தெலுங்கானா ?
தெலுங்கானா...இந்த வார்த்தை இன்று இந்தியாவில் யாரும் சொல்லக்கூடாத, பிரச்சினைக்குரிய வார்த்தையாகிவிட்டது .ஏன்இப்படி?எதனால் ? என்றெல்லாம் சிந்தித்தோமானால் நன்கு புலப்படும் . இன்று இந்தியாவில் இருப்பவர்களுக்கு தெலுங்கு தெரிகிறதோ இல்லையோ தெலுங்கானா நன்றாக தெரியும்.அந்த வகையில் தெலுங்கானா கோரி போராடுபவர்களுக்கு ஒரு வெற்றி கிடைத்தது உண்மை .
தெலுங்கானா -தனிமாநிலம்
தெலுங்கானா - என்ன இது? அப்படியென்றால் என்ன ? ஏன் திடீரென்று தனிமாநிலம் கேட்டு ஆந்திராவில் போராட்டம் செய்கிறார்கள் ? என்று நினைப்பவர்களுக்கு ஒன்று சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் .இந்த தெலுங்கானா போராட்டம் இன்று நேற்று வந்ததல்ல ,இந்திய சுதந்திரம் வாங்குவதற்கு முன்பிருந்தே இந்த போராட்டம் நடந்து வருகிறது .என்ன முன்பு பாகிஸ்தானுடன் இணைவோம் என்று சொல்லிவந்தவர்கள் இன்று தனிமாநிலம் கேட்கிறார்கள் அவ்வளவுதான் .
இந்திய சுதந்திரம் அடைந்த பிறகும் இன்றைய தெலுங்கானா ( அன்று நிஜாம்அரசு ) நிஜாம் மன்னரிடமே இருந்தது ,அது
இந்தியநாட்டின் வரையறைக்குள் வரவில்லை என்று சொல்வதைவிட நிசாம் இந்தியாவுடன் சேர விரும்பவில்லை என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் .அவருடைய எண்ணமெல்லாம் பாகிஸ்தானுடன் இணையவேண்டும் என்பதாக இருந்தது .
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அனைவராலும் போற்றப்படும் ,இந்தியாவின் முதல் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தியும் ,தூதுக்குழுவினரை அனுப்பியும் நிஜாம் பாகிஸ்தானுடன் நட்புறவு என்ற கொள்கையிலிருந்து மாறவில்லை .எனவே வேறுவழியின்றி இந்திய ராணுவம் நிஜாமுடன் போரிட்டு நிஜாமாபாத்தை மீட்டது .
பின்னர் மொழிவாரி மாநிலம் என்ற கோரிக்கைக்கு செவி சாய்க்க விரும்பிய இந்திய அரசு தெலுங்கனா,ஆந்திரம் இரண்டு இடத்திலும் மக்கள் பேசும் மொழி தெலுங்கு என்ற அடிப்படையில் தெலுங்கானாவை ஆந்திரத்தில் சேர்த்துவிட்டது .அன்று முதல் இன்று வரை ஆந்திரம் தெலுங்கானா பகை ஓயவில்லை . அனால்
தெலுங்கானா மக்கள் பேசும் மொழி தெலுங்கு ,மராட்டி,பிஹாரி சேர்ந்த கலவையாக இருக்கும் ,இன்று வரை தெலுங்கு திரைப்படங்களில் கேலி செய்வதற்கு மட்டுமே இந்த மொழியை பயன்படுத்துகின்றனர் ஆந்திரத்தை சேர்ந்தவர்கள் .
உண்மையில் இன்று ஆந்திராவில் போராடுபவர்கள் அனைவருக்கும் இந்திய நாட்டு பற்று உள்ளதா ? அதன் காரணமாகத்தான் இவ்வளவு போராட்டமா என்றெல்லாம் நீங்கள் கேட்டால் நான் சத்தியமாக இல்லை என்று தான் சொல்லுவேன் .இந்த போராட்டங்கள் அனைத்தும் பொதுமக்களாலோ,இல்லை மாணவர் சங்கங்களாலோ முன்னெடுத்து செல்லப்படவில்லை. ஹைதராபாத்தில் கோடிக்கணக்கான சொத்துக்களை வாங்கி போட்டிருக்கும் தொழிலதிபர்கள் ,அரசியல்வாதிகள் போன்றோர் எங்கே தெலுங்கானா பிறந்துவிட்டால் நம்முடைய சொத்துக்களுக்கு பங்கம் வந்துவிடுமோ என்ற தனிமனித சுயநலத்திற்காகத்தான் இவ்வளவு கலவரங்களை தூண்டிவிட்டு வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கிறார்களே தவிர ,உண்மையில் மாநில உணர்வோ ,தாய்நாட்டு உணர்வோ அல்ல .இன்று தூண்டிவிட்ட அனைவரும் சுவிஸ் பாங்க்கில் கோடிக்கணக்கான பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களே!!!.
தெலுங்கானா வளர்ச்சி
சுதந்திரம் அடைந்து இத்தனை வருடத்தில் அந்திரப்ரதேசம் அடைந்துள்ள வளர்ச்சி பிரம்மிக்கவைக்கக்கூடையது ,பாராட்டத்தக்கது. ஆனால் அந்த வளரச்சிஎல்லாம் எங்கே என்று பார்த்தீர்களேயானால் ( ஹைதராபாத் தவிர்த்து ) அனைத்தும் ராயலசீமா மற்றும் கடலோர பகுதிகள் என்பது கண்கூடாக தெரியும். தெலுங்கானா ஆரம்பத்திலிருந்தே இவ்விரண்டு பகுதியினரால் புறக்கணிக்கப்பட்டே வருகிறது .இப்போது கூட ஹைதராபாத்தை தவிர்த்த தெலுங்கானா மாநிலம் என்றால் இவர்கள் பிரச்சினை செய்யமாட்டார்கள் .நீங்கள் கேட்கலாம் ஹைதராபாத் தெலுங்கானாவில் தானே உள்ளது,தெலுங்கானாவை புறக்கணிக்க நினைத்தால் இவர்கள் ஹைதராபாத்தை வளரவிட்டிருக்கக்கூடாது அல்லவா என்று .இந்த இடத்தில் நீங்கள் ஒன்று யோசித்து பார்க்கவேண்டும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹைதராபாத் ஆந்திராவின் தலைநகர் இல்லை.கர்நூல்தான் அதன் தலைநகராக இயங்கி வந்தது .தெலுங்கானா இணைப்பிற்கு பிறகு ஹைதராபாத் நகரின் வளர்ச்சி ,நிஜாம் ஏற்படுத்தியிருந்த வளங்கள் ஹைதராபாத்தை ஆந்திராவின் தலைநகராக ஆக்க வைத்தது .
இன்றுவரை ஹைதராபாத்தை வளர்த்த ஆந்திர அரசும் சரி ,ஊடகங்களும்
சரி ,தெலுங்கானாவின் மற்ற முக்கிய நகரங்கலான கரீம் நகர் ,நிசாமாபாத் ,மகபூப் நகர்களைப் பற்றி செய்திகூட வெளியிடுவதில்லை,முற்றிலும் மறைக்கப்படுகிறது . இன்று இந்த போராட்டம் தெலுங்கானா மாநிலம் உருவாகக்கூடாது என்பதற்காக அல்ல .ஹைதராபாத் தெலுங்கானவுடன் சேர்க்கக்கூடாது என்பதற்க்காத்தான் என்பது தினமும் வரும் தெலுங்கானா பிரச்சினைகளை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு தெரியும். இன்றுவரை (நேற்று முளைத்த சத்தீஸ்கர் ,ஜார்கண்ட் மாநில பிரச்சினைவரை )தனிமாநிலம் வேண்டும் என்றுதான் போராட்டம் நடந்திருக்கிறதே தவிர ,கூடாது என்பதற்காக போராட்டம் நடப்பது இந்திய வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை .
கூர்க்காலாந்து கோரிக்கை
இன்று தெலுங்கர்கள் இவ்வளவு வன்முறையை கையிலெடுத்த பின் முக்கியத்துவம் கொடுக்கும் மத்திய அரசு ,கடந்த 26 வருடங்களாக தங்களுக்கு என்று தனிமாநிலம் வேண்டும் என்று கோரும் கூர்க்கா மக்களின் கூர்க்காலாந்து போராட்டத்தை கண்டுகொள்ளவே இல்லை இன்றுவரையிலும் கூட. பாவம் கூர்க்காமக்கள் தமிழர்களின் கோரிக்கைகள் போலவே அவர்களின் கோரிக்கைகளும் மத்திய அரசால் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கப்படுகின்றன .
நான் இவ்வளவு சொல்வதனால் நான் தெலுங்கானா கோரிக்கைக்கு ஆதரவாளனோ என நீங்கள் நினைக்க கூடும்.தெலுங்கானா என்ற மாநிலம் உதிப்பதற்கு முன் இந்த இந்திய அரசு சிலபல சட்டதிருத்தங்களையும் ,சட்டங்களையும் கொண்டுவரவேண்டும் .ஏனென்றால் நிசாம் என்கிற மன்னன் ஆரம்பத்திலேயே தெலுங்கானாவை இந்தியாவுடன் இணைத்திருந்தால் அது இன்றைக்கு ஜம்மு-காஷ்மீர் போல ஒரு தனிசட்டதிட்டம் கொண்ட மாநிலமாக இருந்திருக்கும்.இன்று இரண்டாம்தர மக்களாக ஆந்திரா மக்களால் பார்க்கப்படும் தெலுங்கானா மக்களுக்கு ஒரு விடிவு பிறக்காமல் இந்த தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்படுமேயனால் அது சந்திரசேகர ராவ் என்ற தனிமனிதன் முதலமைச்சர் ஆவதற்கு மட்டுமே பயன்படும் .
மேலும் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு மதுகோடா போல இங்கு யாரும் உருவாகாமல் தடுக்கப்பட வேண்டும் .கண்டிப்பாக தெலுங்கானா என்ற மாநிலம் பிறந்தால் அது தமிழகத்தை(கலைஞர் ) போல சந்திரசேகர ராவ் அன்ற மனிதனின் குடும்ப சொத்தாக 99 % வாய்ப்புள்ளது .இதெயெல்லாம் மத்திய அரசும் ,மக்களும் சிந்தித்து பார்க்கவேண்டும் .
எதோ நான் அறிவுஜீவிபோல ,எல்லாவற்றையும் பற்றி பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்க கூடும் ,உண்மையில் என்னை இந்த கட்டுரை எழுதவைத்தது நான் என்னுடைய வலைதலத்தில் போட்டிருந்த வாக்களியுங்கள் பகுதிதான் .அதில் பலபேர் அளித்தபதிலில் தெலுங்கானாவே ஒரு தப்பான கோரிக்கை என்று நினைக்கிறார்களோ என்று எனக்கு ஐயம் ஏற்பட்டதனால் ,அதைப்பற்றி என்னால் முடிந்த அளவுக்கு உங்கள் அனைவருக்கும் விலக்கிவிடவேண்டும் என்றே இந்த கட்டுரையை எழுதினேன் .
ஏனென்றால் என்வலைதளத்தைப் படிப்பவர்கள் தெலுங்கானாவைப் பற்றி எதுவும் தெரியாது என்று யாரிடமும் சொல்லக்கூடாது !!!!.நாம் இங்கு தற்கால அரசியல் ,சினிமா ,உலகநிலவரம் முதற்கொண்டு அனைத்தையும் விவாத்து தெளிவுபெற வேண்டும் என்பதே என்னுடைய ஆசை .
தோழர்களே!! ஒன்று கூடுங்கள் !! விவாதிக்க .நான் மேல்குறிப்பிட்டவற்றில் உங்களுக்கு ஏதேனும் மாற்று கருத்து இருப்பின் தவறாமல் விமர்சிக்கவும். ஒத்தகருத்து இருப்பின் அதையும் தெரிவிபடுத்தவும் .....இப்படிக்கு...
-சூரியன் .
3 கருத்துகள்:
Hi soori,
Its really too good and useful.Keep rocking..!!
Thanks machi ...
thanks soori good news i appreciate of your news,even i dont know who is nizam and wht is the telungana? but now everything cleared once again thanku...
NO COMMENTS....
UNGALUDAIYA KARUTHTHAI NAAN VAZHIMURAIKIRAIN..
கருத்துரையிடுக