வியாழன், 5 நவம்பர், 2009

ஒகேனக்கல் - ஒரு ரகளையான பயணம் ..பாகம் -1

ஒகேனக்கல் சென்று வருவது எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல ..சில நாட்களுக்கு முன்பு Mystery minds -ல் இருக்கும் ஒரு காளை மாட்டு திருமணத்திற்கு செல்லும் வழியில் கிடைத்த சிறிது நேரத்தில் ஒகேனக்கல் சென்று இயற்கையை ரசித்துவிட்டு வந்தவர்கள் நாங்கள்.
" ( Mystery minds என்பது எங்கள் நண்பர்கள் குழுவின் பெயர் )"

அப்போதே நாங்கள் அனைவரும் திட்டம் தீட்டினோம் ..மீண்டும் ஒருமுறை இங்கு வந்து நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பது என்று.அதற்கான நேரமும் வந்தது Master plan ஒன்று போட்டோம் ..நம்ம பசங்க plan போட்டா எந்த மாதிரி இருக்கும்னு உங்களுக்கு தெரியாதா ? ஆரம்பமே சொதப்பல் ..சிலர் அலுவல் காரணமாக வர இயலவில்லை .எப்படியோ கடைசியில் ஒன்பது பேர் ,இரண்டு மகிழுந்துகளில் ( கார்களில் ) செல்வது என்று தீர்மானம் போட்டு தயாரானோம் .

எங்களோட திட்டப்படி காலை 6 மணிக்கு புறப்படவேண்டும் .ஆனால் நாங்கள் எழுந்து ஆடி அசைந்து கிளம்ப நேரம் காலை 7.30 ஆகிவிட்டது .அப்பாடா... மணி 8-ஐ தொட்டதும் எங்கள் கார்கள் தெருவிலிருந்த புழுதியை வாரியிரைத்துக்கொண்டு கிளம்பியது. ( ஒருவேளை தெருவே எங்களை வேடிக்கை பார்த்திருக்களாம்.ஆனால் அதைப்பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படுவதில்லை ).ஒரு வழியாக Electronic சிட்டி - ஐ தாண்டி வண்டி போய்க்கொண்டிருக்கையில் பசங்களுக்கு பசி எடுக்க ஆரம்பித்துவிட்டது .நம்ம பசங்க எதை வேண்டுமென்றாலும் பொறுத்து கொள்வார்கள் .பசி என்று வந்துவிட்டால் எல்லோரும் HULK -ஆக மாறி விடுவார்கள் .
அதனால் ஒரு நல்ல Hotel - ஆக பார்த்து நிறுத்தி ஆட்டைய போட்டுட்டு கிளம்ப தயாரானோம் .மணி சரியாக 9 -ஐ தொட்டிருந்தது .எல்லோரும் அவரவர் கார்களில் ஏறி அமர்ந்ததும் மீண்டும் புழுதியை கிளப்பினோம் . சரியா 1 கி .மீ கூட சென்றிருக்க மாட்டோம் மீண்டும் ஒரு நிறுத்தம் .இப்போது கார்களுக்கு பசி அதனால் அதற்கும் கொஞ்சம் எரிபொருள் போட்டுவிட்டு சபதம் ஏற்றோம் .

சபதம் என்றவுடன் பெரிதாக ஏதும் நினைத்து விடாதீர்கள் அடுத்த stopping ஓசூர் தாண்டித்தான் என்று சபதம் கொண்டோம் :) .
நம்ம பசங்க சபதம் போட்டா என்றைக்காவது நிறைவேற்றி இருக்கிறார்களா .....ஆமாம் இப்பொழு நீங்கள் நினைப்பதேதான் நடந்தது ..மீண்டும் ஒரு நிறுத்தம் ஆனால் இது கார் ஓட்டுனரை மாற்றுவதற்காக ( இந்த ஓட்டுனரை பற்றி சுருக்கமா சொல்லனும்னா இவர் குறுக்கு சந்துல கூட 100 Km வேகத்துல போகக்கூடியவர் .) ஓட்டுனர் மாறியதுதான் தாமதம் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கார் எங்கள் பார்வைலிருந்து மறைந்தது . நாங்கள் அடைப்புக்குறிக்குள் சொன்ன விளக்கத்தை எங்களுக்குள் ஒருவருக்கொருவர் மாறி மாறி சொல்லிக்கொண்டு பின்னாலேயே பயணமானோம் .

அப்பாடா ஒரு வழியாக கர்நாடகா எல்லை தாண்டிவிட்டோம் . அடுத்து ஓசூர் தான் .எங்களுக்கு முன்னால் சீறி கொண்டு சென்ற கார் எங்களை வரவேற்க ஓசூர் எல்லையிலேயே நின்று கொண்டிருந்தது . இந்த முறை நாங்கள் யாரும் கீழிறங்க வில்லை . காருக்கு உள்ளிருந்தே ஒரு "ஹாய்" சொல்லிவிட்டு கிளம்பினோம் .

ஓசுரின் எல்லையை தாண்டியதும் ஒரு பெரிய குழப்பம் .இதை ஒரு பெரிய நாட்டாமையால் தான் தீர்க்கமுடியும் என்றாலும் சாலையோரத்தில் சென்று கொண்டிருந்தவரை அழைத்து கேட்டோம் . அந்த குழப்பம் வேறு ஒன்றும் இல்லை ஒகேனக்கலுக்கு எப்படி போறதுன்னுதான் :) :) :) .நாங்கள் ஏற்கனவே சென்றிருந்தாலும் எங்களுக்குள் ஒரு சின்ன குழப்பம் ஏற்பட்டதால் விசாரித்தோம் . ( நீங்கள் கடுப்பாவது தெரிகிறது ,அதனால் இன்றைக்கு இது போதும் . வேகமாக சென்ற காரில் இருந்த என் நண்பனுக்கு நேர்ந்த ஒரு அசௌகரியமான நிலையை பற்றி அடுத்து பார்ப்போம்.

( என்னடா இவன் இவ்வளவு மொக்க போடுறானே என்று மட்டும் நினைத்து விடாதீர்கள் . ஏனென்றால் இது மிகவும் சுருக்கமாக ஆரம்பித்து சுருக்கமாக சொல்ல நான் முயற்சி செய்துகொண்டிருக்கும்
பயணக்குறிப்பு . எங்க ஆளுங்கள பத்தி சொல்ல ஆரம்பித்திருந்தால் இன்னும் நாம் Electronic city - வையே தாண்டி இருந்திருக்க மாட்டோம் . அதனால என் மேல் கடுப்பு கொள்ளாமல் இந்த இனிய பயண குறிப்பை படித்து மகிழவும் .இனிமேல் தான் Mystery minds -இன் உண்மையான அட்டகாசத்த பற்றி படிக்க போறீங்க :) :) )
- தொடரும் .....
இந்த தொடரைப் பற்றிய உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன .

கருத்துகள் இல்லை: