புதன், 2 டிசம்பர், 2009

அய்யப்பனும் - அயோக்கியத்தனமும்!



அய்யப்பனுக்கு அபார சக்தியிருக்கிறது என்றும், அய்யப்பனுக்காக விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலை சென்று வந்தால் தீராத நோய்-கள் எல்லாம் தீருமென்றும், தீவினைகள் எல்-லாம் அகலும் என்றும், சதா பிரச்சாரம் செய்தும் குறுந்தகடுகளை வெளியிட்டுக் கொண்டும் இருக்கின்றனர்.


ஆனால், நடப்பது என்ன?


அய்யப்பப் பக்தர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி மரணம் என்கிற பரிதாப செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மாரடைப்பு ஏற்பட்டு பக்தர்கள் சபரிமலையிலேயே மரணம் என்றும் ஏடுகள் செய்திகளைப் போடுகின்றன. போதும் போதாதற்கு அய்யப்பன் கோயிலில், பிரத்தி-யேகமாக உள்ள மருத்துவர்கள் இப்பொழுது அறிக்கையினைக் கொடுத்துள்ளனர்.

இதய நோயாளிகள், ரத்த அழுத்தம், கொழுப்பு (கொலஸ்ட்ரால்) பாரம்பரிய இதய-நோய் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், 55 வயதுக்குமேல் ஆனவர்கள், சபரிமலை ஏறும்-போது தேவையான முன்னெச்சரிக்கை நட-வடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.

பயணத்திற்குமுன் மருத்துவரிடம் பரி-சோத-னை-கள் மேற்கொள்ளவேண்டும். இத-யத்--தின் செயல்பாட்டைத் தெரிந்து-கொண்ட பின்னரே பயணம்பற்றி முடிவெடுக்கவேண்டும்.

அவ்வாறு வரும்போது, வியாதிபற்றிய குறிப்பு--களும், சாப்பிடும் மருந்துபற்றிய குறிப்பு-களும் டைரியில் எழுதிக்கொண்டு வர-வேண்டும்.

மலை ஏறுவதற்கு முன்னர் பம்பையில் அதிக உணவு சாப்பிடக் கூடாது. லேசாக சாப்பிட்டு-விட்டு மலையேறவேண்டும். வயிறு நிறைய சாப்பிட்டால் இதயத்தின் வேலைப் பளு-வும் கூடும். மலை ஏறும்போது நெஞ்சு வலியோ, மூச்சுத் திணறலோ, அசாதாரண நிலையோ ஏற்பட்டால், உடனடியாக மலை ஏறு-வதை நிறுத்தி, மருத்துவர்களின் ஆலோ-சனைகளைப் பெற-வேண்டும். ஏறும்போது நாடித் துடிப்பு நிமிடத்துக்கு 140_க்குமேல் இருக்கக்கூடாது.

மலையேறும்போது அய்கோர்டின் மாத்தி-ரையை அதிகமாக நாக்குக்கு அடியில் வைப்ப--தால் ரத்த அழுத்தம் குறைந்து தலை சுற்றல் போன்றவை ஏற்படும்.

மேலும் வழக்கமாக மருந்து சாப்பிடுபவர்-கள் மலையேறும்போது ரத்தத்தில் சர்க்கரை குறைந்து உடல் தளர்ச்சி ஏற்படலாம். இதற்-காக அவர்கள் கையில் குளுகோஸ் வைத்துக் கொள்ள-வேண்டும்!

இவ்வாறு அய்யப்பன் கோயில் சன்னிதான மருத்துவர் ஹரீந்திரபாபு கூறியுள்ளதாக தினமலரே (1.12.2009) கூறியுள்ளது.

இது முழுக்க முழுக்க அய்யப்பன் சக்தியைக் கேலி செய்வதாக இல்லையா? தன்னை நாடிவரும் பக்தர்களின் உயிரைக் கூடக் காப்பாற்ற முடியாத கடவுள் அய்யப்பன், சக்தி வாய்ந்தவன் என்றும், பக்தர்களின் குறைகளை, கஷ்டங்களை, நோய் நொடிகளை, பாவங்களைப் போக்குபவன் என்றும் சொல்லுவதெல்லாம் பச்சையான பித்தலாட்டம் அல்லவா?

வில்லாளி வீரனே
வீரமணி கண்டனே,
தாங்கி விடப்பா
ஏந்தி விடப்பா
தூக்கி விடப்பா
ஏற்றி விடப்பா

என்று அய்யப்ப சரணம் பாடிச் செல்லும் பக்தர்-களைக் காப்பாற்றும் சக்தி அய்யப்பனுக்கு இல்லை என்பதைத்தானே சன்னிதான மருத்து-வரின் அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

எந்தப் பக்தராவது _ இது கடவுளை அவ-மதிக்கும் செயல் என்று சொல்லவில்லையே, ஏன்?

இவற்றையெல்லாம்விட மிகக் கேவலமானது _ அய்யப்பன் பெயரால் நடத்தும் மகரஜோதி பித்தலாட்டம்!

கேரள மின் வாரியத்தைச் சேர்ந்த ஊழியர்கள் செயற்கையாக சூடத்தைக் கொளுத்திக் காட்டு-கின்றனர் என்பதை கேரள மாநில முதலமைச்சர், இந்து அறநிலையத் துறை அமைச்சர், அறக்-கட்ட-ளைத் தலைவர், கோயில் தலைமை அர்ச்-சகர் வரை ஒப்புக்கொண்ட பிறகும் மகர-ஜோதியை அனுமதிப்பது எந்த வகையில் சரி?

பக்தியின் பெயரால் எந்தப் பித்தலாட்டத்தை-யும் அரசு அங்கீகாரத்தோடு அரங்கேற்றலாம் என்-றால், பக்தியின் யோக்கிய-தையையும், அரசின் தன்மையையும் தெரிந்துகொள்ளவேண்-டாமா?

கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன் என்று தந்தை பெரியார் ஏன் சொன்னார் என்பது இப்பொழுது விளங்குகிறதா?

2 கருத்துகள்:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

எந்த ஒர்பிடிப்பும் இல்லாமல் சூரியனை(நீங்களல்ல) மையமாக வைத்து ஒர்விசையில் இந்தபூமி கீழேவிழுந்திடாமல் சுற்றிக்கொண்டே இருக்கும் என்பதும், கண்மூடி உறங்கி பின்பு கண்விழித்து இந்த உலகத்தை பார்ப்போம் என்பதும் ஒர் நம்பிக்கைத்தான் மனிதனுக்கு. அந்த நம்பிக்கைத்தான் இறைவன். அவனை எம்மதத்தினரும் வணங்கிடுவர். வணங்கும் முறைகள்தான் வேறுபட்டு இருக்கலாம். ஆனால் அடிப்படை கொள்கை என்பது ஒன்றாகதான் இருக்கும்.

இறைவன் இருக்கின்றான் என்பதும், இல்லையென்பதும் தனிமனிதன் எண்ணங்கள். ஒருவரை ஒருவர் குறை, நிறைகளை சுட்டிக்காட்டி நம் வாழ்கையை, இந்தபிறவியை வீணடிக்காமல்,

சிந்திப்போம்… செயல்படுவோம்…
ஒன்றுபடுவோம்… உயர்தரமடைவோம்…
மனிதனை நினைப்போம்… மனிதநேயம் காப்போம்.

இதுயார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதபடவில்லை. அப்படி ஏதேனுமிருப்பின் மன்னிக்கவும்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

அன்புள்ள சூரியனுக்கு,

எந்தகடவுளும் என்னை நேரில்வந்து தரிசிக்கவேண்டும் என்று கூறியதும், கூறுவதும் இல்லை. அப்படி கூறுபவன் வேண்டுமானால் அயோக்கியன் ஆகலாம். ஆனால் கடவுள்பற்றி குறை கூறுவதற்கு ஒன்றுமில்லை.

எனக்கு இதைக்கொடு நான் உனக்கு இதை செய்கிறேன், எனக்கு இதை கொடுத்தாய் உனக்கு இதை கொடுக்கின்றேன் என்பது நம்முடைய செயல், பழக்கம், வழக்கம் மற்றும் இயல்பு. அது தனிமனிதனுடைய விருப்பம்.

இஸ்லாமிய மதத்தில், ஒவ்வொரு முகமதியனும் வாழ்வில் ஒருமுறையாவது மெக்கா சென்றுவரவேண்டும் என்பது ஒர்கருத்து. அல்லா உருவமற்றவர் என்றுகூறும் நம் இஸ்லாமிய சகோதரர்கள் அவரை நினைத்து ஒருநாளுக்கு ஐந்துமுறை தொழுகை நடத்துவது அவர்களது செயல்.

ஹஜ் என்னும் புனிதபயணத்தில் கோடிக்கணக்காண இஸ்லாமிய மக்கள் உலகத்தின் பல்வேறு மூலைகளிருந்து வருவதில்லையா? அங்கு அசம்பாவிதங்கள் நிகழ்வதில்லையா?.

மெக்கா சென்றுதான் ஆகவேண்டுமா? இல்லையெனில் அல்லா நம்மை காக்கமாட்டரா? என்று சிந்திக்கும் பகுத்தறிவாளர்கள் அவர்களில் யாரும் கிடையாதா?

நம்கிறிஸ்துவ சகோதரர்கள் வாரந்தோறும் கூடி இறைவனை வழிபடுவதில்லையா? ஜெபகோபுரம், மாபெரும் நற்செய்தி கூட்டம் என்று பொதுஇடங்களில் ஒன்றுக்கூடி மக்களின் துயரங்கள், வியாதிகள் என்று பல்வேறு பிரச்சனைகள் நீக்கப்படுவதில்லையா? எப்படியென்று சிந்திக்கும் பகுத்தறிவாளர்கள் அவர்களில் யாரும் கிடையாதா?

ஏன்? அவர்களுக்கென்று புனித இடங்கள்தான் இல்லையா என்ன?