திங்கள், 16 நவம்பர், 2009

குமரிகண்டம் ( லெமூரியா ) - தமிழனின் அடையாளம்




















குமரி கண்டம் (லெமூரியா):

தோழர்களே!! கடந்த சில நாட்களாகவே நானும் என்னுடைய நண்பரும் அடிக்கடி விவாதிக்கும் ஒரு பொருளாக இருப்பது லெமூரியா. லெமூரியா என்றால் அழிந்த இடம் என்று நம்முடைய குமரிக்கண்டத்திற்கு ஆங்கிலேயர்களால் வைக்கப்பட்ட பெயர். இன்று உலகில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட BBC செய்தி நிறுவனம் குமரிகண்டத்தினை ஏற்கமறுக்கும் சூழலில் நான் எனக்குத் தெரிந்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்து இங்கே எழுதுகிறேன்.

குமரி கண்டம் என்பது தற்போதைய இந்திய பெருங்கடலில் மூழ்கிப்போன அகன்ற ,பரந்த மிகப்பெரிய நிலப்பரப்பு. இந்த கண்டம் இன்றைய இந்திய தீபகற்பத்தின் ( peninsular ) தென் முனையிலிருந்து விரிந்து மேற்கே மடகா…கரிலும் ( Madagascar) கிழக்கே ஆ…திரேலியாவிலும் (Australia) முடிகிறது.இன்னும் சில பேரால் இந்த மடகா…கரும்,ஆ…திரேலியாவும் கூட குமரிகண்டத்தின் அழியாத பகுதிகளே என்று கருதப்படுகிறது.

குமரி கண்டம் என்று ஒன்று இருந்ததற்கான ஆதாரங்களை பண்டைய தமிழ் இலக்கியங்களில் காணக்கூடும்.மேலும் இந்த பரந்த நிலப்பரப்பு கடற்கோளாலும்,ஆழிப்பேரலையாலும் (Tsunami) கடலில் மூழ்கி அழிந்ததும் தெரியவரும்.முதல் இரண்டு தமிழ் சங்கங்கள் ( முதல் சங்கம்,இடை சங்கம்) குமரி கண்டத்தில்தான் நடந்தது என்றும், கடற்கோளின் போது பாண்டிய மன்னனை தவிர வேரு எந்த இலக்கியங்களையும் காப்பாற்ற முடியவில்லை என்று ,பல தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் உள்ள மற்ற மொழிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை பற்றி ஆராய்ந்தவருமான ,மொழி ஞாயிறு என்று எல்லோராலும் புகழப்படுபவரான திரு.தேவநேயப்பாவாணர் அவர்கள் குமரிகண்டம் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையிலும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அதில் மூழ்கிப்போன புகார் நகரம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திராவிடர்கள் என்பவர்கள் இன்றைய இந்தியப் பெருங்கடலில் மூழ்கிய குமரி நிலப்பரப்பிலிருந்து வந்தவர்கள் என்றே அறியப்படுகிறது.பஹுருலி மற்றும் குமரி ஆறுகளின் நீளம் சுமார் 700 கவதம் (இன்றைய 11,000 கி.மீ ) என்று அடியார்குனேலர் குறிப்பிட்டுள்ளார் .மேற்கூறிய தகவல்களைப் பற்றிய பல்வேறு முரண்பாடான கருத்துக்கள் இன்றைய தமிழ் இலக்கியவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் சிலரால் வைக்கப்படுகிறது.

இலக்கியங்களில் குமரிகண்டம் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம் :

சிலப்பதிகாரம் : “குமரிக்கோடும் கொடுங்கோளால் கொல்லா” இதில் இளங்கோவடிகள் குமரி கண்டத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான புகார் நகரம் கடலில் மூழ்கி அழிந்ததைப் பற்றி பேசியுள்ளார்.மேலும் இது பஹுருலி ஆற்றையும் பன்மலை அடுக்கத்தையும் விழுங்கி விட்டது என்று ஆழிப்பேரலையின் சீற்றத்தை விவரிக்கின்றார்.

மணிமேகலை : இதிலும் புகார் நகரம் அழிந்ததைப் பற்றியும் ,கடற்கோள் ஏற்பட்டதைப் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது.

களித்தொகை : இதில் பாண்டிய மன்னன் ,கடற்கோளால் தன்னுடய நாட்டின் பெரும்பான்மையான பகுதிகள் அழிந்ததைப் பற்றி பெரிதும் கவலைப்படாமல், அதை ஈடுகட்ட சேர,சோழ மன்னர்களின் மீது படை எடுத்து, அவர்கள் நாட்டைக் கைப்பற்றினான் என்று கூறப்பட்டுள்ளது.

சிங்கள இலக்கியம் : கி.மு .320 ஆம் ஆண்டு வாழ்ந்த சிங்கள இலக்கியவாதி மஹாவம்சர் தன்னுடைய ராஜ்யவலிகதா என்ற நூலில் இப்படி குறிப்பிடுகிறார். இந்தியாவின் தென்பகுதி கடல்எழுச்சியில் மூழ்கியது.

ஆராய்ச்சி :

மேற்கண்ட அனைத்து இலக்கியங்களும் குமரிக்கண்டம் என்று ஒன்று இருந்தது,அது ஆழிபேரலையால் அழிந்தது என்று தெளிவாக்குகின்றன. தனித்தழிழ் இயக்கத்தினர் மற்றும் தமிழீழத்தினர் கோரிக்கைகள், அவர்களின் உரிமைகள் பற்றின ஒரு தெளிவு இப்போது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். சுனாமி ( Tsunami ) தமிழகத்தை தாக்கிய பிறகுதான் அனைவரும் சிலப்பதிகாரம்,மணிமேகலை குறிப்பிட்ட ஆழிப்பேரலையை நம்பினார்கள்.அதனால் தான் நாம் குமரிகண்டம் மற்றும் நம் அனைத்து அடையாளங்களையும் இழந்தோம் என்பதையும் நம்பினார்கள்.

இன்னும் முதல் இரு தமிழ் சங்கங்களும் கூட கடற்கோளால் அழியவில்லை என்று நம்மில் பலர் வாதிடுவர்,அதனால் தானோ என்னவோ கி.பி.11 ஆம் நூற்றாண்டை சார்ந்த இரணியார் அகம்பொருளில் அக்காலத்தில் அழிந்த நூல்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
நம் நாடு,இலக்கியம்,கலாச்சாரம்,வரலாற்றினை நம்மில் சிலர் எற்றுக்கொள்வதற்கு ஒரு சுனாமி வேண்டியிருந்தது.இன்னும் எஞ்ஞியிருக்கிற எவ்வளோ விஷயங்களை எல்லாம் சொல்ல முற்பட்டால்,அதையும் பார்த்தால் தான் நம்புவோம் என்று நீங்கள் கிளம்பினால் இவ்வுலகம் தாங்காது.

முடிவுரை :

இப்போது குமரிகண்டம் என்று எதுவுமில்லை, அதைப் பற்றிய கடல் ஆரய்ச்சி மேற்கொள்ள இந்திய அரசும் தயாரில்லை. திராவிட கழகங்களும் இதைப்பற்றி முற்றிலும் மறந்துவிட்ட நிலையில், என்னால் ஆன ஒரு சிறிய நினைவூட்டலே இது.

என்னுடைய எழுத்தைப் பற்றிய உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

குமரி கண்டத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே செல்லவும் :

http://vavuniya.com/writing/essay1.htm

இப்படிக்கு,
சூரியன்.


5 கருத்துகள்:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

அன்புள்ள சூரியனுக்கு,

இப்ப இருக்கும் இருப்பிடத்தை / நிலப்பரப்பை / சூழ்நிலையை பற்றி சற்றும் கவலைப்படாமல் நாளை அழிவு என்று தெரிந்தும் காக்க மறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு மத்தியில் தாங்கள் மறைந்து போன நிலப்பரப்பை பற்றி சிந்திப்பது எனக்கு ஒருமுனை மகிழ்ச்சி என்றாலும் மறுமுனை சற்று வருத்தம்தான்.

malarvizhi சொன்னது…

உங்கள் பதிவு அற்புதமாக உள்ளது. மேலும் தகவல்கள் இருந்தால் எழுதவும். நான் குமரிக்கண்டம் என்ற தலைப்பில் சில தகவல்களை கூறியுள்ளேன். படிக்கவும்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

அன்புள்ள சகோதரிக்கு/தோழிக்கு,

என் வரிகளுக்கு மதிப்பு கொடுத்து இந்த பக்கத்தை பார்வையிட்டமைக்கும், உங்களது பாராட்டுக்களுக்கும் என் நன்றியையும், என் நண்பனின் சார்பாகவும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இவன்,
தஞ்சை.வாசன்.

Sooriyan சொன்னது…

மலர்விழிக்கு என்னுடைய நன்றிகள் .

காலம் தாழ்த்திய பதிலுக்கு மன்னிக்கவும் .எப்போதும் என்மேல் அக்கறைகொண்டுள்ள சீனி அவர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


உங்கள் ,

சூரியன் .

Unknown சொன்னது…

india arasangam ela thamilanai oru anniyanai parpathu mattum allamal , ippothu tamilarkalaiyum kuda appadi than parkka aarampithu vittathu... E.g., Rameswaram , Kanniyakumari meenavargalai angea Ilangai arasu Kakka , Kuruvi Suduvathai pol suttu konru kondu irukkirathu , ingea nammai aalum muthalvargalo (iyyoo.......pavam phone il balance illaiya , alla cell phone ethuvum use panna theriyatha enru theriyavillai.....) innum letter mattumea pottu kondu irukkinranar.... ariviyal valarthu vitta intha kalathilum kuda innum verum letter... Athai pol than suriyarea.. intha kedu ketta arasiyal vathigal irukkum varaai tamilum valarathu kudavea tamilnadum valaravea valarathu.. naan en ithai kurukiren enraal , nammai ponra tamil pithargalal ippothaiya soolnilaiyil aathanga pada mudiyumea thavira , veru ethuvum seiya mudiyavillai.....(miguntha varuthathudan Raja Gandheeswaran)