் கொள்ளையால் அங்கு 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவ சிகிச்சை பெறமுடியாமல் அவதிப்படுகின்றனர்.

இந்தியாவும் அதே பாதையில் உலகவங்கியின் வழிகாட்டுதலின் கீழ் “அனைவருக்கும் ஆரோக்கியம்” எனும் சுகாதாரக் கொள்கையை 2002-ஆம் ஆண்டு அறிவித்து, அதன்படி மருத்துவ நலத்திட்டங்களில் அரசின் பங்களிப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறது. தனியாரின் காப்பீடுத் திட்டத்திற்குள் பொது மருத்துவத்தைத் தள்ளிவிட உத்தரவு போட்டிருப்பது, உலகவங்கி. அதற்கு தனது பெயரைச் சூட்டியிருப்பதுதான், கருணாநிதியின் மூளை.

தொடக்கவிழாவில் பேசிய கருணாநிதி, கோபாலபுரத்தில் இருக்கும் அவரின் வீடு, அவரின் மரணத்திற்குப் பின்னர் இலவச மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அறிவித்துள்ளார். மருத்துவத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டங்கள் எதிர்ப்பே இன்றி நடைமுறைப்படுத்தப்படுமானால், அவருக்குப் பின், சென்னையில் கருணாநிதி வீடு ஒன்றில் மட்டும்தான் இலவச மருத்துவம் கிடைக்கும்.

இப்போதைக்கு கருணாநிதியின் காப்பீடுத் திட்டம், ஏழைகளிடமிருந்து கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை. ஆனால் அரசின் நேரடி மருத்துவ சேவைகள் படிப்படியாக ஒழிக்கப்பட்ட பின்னர், அனைத்துத் தரப்பினரையும் தனது வியாபார வலைக்குள் காப்பீடு நிறுவனம் வீழ்த்தத் தொடங்கும். அதன் பிறகு மருத்துவக் காப்பீடு வைத்துள்ளவர்கள் மட்டுமே நோக்குச் சிகிச்சை பெற முடியும் ஆபத்தான நிலை உருவாகும்.

சேமநல அரசினை இலாபகரமாக இயங்கும் அரசாக மாற்றுதல் எனும் போக்கைத் தாராளமயமும் தனியார்மயமும் துரிதமாகச் செயல்படுத்தி வருகின்றன. இந்த அயோக்கியத்தனம் மக்களிடம் அப்பட்டமாகத் தெரிந்துவிடாதிருக்க அதற்குச் சில பூச்சுவேலைகளும் கவர்ச்சியான பெயர்களும் தேவைப்படுகின்றன. ஓட்டுப்பொறுக்கும் அரசியலுக்கு இந்தக் கவர்ச்சியும் தேவையாக இருக்கின்றது. இப்போதைய எதிர்க்கட்சி அடுத்தமுறை ஆளும்கட்சியாகும்போது, இதே திட்டத்தை மாற்றமின்றி செயல்படுத்தும் என்பதால் எந்த எதிர்க்கட்சியுமே இத்திட்டத்தை தீவிரமாக எதிர்ப்பதில்லை.

இத்திட்டத்திற்கு தமிழக அரசு தேர்ந்தெடுத்துள்ள “ஸ்டார் ஹெல்த்” நிறுவனம்தான் “ஆரோக்கியஸ்ரீ ” எனும் பெயரில் ஆந்திர அரசோடு கைகோர்த்துக் கொண்டு, வாரங்கல் மாவட்டத்தில் சில பினாமி மருத்துவமனைகளை உருவாக்கி, அறுவை சிகிச்சையே தேவைப்படாத பெண்களுக்கும்கூடக் கருப்பைகளை அகற்றிப் பல கோடிகளைச் சுருட்டியிருக்கின்றது.

கருணாநிதியின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயனாளிகளுக்கு 4 ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் வரை மட்டுமே செலவிடப்படும். ஆனால், இன்றைக்கு இதய அறுவை சிகிச்சை மட்டும் ஒன்றரை இலட்சத்தில் இருந்து இரண்டு இலட்சம் வரை செலவு பிடிக்கக் கூடியதாக உள்ளது. இத்திட்டம் பட்டியலிட்டிருக்கும் 150 தனியார் மருத்துவமனைகளில் சென்னையில் மட்டும் 63 உள்ளன. காச்சல், இருமல் என்று போனாலே எக்ஸ்-ரே, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வைத்து குறைந்தது ரூ 5 ஆயிரத்தைக் கறந்து விடக்கூடிய லைஃப் லைன் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும், அப்பல்லோவை விட அதிகமாகப் பணம் பறிக்கும் பில்ரோத் மருத்துவமனையும் கொலைகார – கொள்ளைக்கார மருத்துவமனைகளாகப் புகழ் பெற்றுள்ள ஓசூரின் அகர்வால், அசோகா, விஜய் முதலானவையும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஓவுபெற்ற அரசு ஊழியர் ஒருவரின் புற்றுநோ சிகிச்சைக்கென அடையாறு புற்றுநோ மருத்துவமனை அண்மையில் ரூ.2 லட்சத்து இருபதாயிரத்தைக் கோரியிருந்தது. ஆனால் காப்பீடுத் திட்டம் அவருக்கு அனுமதித்ததோ ஒரு லட்சத்து இருபதாயிரம்தான். அவர் முழுப் பணத்தையும் மருத்துவமனையில் முதலிலேயே கட்டிவிடுமாறும், இத்தொகையை அவருக்கு ஆறு தவணைகளில் பிரித்துத் தருவதாகவும் காப்பீடு நிறுவனம் கூறியது. இதற்கு எதிராக வழக்குத் தொடுக்கப் போவதாக அவர் எச்சரித்த பிறகுதான், அந்நிறுவனம் இறங்கி வந்து காப்பீடு தொகையை ஒரே தவணையில் தரச் சம்மதித்திருக்கிறது. விவரம் தெரிந்தவர்களையே மொட்டையடிக்கப் பார்க்கும் காப்பீடு திட்டம், சாமானியர்களை என்ன பாடுபடுத்துமோ! ஆரம்பமே இப்படி அமர்க்களமாக இருப்பதிலிருந்தே, இத்திட்டம் மக்களைக் காக்குமா, அல்லது காப்பீடு நிறுவனங்களைக் காக்குமா என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

-புதிய ஜனநாயகம், செப்டம்பர்’2009

தமிழ்சினிமா - ஒரு காப்பி களம் ( காப்பி-1)

அன்பான தோழர்களே !   

என்னுடைய வலைப்பதிவை தொடர்ந்து படிக்கும் உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம் (அ) எழுந்திருக்கலாம் . என்னடா இவன் உலக நிகழ்வுகளையும் ,தமிழீழத்தையும் பற்றிய செய்திகளைப்பற்றி மட்டுமே பேசுகிறான் ,ஏதோ போனால் போகிறது என்று ஒரு திரைத்துளி போடுகிறான் .இவனுக்கும் சினிமாவுக்கும் வெகுதொலைவோ என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள்.

இதோ நான் படித்த உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் ,தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் என்று நாம் கருதும் இருவரைப் பற்றிய பார்வையே இந்த பதிவு .

இதில் உள்ள எந்த ஒரு கருத்தும் என்னால் சொல்லப்பட்டதல்ல ,அதேபோல் என்னால் எந்த திருத்தமும் செய்யப்பட்டதல்ல .ஆனால்  என்னால் ஏற்றுக்கொள்ளப்பட்டது .

அதனால் ஒருவேளை இதில் குறிப்பிட்ட வைகளுள் உங்களுக்கு ஏதேனும் கருத்து வேறுபாடு இருப்பின் உங்கள் விமர்சனங்களை வரவேற்று ,அதற்க்கு பதில் சொல்ல நானும் கடமைப்பட்டவனாய் இந்த கருத்துகளை பதிவு செய்கிறேன் ...

இதைப்படிக்கும் முன் நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் இன்று தமிழ்சினிமாவில் நம்மால் மிகப்பெரிய திறமைசாலிகள் என்று புகழப்படுபவர்களில் பலர் (சிலரை தவிர) உலக சினிமாவை காப்பியடிப்பவர்கள்தான் . இந்த மாதிரி காப்பியடித்த கதை ,மன்னிக்கவும் கப்பியடித்தவர்களின் கதை நிறைய உண்டு .இருக்காதே பின்னே நம்ம தமிழ் சினிமாவுக்கு 75 வயசாச்சே!!!...

அப்படி காப்பியடித்து தற்போது பரபரப்பில் மட்டிக்கொண்டவரைபற்றித்தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம் .இவரிடமிருந்து இப்படி ஒரு செயலை இதுவரை எந்த தமிழ்சினிமா ரசிகனும் எதிர்பார்த்திருக்கமாட்டான்.என்ன செய்வது அவர் மானசீக குருவாக ஏற்றுகொண்டவரும் இதே காப்பி தொழிலைத்தான் செய்துகொண்டிருக்கிறார் .எது எப்படியோ நல்லா போய்கொண்டிருந்த அவர்கள் பிழைப்பு உலக சினிமாவை பார்க்கும் ரசிகர்களால் கப்பலேறியது என்னமோ நிதர்சனமான உண்மை .

இனி நான் படித்தவை உங்களுக்கு .....இனிமேலும் இது தொடரும் ........

சாரு,கமல்,அமீர்

சாரு ஒரு கோமாளி என்று குமுதம் விமர்சனம் செய்து இருக்கிறது.நான் எப்பொழுதாவது ஓசியில் குமுதம் படித்தாலும் முதலில் படிப்பது அரசு பதில்கள் தான்.இந்த விமர்சனத்திற்கு காரணம் இளையராஜா.இந்த மூன்று பேருமே எனக்கு பிடிப்பதால் அதில் எல்லாம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை மேலும் அந்த பதிலுக்கு சாருவே வெளுத்து வாங்கி இருப்பதால் ஓவர் டூ அமீர்.

என்னை பொறுத்த வரை சாரு ஒரு தீர்க்கதரிசி தான்.காரணம் இதோ..

பருத்தி வீரன் தொடங்கியதில் இருந்து படம் முடியும் வரை ஒரு எதிர்பார்ப்பும் இல்லை - யோகி அளவிற்கு.படம் வெளி வந்தப் பிறகு தமிழ் நாட்டை ஒரு உலுக்கு உலுக்கியது.கமலில் ஆரம்பித்து சாதாரண கடைநிலை ரசிகன் வரை அமீருக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார்கள்.அதில் கமல் கொடுத்த அங்கீகாரம் தமிழ் சினிவாவில் வந்த பதினேழு சிறந்த திரைக்கதையில் பருத்தி வீரனும் ஒன்று. (கொடுமையிலும் பெரிய கொடுமை அந்த வரிசையில் கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படமும் இருந்தது.)

கமல் அங்கீகாரம் கொடுத்ததோடு நிறுத்தி இருக்கலாம்.அவர் கொடுத்த யோசனை தான் இன்று தமிழ்நாட்டு மக்களுக்கு எமனாக வந்து நிற்கிறது யோகியின் வடிவில்.கமல் சொன்னது இது தான் அமீர் உலக சினிமா பாருங்கள் என்று சொன்னது தான்.அப்போது வேண்டாம் அந்த தவறை செய்து விடாதீர்கள் என்று அலறிய ஒரே ஒரு நபர் சாரு மட்டும் தான்.

கமல் நிகழ மறுத்த அற்புதம் என்று இந்தியா டூடேயில் வெளியான கட்டுரையில் கமலின் அவ்வை சண்முகி படம் ஒரு அப்பட்டமான தழுவல் என்று சொன்னார்.அதே மாதிரி தான் யோகி அது ஆப்பிரிக்க படத்தின் அப்பட்டமான தழுவல் என்று கூட சொல்ல மனம் வரவில்லை.அப்பட்டமான உருவல்.

சாரு அதே கட்டுரையில் அமீருக்கு உலக சினிமாவைப் பற்றி எதுவும் தெரியாது என்று சொன்னார்.இப்போது அமீருக்கு உலக சினிமா தெரியும் - அதனால் தான் ஆப்பிரிக்கப் படத்தைத் திருடி அப்பிரிக்கப் படங்கள் கலந்து கொள்ளும் பிரிவில் துபாய் திரைப்பட விழாவிற்கு அனுப்பி வைக்கிறார்.(இப்படி செய்ய கமல் சொல்லி தந்து இருக்க மாட்டார் என்பது மட்டும் சர்வ நிச்சயம்.அனுப்ப சொன்னவர் சுகாசினி மணிரத்னம்.ஆப்பு எங்கே தயார் ஆகுதுன்னே கண்டுப்பிடிக்க முடியவில்லை.)

அடுத்த வரியில் சாரு அமீருக்கு இலக்கியம் தெரியாது என்று ஆச்சர்யப்படுகிறார்.நல்லவேளை அமீருக்கு இலக்கியம் படியுங்கள் என்று யோசனை சொல்லவில்லை.நல்ல விதமாக இலக்கியம் தப்பி விட்டது.(இதில் சாரு மேல் எனக்கு வருத்தம் உண்டு.இலக்கியம் தெரியாதவரை வைத்து புத்தகம் வெளியிடுவதை விட இலக்கியத்தில் ஆர்வம் உள்ள வாசகர்களை வைத்து புத்தகம் அறிமுகம் செய்து இருக்கலாம்.இது சாரு அமீரின் பருத்திவீரனுக்கு கொடுத்த அங்கீகாரமா..)

கமலும்,மணிரத்னமும் தான் காப்பி அடிக்க சொல்லி தந்தார்கள் என்று வெண்ணிற இரவுகள் கார்த்தி என்னுடைய பதிவில் பின்னூட்டமாக எழுதி இருந்தான்.கமல் (காட் பாதர் - நாயகன் ) அதில் ஒரு நேர்த்தி இருந்தது.நேடிவிட்டி இருந்தது.தி ராக் என்ற படத்தை தான் உருவி தசாவதாரமாக எடுத்து இருந்தார் என்று நான் கத்தியது என் காதிலே விழவில்லை.காரணம் கமல் என்ற மந்திரம்.அவர் படத்தில் தெரியும் இசம்,ரசம் எல்லாம் தான் பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன்.கமல் ஒரு பார்பினீயவாதி.இந்துத்துவா தீவிரவாதி என்று தான் அடிப்பார்களே தவிர அவர் எந்த படத்தில் இருந்து தழுவினார் என்று யாரும் கண்டுக் கொள்ளவதில்லை.

மணிரத்னம் காட்பாதர் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் படத்தை எடுத்த  (தழுவி) நாயகன் டைம்ஸ் பத்திரிக்கையின் முதல் நூறு படங்களில் ஒன்றாக இருக்கிறது.

இந்த இடத்தில் தான் வசந்தபாலனை உதாரணம் காட்ட வேண்டும்.சினிமா பேரடைஸோ தான் வெயில்.அந்த கதைக்குள் அழகாக பசுபதியைக் கொண்டு நிரப்பினார்.உடனே பசுபதிக்கு நான் தானே நடிக்க சொல்லி குடுத்தேன் என்று அடுத்த படத்தில் நடிக்க முடிவு செய்யவில்லை.

ட்ரைலர் பார்த்து அனுமானத்தில் அமீரின் நடிப்பை விமர்சனம் செய்தேன் என்று கடும் கண்டனம் வந்தது.இதற்கும் சாரு பாணியில் தான் பதில் சொல்வேன்.இருபது வருடம் சினிமா பார்த்தே வளரும் ஒருவனால் ட்ரைலர் பார்த்து மிக சரியாக முடிவு செய்ய முடியும் அதற்கு உதாரணம் தான் அமீரின் நடிப்பு.

இந்த பதிவை அரைவேக்காடு என்றோ அறிவுஜீவி என்றோ இல்லை கோமாளி என்றோ சொல்லலாம்.

டிஸ்கி :

தொடரும் - விமர்சங்கள் மட்டும் அல்ல இந்த பதிவும் தான்.இரண்டாவது பாகம் விரைவில்..

சாரு பேச்சைக் கேட்காமல் கமல் பேச்சைக் கேட்டு எங்க உயிரை வாங்கிடீங்களே அமீர்.இது நியாயமா..கண்ணபிரான் எந்த படத்தின் காப்பி - இது நான் கேட்கவில்லை குசும்பன் கேட்டார் ஆதியின் பதிவில்.எனக்கும் அதே சந்தேகம் தான்.

காப்பி தொடரும் ......

நன்றி : இரும்புத்திரை

புதன், 9 டிசம்பர், 2009

"தந்தை பெரியார் பற்றிய பாடங்களை நீக்க வேண்டும் என்று கூறுகிற தைரியம் இந்த நபருக்கு எப்படி வந்தது...?

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் பேராசிரியர் அருணன், பொதுச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் விடுத்துள்ள அறிக் கையில் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தும் பணியில் முதல் கட்டமாக, பாடத்திட்டங்களை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பாடத்திட்டம் குறித்த முன் வரைவினை அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்து முன்னணி தலைவர் இராமகோபாலன், பாடத்திட்டத்தில் தந்தை பெரியார் பற்றிய பாடம் இருக்கக்கூடாது என்று கூச்சல் போடத் துவங்கியுள்ளார்.


மேலும் மறுமலர்ச்சி, விழிப்புணர்வு மற்றும் மூட நம்பிக்கை எதிர்ப்பு பற்றிய பாடங்கள் இருக்கக்கூடாது என்றும், இவையெல்லாம் இந்து விரோத நடவடிக்கைகள் என்றும் குற்றம் சாட்டியுள் ளார்.சமச்சீர் கல்விப் பாடங்களை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடத்தப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இராமகோபாலனின் இத்தகைய மத அடிப்படைவாத மிரட்டல்களை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டனம் செய்கிறது.

விழிப்புணர்வுக் கருத்துக்கள் இந்து விரோதக் கருத்தென்று இவர் கூறுவதன் மூலம், இந்துக்களைக் கேவலப்படுத்தி யுள்ளார். இவருடைய மூடப்பழக்கத்துக்கு ஆதரவான கருத்துக்களை இந்துக்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும் என்று தமுஎகச வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.

தந்தை பெரியார் பற்றிய பாடங்களை நீக்க வேண்டும் என்று கூறுகிற தைரியம் இந்த நபருக்கு எப்படி வந்தது? இஸ்லாமியர் பற்றியும், கிறிஸ்தவர் பற்றியும் பாடத்தில் வரவே கூடாது என்று கூறும் துணிச்சல் இந்த நபருக்கு எங்கிருந்து வந்தது?

இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவருக்கும் இந்திய வர லாற்றில் இடமே இல்லையா? அவர்கள் இந்தியர்கள் இல்லையா?வர்ணாசிரமக் கல்வி என்ற பேரில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலம்,

பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி பெறும் உரிமையை மறுத்து வந்த அதே குரல்தான்,

இன்று இராமகோபாலன் வடிவில் வந்து நிற்கிறது. இந்த விஷவித்தை தமிழ் மண்ணில் ஊன்ற நாம் அனுமதிக் கக்கூடாது.

மதச்சார்பற்ற ஒரு நாட்டில் வாழும் அனைத்துப் பகுதி மக்களும், சகல பகுதி அறிஞர்கள், எழுத்தாளர்கள் மற் றும் கலைஞர்களும் ஒரே குரலில் உறுதியுடன் இதை எதிர்த்து நிற்க வருமாறு தமுஎகச அறைகூவி அழைக்கிறது.

ஏதாவது ஒரு குற்றம் சொல்லி, எந்த வகையிலேனும் சமச் சீர் கல்வித் திட்டத்தை முடக்கிவிட வேண்டும் என்கிற அர சியலும் இக்குரலுக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறது.

தமிழகத் தில் எடுபடாமல் போன ரத்தக்கறை படிந்த தங்கள் இந்துத் துவா நிகழ்ச்சி நிரலை, இப்பிரச்சனையைப் பெரிதாக்குவதன் மூலம் முன்னுக்குக் கொண்டுவரும் முயற்சியாகவும் நாம் இதைப்பார்க்க வேண்டும்.

தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்காக வலுவாகக் குரல் கொடுக்கும் தமிழ்த் திரைப்படக் கலைஞர்களையும் இணைத்துக் கொண்டு, தமிழர் கல்வி உரிமைக்கு எதிரான இராமகோபாலனின் நடவடிக்கைகளை எதிர்த்துத் தமிழக மெங்கும் போராட தமுஎகச தயாராக இருக்கிறது.

இத்தகைய மத அடிப்படைவாதிகளின் குரலுக்குச் செவி சாய்க்காமல் அரசியல் உறுதியுடன் நின்று சமச்சீர் கல்வியை மதச்சார்பற்ற கண்ணோட்டத்துடன் கூடிய பாடத்திட்டத் துடன் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

செவ்வாய், 8 டிசம்பர், 2009

இலங்கையில் களமிறங்கப்போகும் 25000 சீனர்கள்!

இலங்கை… இறுகும் சீனப் பிடி!


போருக்குப் பின் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பெருமளவிலான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பில் 25000க்கும் மேற்பட்ட சீனர்கள் களமிறங்கவிருக்கிறார்கள். இவர்களின் நடவடிக்கைகள் குறிப்பிட்ட மாவட்டத்தில் என்றில்லாமல் இலங்கை முழுக்கப் பரவியிருக்கும் என்று கூறப்படுகிறது.

இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்காக சீனா 6.1 பில்லியன் டாலர் அளவுக்கு பெரும் கடன் தொகையை தனிப்பட்ட முறையில் வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணத்தின் பலாலியிலிருந்து காங்கேசன் துறை வரையிலான 56 கிலோ மீட்டர் நீள ரயில் பாதை, வட இலங்கை முழுவதும் உள்ள நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகள், கொழும்பில் வளர்கலைக் கூடம் அமைத்தல் என பல பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது சீனா.

இந்தப் பணிகள் அனைத்துக்கும் உள்நாட்டுப் பணியாளர்கள் ஒருவர் கூட பயன்படுத்தப்படக் கூடாது என்பது இலங்கை – சீன ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும். எனவே முழுக்க முழுக்க சீனர்களே இந்தப் பணிகளை மேற்கொள்வார்கள் என்றும், இதற்காக 25000 சீனப் பணியாளர்கள் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் களமிறங்கப் போகிறார்கள் என்றும் சன்டே டைம்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.

இந்தப் பணிகள் தவிர, ஏற்கெனவே இலங்கையின் தென்பகுதியில், புத்தளம் மின் நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம், அம்பாந்தோட்டை விமான நிலையம், மாத்தறை – கதிர்காமம் இடையிலான ரயில் பாதை, பின்னடுவ – மாத்தறை இடையிலான தெற்கு எக்ஸ்பிரஸ் பாதை போன்ற திட்டங்களை சீனா செயற்படுத்தி வருகிறது.

இது தவிர வடக்கில், பலாலி – காங்கேசன்துறை ரயில் பாதை, மதவாச்சி – தலைமன்னார் ரயில் பாதை, யாழ்ப்பாணம் மாவட்டத்தினுள் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் யாழ். நகர இணைப்புச் சாலைகள் புனரமைப்பு, வடக்கில் மன்னார் மற்றும் புத்தளத்துக்கு இடையிலான அனைத்து நெடுஞ்சாலைகள் புனரமைப்பு ஆகிய திட்டங்களையும் சீனா செயற்படுத்த உள்ளதாம். இவற்றிலும் கணிசமான சீனர்கள் இடம்பெறக்கூடும்.

இந்தியாவுக்கு நெருடலாய்…

இந்தியாவைப் பொறுத்தவரை, இலங்கையில் சீனாவின் இந்த அழுத்தமான காலூன்றல், ஒருவிதமான ஊடுருவலாகவே பார்க்கப்படுகிறது.

தெற்கில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தளத்தை இந்தியா வலுவில் இழந்ததாகவே இதனை சர்வதேச ராணுவ நிபுணர்கள் பார்க்கிறார்கள்.

இலங்கையை நிர்ப்பந்தப்படுத்தும் வாய்ப்பும்கூட இனி இந்தியாவுக்கு இருக்கும் என்று நம்புவதற்கில்லை. இந்துமகா சமுத்திரத்தில் பாதுகாப்பு ரோந்துப் பணியில் சீனர்கள் பங்கெடுத்திருப்பதும், இலங்கையின் ராணுவத் தளங்களில் சீன வீரர்கள் நடமாட்டம் இருப்பதையும் கிட்டத்தட்ட இலங்கை ஒப்புக் கொண்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இப்போது இந்திய தரப்பு உதவிகளைக் கூட இலங்கை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்ற கருத்தும் வலுவடைந்து வருகிறது. அதற்கு ஒரு உதாரணம்:

இலங்கையின் வட பகுயில் வவுனியாவிருந்து யாழ்ப்பாணத்தின் பளை வரை ரயில் பாதை அமைக்க இந்திய குறைந்த வட்டியில் கடன் தந்துள்ளது. இந்தப் பணிகளையும் இந்தியாவே மேற்கொள்கிறது. ஒருகிலோ மீட்டர் நீள சாலைக்கு 2 மில்லியன் ரூபாய் செலவில் இந்தப் பாதையை அமைக்கிறது இந்தியா.

ஆனால் பலாலியிலிருந்து காங்கேசன் துறைவரை சீனா அமைக்கும் ரயில் பாதையோ, கிலே மீட்டர் ரூ 4 மில்லியன் செலவில் அமைக்கப்படுகிறது. அதாவது இந்தியாவை விட இருமடங்கு அதிக செலவு வைக்கிறது சீனா.

அப்படி இருந்தும் அதிக செலவு, கடன் சுமையைத் தரும் சீனாவுக்கு ரத்தினக் கம்பளம் விரிக்கிறது இலங்கை. இந்தியாவின் பங்களிப்பை முடிந்தவரை மறுத்து வருகிறது இலங்கை அரசு.
இன்றைய நிலவரப்படி, இலங்கை தீவு முழுவதுமே சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் சூழல் உருவாகியுள்ளது. இதனை இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது… இந்த வல்லாதிக்கப் போட்டியில் தமிழர்கள் எப்படியெல்லாம் இன்னும் சிதைக்கப்படப் போகிறார்களோ என்பதுதான் இப்போதைய கேள்வி!

நன்றி : என்வழி

மன்னிப்பு கேட்க நான் தயார்…’ ‘ஏத்துக்கவும் நாங்க தயார்…’ ‘ஆனா?’

போராட்ட நாடகத்தின் கிளைமாக்சுக்கு முந்தைய காட்சி!’

தனது ஆபாச பேச்சுக்காக இப்போது தினம் தினம் புலம்பித் திரியும் விவேக், பத்திரிகையாளர் சங்கங்களிடம் மன்னிப்புக் கேட்கத் தயார் என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் அவர் நடித்துள்ள மகனே மருமகனே படத்தின் பிரஸ் மீட்டுக்கு அவராலேயே வர முடியாத நிலை. காரணம், அவர் வந்தால், நாங்கள் பிரஸ் மீட்டிலிருந்து வெளியேறுவோம் என பத்திரிகையாளர்கள் எச்சரித்ததுதான். இதனால் பிரஸ் மீட் நடந்த ராஜ் டிவி ஸ்டுடியோ வரை வந்தவர், உள்ளே நுழையாமல் காரிலேயே காத்திருக்க வேண்டியதாயிற்று.

பின்னர், ‘நான் பத்திரிகையாளர்களிடம் இங்கேயே மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். வரட்டுமா?’ என தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களிடம் மன்றாடியுள்ளார். இதை இயக்குநர் டிபி கஜேந்திரனே வந்து சொன்னாராம். ஆனால் பத்திரிகையாளர்களால் அதற்கு உடனே ஒப்புதல் சொல்லிவிட முடியவில்லை.

காரணம்… இருக்கிறது!

இதை முடிவு செய்ய வேண்டியவர்கள் இவர்கள் அல்ல… இந்த போராட்டத்தை ஆரம்பித்தது சினிமா பத்திரிகையாளர்கள் அல்ல என்பதுதான் உண்மை. இதனை ‘உழைக்கும் பத்திரிகையாளர்கள்’, ‘பிரஸ் கிளப்’ ‘தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம்’ போன்ற பொதுவான பத்திரிக்கை அமைப்புகளே முன்னெடுத்துப் போராடின. அவர்களுக்கும் சினிமா கலைஞர்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. சினிமாக்காரர்களின் மதுவிருந்திலோ கேளிக்கைகளிலோ அவர்கள் பங்காளிகள் அல்ல.

ஆனாலும்- ‘பொதுவாக அனைத்துப் பத்திரிகையாளர்களையும் இழிவாக இந்த நடிகர்கள் பேசிவிட்டார்களே’ என்று கோபப்பட்டவர்கள் அவர்கள்தான்.

கொளுத்திய வெயிலில் நடு ரோட்டில் படுத்து கோஷம் போட்டதும் கொடி பிடித்ததும் அவர்களே. ஆனால் அந்த நேரத்தில் (சரியாகச் சொன்னால் மெரீனா சாலையில் போராட்டம் நடந்த நேரத்தில்) கிரீன் பார்க் ஓட்டலில் சூர்யா பிரஸ் மீட்டில் பிரியாணி சாப்பிட்டவர்கள்தான் சினிமா பத்திரிகை நிருபர்கள் (அரிதான விதிவிலக்குகள் சிலர் உண்டு). அட அவ்வளவு ஏன்… பிரஸ் கிளப் நடத்திய போராட்ட ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கூட பங்கெடுக்காத அளவுக்குதான் இவர்கள் மானம் ரோஷத்தின் லட்சணம் இருந்தது. நாம் இங்கே எழுதியதெல்லாம் கூட இவர்களுக்கு வக்காலத்து வாங்கியல்ல.

எனவே பிரச்சினை விவேக்குக்கும் சினிமா துணை நடிகர்களில் ஒரு பிரிவினராகவே மாறிவிட்ட சினிமா நிருபர்களுக்கும் கிடையாது. போராடும் பத்திரிகையாளர்கள் வேறு. அவர்கள் இந்த சினிமா நிருபர்களை ஒரு பொருட்டாகவும் பார்ப்பதில்லை. எனவே ஒட்டு மொத்த பத்திரிகையாளர்கள் சார்பாகவும் விவேக்கின் மன்னிப்பை ஏற்கும் இடத்தில் அல்லது தகுதியில் சினிமா நிருபர்கள் இல்லை.

அந்த போராடும் பத்திரிகையாளர்களுக்கு விஷயம் தெரிந்தால் சண்டைக்கு வருவார்கள் என்ற உண்மை உறைத்ததாலோ என்னமோ, அமைதியாக கலைந்து சென்றனர் சினிமா நிருபர்கள். இல்லாவிட்டால், ஒரு சமாதான நாடகம், அதைத் தொடர்ந்த தண்ணி பார்ட்டி குறித்த ரிப்போர்ட்டை இங்க தரவேண்டி வந்திருக்கலாம்!


நன்றி : என்வழி

சனி, 5 டிசம்பர், 2009

உலகில் உயிர்கள் உருவானது கடவுளின் செயலா?


உலகமும் - உயிர்களும்

உலகமும் உயிர்களும் படைக்கப்பட்டன அல்ல; எரிமலைகள் வெடித்தமையால்தான் உயிர்கள் உற்பத்தி ஆயின. இதோ ஆதாரம்:

எரிமலைகள் வெடித்துச் சிதறியதுதான் 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உலகில் உயிர்கள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் காரணமாக அமைந்தது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

நீரில், வாயுக்களைக் கலந்து மின்சாரத்தைச் செலுத்தி அந்த நீரில் அமினோ அமிலம் உண் டானதைச் சோதனைச் சாலைகளில் செய்துபார்த்து இந்த முடிவுகளைக் கூறியுள்ளனர்.

எரிமலைகள் வெடித்துச் சிதறியயமைதான் தொடக்க காலத்தில் இருந்த தூசுக் குழம்பைச் சூடாக்கி வாயுக்களை உற்பத்தி செய்துள்ளன என்கிற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.

1953-இல் ஸ்டான்லி மில்லர் எனும் ஆய்வாளர் இரண்டு பிளாஸ்குகளில், ஒன்றில் தொடக்க காலக் குழம்பு (Cosmic Soup) எனவும், மற்றொன்றில் வாயுக்கள் எனவும் எடுத்துக் கொண்டு ஊழி யின் தொடக்க கால நிலையை உருவாக்கிக் கொண்டார். பிறகு இவை இரண்டையும் ரப்பர் குழாய் மூலம் இணைத்தார். பின்னர் இவற்றில் மின்சா ரத்தைப் பாய்ச்சி மின்னலின் தாக்குதலை நடத்தச் செய்தார்.

சில நாள்களுக்குள் நீரில் அமினோ அமிலங்கள் உற்பத்தியாகி மேலும் சில உயிர்க் கூட்டுகளும் உருவாகி, உயிர்கள் உற்பத்தியாகக் கூடிய சூழலைத் தோற்றுவித்தன.

கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் கடல்வாழ் உயிரினப் பேராசிரியர் ஜெஃப் பாடா என்பவர் ஸ்டான்லி மில்லரிடம் உதவியாளராக இருந்தவர்; மில்லர் பயன்படுத்திய சாம்பிள்களை மீண்டும் ஆய்வு செய்தார். அண்மைக்காலக் கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்து ஏதும் புதிய பொருள்களைக் காண முடியுமா என ஆய்ந்தார்.

11 சாம்பிள்களை மீண்டும் ஆய்வு செய்ததில் 22 வகை அமினோ அமிலங்கள் உள்ளதைக் கண்டு பிடித்தார். இவற்றில் 10 வகைகளை ஏற்கெனவே மில்லரால் கண்டுபிடிக்க முடியவில்லை. மின்னல்களும் எரிமலை வெடிப்புகளும் சேர்ந்துதான் உலகில் உயிர்களை உருவாக்குவதற்கு உதவி செய்துள்ள என்பதுதான் ஜெஃப் கண்டுபிடித்த ஆய்வின் முடிவாகும்.

இன்னும்கூட பலவற்றை மில்லரின் ஆய்வுகள் மூலம் கண்டறிய முடியம் என பாடா கூறுகிறார். எரிமலைக் குழம்புகள் பற்றி அறிந்திடக் கண்டுபிடிக்கப்பட் டுள்ள நவீன கருவிகள் பலவேறு கூட்டுப்பொருள்களைக் கண்ட றிய உதவும் எனவும் அவர் கூறுகிறார்.

மின்னலின் மின் சக்தியும் வாயுக்களோடு சேர்ந்து எரிமலைக் குழம்புகளுடன் இணைந்த போது, உயிர்கள் உருவாவதற்கானச் சூழலைத் தோற்றுவித்தன என்பதுதான் இந்த ஆய்வுகள் உறுதிபடத் தெரிவிக்கின்றன.

உயிர்களின் உற்பத்தியில் கடவுளுக்கு தொடர்பே கிடையாது. அப்படிக் கூறுவது மூடத்தனம் என்பதுதான் முடிவு..

----------- "தி டெய்லி டெலிகிராம்" இதழில் வெளிவந்த ஆய்வு முடிவு.

இட ஒதுக்கீடும் உச்சநீதிமன்ற தீர்ப்பும் !!!


அரியானா மாநிலத்தின் ரோடக் நகரில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியில் முதுகலைப் பட்ட வகுப்பில் சேர இடம் மறுக்கப்பட்ட மாணவர் குல்ஷன் பிரகாஷும் வேறு சிலரும் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்ற பெஞ்ச் ஒரு தீர்ப்பை செவ்வாய்க்கிழமை வழங்கியது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் நீதிபதிகள் பி. சதாசிவம், ஜே.எம். பஞ்சால் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. பல்கலைக்கழகத்தின் பட்ட வகுப்பில் இட ஒதுக்கீடு மூலம் சேர்ந்து பட்டம் பெற்ற எங்களுக்கு முதுகலைப் பட்ட வகுப்பிலும் அதே அடிப்படையில் இடங்களை ஒதுக்க வேண்டும் என்று பல்கலைக்கழகத்துக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் வழக்கு தொடுத்தனர்.

2007_ 08ஆம் கல்வி ஆண்டில் முதுகலை மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காததால் அவர்கள் வழக்கு தொடுத்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

அரசியல் சட்டத்தின் 15 (4) வது பிரிவு, 16 (4) வது பிரிவு ஆகியவற்றை மனுதாரர்கள் மேற்கோள் காட்டி இட ஒதுக்கீட்டுச் சலுகை கோருகின்றனர். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களைக் கைதூக்கிவிட தேவைப்படும் சமயங்களில் சலுகைகளை அளிக்க அரசுக்கு அதிகாரம் அளிப்பவைதான் அந்தப் பிரிவுகளே தவிர கட்டாயம் இடங்களைத் தந்தே தீர வேண்டும் என்கிற வகையிலான நிரந்தர ஏற்பாடுகள் அல்ல. அந்தந்த மாநிலங்களின் சமூகச் சூழலுக்கு ஏற்ப மாநில அரசுகள் இந்தப் பிரிவுகளை இட ஒதுக்கீட்டுச் சலுகைகள் வழங்க பயன்படுத்திக்கொள்ளலாம். அரியானா மாநில அரசுகூட எதிர்காலத்தில் முதுகலை பட்டப்படிப்புகளில் தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.) பழங்குடி (எஸ்.-டி.) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட (ஓ.பி.சி.) வகுப்பு மாணவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க அவசியம் என்று கருதினால் இட ஒதுக்கீட்டு முறையை ஏதேனும் ஒரு வகையில் அமலுக்குக் கொண்டு வரலாம் என்று விளக்கிய நீதிபதிகள், இந்த வழக்கில் மனுதாரர்களின் கோரிக்கைகளை நிராகரித்து உத்தரவிட்டனர்.

இந்தத் தீர்ப்பு உண்மையிலே அதிர்ச்சி அளிக்கக் கூடிய ஒன்று என்பதில் அய்யமில்லை.
சென்னை மாநிலத்தில் நடைமுறையில் இருந்து வந்த இட ஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்துவிட்ட நிலையில், தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடே கொந்தளித்து எழுந்தது. அந்த நிலையில்தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தமே (1951) மேற்கொள்ளப்பட்டு இன்றுவரையில் கல்வியில் இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது 15(4); வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு 16(4) என்பது அரசமைப்புச் சட்டத்தில் ஏற்கெனவே இடம் பெற்ற ஒன்று.

அத்தகைய சட்டங்களின் வலிமையைப் பலகீனப்படுத்தும் வகையில் உச்சநீதிமன்றம் கருத்துக் கூறியிருப்பது மறுபரிசீலனை செய்யப்படவேண்டியதாகும்.

இந்த இரு பிரிவுகளின் அடிப்படையில்தான் இதுவரை உச்சநீதிமன்றமேகூட பல தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது.-அப்பொழுதெல்லாம் சொல்லப்படாத ஒரு கருத்து இப்பொழுது உச்சநீதிமன்றத்திலிருந்து வெளிவந்திருப்பது ஏன் என்று தெரியவில்லை.

இட ஒதுக்கீடுகள் அமல்படுத்தப்படும் காலகட்டத்தில்கூட தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் உரிய விகிதாச்சார இடங்கள் கிடைத்தபாடில்லை.

கீழ்மட்டப் பதவிகளில்தான் இட ஒதுக்கீடு முழுமையான அளவில் செயல்படுத்தப்படுகிறதே தவிர, மேலே போகப் போக சதவிகிதங்களின் அளவு கீழ்நோக்கிப் போகிறது.

அதுவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலையில் இட ஒதுக்கீடு என்பது 1990 ஆம் ஆண்டிலிருந்து, சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது செயல்பாட்டுக்கு வந்தது என்றாலும், உச்சநீதிமன்ற முட்டுக்கட்டையின் காரணமாக 1992 ஆம் ஆண்டிலிருந்துதான் செயல்படுத்தப்படுகிறது. கல்வியில் இன்னும் கிடைத்தபாடில்லை.

இந்த நிலையில், தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் தட்டுத் தடுமாறி நடை எடுத்து வைக்கும் நேரத்தில், இதுபோன்ற தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்கலாமா?

“பாரத தேசத்தை, மதச்சார்பற்ற சமதர்மக் குடியரசாக அமைப்பதற்கு இந்திய மக்களாகிய நாங்கள் உறுதி பூண்டு, இந்திய மக்கள் அனைவருக்கும் சமூக, பொருளா தார, அரசியல் நீதி, எண்ண, எழுத, எடுத்துச் சொல்ல, நம்பிக்கை வைக்க, வழிபாடு செய்ய, சுதந்திரம், தரத்திலும், தகுதியிலும், வாய்ப்பிலும் சமத்துவம் ஆகிய வற்றை அளிப்பதற்கும் எங்களிடையே தனி மனிதனின் கவுரவம் மற்றும் தேசிய ஒற்றுமையையும், ஒருமைப் பாட்டையும் உறுதியளிக்கத்தக்க சகோதரத்துவத்தை வளர்க்கவும் உறுதி எடுத்துக்கொண்டிருக்கிறோம்!’’ என்றுதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தொடங்கப்படுகிறது.

இதில் எடுத்த எடுப்பிலேயே சமூகநீதி என்பதுதான் முன்னுரிமையாகக் குறிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அந்த சமூகநீதியை இரண்டாம் இடத்தில் தள்ளுவது அதற்கு வேறு வகையில் வியாக்கியானம் செய்யலாம் என்று நினைப்பது பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு எதிரானதாகும்.

தமிழ்நாடு போன்ற சமூகநீதி செழித்த மண்ணிலே அரசுகளின் செயல்பாடுகள் பெரும்பாலும் இட ஒதுக்கீடுக்கு அனுசரணையாக இருக்கக் கூடும். மற்ற மற்ற மாநிலங்களில் நிலைமை என்ன?

அரியானா மாநில அரசில் சமூகநீதி கிடைக்காத காரணத்தால்தானே உச்சநீதிமன்றத்தைத் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இருவர் அணுகியிருக்கின்றனர்!

உச்சநீதிமன்றத்தில் தீர்ப்புக் குறித்து சமூகநீதியாளர்களும், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களும், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தப் பிரச்சினையைப் பெரிதுபடுத்தி, மக்கள் மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெருங்குரல் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

-------------------"விடுதலை" தலையங்கம் 4-12-2009

வெள்ளி, 4 டிசம்பர், 2009

கனடாவில் நடந்தது என்ன?-சீமான்



ராஜீவ் குடும்ப அன்பைப் பெறவும், அரசியலில் தான் இன்னமும் இருப்பதாகக் காட்டிக் கொள்ளவுமே பிரபாகரனின் போஸ்டரை இளங்கோவன் கிழித்திருக்கிறார். போஸ்டர் கிழிப்பதும் புளுகு பேசுவதுமே இளங்கோவனுக்குப் பிழைப்பாகி விட்டது என்று நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குநருமான சீமான் கூறியுள்ளார்.

கனடாவில் கைது செய்யப்பட்டது, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிரபாகரன் போஸ்டர்களைக் கிழித்தது, அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது உள்ளிட்டவை தொடர்பாக ஜூனியர் விகடன் இதழுக்கு சீமான் பேட்டி அளித்துள்ளார்.

அதன் விவரம்...



வருடந்தோறும் கனடாவில் உள்ள ஈழமுரசு பத்திரிகை, மாவீரர் தினத்தை எழுச்சி நாளாகக் கொண்டாடும். கடந்த 2007-ம் ஆண்டே அந்த விழாவில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அதேபோல் இந்த வருடமும் ஈழமுரசு என்னை அழைத்திருந்தது.

இதற்கிடையில் 25ம் தேதி கனடா மாணவர் சமூகம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாவீரர் தின நிகழ்வில் நான் கலந்துகொண்டு பேசினேன். அங்கே பிரிவினையை உண்டாக்கும் விதத்தில் ஒரு வார்த்தையைக்கூட நான் உச்சரிக்கவில்லை.

தந்தையர் நாடாக நாம் நினைத்த இந்தியாவும், உலக நாடுகளும் ஈழ தேசத்தை அவமான சாட்சியாக்கிவிட்டன. நாம் எதையும் சாதிக்க முடியாமல் போய்விட்டது. இனி யாரையும் நம்பி பலனில்லை. நமக்கான சுதந்திரம், நம் கையில்தான் இருக்கிறது. அதற்காக யாரும் உயிரைக் கொடுக்க வேண்டாம்; உணர்வையும் ஒற்றுமையையும் கொடுத்தால் போதும்! என்பதுதான் அங்கே நான் வைத்த பிரதான வாதம்.

இதில் எங்கே இருக்கிறது பிரிவினைக்கான சதி? இத்தனைக்கும் கனடா மிகப் பெரிய ஜனநாயக நாடு. அங்கேயும் ஜனநாயகத்தை நசுக்கும் வேலையை இந்திய தேசம் கற்றுக் கொடுத்து விட்டதோ என்னவோ… அதனால்தான் காரணமே இல்லாமல் என்னை கைது செய்து, மாவீரர் நாளில் நான் பேச முடியாதபடி தடுத்து விட்டார்கள்.

இந்திராவைக் கொன்றது நியாயமா?

மாணவர் சமூக அமைப்பு விழாவில் நான் பேசிவிட்டு வந்த அடுத்தநாள் அதிகாலை என்னை எழுப்பியது கனடா நாட்டு போலீஸ். இந்தியாவை பழித்துப் பேசியது ஏன்? எனக் கேட்டார்கள். அதை நான் மறுத்ததும், ஏதோ ஏழெட்டு கொலைகளை நிகழ்த்திய குற்றவாளியைப் போல் கையில் விலங்கிட்டு, பின்புறமாக கட்டி ரொம்ப தூரத்துக்கு என்னை நடத்திக் கூட்டிக்கொண்டு போனார்கள். அங்கு இந்திய அதிகாரியான சிங் ஒருவர் என்னை விசாரித்தார்.

பல கேள்விகளைக் கேட்ட அந்த அதிகாரி, ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதை நியாயப்படுத்துகிறீர்களா? என்றார். உங்கள் சீக்கிய சமூகத்தினர் இந்திரா காந்தியைக் கொன்றார்களே… அதை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்களா? எனக் கேட்டேன். இதனால் அந்த சிங்குக்கு கோபம் வந்து விட்டது.

உடனே நானும் தலைவர் பிரபாகரனும் இருக்கும் படத்தைக் காட்டி, இவர் உன்னோட பிரதரா? எனக் கேட்டார். ஆமாம்… தமிழ் ரத்தம் ஓடும் அனைவருக்குமே அவர் சகோதரர்தான்! எனச் சொன்னேன். அடுத்தடுத்தும் ரெண்டரை மணி நேரத்துக்கும் அதிகமாக என்னைக் குடைந்து கொண்டே இருந்தார்.

எதையாவது என் வாயிலிருந்து பிடுங்கி, என்னை நிரந்தரமாக கனடா சிறையிலேயே சிக்கவைத்துவிடவேண்டும் என்பதுதான் அவருடைய திட்டமாகத் தெரிந்தது.

பிரபாகரன் இருப்பதால்தான் எழுச்சி நிலவுகிறது...

வெளிநாடுவாழ் தமிழர்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாக நம்புகிறார்கள். அதனால்தான் அவர்களிடையேயான எழுச்சி எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது பன்மடங்காகப் பெருகியிருக்கிறது.

வெளிநாடுகளில் பரவியிருக்கும் டக்ளஸ், கருணா போன்றவர்களின் ஆதரவாளர்கள்தான் தேவையற்ற குழப்பங்களை தமிழ் மக்கள் மத்தியில் விதைத்து வருகிறார்கள்.

பிரபாகரனும், அவர் தலைமையிலான தேசிய ராணுவமும் அழிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்லும்- அதையே நம்பும் உலக நாடுகள், புலிகள் அமைப்பு மீதான தடையை இப்போதாவது நீக்க வேண்டியதுதானே? இல்லாத இயக்கத்துக்கு ஏன் தடை நீட்டிக்கிறீர்கள்?

தரிசு என்று சொல்லிக்கொண்டே, அந்த நிலத்துக்கு வேலி போடும் முரண்பாட்டை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஏன் கடைப்பிடிக்கின்றன? தலைவர் பிரபாகரன் நிஜமாகவே கொல்லப்பட்டிருந்தால், அவருக்குரிய வீர வணக்கத்தை தமிழர்கள் தைரியமாக நிகழ்த்தி இருப்பார்கள்.

என் வீட்டை தாக்கி, காருக்கு தீ வைத்து, இளங்கோவனின் போஸ்டரையும் ஒட்டிவிட்டுப் போனவர்களின் மீது இன்று வரை நடவடிக்கை இல்லை? பாரதிராஜாவின் அலுவலகத்தைத் தாக்கியவர்களின் கார் எண்ணைக் கொடுத்தும் இன்று வரை யாரையும் கைது செய்யவில்லை.

இளங்கோவனுக்காக மட்டும் கிளம்பிய போலீஸ்...

தா.பாண்டியனின் கார் எரிக்கப்பட்டு இத்தனை மாதங்கள் ஆகியும் யார் மீதும் போலீஸ் வழக்குப் பதியவில்லை. ஆனால், இளங்கோவனின் வீடு தாக்கப்பட்ட விவகாரத்தில் மட்டும் தமிழக போலீஸ் சீறிக் கிளம்பியிருக்கிறது. அவசர கதியில் எங்களின் நாம் தமிழர் அமைப்பைச் சேர்ந்த தம்பிகள் நால்வரை கொஞ்சமும் உண்மை இல்லாமல் குற்றவாளியாக ஜோடித்திருக்கிறது போலீஸ்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இளங்கோவனை நாங்கள் தோற்கடித்ததற்காக, வேண்டுமென்றே எங்கள் இயக்கத் தம்பிகளை அவர் கைகாட்டி இருக்கிறார். தைரியமிருந்தால் தேர்தல் களத்தில் இளங்கோவன் எங்களோடு மோதிப் பார்க்கட்டும்.

சிவாஜி கணேசன், வாழ்ப்பாடி ராமமூர்த்தி போன்றவர்கள் தனிக் கட்சி ஆரம்பித்தபோது, அவர்களுக்கு சாமரம் வீசிய இளங்கோவனுக்கு இப்போதுதான் ராஜீவ்காந்தி பாசம் பொத்துக் கொண்டு வருகிறதா? ராஜீவ் குடும்ப அன்பைப் பெறவும், அரசியலில் தான் இன்னமும் இருப்பதாகக் காட்டிக் கொள்ளவுமே பிரபாகரனின் போஸ்டரை இளங்கோவன் கிழித்திருக்கிறார்.

போஸ்டர் கிழிப்பதும் புளுகு பேசுவதுமே இளங்கோவனுக்குப் பிழைப்பாகிவிட்டது. இதற்கெல்லாம் பயப்படப் போவதில்லை. காற்றில் முறியும் முருங்கையல்ல நாங்கள், வேங்கையின் பிடரியை உலுக்கும் புலிகள் என்றார் சீமான்.