வெள்ளி, 13 நவம்பர், 2009

புதிய பாதையில் விஜய்-அஜீத்:பழைய ரூட்டில் ரஜினி-கமல்

ஆண்டொன்று போனால் வயதொன்று கூடுது என்பதால் அதிரடி முடிவுக்கு வந்திருக்கிறார்கள் ரஜினியும் கமலும்.

முன்பெல்லாம் இவர்கள் இருவரும் வருடத்திற்கு மூன்று, நான்கு படங்கள் நடித்தார்கள்.இப்போது அந்த பழைய ரூட்டை பிடிக்க முடிவெடித்திருக்கிறார்கள்.

நிறையை படங்கள் பண்ணினால் கமர்சியல் என்ற ஒரே குதிரையில் ஓடவேண்டிய அவசியத்தை தவிர்க்கலாம். கமர்ஷியல்,கலைப்படங்கள் என்று கலந்துகட்டி அடிக்கலாம் என்று நண்பன் ரஜினிக்கு ஐடியா கொடுத்திருக்கிறார் கமல்.

’சரியாச்சொன்னீங்க கமல்’என்று பதில் சொன்ன ரஜினியும் சரி’யா முடிவெடித்திருக்கிறாராம்.

நீண்ட நாள் புராஜக்ட் போய்க்கிட்டிருந்தாலும் நடுநடுவே சில படங்கள் கொடுத்துவிடவேண்டும் என்று முடிவெடுத்ததோடு மட்டுமல்லாமல் அதற்கான வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார்கள்.

இவர்கள் இப்படி பழைய ரூட்டை பிடிக்க திட்டமிட, விஜய்,அஜீத் இருவரும் புதிய பாதையில் போக திட்டமிட்டிருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் தங்களது படங்கள் மூலமும், பேட்டிகள் மூலம் மாறி மாறி பஞ்ச் டயலாக் அடித்து தங்களது ரசிகர்களை உசுப்பேத்திக்கொண்டார்கள்.

இப்படிப்பட்ட சமயத்தில் அஜீத்தின் திருப்பதி பட பூஜைக்கு விஜய் விஜயம். அதன்பிறகு இவர்களது சந்திப்பு வீடுவரை சென்றது. இருவரது வீட்டுக்கும் இருவரும் சென்று விருந்து உபசரித்துக்கொண்டார்கள்.

தற்போது ஏவி.எம். ஸ்டூடியோவில் பக்கத்து பக்கத்து ப்ளோர்களில் அஜீத்தின் அசல், விஜய்யின் சுறா படத்தின் சூட்டிங். இடைவேளையில் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றார் அஜீத்.

இருவரும் மனம் விட்டு பேசிக்கொண்டிருக்கையில்,’’சமீபத்தில் கமல் சார் ஒரு பங்சன்ல இதுக்கு முன்னாடி ரஜினி மாதிரியும் என்னை மாதிரியும் நண்பர்கள் கிடையாது என்று சவால் விட்டார். எனக்கு புல்லரிச்சுச்சு’’என்று அஜீத் சொல்ல,

‘’அவுங்க ரெண்டு பேருக்கு பின்னால நாமதான் பெஸ்ட் ப்ரண்ட்ஸ் என்பதை நிரூபிக்கனும்’’என்று விஜய் சொல்ல,

‘’ரெடி,ஸ்டார்ட் ’’என்று சிரித்தாராம் அஜீத்.

நன்றி : நக்கீரன்

கருத்துகள் இல்லை: