எல்லோரும் முதல் பாகத்தை படித்து ரசித்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் அடுத்த பாகத்தில் அடி எடுத்து வைக்கின்றேன் .
ஓசூரிலிருந்து புறப்பட்ட எங்கள் கார் மின்னல் வேகத்தில் ஒகேனக்கல் இருக்கும் திசையை நோக்கி பறந்தது . இடையில் எங்கும் தேவையில்லாமல் நிறுத்தக்கூடாது என்று தான் சென்று கொண்டிருந்தோம் .ஆனால் அந்த ஒரு சம்பவம் எங்களுக்கு முன்னால்சென்ற காரை நிறுத்த வைத்துவிட்டது . அது என்ன என்று சொல்வதற்கு முன் நாங்கள் கண்ட ஒரு விபத்தை பற்றி சொல்ல நினைக்கிறேன் , ஓசூரிலிருந்து சுமார் 20 km தொலைவில் நாங்கள் சென்று கொண்டிருந்த பொழுது இரண்டு சரக்கு லாரிகள் உதட்டுடன் உதடு முத்தம் கொடுப்பது போல மோதி விபத்துக்குள்ளாயிருந்தன.இந்திய நாட்டிற்கே உரிய பாரம்பரிய பண்பின் அடிப்படையில் அந்த இடத்தில் காவல் துறையோ ,பொது மக்கள் கூட்டமோ இல்லாதிருந்தது எங்களுக்கு இந்நாட்டு மக்களை நினைத்து ( என்னையும் சேர்த்துத்தான் ) ஆச்சர்ய பட வைக்கும் வேலை இல்லாமல் செய்துவிட்டது .
அதை கடந்து சிறிது தூரம் சென்றதும் எங்கள் முன்னால் சென்ற கார் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தது .ஏற்கனவே சொன்னபடி தேவையில்லாமல் எங்கும் காரை நிறுத்தக்கூடாது என்று சொல்லியிருந்ததால் என்ன ஆச்சு என்ற தோரணையிலேயே நாங்கள் எங்களுடைய காரையும் நிறுத்தினோம் .காரிலிருந்து கீழிறங்கிய உடனே நண்பர்கள் சிலர் வழக்கம் போல தம் அடிக்க ஆரம்பித்து விட்டனர் . நாங்கள் கூட இதற்காகத்தான் நிறுத்தினார்களோ என்று நினைத்துகொண்டிருக்கும் வேலையில் எங்களுடன் வந்திருந்த நண்பன் ஒருவன் அங்கிருந்த Cement bench இல் மிகவும் சோர்வாக உட்கார்ந்திருப்பதை பார்த்துவிட்டு இவனுக்கு என்ன ஆச்சு என்று கேட்டோம் . இதற்க்காகத்தான் காத்திருந்தது போல அனைவரும் சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டனர் .என்ன நடந்தது என்று விசாரிக்கையில் கடந்த பாகத்தின் கடைசி வரிக்கான விடை கிடைத்தது ...
அதாவது லாரி விபத்தினை கடந்து சென்ற பிறகு எங்கள் மின்னல் வேக கார் ஓட்டுனர் எடுத்த அதி பயங்கரமான over take க்கை கண்டு அந்த காரிலிருந்த என் நண்பனின் உயிர் நாடி!!!!!!! ஊசலாடியது போலிருக்கிறது :) :) :) :) . அவனை relax செய்வதற்காகவே வண்டியை நிறுத்தி இருக்கிறார்கள். இதைத்தான் நான் சொல்ல போகிறேன் என்று முன்கூட்டியே தெரிந்து கொண்ட , இந்த ரகளையான பயணத்தில் கலந்து கொண்ட என் நண்பர்கள் இந்த விஷயத்தை ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லும்படி கேட்டனர் :) :) :) ( அடுத்தவன் சங்கடத்தில் நம்ம ஆட்களுக்கு எப்பவுமே ஒரு இனம்புரியாத சந்தோசம் ) .
இதற்கிடையில் நம்ம ஆட்களுக்கு இசை ஆர்வம் பொங்கி வழிந்து ரோட்டிலேயே இசை கச்சேரி நடத்தும் அளவுக்கு Sound வைத்து பாட்டு கேட்க ஆரம்பித்துவிட்டனர் . என்னை போல் சிலர் போதும் இந்த கூத்து என்று கெஞ்சி கேட்டும் செவி சாய்க்காமல் தொடர்ந்து ..... ஒரு வழியாக அவர்களாகவே முடிவுக்கு வந்து மீண்டும் வண்டியை கிளப்பினர். ( இந்த திடீர் இசை ஆர்வத்துக்கு காரணம் காரிலிருந்து கிடைத்த ஒரு Disco song audio CD தான் ).
எப்படியோ மீண்டும் பயணத்தை தொடர்ந்தோம் .. .. ராயக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் நாங்கள் எங்கள் முன் சென்ற மின்னல் வேக காரை over take செய்து விட்டோம் . இந்த அறிய செயலை செய்தது எங்கள் நண்பன் HULK ( அவரை நாங்கள் செல்லமாக இப்படித்தான் அழைப்போம் :):):) )
ராயக்கோட்டை தாண்டி பாப்பாரப்பட்டி ,பாலக்கோடு என்று எங்கள் பயணம் கொஞ்சம் அமைதியாகவே சென்று கொண்டிருந்தது . திடீரென்று பாலக்கோடு தாண்டி ஒரு ஹோட்டல் -ஐ பார்த்தவுடன் எங்களுக்குள் ஒரு சலசலப்பு ..அதற்க்கு காரணம் வேறு ஒன்றும் இல்லை ..நாங்கள் ஏற்கனவே ஒகேனக்கலுக்கு சென்றோம் என்று சொன்னேன் அல்லவா ..அப்போது இங்கேதான் Dinner சாப்பிட்டோம் , இந்த கடை கொத்து பரோட்டா அவ்வளவு அருமை .....
இப்படி அரட்டை அடித்துக்கொண்டே எங்கள் பயணம் தொடர்ந்தது ...திடீரென்று தான் எங்களுக்கு தோன்றியது கையில் Digital camera மற்றும் Handy cam கொண்டு வந்திருக்கிறோம் என்று ...அப்புறம் என்ன ...நாங்களும் PC Sreeram உடைய சீடர்கள் தான் என்று நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது .....
எப்படியெல்லாம் நிரூபித்தோம் ..... யார்யாரோட மானம் கப்பல் ஏறியது என்பதை அடுத்து பாப்போம் .... :) :)
- தொடரும் ....
1 கருத்து:
thalaivaa siikkiram kathaiya mudinga...
கருத்துரையிடுக